
ஒருங்கிணைந்த மனநல வலையமைப்பின் காரணமாக, சமூகத்தில் ஏராளமான திட்டங்களும் சேவைகளும் கிடைக்கப் பெறுகின்றன. முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் மற்றும் அவர்களது பராமரிப்புப் பங்காளர்கள் உட்பட பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கின்ற ஆரோக்கிய, சமூக மற்றும் சமுதாயப் பராமரிப்பு வழங்குநர்களை இந்த வலையமைப்பு ஒன்றிணைக்கிறது.
நீங்கள் முதுமைக்கால மறதி நோயுடன் உங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளீர்கள் மற்றும் எங்கு தொடங்குவது என்று சரியாகத் தெரியவில்லை என்றால், இந்தக் கட்டுரை உங்களுக்கானது. கிடைக்கக்கூடிய பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகள், அவை உங்களுக்கு எவ்வாறு உதவலாம் மற்றும் விண்ணப்பிக்கும் முன் நீங்கள் கவனிக்க வேண்டிய தேவைகளைப் பற்றி அறிய மேற்கொண்டு படியுங்கள்.
பராமரிப்பு மற்றும் ஆதரவுச் சேவைகள்
பராமரிப்பு மற்றும் ஆதரவுச் சேவைகளில் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கான நடைமுறை (அதாவது, அன்றாட நடவடிக்கைகளுக்கான ஆதரவு, வாடிக்கையாளர்களைத் தொடர்புடைய பராமரிப்புச் சேவைகளுடன் இணைப்பது), மனவுணர்வு மற்றும் நிதி சார்ந்த ஆதரவு ஆகியவை உள்ளடங்கியுள்ளன. இந்தச் சேவைகள் வீட்டிலோ, ஒரு பகல்நேரப் பராமரிப்பு நிலையத்திலோ வழங்கப்படலாம், வீட்டில் வழங்க முடியாத பராமரிப்பும் ஆதரவும் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்குத் தாதிமை இல்லத்தில் வழங்கப்படலாம்.
இது என்ன?
- டிமென்ஷியா ஹெல்ப்லைன் என்பது அர்ப்பணிப்புள்ள தொலைபேசி இயக்குபவர்களால் வழங்கப்படும் ஒரு சேவையாகும், இது முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள், பராமரிப்பாளர்கள் அல்லது முக்கியத் தகவல் தேவைப்படும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு மற்றும் ஆதரவின் முதல் வரிசையாகச் செயல்படுகிறது.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் இது எவ்வாறு உதவலாம்?
- பொருத்தமான மற்றும் புதுப்பித்த பராமரிப்பாளர் ஆதரவு, வளஆதாரங்களைக் கண்டறிதல், பரிந்துரைகள் மற்றும் தொலைபேசிவழிக் ஆலோசனைகள் வழங்குகிறது.
டிமென்ஷியா ஹெல்ப்லைன் ஒருவரின் முதுமைக்கால மறதி நோய்/பராமரிப்புப் பயணத்தில் எப்போது இணைகிறது?
- நோயறிதலுக்குப் முன்பும் பின்பும்
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
- டிமென்ஷியா சிங்கப்பூர்: 6377 0700
இது என்ன?
- சமூக வளஆதாரம், ஈடுபாடு மற்றும் ஆதரவுக் குழு (CREST) என்பது ஒரு மக்கள்தொடர்புக் குழுவாகும், இது மனச்சோர்வு, முதுமைக்கால மறதி நோய் மற்றும் பிற மனநல நிலைமைகளைக் கொண்டிருப்பவர்களுக்கும், அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் ஒரு சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை வழங்குகிறது.
முதுமைக்கால மறதி நோய் மற்றும் பிற மனநல நிலைமைகள் உள்ளவர்களுக்கு மற்றும்/இவை ஏற்படுவதற்கான ஆபத்தில் உள்ளவர்களுக்கு இது எவ்வாறு உதவ முடியும்?
- மனநலப் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட தடுப்பு நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கு மற்ற சமூகப் பங்காளர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
- வாடிக்கையாளர்களின் நல்வாழ்வை ஆதரிப்பதற்கும் அவர்களின் அறிவாற்றல் செயல்பாடுகளைத் தூண்டுவதற்கும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
- தேவைப்படும்போது தொடர்புடைய சுகாதார மற்றும் சமூகப் பராமரிப்புச் சேவைகளுடன் தனிநபர்களை இணைக்கிறது.
இதனால் பராமரிப்பாளர்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?
- தேவைப்படும்போது தொடர்புடைய சுகாதார மற்றும் சமூகப் பராமரிப்புச் சேவைகளுடன் பராமரிப்பாளர்களை இணைக்கிறது.
CREST ஒருவரின் முதுமைக்கால மறதி நோய்/பராமரிப்புப் பயணத்தில் எப்போது இணைகிறது?
- நோயறிதலுக்கு முன்பு: மனநல நிலைமைகள் மற்றும் முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் அபாயத்தில் உள்ள நபர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்கள்.
எனினும், வாடிக்கையாளர்கள் நோயறிதலுக்குப் பிறகு, தனிப்பட்ட தகுதிவிதிகளின் அடிப்படையில் CREST சேவைகளுக்குப் பரிந்துரைக்கப்படலாம்.
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
- விண்ணப்பச் செயல்முறையில் உதவி பெற, ஏதேனும் CREST வழங்குநரிடமும் செல்லவும்.
- உங்களுக்கு அருகாமையில் உள்ள சேவை வழங்குநர்களைக் கண்டறியுங்கள்: இ-கேர் இருப்பிடங்காட்டி
இது என்ன?
- சமூக வளஆதாரம், ஈடுபாடு மற்றும் ஆதரவுக் குழு (CREST)-பராமரிப்பாளர்கள் என்றும் அழைக்கப்படும் பராமரிப்பாளர் மக்கள்தொடர்புக் குழுவானது, தங்கள் பராமரிப்புப் பொறுப்புநிலை காரணமாக மனச்சோர்வு, மனப்பதற்றம் மற்றும் உடல்சோர்வைக் கொண்டிருக்கின்ற அல்லது அவை ஏற்படுவதற்கான ஆபத்தில் உள்ள பராமரிப்பாளர்கள் மீது கவனம் செலுத்துகிறது.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் இது எவ்வாறு உதவலாம்?
- மனநல நிலைமைகள் மற்றும் முதுமைக்கால மறதி நோய் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்த, பராமரிப்பாளர்களுக்கு மக்களை எட்டும் முயற்சிக்கான நிகழ்வுகளை நடத்துகிறது.
- உடல்நலம் மற்றும் நல்வாழ்வு நடவடிக்கைகள், மன உளைச்சல் மேலாண்மை மற்றும் எதிர்காலத் திட்டமிடல் ஆகியவற்றின் மூலம் சுய-பராமரிப்பில் பராமரிப்பாளர்களை ஆதரிக்கிறது.
- பராமரிப்பாளர்கள் தேவைப்படும் இடங்களில் ஆதரவுக் குழுக்கள் மற்றும் கலந்தாய்வுச் சேவைகளுடன் இணைக்கப்படுகின்றனர்.
CREST-CG ஒருவரின் பராமரிப்பு வழங்கும் பயணத்தில் எப்போது இணைகிறது?
- நோயறிதலுக்குப் முன்பும் பின்பும்
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
- விண்ணப்பச் செயல்முறையில் உதவி பெற, ஏதேனும் CREST வழங்குநரிடமும் செல்லவும்.
- உங்களுக்கு அருகாமையில் உள்ள சேவை வழங்குநர்களைக் கண்டறியுங்கள்: இ-கேர் இருப்பிடங்காட்டி.
இது என்ன?
- சமூகத் தலையீட்டு குழுக்கள் (Community Intervention Teams, COMIT) என்பது மனநலம் அல்லது முதுமைக்கால மறதி நோய்க்கான தேவைகளைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் முழுமையான ஆதரவை வழங்குகின்ற ஒரு மக்கள்தொடர்புக் குழுவாகும். இக்குழுவின் ஆதரவினால் அவர்கள் முடிந்தவரை அதிக காலத்திற்குச் சமூகத்தில் நீடித்திருக்க முடியும்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு இது எவ்வாறு உதவலாம்?
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் ஆலோசனைகள் , சிகிச்சை, நிகழ்வு மேலாண்மை மற்றும் உளவியல் கல்வி ஆதரவை வழங்குகிறது.
