தனிநபரை மையமாகக் கொண்ட முதுமைக்கால மறதி நோய்ப் பராமரிப்பு என்பது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் ஆளுமையைப் பராமரிக்கும் அதே வேளையில், உளவியல் தேவைகளைப் பூர்த்திச் செய்வதன் மூலம் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தனிநபரை மையமாகக் கொண்ட பராமரிப்பு குறித்த அறிமுகம்
ஆதாரம்: ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (AIC)
இந்தக் காணொளி தனிநபரை மையமாகக் கொண்ட பராமரிப்பு பூர்த்திச் செய்வதற்கு இலக்காகக் கொண்டுள்ள ஐந்து உளவியல் தேவைகளை உள்ளடக்குகிறது, மேலும் தனிநபரை மையமாகக் கொண்ட பராமரிப்பைப் பயன்படுத்தக்கூடிய வழிகளையும் காட்டுகிறது.
தனிநபரை மையமாகக் கொண்ட பராமரிப்பு (PCC) என்றால் என்ன?
தனிநபரை மையமாகக் கொண்ட பராமரிப்பு (PCC) என்பது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரைப் பற்றியும், அவரது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அவருக்கு எப்படி ஆதரவளிப்பது என்பது பற்றியும் சிந்திக்கும் விதமாகும்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரைப் பராமரிக்கும்போது, ஒரு நபர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்பதை அல்லது அவர்கள் ஈடுபட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஏன் இவ்வாறு முடிவெடுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது சில நேரங்களில் கடினமாக இருக்கும்.
தனிநபரை மையமாகக் கொண்ட பராமரிப்பு (PCC) பின்வரும் விஷயங்களில் கவனம் செலுத்துகிறது:
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் ஒவ்வொருவரையும் பின்வரும் நபராகப் பார்ப்பது: அவர் மதிப்புமிக்க நபர்
- அவர் மதிப்புமிக்க நபர்
- அவருக்கென்று தனிப்பட்ட வரலாறு, வழக்கங்கள், தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் தேவைகள் உள்ளன
- உலகை அவரது சொந்த வழியில் அனுபவிக்கிறார்
- அந்த நபர் தனது நல்வாழ்வுக்கு முக்கியமானதாக தான் கொண்டுள்ள சமூக உறவுகளைப் பார்க்கிறார்
- அந்த நபர் தனது நல்வாழ்வுக்கு முக்கியமானதாக தான் கொண்டுள்ள சமூக உறவுகளைப் பார்க்கிறார்
- இந்த விடயங்களைக் கவனித்துக் கொள்வதன் மூலம் நபரின் நல்வாழ்வை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல்
இது மருத்துவப் பராமரிப்பு மாதிரியுடன் ஒப்பிடுகையில் வித்தியாசமாக உள்ளது, இம்மாதிரியில்:
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் மருத்துவப் பராமரிப்பு நிபுணர்களிடமிருந்து சிகிச்சைத் தேவைப்படும் மருத்துவ நோயாளியாக மட்டுமே பார்க்கப்படுவார்;
- அந்த நபரைச் சுத்தமாகவும் காயம் மற்றும் தீங்கு விளைவிப்பவற்றிலிருந்து பாதுகாப்பாகவும் வைத்திருப்பதில் கவனம் செலுத்தப்படும்;
- நபரின் தனிப்பட்ட வரலாறு, வழக்கங்கள், தனிப்பட்ட விருப்பங்கள் கருத்தில் கொள்ளப்படாது;
- நபரின் உளவியல் தேவைகள் புறக்கணிக்கப்படும்.
தனிநபரை மையமாகக் கொண்ட பராமரிப்பின் (PCC) இலக்கு என்ன?
ஒரு நபரின் மன வலிமைகள் குறைந்து வரும் நிலையில் ஆளுமையை நிலைநிறுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த இலக்கு எப்படி அடையப்படுகிறது?
