
முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சிங்கப்பூர்
முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சமூகத்தில் முக்கிய முனைப்புகள் என்ன?
டிமென்ஷியா கோ-டு பாயிண்ட்ஸ் (GTPs)
#DementiaFriendlySG இயக்கத்தை ஆதரிக்கும் அமைப்புகளின் வளாகங்களில் GTPகள் அமைந்துள்ளன. இந்தச் சமூக முனையங்கள் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களையும் அவர்களைப் பராமரிப்பவர்களையும் பின்வரும் செயல்பாடுகளின் மூலம் ஆதரிக்கின்றன:
a) அ) வளஆதார நிலையம்
பொது மக்களும் பராமரிப்பாளர்களும் முதுமைக்கால மறதி நோய் குறித்த கல்வி வளங்களையும் பயனுள்ள தகவல்களையும் இங்கு பெறலாம்.
b) ஆ) பாதுகாப்பாகத் தஞ்சமடையும் இடம்
தொலைந்து போனவர்களாகத் தோன்றக்கூடிய, வீட்டிற்குச் செல்வதற்கான வழியைக் கண்டறிய இயலாத முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களைப் பொதுமக்கள் ஊழியர்களின் உதவிக்காக இங்கு அழைத்து வரலாம்.
தான் தொலைந்து போய்விட்டதாகத் தோன்றுகின்ற முதுமைக்கால மறதி நோயுள்ள ஒருவரை நீங்கள் கண்டால், உதவிக்காக அருகாமையிலுள்ள GTP-ஐ நீங்கள் கண்டறியலாம். உங்கள் பிராந்தியத்தில் உள்ள GTPகளின் பட்டியலைக் காண கீழே உள்ள பதாகையைக் கிளிக் செய்யவும்.
கோ-டு பாயிண்ட் என்றால் என்ன, கோ-டு பாயிண்ட்-ஐ நடத்துகின்ற அமைப்புகளின் ஊழியர்களால் கோ-டு பாயிண்டில் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களை எவ்வாறு ஆதரிக்க முடியும்? மேலும் அறிய, காணொளியைப் பாருங்கள்.
GTP காணொளியை அமைத்தல்: https://www.aic.buzz/SetUpaGTP
இந்தக் கையேடு, சமூகத்தில் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களை ஆதரிப்பதற்கு டிமென்ஷியா கோ-டு பாயிண்ட்ஸ் (GTP)-ஐ நிர்வகிப்பதில் அமைப்புகளின் பணியாளர்களுக்கான ஒரு குறிப்பேடாக விளங்குகிறது. இது GTP அமைவுச் செயல்முறை, பொறுப்புநிலை மற்றும் எதிர்பார்ப்புகளை நன்றாகப் பொருத்தி இணைக்கிறது, அத்துடன் முதுமைக்கால மறதி நோயைக் கொண்ட, வழி தெரியாமல் சுற்றித் திரிகின்ற நபர்களுக்கு உதவுவதற்கான வளஆதாரங்களின் பட்டியலையும் வழங்குகிறது.
பராமரிப்பாளர் ஆதரவு வலையமைப்பு (Caregiver Support Network, CSN)
CSN என்பது முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்கின்ற மக்களின் பராமரிப்பு, மன ஆரோக்கியம் அல்லது உடல்நல நிலைமைகளைப் பராமரிக்கின்ற பராமரிப்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும், அவர்களுடன் இணைவதற்கும் முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சிங்கப்பூரின் கீழ் தொடங்கப்பட்ட மற்றொரு முனைப்பாகும். பராமரிப்பாளர்கள் தங்களைக் கவனித்துக்கொள்வதற்கும், ஒருவருக்கொருவர் ஆதரவுத் தூண்களாக மாறுவதற்கும் உதவும் நோக்கத்துடன் CSNகள் உருவாக்கப்பட்டன.