- மதிப்பீட்டின் அடிப்படையில், இக்குழு வாடிக்கையாளர்களுக்கான தனிப்பட்ட பராமரிப்புத் திட்டங்களை உருவாக்குகிறது அல்லது வாடிக்கையாளர்களை மேலும் பொருத்தமான சேவைகளுடன் இணைக்கிறது.
இதனால் பராமரிப்பாளர்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?
- பராமரிப்பாளர்களுக்கு உளவியல் கல்வி, பயிற்சி, ஆதரவு மற்றும் ஆதரவுக் குழு போன்ற பொருத்தமான மதிப்பீடு மற்றும் தலையீடு வழங்கப்படும்.
COMIT ஒருவரின் முதுமைக்கால மறதி நோய்/பராமரிப்புப் பயணத்தில் எப்போது இணைகிறது?
- நோயறிதலுக்கு பின்பு
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
- விண்ணப்பச் செயல்முறையில் உதவி பெற, ஏதேனும் COMIT வழங்குநரிடமும் செல்லவும்.
- உங்களுக்கு அருகாமையில் உள்ள சேவை வழங்குநர்களைக் கண்டறியுங்கள்: இ-கேர் இருப்பிடங்காட்டி
இது என்ன?
- முதுமைக்கால மறதி நோய் இருப்பதாகப் புதிதாகக் கண்டறியப்பட்ட நபர்களுக்கு (அதாவது, நோயறிதல் செய்யப்பட்ட தேதியிலிருந்து 1 வருடம் வரை) மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கு தகவல், சேவை இணைப்பு மற்றும் நிகழ்வு மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கட்டமைக்கப்பட்ட ஆதரவு அமைப்பை PDS திட்டம் வழங்குகிறது.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் இது எவ்வாறு உதவலாம்?
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களையும் அவர்களைப் பராமரிப்பவர்களையும் தயார்படுத்துவதற்கு நோயறியப்பட்ட நேரத்திலிருந்து குறித்த நேரத்தில் ஆதரவை வழங்குகிறது, இதனால் அவர்கள் வீட்டில் நிலைமைக்காகத் திட்டமிடவும், பதில்வினையாற்றவும், நிர்வகிக்கவும் முடியும் அல்லது பொருத்தமான பராமரிப்புத் தலையீடுகளுக்காக சமூகப் பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றவும் முடியும்.
- தேவைகளை மதிப்பிடுகிறது மற்றும் உளவியல் கல்வி மற்றும் தேவையான வளஆதாரங்களை வழங்குகிறது. அடையாளம் காணப்பட்ட தேவைகளின் அடிப்படையில், முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர் மற்றும் பராமரிப்பாளருக்காகவும், அவர்களுடன் இணைந்தும் தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்புத் திட்டம் உருவாக்கப்படும்.
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர் மற்றும் அவரது பராமரிப்பாளரைப் பொருத்தமான பராமரிப்புச் சேவைகளுடன் ஒருங்கிணைத்து இணைக்கிறது.
PDS ஒருவரின் முதுமைக்கால மறதி நோய்/பராமரிப்புப் பயணத்தில் எப்போது இணைகிறது?
- முதுமைக்கால மறதி நோய் எந்தக் கட்டத்தில் இருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் கண்டறியப்பட்ட பிறகு இந்த நோயறிதலுக்குப் பிந்தைய ஆதரவு இணைகிறது.
உங்களுக்கு அருகாமையில் உள்ள சேவை வழங்குநர்களைக் கண்டறியுங்கள்:
- டிமென்ஷியா சிங்கப்பூர்
- CREST-PDS சேவை வழங்குநர்கள்
- ஃபெய் யுவே துடிப்பான முதுமைக்கால நிலையம் (Fei Yue Active Ageing Centre) (காமன்வெல்த்)
- Allkin Singapore Ltd (முன்னர் AMKFSC Community Services)
- NTUC ஹெல்த் கோ-ஆப்பரேட்டிவ் லிமிடெட் (NTUC Health Co-operative Ltd)
- ஃபிலோஸ் கம்யூனிட்டி சர்வீஸ் லிமிடெட் (Filos Community Service Ltd)
- Thye Hua Kwan Moral Charities Limited
- மொண்ட்ஃபர்ட் கேர்
AIC வழங்கும் CREST-PDS தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கிறது. இங்கே பட்டியலிடப்பட்டுள்ள ஏதேனும் மருத்துவமனைகளில் முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் அன்புக்குரியவர் சிகிச்சை பெறுகிறார் என்றால், இந்தத் திட்டம் தொடர்பாக உங்கள் அன்புக்குரியவரின் முதுமைக்கால மறதி நோய் நிலையை நிர்வகிக்கும் உங்கள் மருத்துவரை அணுகவும். டிமென்ஷியா சிங்கப்பூர் வழங்கும் ஆதரவுச் சேவையானது வேறுபட்ட சேவை மாதிரியையும் சேர்க்கைத் தகுதிவிதிகளையும் கொண்டுள்ளது. மேலும் DSG PDS ஆனது குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டுமே பரிந்துரைகளைப் பெறுகிறது..
இது என்ன?
- தங்களுக்குத் தேவையான உணவை வாங்கவும் தயாரிக்கவும் முடியாத நிலையில், மேலும் அவ ருக்ககு உதவ ஒரு பராமரிப்பாளர் இல்லாமல், வீட்டில் முடங்கிய வாடிக்கையாளர்களுக்கு மீல்ஸ்-ஆன்-வீல்ஸ் உணவு விநியோகச் சேவையை வழங்குகிறது.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு இது எவ்வாறு உதவலாம்?
- நாடு முழுவதும் மதிய உணவு மற்றும் இரவு உணவு விநியோகத்தை வாரத்தில் 7 நாட்களுக்கு (பொது விடுமுறை நாட்கள் உட்பட) வழங்குகிறது. உணவுமுறைத் தேவைகளுக்கு (ஹலால், ஹலால்-அல்லாத, சைவம் அல்லது கலப்பு/மென் உணவு) உணவுகள் வழங்கப்படலாம்.
மீல்ஸ் ஆன் வீல்ஸ் ஒருவரின் முதுமைக்கால மறதி நோய்/பராமரிப்புப் பயணத்தில் எப்போது இணைகிறது?
- நோயறிதலுக்குப் முன்பும் பின்பும்
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
- சேவைக்கான இணையவழி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க உதவிபெற, உங்கள் அன்புக்குரியவர் எப்பொழுதும் செல்லும் மருத்துவமனை அல்லது பலதுறை மருந்தகத்தில் உள்ள மருத்துவரை அணுகவும்.
உங்களுக்கு அருகாமையில் உள்ள சேவை வழங்குநர்களைக் கண்டறியுங்கள்:
What is it?
- வாடிக்கையாளர்கள் மருத்துவ நியமன சந்திப்புகள் மற்றும் சிகிச்சைகளுக்காக (எ.கா., மருத்துவமனைகளில், நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களில் அல்லது பலதுறை மருந்தகங்களில்) வீட்டிலிருந்து மருத்துவமனைக்குச் சென்று வருவதற்கான போக்குவரத்து வசதிகளை மற்றும்/அல்லது அவர்களுக்குத் துணையாக செல்வதற்கு இச்சேவை வழங்குகிறது.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு இது எவ்வாறு உதவலாம்?
- நடமாட உதவி தேவைப்படுகின்ற, தனியாக வாழ்கின்ற/ பராமரிப்பாளரைக் கொண்டிருக்காத அல்லது தங்களின் சுய ஆரோக்கியம் மற்றும் உடல் நிலை காரணமாக ஆதரவு வழங்க இயலாத பராமரிப்பாளரைக் கொண்டிருக்கின்ற நபர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் மருந்தகம் அல்லது மருத்துவமனைகளுக்குச் செல்லவும், உதவி தேவைப்படும் இடத்தில் மருத்துவருடனும் வாடிக்கையாளருடனும் தொடர்பு கொள்ளவும், மேலும் வாடிக்கையாளரின் அடுத்த நியமன சந்திப்பைக் குறித்துக்கொள்ளவும் மருத்துவ வழித்துணைவர்களால் உதவிட முடியும்.
மருத்துவ வழித்துணை மற்றும் போக்குவரத்துச் சேவை ஒருவரின் முதுமைக்கால மறதி நோய்/பராமரிப்புப் பயணத்தில் எப்போது இணைகிறது?
