முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகள் தனிநபர்களிடையே வேறுபடுகின்றன என்றாலும், சில பொதுவான எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன.
"முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒருவரை நீங்கள் பார்க்கும்போது, நீங்கள் ஒருவரை மட்டுமே பார்த்திருக்கிறீர்கள்."
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர்கள், அவர்கள் ஒரேமாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை. சில பொதுவான அறிகுறிகள் இருந்தாலும் தேவைகள் மற்றும் வெளிப்பாடுகள் தனிநபர்களிடையே வேறுபடுகின்றன.
முதுமைக்கால மறதி நோயின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளில் அடங்குவன (ஆனால் இவை மட்டுமே வரம்பல்ல):
- படிப்படியாக ஏற்படுகின்ற மற்றும் காலப்போக்கில் படிப்படியாக மோசமாகின்ற நினைவுத்திறன் இழப்பு (மறதித்தன்மை). உடனடியான மற்றும் குறுகிய கால நினைவுத்திறன் இழப்பு முதலில் ஏற்படுகிறது.
- தகவல்தொடர்புகளில் சிரமம்.
- பரிச்சயமான முகங்கள், இடங்கள் அல்லது பொருட்களை அடையாளம் கண்டறிவதில் பிரச்சினைகள்.
- பிரச்சினையைத் தீர்க்கும் திறன்கள் மோசமடைவது மற்றும் ஒழுங்கின்மை அதிகரிப்பது.
- ஆடை அணிவது மற்றும் சாப்பிடும்போது பாத்திரங்களைப் பயன்படுத்துவது போன்ற அன்றாட நடவடிக்கைகளில் பிரச்சினைகள்.
கூடுதலாக, மனநிலை மற்றும் நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்படலாம், அவை:
- மனச்சோர்வு
- கிளர்ச்சி
- மாயத்தோற்றங்கள்
- மனக்கவலை
- சித்தப்பிரமை
- தூக்கப் பிரச்சினைகள்
கிறிஸ்டல் மற்றும் அவரது தாத்தா-பாட்டி
கிறிஸ்டெல் தனது தாத்தாவுடன் இந்த நோய் நிலைமைக்கு வெளிப்பட்டுள்ளதால், தனது பாட்டியின் விஷயத்தில் இதன் அறிகுறிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தனது குடும்பத்திற்குக் கற்றுக் கொடுத்தார் என்பதை அவர் பகிர்ந்துகொள்கிறார்.
ஆதாரம்: ForgetUsNot (எங்களை மறக்காதீர்) என்பது லியன் ஃபவுண்டேஷன், கூ டெக் புவாட் மருத்துவமனை மற்றும் டிமென்ஷியா சிங்கப்பூர் ஆகியவற்றின் முனைப்பாகும்
நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த யாரேனும் ஒருவரோ முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளை அனுபவித்தால், குடும்ப மருத்துவர் அல்லது பலதுறை மருந்தக மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும், அவரால் பரிசோதனைகள் மற்றும் நோயறிதல் செயல்முறையின் மூலம் வழிகாட்ட முடியும்.
Tell us how we can improve?
- Alzheimer Society of Calgary. (n.d.). Young-Onset Dementia. Retrieved 5 March, 2020, from https://www.alzheimercalgary.ca/learn/types-of-dementia/young-onset-dementia