3 முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகள் உள்ளன, அவை சுய பராமரிப்பு, சக ஆதரவு வலையமைப்பு மற்றும் அடையாளம் கண்டறிதல் ஆகியவையாகும். CSNகள் பராமரிப்பை ஆதரிப்பதற்குத் தேவையான பல்வேறு தேவைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் என்றும், அத்துடன் சமூகப் பங்குதாரர்கள் பராமரிப்பாளர்களையும் சமூகத்தில் அவர்களின் சொந்த நல்வாழ்வையும் ஆதரிப்பதில் தீவிரமாகப் பங்கு வகிக்கக்கூடிய ஆதரவான வலையமைப்பை உருவாக்குவதை ஊக்குவிக்கும் என்றும் நம்புகிறோம். CSN பற்றி மேலும் அறிய காணொளியைப் பார்த்து, உதவித்தொகுப்பைப் பதிவிறக்கவும்.
பயனுள்ள CSN-ஐ நடைமுறைப்படுத்தல் காணொளி: https://www.aic.buzz/SetUpaCSN
இது, சுய பராமரிப்பு, சக ஆதரவு மற்றும் சமூகத்தில் பராமரிப்பாளர்களின் நல்வாழ்வை அடையாளம் காணுதல் ஆகியவற்றை வலியுறுத்துகின்ற ஒரு பராமரிப்பாளர் ஆதரவு வலையமைப்பை (Caregiver Support Network, CSN) அமைக்க தனிநபர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கருவித்தொகுப்பாகும். இது CSN அமைவுச் செயல்முறையை நன்றாகப் பொருத்தி இணைக்கிறது, மேலும் உங்கள் பயன்பாட்டிற்காக வார்ப்புருக்களை வழங்குகிறது.
சேவைகள்
ஒவ்வொரு DFC-இலும், CREST என்றும் அழைக்கப்படுகின்ற ஒரு சமூக அடித்தளக் குழு உள்ளது, இது DFC-ஐ ஊக்குவிக்கிறது, பராமரிப்பு திட்டங்கள், மன ஆரோக்கியம் மற்றும் முதுமைக்கால மறதி நோய் பராமரிப்புச் சேவைகளை வழங்குகிறது.
பின்வருபவை அந்தந்த DFCகளில் உள்ள CREST குழுக்களாகும்:
DFC | சேவை வழங்குநர்கள் |
---|---|
1. யீஷூன் | மொண்ட்ஃபர்ட் கேர் |
2. ஹொங் கா வடக்கு | ரீச் சமூகச் சேவைகள் சமுதாயம் |
3. மெக்பர்சன் | பிராம் சென்டர் லிமிடெட் (Brahm Centre Ltd) |
4. குவீன்ஸ்டவுன் | ஃபெய் யுவே சமூகச் சேவைகள் |
5. பிடோக் | மொண்ட்ஃபர்ட் கேர் |
6. ஃபெங்ஷான் | இரட்சண்ய சேனை (சல்வேஷன் ஆர்மி) |
7. புக்கிட் பாத்தோக் கிழக்கு | சிங்கப்பூர் ஆங்கிலிகன் சமூகச் சேவைகள் |
8. உட்லண்ட்ஸ் | AWWA லிமிடெட் (AWWA Ltd) |
9. டெக் கீ | ஆல்கின் சிங்கப்பூர் லிமிடெட் (Allkin Singapore Ltd.) |
10. தமான் ஜூரோங் | NTUC ஹெல்த் கோ-ஆப்பரேட்டிவ் லிமிடெட் (NTUC Health Co-operative Ltd) |
11. கெபுன் பாரு | ஆல்கின் சிங்கப்பூர் லிமிடெட் (Allkin Singapore Ltd.) |
12. இயோ சூ காங் | AWWA லிமிடெட் (AWWA Ltd) |
13. தோ பாயோ கிழக்கு | கேர் கார்னர் சீனியர்ஸ் சர்வீசஸ் லிமிடெட் (Care Corner Seniors Services Ltd) |
14. தோ பாயோ மேற்கு-தாம்சன் | கேர் கார்னர் சீனியர்ஸ் சர்வீசஸ் லிமிடெட் (Care Corner Seniors Services Ltd) |
15. கிளமெண்டி | ஃபெய் யுவே சமூகச் சேவைகள் |
16. மரீன் பரேட் | மொண்ட்ஃபர்ட் கேர் |

தொழில்நுட்பச் செயற்படுத்திகள்
CARA கைப்பேசி செயலி

CARA என்பது வாழ்க்கைமுறை மற்றும் சமூக மின்னிலக்கத் தளமாகும், இது முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களும் பராமரிப்பாளர்களும் கைப்பேசி செயலி ஒன்றின் மூலம் சுற்றுச்சூழல் தீர்வுகளுடன் இணைவதற்கான எளிதான அணுகலை வழங்குகிறது.