- நோயறிதலுக்குப் முன்பும் பின்பும்
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
- சேவைக்கான இணையவழி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க உதவிபெற, உங்கள் அன்புக்குரியவர் பார்வையிடும் மருத்துவமனை அல்லது பலதுறை மருந்தகத்தில் உள்ள மருத்துவரை அணுகவும்.
- உங்களுக்கு அருகாமையில் உள்ள சேவை வழங்குநர்களைக் கண்டறியுங்கள்: இ-கேர் இருப்பிடங்காட்டி.
இது என்ன?
- ஹோம் பர்சனல் கேர் என்பது பயிற்சி பெற்ற பராமரிப்பு நிபுணர்களால் வழங்கப்படும் ஒரு சேவையாகும், இது தனிப்பட்ட சேவைகள் தேவைப்படுபவர்கள், அவர்களது பராமரிப்பாளர்களுடன் வீட்டில் தொடர்ந்து நன்றாக வாழ உதவுகிறது. மேலும், இது அவர்களின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் (எ.கா. குளியல், இலகுவான வீட்டுப் பராமரிப்பு), மருந்துகள், மனதைத் தூண்டும் நடவடிக்கைகள், முதியவர்களைப் பராமரித்தல் மற்றும் பிற பராமரிப்புப் பணிகளில் உதவுகிறது.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு இது எவ்வாறு உதவலாம்?
- இல்லத்தை அடிப்படையாகக் கொண்ட பராமரிப்பு. முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர் வீட்டில் தொடர்ந்து நன்றாக வாழ அனுமதிக்கிறது.
- அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் (அடிப்படை சுய-பராமரிப்புப் பணிகள்) உதவுகிறது. அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் அடங்குவன: துணி துவைத்தல், உடை உடுத்துதல், உணவளித்தல், கழிப்பறைக்குச் செல்லுதல், நடமாட்டம் மற்றும் இடமாற்றம்.
- சாதனங்களைப் பயன்படுத்து மேற்கொள்ளப்படும் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் மற்றும் இலகுவான வீட்டுப் பராமரிப்பு, சலவை போன்ற மிகவும் சிக்கலான சுய-பராமரிப்பு நடவடிக்கைகளில் உதவுகிறது
- மருந்து உண்பதில் உதவி
- எளிய பராமரிப்புப் பயிற்சிகள்: சுகாதாரப் பராமரிப்புத் துணை நிபுணர்கள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர், தொழில்சார் அல்லது பேச்சுச் சிகிச்சை நிபுணரால் பரிந்துரைக்கப்பட்டது
இதனால் பராமரிப்பாளர்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?
- பராமரிப்பாளருக்கு இடைகால ஓய்வை வழங்குகிறது
பராமரிப்பு வழங்கல் பொறுப்புகளில் உதவி - அதிக தீவிரப் பராமரிப்பு அல்லது நேரம் வரையறுக்கப்பட்ட காலத்திற்கு இடைகால ஓய்வு தேவைப்படும் வாடிக்கையாளர்களின் பராமரிப்பாளர்களுக்கு, இல்லம் சார்ந்த இடை ஓய்வுப் பராமரிப்பு (Home-based Respite Care, HBRC) சேவையால் உங்களுக்குச் சிறிது ஆதரவை வழங்க முடியும்.
ஹோம் பர்சனல் கேர் ஒருவரின் முதுமைக்கால மறதி நோய்/பராமரிப்புப் பயணத்தில் எப்போது இணைகிறது?
- நோயறிதலுக்கு பின்பு
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
- விண்ணப்பிப்பதற்கு, நீங்கள் செய்ய வேண்டியவை:
- உங்கள் அன்புக்குரியவர்களின் நிலை மற்றும் தேவைகளை நன்கு அறிந்த மருத்துவமனை அல்லது பலதுறை மருந்தகம் அல்லது தனியார் மருத்துவரிடம் இருந்து பரிந்துரையைப் பெறவும் அல்லது
- ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பை (AIC) 1800 650 6060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும் அல்லது அருகிலுள்ள AIC Link-க்குச் செல்லவும்.
- உங்களுக்கு அருகாமையில் உள்ள சேவை வழங்குநர்களைக் கண்டறியுங்கள்: இ-கேர் இருப்பிடங்காட்டி.
இது என்ன?
- எல்டர்சிட் என்பது ஒரு வகையான இல்லம் சார்ந்த சேவையாகும். இதில் பணிபுரியும் பயிற்சி பெற்ற பராமரிப்பாளர்கள் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களை அர்த்தமுள்ள நடவடிக்கைகளில் வழக்கமான அடிப்படையில், ஒரு குறுகிய காலத்திற்கு ஈடுபடுத்துகின்றனர்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு இது எவ்வாறு உதவலாம்?
- அவர்களின் தேவைகள் மற்றும் ஆர்வங்களின் அடிப்படையில் நினைவூட்டல், நினைவுத்திறன், மொழியியல் மற்றும் பிற பொருத்தமான பணிகளை உள்ளடக்கக்கூடிய சமூகத் தொடர்புகள் மற்றும் அர்த்தமுள்ள, கட்டமைக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் அறிவாற்றல் தூண்டுதலை வழங்குகிறது
இதனால் பராமரிப்பாளர்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?
- வீட்டில் தங்கள் அன்புக்குரியவர்களை ஆதரிப்பதற்கும் பராமரிப்பதற்கும் பராமரிப்பாளர்களின் திறனை உருவாக்குகிறது
- பராமரிப்பாளர்களுக்கு இடைகால ஓய்வை வழங்குகிறது
முதியோர்களை இல்லத்தில் கவனிக்கும் ஆதரவு ஒருவரின் முதுமைக்கால மறதி நோய்/பராமரிப்புப் பயணத்தில் எப்போது இணைகிறது?
- நோயறிதலுக்கு பின்பு
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
- குறிப்பிட்ட வகையான இல்ல ஆதரவுச் சேவைகளைப் பற்றிய ஆலோசனைக்கு, உங்கள் அன்புக்குரியவருக்கும் உங்களுக்கும் மிகவும் பொருத்தமான ஒன்றைக் குறிப்பிட AIC Link -ஐ நாடவும்..
இது என்ன?
- சமூகத்தில் உள்ள மூத்தோர்களிடம் “வாழ்விடத்திலேயே மூப்படைவதை” ஊக்குவிப்பதையும், அத்துடன் அவர்களின் குடும்பத்தினர்/பராமரிப்பாளர்களுக்கு ஆதரவையும் இடைகால ஓய்வையும் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட முழு நாள் திட்டம்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு இது எவ்வாறு உதவலாம்?
- பொழுதுபோக்கான மற்றும் மனதைத் தூண்டுகின்ற நடவடிக்கைகள், உடற்பயிற்சிகள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு போன்ற முதியோர்களுக்கான திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.
- மூத்தோர்களுக்காகப் பொருத்தமான பராமரிப்பு உடற்பயிற்சிகளுடன் தனிப்பட்ட பராமரிப்புத் திட்டம் உருவாக்கப்படும்.
இதனால் பராமரிப்பாளர்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?
- நிலையம் சார்ந்த பராமரிப்பு அமைப்பிற்குப் பொருத்தமான மூத்தோர்களுக்கு, அவர்களின் பராமரிப்பாளர்கள் பணியில் இருக்கும் போது அவர்களுக்கு பராமரிப்பு மற்றும் மேற்பார்வையை வழங்குகிறது. .
பகல்நேரப் பராமரிப்பு ஒருவரின் முதுமைக்கால மறதி நோய்/பராமரிப்புப் பயணத்தில் எப்போது இணைகிறது?
- நோயறிதலுக்குப் முன்பும் பின்பும்
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
- உங்கள் அன்புக்குரியவர்களின் நிலை மற்றும் தேவைகளை நன்கு அறிந்த மருத்துவமனை, பலதுறை மருந்தகம் அல்லது தனியார் மருத்துவரிடம் இருந்து நீங்கள் பரிந்துரையைப் பெற வேண்டியிருக்கும். ஒரு கலந்துரையாடலுக்காக நீங்கள் சேவை வழங்குநரையும் தொடர்பு கொள்ளலாம்.
- உங்களுக்கு அருகாமையில் உள்ள சேவை வழங்குநர்களைக் கண்டறியுங்கள்: இ-கேர் இருப்பிடங்காட்டி
இது என்ன?