ஒவ்வொரு நபரும் அனுபவிக்கும் உளவியல் தேவையின் 5 பகுதிகளைப் பூர்த்திச் செய்வதன் மூலம் அடையப்படுகிறது.
டாம் கிட்வுட்டின் Flower of Psychological Needs முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் உட்பட ஒவ்வொரு நபருக்கும் இருக்கும் தேவைகளைக் காட்டுகிறது. இந்தத் தேவைகளாவன: ஆறுதல், பந்தம், மற்றோருடன் இணைப்பு , தொழில், அடையாளம் மற்றும் அன்பு.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழுபவர்களைப் பராமரிக்கும்போது, இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொள்ளலாம்.

இந்தத் தேவைகள் பூர்த்திச் செய்யப்படும்போது என்ன நடக்கும்?
- அந்த நபர் தான் நேசிக்கப்படுவதாக உணருவார்.
- அந்த நபரின் முழு சுயமதிப்பு உணர்வு மேம்படும்.
- அந்த நபர் தனிப்பட்ட கட்டுப்பாடு மற்றும் அதிகாரம் பெற்றிருக்கும் உணர்வை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
- ஒரு நபரின் உடல் மற்றும் உளவியல் ரீதியான நல்வாழ்வில் முன்னேற்றம் இருக்கும்.
டாம் கிட்வுட்டின், தனிநபரை மையமாகக் கொண்ட பராமரிப்பின் 10 முக்கிய கோட்பாடுகள்
- ஒவ்வொரு நபரின் தனித்துவத்தையும் பாரபட்சமின்றி ஏற்றுக்கொள்வது.
- ஒவ்வொரு நபரின் கடந்த கால அனுபவங்களையும் கற்றலையும் மதிப்பது.
- அந்த நபர் உணர்ச்சி, சமூகம், உடல் மற்றும் ஆன்மீகத் ரீதியான தேவைகளைக் கொண்டிருப்பதாக அங்கீகரிப்பது. .
- நீக்குப்போக்கான தன்மை, பிற்கால சிந்தனை மற்றும் பிற கண்ணோட்டங்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை என்பனவை தேவைப்படும் தகவல்தொடர்புகளில் தொடர்ந்து நீடிக்கவைக்கும்
- நபர் வரவேற்கப்படுவதையும் சேர்த்துக் கொள்ளப்படுவதையும் உறுதி செய்கிற ஊட்டமளிக்கும் பந்தங்கள்.
- நமக்குப் பொருந்துகிற சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம் என்பதையும் நம்மிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதையும் அறியும் உணர்வை அளிக்கிற சமூக உணர்வை உருவாக்குவது.
- நபர்கள் அவர்களின் சொந்த பராமரிப்புக்குப் பங்களிப்பதற்கான சுதந்திரத்தை அதிகப்படுத்துவது மற்றும் தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்குவது.
- மற்றவர்களிடமிருந்து பெறுவதற்கும், அவர்கள் கொடுப்பதை மதிப்புடையதாகக் கருதுவதற்கும் நம்மை அனுமதிப்பது (உதாரணத்திற்கு , முதுமைக்கால மறதி நோய் உள்ளவர் தங்களால் இயன்றவரை, பராமரிப்புச் சூழலுக்கு ஏதாவது ஒரு வழியில் பங்களிக்க அனுமதிப்பது).
- நம்பிக்கை நிறைந்த சூழலை உருவாக்குவது மற்றும் பராமரிப்பது – அடாவடித்தனம், தன்னலப்படுத்தல் மற்றும் பிற அதிகார துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பது.
- 10. நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துவது – நபர்களின் திறன்கள் மற்றும் அவர்களால் செய்ய முடிகிற விஷயங்களில் கவனம் செலுத்துவது.

அல்சைமர் WA’ல் ( Western Australia) டிமென்ஷியா நபர்-மைய பராமரிப்பு
Tell us how we can improve?
1. Kitwood, T. M. (1997). Dementia Reconsidered: The Person Comes First. Open University Press.