டிமென்ஷியா சிங்கப்பூரின் ஒரு முனைப்பு – இது சிறப்பு முதுமைக்கால மறதி நோய் பராமரிப்பில் தேசிய அளவில் முன்னனியில் உள்ளது. CARA என்பது சமூகம் (Community), உத்தரவாதம் (Assurance), வெகுமதிகள் (Rewards) மற்றும் ஏற்பு (Acceptance) என்பதைக் குறிக்கிறது – இது உறுப்பினர்களுக்கு, முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்காகவும், அவர்களைப் பராமரிப்பவர்களுக்காகவும் தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட ஆதரவை அணுகுவதற்கான ஒரு முக்கியத் தொடர்பு மையமாகச் செயல்படுகிறது.
AIC மற்றும் NCSS-ஆல் ஆதரிக்கப்படுகின்ற CARA என்பது உலகின் முதல் முதுமைக்கால மறதி நோய் உறுப்பியத் திட்டமாகும், இது Apple App Store மற்றும் Google Play Store-இல் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. பதிவிறக்கம் இலவசமாகும்.
CARA செயலி பற்றியும் பங்கேற்கும் பங்காளர்களின் நன்மைகள் பற்றியும் மேலும் அறிய, CARA இணையதளத்தைப் பார்வையிடவும்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களையும் அவர்களின் பராமரிப்பாளர்களையும் DFC எவ்வாறு ஆதரிக்கிறது?
முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சமூகமானது சமூகத்திற்கு எவ்வாறு பயனளிக்கலாம்?
சமூக விழிப்புணர்வை உருவாக்குதல்
- உரையாடல்கள், பயிலரங்குகள், நிகழ்வுச் சாவடிகள் மற்றும் வீடு வீடாகச் செல்லுதல் ஆகியவற்றின் மூலம் முதுமைக்கால மறதி நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல்
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களை எவ்வாறு ஆதரிப்பது என்பது குறித்து முன்கள ஊழியர்கள் மற்றும் வணிகங்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறைகளை ஏற்பாடு செய்தல்
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களைத் தேடிக் கண்டறிவதற்கும், முதுமைக்கால மறதி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உதவுகின்ற டிமென்ஷியா நண்பர்களாக மாணவர்கள், தொண்டூழியர்கள் மற்றும் நட்புறவாளர்களைச் சேர்த்தல்
- முதுமைக்கால மறதி நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறிவதற்காக இலக்கிடப்பட்ட பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தல்
- சமூகத்தில் தகவல்களை உடனடியாக அணுக முடியும் இடங்களாக இருப்பதற்கும், வழி தெரியாமல் சுற்றித் திரிகின்ற மூத்தோர்களுக்குப் பாதுகாப்பாகத் தஞ்சமடையும் இடங்களாகச் செயல்படுவதற்கும் டிமென்ஷியா கோ-டு பாயிண்ட்ஸை அமைத்தல்
ஆபத்தில் உள்ள மூத்தோர்கள்/ முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு ஆதரவு அளித்தல்
- நலமாக உள்ள மூத்தோர்களுக்கு: தடுப்பு நடவடிக்கைகள் மூலம் முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க சுறுசுறுப்பாக இருங்கள்
- லேசான முதுமைக்கால மறதி நோய் நிலையைக் கொண்டவர்களுக்கு: அவர்களின் அறிவாற்றலைத் தூண்டுவதற்கு அர்த்தமுள்ள நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள், இது அவர்களின் நிலை மோசமடைவதை மெதுவாக்கவும், தேவை உள்ளவர்களுக்குச் சேவை இணைப்புகளை ஏற்படுத்தவும் உதவும்
- மிதமான அல்லது கடுமையான முதுமைக்கால மறதி நோய் நிலையைக் கொண்டவர்களுக்கு: சிக்கலான தேவைகளுக்கான இல்லம் மற்றும் கைப்பேசி அடிப்படையிலான ஆதரவு மற்றும் நிகழ்வு வலையமைப்பு