- டிமென்ஷியா டே கேர் என்பது முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு ஒரு நிலையம் சார்ந்த அமைப்பில் முழு நாள் பராமரிப்பை வழங்குகின்ற ஒரு சேவையாகும்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு இது எவ்வாறு உதவலாம்?
- வாடிக்கையாளரின் இயலுந்திறனின் அடிப்படையில் குழு மற்றும் தனிப்பட்ட நடவடிக்கைகள் வழங்கப்படுகின்றன. அவை உடல் மற்றும் மன ரீதியான செயல்பாடுகளின் சரிவை மெதுவாக்குவதையும், அத்துடன் அவர்களின் குடும்பத்தினர்/பராமரிப்பாளர்களுக்கு ஆதரவு மற்றும் இடைகால ஓய்வு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டவை.
- வாடிக்கையாளர்களுக்காகப் பொருத்தமான பராமரிப்பு உடற்பயிற்சிகளுடன் தனிப்பட்ட பராமரிப்புத் திட்டம் உருவாக்கப்படும்.
இதனால் பராமரிப்பாளர்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?
- Ensure that loved ones living with dementias are cared for and engaged whilst caregivers are away at work or busy with other responsibilities on weekdays.
- Provide respite for caregivers.
When does Dementia Day Care come into the picture of one’s dementia/caregiving journey?
- Post-diagnosis
List of service providers:
- You will need to get a referral from a hospital, polyclinic or GP who is familiar with your loved ones’ condition and needs.
- Find service providers near you using the Care Services Recommender
இது என்ன?
- வாரஇறுதி பகல்நேரப் பராமரிப்பு என்பது சனிக்கிழமை மற்றும்/அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு நிலையம் சார்ந்த அமைப்பில் முழு நாள் பொறுப்புப் பராமரிப்பை வழங்குகின்ற ஒரு சேவையாகும்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு இது எவ்வாறு உதவலாம்?
- நிலையத்தில் உள்ள பராமரிப்பு ஊழியர்கள் உணவு உண்பது அல்லது கழிப்பறைக்குச் செல்வது போன்ற அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் உதவி வழங்குகிறார்கள், மேலும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களை அவர்களின் தேவைகள் மற்றும் திறன்களுக்கு ஏற்ப அர்த்தமுள்ள வகையில் ஈடுபடுத்துகிறார்கள்.
இதனால் பராமரிப்பாளர்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?
- சனிக்கிழமை மற்றும்/அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில், பராமரிப்பாளர்களுக்குத் தங்கள் பராமரிப்புக் கடமைகளில் இருந்து விடுபடுவதற்கு அல்லது பிற பொறுப்புகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
வாரஇறுதி பகல்நேரப் பராமரிப்பு ஒருவரின் முதுமைக்கால மறதி நோய்/பராமரிப்புப் பயணத்தில் எப்போது இணைகிறது?
- நோயறிதலுக்கு பின்பு
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
- விண்ணப்பச் செயல்முறையில் உதவி பெற, தொடர்புடைய சேவை வழங்குநர்களைத் தொடர்பு கொள்ளலாம்:
இது என்ன?
- இந்தச் சமூகச் சேவை அலுவலகங்கள் (Social Service Office, SSO) கொம்கேர் உதவி போன்ற சேவைகளையும், வேலைவாய்ப்பு மற்றும் குடும்பச் சேவைகள் போன்ற பிற உதவிகளையும் தேவைப்படும் மக்களுக்கு வழங்குகிறது.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் இது எவ்வாறு உதவலாம்?
- தகவல்களை வழங்கி, தொடர்புடைய அரசாங்க நிதி உதவித் திட்டங்களை நிர்வகிக்கிறது.
- தனிப்பட்ட பராமரிப்புத் திட்டங்களுடன் தனிநபர்களையும் குடும்பங்களையும் ஆதரிக்கிறது மற்றும் அவர்களின் தேவைகளின் அடிப்படையில் தொடர்புடைய உதவி நிறுவனங்களுக்குப் பரிந்துரைகளைச் செய்கிறது.
- குடியிருப்பாளர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு, அவர்களுடன் வழக்கமான ஈடுபாடுகள் மற்றும் உரையாடல்களை மேற்கொள்கிறது.
SSO ஒருவரின் முதுமைக்கால மறதி நோய்/பராமரிப்புப் பயணத்தில் எப்போது இணைகிறது?
- நோயறிதலுக்குப் முன்பும் பின்பும்
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
- விண்ணப்பச் செயல்முறையில் உதவி பெற, தொடர்புடைய சேவை வழங்குநர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
- சமூகச் சேவை அலுவலகங்களின் பட்டியல் (msf.gov.sg)
ஒருங்கிணைந்த இல்ல மற்றும் பகல்நேரப் பராமரிப்பு?
- ஒருங்கிணைந்த இல்லம் மற்றும் பகல்நேரப் பராமரிப்பு (Integrated Home & Day Care, IHDC) என்பது, தங்கள் வீடுகளிலும் அவர்களுக்கு அருகிலுள்ள ஒரு பகல்நேரப் பராமரிப்பு நிலையத்திலும் தீவிரச் சிகிச்சை தேவைப்படும் மூத்தோர்களுக்கான சமூக மற்றும் சுகாதாரச் சேவைகளின் கூட்டிணைவை வழங்கின்ற ஒரு சேவையாகும்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு இது எவ்வாறு உதவலாம்?
- IHDC தொகுப்புகள் விரிவானவை மற்றும் முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட மூத்தோர்களுக்கு ஆதரவளிக்கத் தனிப்பயனாக்கப்பட்டவை. அவற்றின் மூலம் சமூகத்தில் தங்களின் சுயசார்பையும் வாழ்க்கைத் தரத்தையும் அவர்களால் முடிந்தவரை பராமரிக்க இயலும்.
- மருத்துவர்கள், செவிலியர்கள், சிகிச்சையாளர்கள் மற்றும் சமூகப் பணியாளர்களை உள்ளடக்கிய பலதுறைப் பராமரிப்புக் குழுவானது, மூத்தோர்கள் மற்றும் அவர்களது பராமரிப்பாளர்களுடன் இணைந்து தேவைப்படும் சேவைகளின் தீவிரத்தன்மை மற்றும் கால இடைவெளியை மதிப்பிடுவதற்குப் பணியாற்றும், அவற்றில் பின்வருவன அடங்கலாம்:
- வேலை நேரத்திற்குப் பிறகான உதவித் தொலைபேசிச் சேவை (சேவை வழங்குநர்களின் ஆலோசனைப்படி)
- தேவைகளின் மதிப்பீடு மற்றும் பராமரிப்பு ஒருங்கிணைப்பு
- முதுமைக்கால மறதி நோய் பராமரிப்பு (எ.கா. மனதை வலுப்படுத்தும் பயிற்சி)
- IHDC நிலையத்திற்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து
- பகல்நேரப் பராமரிப்புச் சேவைகள் (எ.கா. பொழுதுபோக்கு ரீதியான சிகிச்சை, உணவுகள், உடற்பயிற்சிகள்)
- மறுவாழ்வு (எ.கா. உடற்பயிற்சி சிகிச்சை அல்லது தொழில்வழி சிகிச்சை)
- மருத்துவ மற்றும் தாதிமைப் பராமரிப்பு (எ.கா. மருந்து மீளாய்வு மற்றும் உதவி, சிறுநீர் வடிகுழாய் பராமரிப்பு மற்றும் வடிகுழாய் மாற்றுதல், காய மேலாண்மை, மூச்சுப் பெருங்குழாய்த் திறப்பு (ட்ரக்கியோஸ்டமி) பராமரிப்பு)
இதனால் பராமரிப்பாளர்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?
மருத்துவர்கள், செவிலியர்கள், சிகிச்சையாளர்கள் மற்றும் சமூகப் பணியாளர்களை உள்ளடக்கிய பலதுறைப் பராமரிப்புக் குழுவானது, மூத்தோர்கள் மற்றும் அவர்களது பராமரிப்பாளர்களுடன் இணைந்து தேவைப்படும் சேவைகளின் தீவிரத்தன்மை மற்றும் கால இடைவெளியை மதிப்பிடுவதற்குப் பணியாற்றும், அவற்றில் பின்வருவன அடங்கலாம்:
- பராமரிப்பாளர் ஆதரவு (எ.கா. மருத்துவ நியமன சந்திப்புகளுக்கான வழித்துணை)
- வாரஇறுதிச் சேவைகளை வழங்குகிறது (கிடைக்குந்தன்மைக்கு உட்பட்டது).
- சனிக்கிழமை மற்றும்/அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில், பராமரிப்பாளர்களுக்குத் தங்கள் பராமரிப்புக் கடமைகளில் இருந்து விடுபடுவதற்கு அல்லது பிற வாழ்க்கைப் பொறுப்புநிலைகள் மற்றும் பொறுப்புகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது
ஒருங்கிணைந்த இல்ல மற்றும் பகல்நேரப் பராமரிப்பு ஒருவரின் முதுமைக்கால மறதி நோய்/பராமரிப்புப் பயணத்திற்குள் வருகிறது?
- நோயறிதலுக்குப் முன்பும் பின்பும்
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
உங்கள் அன்புக்குரியவர்களின் நிலை மற்றும் தேவைகளை நன்கு அறிந்த மருத்துவமனை, பலதுறை மருந்தகம் அல்லது தனியார் மருத்துவரிடம் இருந்து நீங்கள் பரிந்துரையைப் பெற வேண்டியிருக்கும். ஒரு கலந்துரையாடலுக்காக நீங்கள் சேவை வழங்குநரையும் தொடர்பு கொள்ளலாம்.
உங்களுக்கு அருகாமையில் உள்ள சேவை வழங்குநர்களைக் கண்டறியுங்கள்:
இது என்ன?
- தாதிமை இல்லங்கள் என்பவை நீண்டகாலக் குடியிருப்பு சார்ந்த பராமரிப்பு வசதிகள் ஆகும், இவை அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் பெரும்பாலானவற்றில் உதவி தேவைப்படுகின்ற மற்றும்/அல்லது தினசரி தாதிமைப் பராமரிப்புத் தேவைகளைக் கொண்டிருக்கின்ற குடியிருப்பாளர்களுக்கு உதவுகின்றன. குறிப்பிட்ட முதுமைக்கால மறதி நோய் மற்றும்/அல்லது மனநல மருத்துவ வசதிகளைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தாதிமை இல்லங்கள் உள்ளன, அவை நிபுணத்துவ பராமரிப்பு மற்றும் ஆதரவு தேவைப்படும் குடியிருப்பாளர்களுக்கு உதவுகின்றன..
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு இது எவ்வாறு உதவலாம்?
- சேவைகளில் அடங்குவன:
- கழிப்பறைக்குச் செல்வது, குளிப்பது, சாப்பிடுவது போன்ற அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் உதவுவது.
- மூக்கு-இரைப்பைக் குழாய், சிறுநீர் வடிகுழாய், காயத்திற்கு கட்டு போடுதல் முதலானவற்றின் மேலாண்மை போன்ற தாதிமைப் பராமரிப்பு.
- பராமரிப்புப் பயிற்சிகள், வெளியூர் பயணம் போன்ற உடல் மற்றும் சமூக ரீதியான நடவடிக்கைகள்.
- முதுமைக்கால மறதி நோய் / மனநல மருத்துவ வசதிகளுக்கு
- முதுமைக்கால மறதி நோயின் முன்னேற்றத்தை மெதுவாக்க, அறிவாற்றலைத் தூண்டுவதற்கான திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் வழங்கப்படும்
இதனால் பராமரிப்பாளர்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?
- பராமரிப்பாளர்களுக்குத் தங்கள் அன்புக்குரியவர்களுக்காகப் பல நாட்கள் முதல் சில வாரங்கள் வரை குறுகிய காலப் பராமரிப்பு தேவைப்பட்டால், உதாரணத்திற்கு உங்கள் வெளிநாட்டுப் பணிப்பெண் வீட்டு விடுப்பில் செல்லும்போது, அவர்கள் இடை ஓய்வுப் பராமரிப்புக்காகத் தாதிமை இல்லங்களின் உதவியை நாடலாம்.
தாதிமை இல்லம் ஒருவரின் முதுமைக்கால மறதி நோய்/பராமரிப்புப் பயணத்தில் எப்போது இணைகிறது?
- நோயறிதலுக்குப் முன்பும் பின்பும்
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
- உங்கள் அன்புக்குரியவர்களின் நிலை மற்றும் தேவைகளை நன்கு அறிந்த மருத்துவமனை, பலதுறை மருந்தகம் அல்லது தனியார் மருத்துவரிடம் இருந்து நீங்கள் பரிந்துரையைப் பெற வேண்டியிருக்கும். ஒரு கலந்துரையாடலுக்காக நீங்கள் சேவை வழங்குநரையும் தொடர்பு கொள்ளலாம்.
- உங்களுக்கு அருகாமையில் உள்ள சேவை வழங்குநர்களைக் கண்டறியுங்கள்: Care Services Recommender
இது என்ன?
- FSCகள் என்பவை சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகச் சேவைகள் ஆகும், இவை குறைந்த வருமானம் கொண்ட மற்றும்/அல்லது எளிதில் பாதிக்கப்படக்கூடிய தனிநபர்கள் மற்றும் சமூக மற்றும் மனவுணர்வு சார்ந்த பிரச்சினைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவை வழங்குகின்றன. FSCகளில் உள்ள சமூகப் பணிப் பயிற்சியாளர்கள் நிகழ்வு மேலாண்மை ஆதரவை வழங்குவதோடு, வாடிக்கையாளர்கள் நிலைத்தன்மை, தற்சார்பு மற்றும் சமூக முன்னேற்றம் அடைய உதவும் வகையில் முழுமையான ஆதரவை ஒருங்கிணைக்க மற்ற நிறுவனங்களுடனும் கூட்டு சேர்ந்துள்ளனர்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் இது எவ்வாறு உதவலாம்?
- தகவல்கள் மற்றும் பரிந்துரை: சமூகச் சேவைகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது, மேலும் மதிப்பிடப்பட்ட தேவைகளின் அடிப்படையில் பொருத்தமான சமூகச் சேவைகள் மற்றும் சமூக வளஆதாரங்களுடன் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களை இணைக்கிறது
- களப் பணி: முழுமையான நிகழ்வு மேலாண்மை மற்றும் தனிநபர்/குடும்ப ஆலோசனை வழங்குதல்
- குழுப் பணி: பயனுள்ள குழு ஊடாடல்களுக்காகப் பொதுவான தேவைகளைக் கொண்ட தனிநபர்கள் மற்றும் குடும்பங்களை ஒன்றிணைத்து, அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்கிறது மற்றும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது
- சமூகப் பணி: தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் ஒருவரையொருவர் ஆதரிப்பதற்கும் அதிகாரமளிப்பதற்கும் சமூக வளஆதாரங்களின் உதவியை நாடுகிறது..
FSC ஒருவரின் முதுமைக்கால மறதி நோய்/பராமரிப்புப் பயணத்தில் எப்போது இணைகிறது?
- நோயறிதலுக்குப் முன்பும் பின்பும்
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
- குடும்பம், மற்றவர்களுடனான உறவுநிலை அல்லது பிற சமூகப் பிரச்சினைகளில் உதவி பெற FSCகளை அழையுங்கள், நேரில் செல்லுங்கள் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள்.
- உங்களுக்கு அருகாமையில் உள்ள சேவை வழங்குநர்களைக் கண்டறியுங்கள்: Care Services Recommender
சமூக நடவடிக்கைகள்/திட்டங்கள்
சமூக நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் சமூகத்தில் மற்றவர்களுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இவை, சமூகத்துடன் குறைவாகப் பழகுவதால் அல்லது குறைவாகத் தொடர்புகொள்வதால் காலப்போக்கில் சமூகத்திடமிருந்து மிகவும் விலகக்கூடிய முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்குக் குறிப்பாகப் பொருத்தமானவை. இந்த நடவடிக்கைகளும் திட்டங்களும் முதுமைக்கால மறதி நோயின் முன்னேற்றத்தை மெதுவாக்ககவும், கட்டமைக்கப்பட்ட கால அட்டவணையை வழங்குவதையும், மேலும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களின் மனநிலையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இது என்ன?