பராமரிப்பாளர்களுக்கு ஆதரவு அளித்தல்
- சுய பராமரிப்பு, சக ஆதரவு மற்றும் அடையாளம் கண்டறிதல் ஆகியவற்றை வலியுறுத்துகின்ற ஒரு வலையமைப்பை உருவாக்குதல்
- இடை ஓய்வுச் சேவைகள், தகவல்கள் மற்றும் வளஆதாரங்களை வழங்குதல்
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கான பாதுகாப்பான அக்கம்பக்கம்
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்காக அக்கம்பக்கத்தைப் பாதுகாப்பானதாக உருவாக்குவதற்கு, சுற்றுச்சூழல் சார்ந்த ஆய்வுகளையும் உள்கட்டமைப்பு மேம்பாட்டையும் மேற்கொள்ளுதல்
- வழி தெரியாமல் சுற்றித் திரிகின்ற முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களைத் தேடிக் கண்டறிவதற்குச் சமூக ஆதரவைப் பெற, CARA செயலி போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்
- ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அனைவருக்கும் சமவாய்ப்புள்ள சூழலை உருவாக்க, முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த பங்காளர்களாக இருக்கும் வணிகங்களுடன் ஒத்துழைத்தல்
சமூகப் பங்காளர்களின் பொறுப்புநிலைகள் – உள்ளூர் அளவில்
- சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சொந்த மற்றும் இயக்க முனைப்புகள்
- ஒரு நடைமுறைப்படுத்தல் திட்டத்தை இணைந்து உருவாக்குவதில் கலந்தாலோசனை மற்றும் ஆதரவைத் தொடங்குதல்
சமூகப் பங்காளர்களின் பொறுப்புநிலைகள் – தேசிய அளவில்
- அனைவருக்கும் சமவாய்ப்புள்ள சூழலை உருவாக்குவதில் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை ஒருங்கிணைத்து செல்வாக்கு செலுத்துவதற்கான மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குதல்
- துறைத் தலைவர்கள் அதிகளவிலான மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் தீர்வுகளை இணைந்து உருவாக்க வேண்டும்
AIC-இன் பொறுப்புநிலைகள்
- DFSG-ஐ உருவாக்குவதில் இணைந்து தீர்வுகளை உருவாக்குவதற்கு ஒத்த எண்ணம் கொண்ட சமூகப் பங்காளர்களை ஈடுபடுத்துதல் மற்றும் இணைத்தல்
- முதுமைக்கால மறதி நோய் உள்ளீடு மற்றும் சாத்தியமான வாய்ப்புகள் குறித்த ஆலோசனை
- வளஆதாரங்களைப் பகிர்க
முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சமூகங்கள் எங்கு அமைந்துள்ளன?
தற்போது, சிங்கப்பூர் முழுவதும் 16 DFCகள் உள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் DFC-ஐக் காணலாம். மண்டலம் என்பது குழுப் பிரதிநிதித்துவத் தொகுதியில் (GRC) அல்லது ஒற்றை உறுப்பினர் தொகுதியில் (SMC) உள்ள வார்டைக் குறிக்கிறது.
16 DFCகள் இங்கு காலவரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன:

முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சமூகங்களின் ஐந்துக் கோட்பாடுகள்
1. முதுமைக்கால மறதி நோயைப் பற்றி மக்கள் அறிந்திருக்கிறார்கள், மேலும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுடன் எவ்வாறு தகவல்தொடர்பு கொள்வது என்பதும் அவர்களுக்குத் தெரியும்
- குடியிருப்பாளர்களும் சமூகப் பங்காளர்களும் எங்கு உதவி பெற வேண்டும், முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள், முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுடன் எவ்வாறு தகவல்தொடர்பு கொள்வது என்பது குறித்து அறிவார்கள்.