- துடிப்பான முதுமைக்கால நிலையம் (Active Ageing Centre, AAC) என்பது நேரில் கலந்துகொள்ள முடியும் வகையிலான ஒரு சமூகப் பொழுதுபோக்கு மையமாகும், இது சமூகத்தில் அருகாமையில் வசிக்கும் மூத்தோர்களுக்கு ஆதரவை வழங்குகிறது. இது வலுவான சமூகத் தொடர்புகளை உருவாக்கிக்கொள்ள, பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் பங்கேற்க மற்றும் தாங்கள் விரும்பும் சமூகத்திற்குப் பங்களிக்க வாய்ப்பைப் பெறுவதற்கு மூத்தோர்கள் செல்ல வேண்டிய இடமாகும். முக்கியமான தகவல்களை தேவைப்படும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள், பராமரிப்பாளர்கள் அல்லது பொது உறுப்பினர்களுக்கான ஆதரவு..
- துடிப்பான முதுமைக்கால நிலையம் (பராமரிப்பு), அல்லது AAC (பராமரிப்பு) ஆனது, அருகாமையில் உள்ள தனி வசதிகளில் AAC சேவைகளையும், பகல்நேரப் பராமரிப்பு மற்றும் சமூக மறுவாழ்வு போன்ற கூடுதல் பராமரிப்புச் சேவைகளையும் வழங்குகிறது.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு இது எவ்வாறு உதவலாம்?
மூத்தோர்களை சமூகத்தில் ஈடுபாட்டுடன் வைத்திருக்க துடிப்புடன் மூப்படைதல் நடவடிக்கைகளை வழங்குகிறது.
கூடுதல் சமூக ஆதரவு தேவைப்படும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மூத்தோர்களுக்கான நட்புறவுச் சேவைகளை வழங்குகிறது
தேவைப்படும் போது பராமரிப்புச் சேவைகளுக்கான பரிந்துரைகளைச் செய்கிறது.
AAC சேவைகளையும், பகல்நேரப் பராமரிப்பு மற்றும் சமூக மறுவாழ்வு போன்ற கூடுதல் பராமரிப்புச் சேவைகளையும் வழங்குகிறது.
நிலையத்தின் செயல்பாடுகளில் உதவுதல், தனிமையில் இருக்கும் மூத்தோர்களைச் சந்தித்தல் அல்லது மூத்தோர்களுக்குச் சிறு சிறு வெளிவேலைகளைச் செய்தல் போன்று நிலையத்தில் தொண்டூழியம் செய்ய விரும்பும் மூத்தோர்களையும் இந்நிலையங்கள் வரவேற்கின்றன.
AACகள் ஒருவரின் முதுமைக்கால மறதி நோய்/பராமரிப்புப் பயணத்தில் எப்போது இணைகின்றன?
- நோயறிதலுக்குப் முன்பும் பின்பும்
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
- மேலும் தகவல்களுக்கு நீங்கள் தொடர்புடைய சேவை வழங்குநர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
உங்களுக்கு அருகாமையில் உள்ள சேவை வழங்குநர்களை இதில் Care Services Recommender
இது என்ன?
- தொண்டூழியர் நிலையங்கள் அல்லது திட்டங்கள் சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகளால் இயக்கப்படுகின்றன, அவை தொண்டூழியத் திறனை வளர்ப்பதற்கும், சமூகத்தின் தேவைகளுக்குச் சேவைபுரிய தொண்டூழியர்களுக்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்குவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டவை.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு இது எவ்வாறு உதவலாம்?
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கான அர்த்தமுள்ள செயல்பாடாகவும், சமூகத்திற்குக் கைமாறு செய்வதற்கான ஒரு வழியாகவும் சேவைபுரிகின்றன.
இந்தச் சேவை யாருக்கானது?
- ஓரளவுக்குச் சுயசார்புடன் வாழ இயலுகின்ற, முதுமைக்கால மறதி நோயின் லேசானது முதல் மிதமான கட்டத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பொருத்தமானது.
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
- உங்களுக்கு அருகிலுள்ள தொண்டூழிய வாய்ப்புகளைக் கண்டறியவும்:
- எஸ்ஜி பரிவு இயக்கத்தின் தொண்டூழிய நிலையங்கள் (VCகள்)
இது என்ன?
- சமூக நிலையங்கள் (CC) என்பவை சமூகம் ஒன்றிணைவதற்கும், நட்புறவை வளர்ப்பதற்கும், சமூகப் பிணைப்பை மேம்படுத்துவதற்கும் பொதுவான இடங்களாகும்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு இது எவ்வாறு உதவலாம்?
- யோகாசனம், நடனம் மற்றும் உடற்தகுதி நிலையங்கள் போன்ற வகுப்புகள் அடிக்கடி உடற்பயிற்சிக் கூறுகளைக் கொண்டுள்ளன. இந்தத் திட்டங்கள் நடமாட்டம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த உதவுகின்றன, மேலும் வயதானக் குடியிருப்பாளர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகின்றன.
- மொழி வகுப்புகள், கலைப் பயிற்சிப் பட்டறைகள் மற்றும் கணினிப் பயிற்சி போன்ற திட்டங்களால், குடியிருப்பாளர்களுக்கு மனத் தூண்டுதல் மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்பை வழங்க முடியும்.
- சமூக மன்றத்தின் வகுப்புகளில் சேருபவர்கள் தங்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளலாம், இது தனிமை உணர்வையும் தனிமைப்படுத்தப்படுவதையும் தடுக்க உதவுகிறது. அவர்கள் தங்கள் ஆர்வங்கள் மற்றும் திறன்களுக்கு ஏற்ற பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம்.
- சமையல், மரவேலை மற்றும் தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு சமூக நிலையங்கள் பயிற்சி வகுப்புகளில் குடியிருப்பாளர்கள் புதிய ஆர்வங்களில் ஈடுபடலாம் அல்லது திறன்களைப் பெறலாம். இது சாதனை உணர்வுகளை அனுமதிக்கிறது, மேலும் அவர்கள் மற்றவர்களுக்கு உதவ தங்கள் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் பெறலாம்.
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
- மேலும் தகவல்களுக்கு நீங்கள் பல்வேறு சமூக நிலையங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
- உங்களுக்கு அருகாமையில் உள்ள சேவை வழங்குநர்களைக் கண்டறியுங்கள்: https://www.onepa.gov.sg/cc
இது என்ன?
- ஜிம் டோனிக் என்பது மூத்தோர்களுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடலுறுதிக் கூடமாகும். இது மூத்தோர்கள் வலுப்பெற உதவுகிறது – அவர்கள் மூப்படையும்போதும்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு இது எவ்வாறு உதவலாம்?
- உடற்தகுதித் திட்டங்கள், தனிப்பயனாக்கப்பட்ட வலிமைப் பயிற்சி முறைகள், அதிநவீன ஹைட்ராலிக் உடலுறுதிக்கூட இயந்திரங்கள், அத்துடன் நல்வாழ்வுப் பயிற்சியாளர்களின் வழிகாட்டுதல் ஆகியவற்றின் மூலம் அவர்களின் ‘உடற்பயிற்சி ஒரு மருந்தாக’ (Exercise-As-Medicine) என்ற திட்டம் மூத்தோர்களை வலிமையாக்குகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜிம் டானிக் ஒருவரின் முதுமைக்கால மறதி நோய்/பராமரிப்புப் பயணத்தில் எப்போது இணைகிறது?
- நோயறிதலுக்குப் முன்பு அல்லது பின்பு
- பின்வரும் மூத்தோர்களுக்கு உகந்தது: 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர், வாரத்திற்கு இருமுறை ஈடுபட முடிபவர்கள், நடக்க முடிபவர்கள் மற்றும் எளிய அறிவுறுத்தல்களைப் பின்பற்ற முடிபவர்கள்.
- மருத்துவ நிலைமைகளைக் கொண்டிருக்கும் (எ.கா. பக்கவாதம், நீரிழிவு) மூத்தோர்களுக்கு, ஒரு மருத்துவரின் கடிதம் அவசியமாகும்..
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
- ஜிம்டானிக் இணையதளத்தில் நேரடியாகப் பதிவு செய்துகொள்ளுங்கள்.
- உங்களுக்கு அருகாமையில் உள்ள சேவை வழங்குநர்களைக் கண்டறியுங்கள்: https://gymtonic.sg/locations
இது என்ன?
- நம்பிக்கைக்கான குரல்கள் (Voices for Hope) என்பது முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களையும் அவர்களின் பராமரிப்புப் பங்காளர்களையும் சுய-ஆலோசனைப் பயணத்தில் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அதிகாரமளிக்கும் திட்டமாகும். 2019-இல் முன்னோடியாகத் தொடங்கப்பட்ட இது, ஒரு 10 வாரத் திட்டமாகும், இது பங்கேற்பாளர்களுக்குப் பொருத்தமான திறன்களை அளித்து, அவர்களின் கதைகள், அவர்களின் தேவைகள் மற்றும் கண்ணோட்டங்களைப் பொதுவில் தீவிரமாகப் பகிர்ந்து கொள்வதற்கான நம்பிக்கையை வளர்க்கிறது.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் இது எவ்வாறு உதவலாம்?
- பங்கேற்பாளர்களுக்குப் பொருத்தமான திறன்களை அளிக்கவும், அவர்களின் கதைகள், அவர்களின் தேவைகள் மற்றும் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான நம்பிக்கையை வளர்க்கவும் பணியாற்றுகிறது..
நம்பிக்கைக்கான குரல்கள் (Voices for Hope) ஒருவரின் முதுமைக்கால மறதி நோய்/பராமரிப்புப் பயணத்தில் எப்போது இணைகிறது?
- நோயறிதலுக்கு பின்பு
இந்தச் சேவை யாருக்கானது?
- லேசான-கட்டத்தில் முதுமைக்கால மறதி நோய் இருப்பதாகப் பரிசோதனையில் கண்டறியப்பட்ட, தகவல்தொடர்பு மற்றும் உச்சரிப்பில் ஓரளவிற்குத் திறனுடைய மற்றும் நிலையான பராமரிப்பு ஏற்பாடுகளைக் கொண்டுள்ள நபர்களுக்கு நம்பிக்கைக்கான குரல்கள் (Voices for Hope) மிகவும் பொருத்தமானது.
சேவை வழங்குநர் பட்டியல்:
- டிமென்ஷியா சிங்கப்பூர்
- இந்தத் திட்டத்தில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள் அல்லது 6377 0700 என்ற எண்ணை அழையுங்கள்.
மருத்துவ மற்றும் உடல்நலப் பராமரிப்புச் சேவைகள்
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கான மருத்துவ மற்றும் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளில் மருத்துவ மதிப்பீடுகள், மறுவாழ்வுப் பராமரிப்பு, நடத்தை, நினைவுத்திறன் மற்றும் மனநிலைக்கு உதவுவதற்கான மருந்துகளின் பரிந்துரை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பீடுகள் ஆகியவை அடங்கும். பராமரிப்பைப் பெறுபவரின் வீடு, நிலையங்கள், மருத்துவமனைகள் அல்லது தாதிமை இல்லங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் இந்தச் சேவைகள் வழங்கப்படலாம்.
இது என்ன?
- நினைவுத்திறன் மருந்தகங்கள் நினைவாற்றல் பிரச்சினைகளைக் கொண்டிருப்பவர்களுக்கும், அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் தொழில்முறையிலான நோயறிதல் சோதனைகள், மதிப்பீடு, ஆதரவு, தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குகின்றன.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு இது எவ்வாறு உதவலாம்?
- சிந்தனை, இயக்கம் அல்லது நடத்தையில் மாற்றங்களை அனுபவிப்பவர்களுக்கு குடும்ப மருத்துவரைச் சந்திப்பது பெரும்பாலும் முதல் படியாகும். நோயறிதல் சோதனையைச் செய்துகொள்வதில் உள்ள நன்மைகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, இங்கு கிளிக் செய்யுங்கள்.
நினைவுத்திறன் மருந்தகங்கள் ஒருவரின் முதுமைக்கால மறதி நோய்/பராமரிப்புப் பயணத்தில் எப்போது இணைகின்றன?
- நோயறிதலுக்கு முன்பு
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
- மானியமளிக்கப்பட்ட கட்டணங்களுக்கு, பலதுறை மருந்தகம் அல்லது CHAS தனியார் மருத்துவரின் பரிந்துரை தேவை.
- உங்களுக்கு அருகாமையில் உள்ள சேவை வழங்குநர்களைக் கண்டறியுங்கள்: நோயறிதல் சோதனையை எங்கு செய்துகொள்வது? – DementiaHub.SG
இது என்ன?
- நிலையம் சார்ந்த தாதிமைப் பராமரிப்பு என்பது ஒரு நிலையத்தில் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் உட்பட மூத்தோர்களுக்கு அடிப்படை தாதிமைப் பராமரிப்வை வழங்கும் ஒரு சேவையாகும்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு இது எவ்வாறு உதவலாம்?
- சேவைகளில் அடங்கக்கூடியவை: காய மேலாண்மை, மூக்கு-இரைப்பைக் குழாயைச் செருகுதல் (NGT), மலக்குடலை நீக்குவதில் (எ.கா. எனிமா (மலக்குடல் கழுவல்) அல்லது மருத்துவரின் உத்தரவுப்படி குதச்செருகுகளைச் செருகுதல்) உதவி, பெர்குடேனியஸ் எண்டோஸ்கோபிக் காஸ்ட்ரோஸ்டமி (PEG) குழாய் பராமரிப்பு மற்றும் கட்டுப் போடுதல், ஸ்டோமா பராமரிப்பு – கொலோஸ்டமி மற்றும் இலியோஸ்டமி பராமரிப்பு, சிறுநீர் வடிகுழாய் பராமரிப்பு மற்றும் பெண் சிறுநீர் வடிகுழாய்களை மாற்றுதல்.
நிலையம் சார்ந்த தாதிமைப் பராமரிப்பு ஒருவரின் முதுமைக்கால மறதி நோய்/பராமரிப்புப் பயணத்தில் எப்போது இணைகிறது?
- நோயறிதலுக்கு பின்பு
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
- உங்கள் அன்புக்குரியவர்களின் நிலை மற்றும் தேவைகளை நன்கு அறிந்த மருத்துவமனை, பலதுறை மருந்தகம் அல்லது தனியார் மருத்துவரிடம் இருந்து நீங்கள் பரிந்துரையைப் பெற வேண்டியிருக்கும். ஒரு கலந்துரையாடலுக்காக நீங்கள் சேவை வழங்குநரையும் தொடர்பு கொள்ளலாம்.
- உங்களுக்கு அருகாமையில் உள்ள சேவை வழங்குநர்களை இதில் கண்டறியுங்கள்: SupportGoWhere.
இது என்ன?
- பகல்நேர மறுவாழ்வு நிலையங்கள் என்பவை பயிற்சி பெற்ற சிகிச்சையாளரின் மேற்பார்வையின் கீழ் தனிநபர்கள் வழக்கமான உடற்பயிற்சி அமர்வுகளுக்கு செல்லக்கூடிய நிலையங்கள் ஆகும். சிகிச்சையாளர் ஒருவரின் செயல்பாட்டை அணுகி, வாடிக்கையாளரின் திறன்களுக்கு ஏற்றவாறு பயிற்சிகளை வகுத்துக் கொடுப்பார் மற்றும் பயிற்சிகள் மூலம் அவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பார்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு இது எவ்வாறு உதவலாம்?
- வாடிக்கையாளர்கள் மற்றும்/அல்லது அவர்களின் பராமரிப்பாளர்களுடன் அவர்களின் இலக்குகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப ஒரு திட்டத்தைத் தனிப்பயனாக்க சிகிச்சையாளர்கள் கலந்தாலோசிப்பார்கள். நடைச் சட்டத்தில் இருந்து கைத்தடிக்கு நிலைமாறுவதை அல்லது அதிக தூரம் சீராக நடப்பதை எளிதாக்குவதை இது குறிக்கலாம்.
- வாடிக்கையாளர்கள் சுறுசுறுப்பாக இருக்கவும், முடிந்தவரை சுயசார்புடன் வாழவும் உதவுகிறது.
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
- சேவைக்கான இணையவழி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க உதவிபெற, உங்கள் அன்புக்குரியவர் பார்வையிடும் மருத்துவமனை அல்லது பலதுறை மருந்தகத்தில் உள்ள மருத்துவரை அணுகவும்.
- உங்களுக்கு அருகாமையில் உள்ள சேவை வழங்குநர்களைக் கண்டறியுங்கள்: Care Services Recommender
இது என்ன?
- இல்லச் சிகிச்சையானது உடற்பயிற்சிச் சிகிச்சை, தொழில்சார் சிகிச்சை மற்றும் பேச்சுச் சிகிச்சை போன்ற வீட்டு அடிப்படையிலான மறுவாழ்வுச் சேவைகளை வழங்குகிறது, இது வாடிக்கையாளர்களின் செயல்பாடு சார்ந்த திறன்களை மீட்டெடுக்க உதவுகிறது.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு இது எவ்வாறு உதவலாம்?