- அடித்தள அமைப்புகள், தொண்டூழியர்கள், பள்ளிகள், நம்பிக்கை சார்ந்த குழுக்கள், அரசாங்க நிறுவனங்கள், உணவங்காடிக் கடைக்காரர்கள், வணிகங்கள், சில்லறை விற்பனையாளர்கள், வங்கிகள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் போன்ற சமூக முன்களப் பணியாளர்களை உள்ளடக்குங்கள்
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு உதவுகின்ற மற்றும் அவர்கள் வழி தெரியாமல் சுற்றித் திரிந்தால் தேடிக் கண்டறிகின்ற (எ.கா. அவர்களை கோ-டு-பாயிண்ட்ஸுக்கு (GTPகள்) அழைத்து வருதல்) டிமென்ஷியா நண்பர்கள் அடங்கிய ஒரு குழுவை உருவாக்குங்கள்
2. முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டறிந்து, அவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்கான வளஆதாரங்கள் உள்ளன
- தகவல்கள், ஆதாரங்கள் மற்றும் சேவை இணைப்புகளை வழங்க ஒவ்வொரு DFCகளிலும் உள்ள அணுகக்கூடிய GTPகள்
- பிணையங்கள், காணொளிகள், முதுமைக்கால மறதி நோய் வளஆதார இணையவாசல் (DementiaHub.SG) போன்ற வளஆதாரங்கள் குடியிருப்பாளர்கள், சமூகப் பங்காளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு உடனடியாகக் கிடைக்கின்றன
- பின்தொடர்தலுடன் முதுமைக்கால மறதி நோய்க்கான பரிசோதனை கிடைக்கிறது
3. முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்கள் ஆதரவளிக்கப்படுவதாக உணர்கிறார்கள்
- முதுமைக்கால மறதி நோய் பற்றியும், தேவைப்பட்டால் எங்கு உதவி பெறுவது என்பது பற்றியும் மக்கள் அறிவார்கள்
- பராமரிப்பாளர்கள் நன்றாக ஆதரிக்கப்படுகிறார்கள், எ.கா. ஒரு ஆதரவுக் குழுவின் அங்கமாக இருக்கிறார்கள், தேவைப்படும்போது உதவி பெற
- தொண்டூழியர்கள் உணர்வுபூர்வமான ஆதரவை வழங்குவதற்கான நட்புறவாளர்களாக இருப்பதற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்
- பூர்த்தி செய்யப்படாத தேவைகள் இருக்கும்போது நிகழ்வுகளை வெளிக்காட்டி, சேவை இணைப்பை வழங்குங்கள்
- வழி தெரியாமல் சுற்றித் திரிகின்ற முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு உதவ தொழில்நுட்பம் கிடைக்கிறது
- முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள அன்புக்குரியவர்கள் தொடர்பான ஆலோசனையைப் பெற, அவர்களின் இழப்பைத் தெரிவிக்க பராமரிப்பாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கான தேசியத் தளம். முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களை பொதுமக்கள் கண்டறிந்தால், அவர்களுடன் கூட தொலைபேசியில் அழைத்துத் தகவல் தெரிவிக்கலாம்
- பராமரிப்பாளர்கள் மற்றும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கான முதுமைக்கால மறதி நோய் உறுப்பியத்துவத் திட்டம்
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒரு நபர் காணாமல் போனால் டிமென்ஷியா நண்பர்களை விழிப்பூட்டுகின்ற கைப்பேசி செயலி
4. வணிகங்களும் சேவைகளும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு மரியாதை அளிப்பவையாகவும் உதவிகரமாகவும் உள்ளன
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்து கொள்ளுங்கள்
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் பாதுகாப்பாக நடமாட உதவும் வகையிலான இயற்கையான சுற்றுச்சூழலை உருவாக்குங்கள்
- தங்கள் வீட்டிற்கான வழியைக் கண்டறிய அல்லது தங்களை GTPகளுக்கு அழைத்துச் செல்ல உதவி தேவைப்படும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு உதவுங்கள்
- பணியாளர் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக முதுமைக்கால மறதி நோய் விழிப்புணர்வு பயிற்சியை இணையுங்கள்
5. முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்குச் சுற்றுச்சூழல்கள் பாதுகாப்பானதாகவும், எளிதாக உலவும் வகையிலும் உள்ளன
- அக்கம்பக்கத்தில் பாதுகாப்பாக நடமாட இயலும்
- வணிகம்/அரசாங்க நிறுவனங்கள் தங்கள் இடத்தை மூத்தோருக்கு உகந்தவையாக இருக்கும் வகையில் மேம்படுத்துகின்றன எ.கா. பெரிய நடையோரம், பெரிய வழிகாட்டுக் குறியீடு, சிறந்த வழி கண்டறியும் குறிப்பான்கள்