- சேவைகளில் அடங்குவன:
- பேச்சுச் சிகிச்சை – விழுங்குவதில் மற்றும் பேசுவதில் பிரச்சினை உள்ளவர்களை அல்லது மொழி பேசுவதில் பிரச்சினை உள்ளவர்களை மதிப்பீடு செய்து சிகிச்சை அளித்தல்
- தொழில்சார் சிகிச்சை – அன்றாட வாழ்க்கை மற்றும் வேலைத் திறன்களைக் கற்றுக்கொள்வதில், மீட்டெடுப்பதில் அல்லது பராமரிப்பதில் தேவை உள்ள நபர்களை மதிப்பீடு செய்து சிகிச்சை அளித்தல்
- உடற்பயிற்சி சிகிச்சை – காயங்கள் அல்லது பிற நிலைமைகளைக் கொண்டிருப்பவர்களுக்கு வலியில் இருந்து நிவாரணம் பெறவும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும் மற்றும் மீட்டெடுக்கவும் மதிப்பீடு செய்து சிகிச்சை அளித்தல்.
இல்லம் சார்ந்த சிகிச்சை ஒருவரின் முதுமைக்கால மறதி நோய்/பராமரிப்புப் பயணத்தில் எப்போது இணைகிறது?
- நோயறிதலுக்கு பின்பு
- சமூக மருத்துவமனைகள் அல்லது பிற நிலையம் சார்ந்த மறுவாழ்வு வசதிகளில் மறுவாழ்வு சேவைகளைப் பெற தகுதியற்றவர்கள் அல்லது இயலாதவர்கள்என மதிப்பிடப்பட்டவர்களுக்கு மற்றும் அவர்களின் செயல்பாட்டுத் திறன்களை மீட்டெடுப்பதில் மறுவாழ்வு சேவைகள் தேவைப்படுபவர்களுக்கு.
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
- உங்கள் அன்புக்குரியவர்களின் நிலை மற்றும் தேவைகளை நன்கு அறிந்த மருத்துவமனை, பலதுறை மருந்தகம் அல்லது தனியார் மருத்துவரிடம் இருந்து நீங்கள் பரிந்துரையைப் பெற வேண்டியிருக்கும். ஒரு கலந்துரையாடலுக்காக நீங்கள் சேவை வழங்குநரையும் தொடர்பு கொள்ளலாம்.
- உங்களுக்கு அருகாமையில் உள்ள சேவை வழங்குநர்களை இதில் கண்டறியுங்கள்: Find service providers near you.
இது என்ன?
- இல்ல மருத்துவம் என்பது வீட்டில் முடங்கிய மற்றும் வீட்டில் மருத்துவத் தேவைகளுக்கு உதவி தேவைப்படுகின்ற பராமரிப்புப் பெறுபவர்களுக்கான சேவையாகும்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் இது எவ்வாறு உதவலாம்?
இல்ல மருத்துவச் சேவையை வழங்கும் மருத்துவர், உடல் பரிசோதனைகள், மீளாய்வு மற்றும்/அல்லது மருந்துகளைப் பரிந்துரைத்தல் போன்ற அவசியமான பராமரிப்பை வழங்குவதற்காகப் பராமரிப்புப் பெறுநர்களை அவர்களது இல்லத்தில் சந்தித்து தகுந்த மருத்துவ ஆலோசனைகளை வழங்குவார்.
பிற சேவைகளில் அடங்குவன: நிலையான மருத்துவ நிலைமை(கள்), பராமரிப்பாளர் கல்வி, சிறு மருத்துவ நடைமுறைகள் மற்றும் மருந்துப் பரிந்துரை(கள்) ஆகியவற்றின் மேலாண்மை.
இல்ல மருத்துவம் ஒருவரின் முதுமைக்கால மறதி நோய்/பராமரிப்புப் பயணத்தில் எப்போது இணைகிறது?
- நோயறிதலுக்குப் முன்பும் பின்பும். இந்தச் சேவை பெரும்பாலும் தங்கள் நோய் நிலைமையின் முற்றிய கட்டங்களில் உள்ளவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
உங்களுக்கு அருகாமையில் உள்ள சேவை வழங்குநர்களைக் கண்டறியுங்கள்:
- உங்கள் அன்புக்குரியவர்களின் நிலை மற்றும் தேவைகளை நன்கு அறிந்த மருத்துவமனை, பலதுறை மருந்தகம் அல்லது தனியார் மருத்துவரிடம் இருந்து நீங்கள் பரிந்துரையைப் பெற வேண்டியிருக்கும். ஒரு கலந்துரையாடலுக்காக நீங்கள் சேவை வழங்குநரையும் தொடர்பு கொள்ளலாம்.
- உங்களுக்கு அருகாமையில் உள்ள சேவை வழங்குநர்களை இதில் கண்டறியுங்கள்: SupportGoWhere
இது என்ன?
- இல்லம் சார்ந்த தாதிமைப் பராமரிப்பு என்பது முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கும், வீட்டில் தாதிமைப் பராமரிப்பில் உதவி தேவைப்படும் அவர்களின் பராமரிப்பவர்களுக்குமான ஒரு சேவையாகும்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு இது எவ்வாறு உதவலாம்?
- இரத்த அழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரை அளவைக் கண்காணிப்பதைத் தவிர, இல்லம் சார்ந்த தாதிமைப் பராமரிப்புச் சேவையானது காயங்களைப் பராமரித்தல், உணவுக் குழாய்களை மாற்றுதல் போன்ற சேவைகளையும் வழங்குகிறது.
- சேவைகளில் அடங்கக்கூடியவை: உயிர் அடையாளங்களைக் கண்காணித்தல், பராமரிப்பு ஒருங்கிணைப்பு, தாதிமைப் பராமரிப்பு மற்றும் மருந்து மேலாண்மை.
இதனால் பராமரிப்பாளர்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?
- தங்கள் அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்வதில் பராமரிப்பாளர்களுக்கு ஆலோசனையும் பயிற்சியையும் அளிக்கிறது.
இல்லம் சார்ந்த தாதிமைப் பராமரிப்பு ஒருவரின் முதுமைக்கால மறதி நோய்/பராமரிப்புப் பயணத்தில் எப்போது இணைகிறது?
- நோயறிதலுக்கு பின்பு. இந்தச் சேவை பெரும்பாலும் தங்கள் நோய் நிலைமையின் முற்றிய கட்டங்களில் உள்ளவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
- உங்கள் அன்புக்குரியவர்களின் நிலை மற்றும் தேவைகளை நன்கு அறிந்த மருத்துவமனை, பலதுறை மருந்தகம் அல்லது தனியார் மருத்துவரிடம் இருந்து நீங்கள் பரிந்துரையைப் பெற வேண்டியிருக்கும். ஒரு கலந்துரையாடலுக்காக நீங்கள் சேவை வழங்குநரையும் தொடர்பு கொள்ளலாம்.
- உங்களுக்கு அருகாமையில் உள்ள சேவை வழங்குநர்களை இதில் கண்டறியுங்கள்: SupportGoWhere
இது என்ன?
- தாதிமை இல்லங்கள் என்பவை நீண்டகாலக் குடியிருப்பு சார்ந்த பராமரிப்பு வசதிகள் ஆகும், இவை அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் பெரும்பாலானவற்றில் உதவி தேவைப்படுகின்ற மற்றும்/அல்லது தினசரி தாதிமைப் பராமரிப்புத் தேவைகளைக் கொண்டிருக்கின்ற குடியிருப்பாளர்களுக்கு உதவுகின்றன. குறிப்பிட்ட முதுமைக்கால மறதி நோய் மற்றும்/அல்லது மனநல மருத்துவ வசதிகளைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தாதிமை இல்லங்கள் உள்ளன, அவை நிபுணத்துவ பராமரிப்பு மற்றும் ஆதரவு தேவைப்படும் குடியிருப்பாளர்களுக்கு உதவுகின்றன.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு இது எவ்வாறு உதவலாம்?
- சேவைகளில் அடங்குவன:
- கழிப்பறைக்குச் செல்வது, குளிப்பது, சாப்பிடுவது போன்ற அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் உதவுவது.
- மூக்கு-இரைப்பைக் குழாய், சிறுநீர் வடிகுழாய், காயத்திற்கு கட்டு போடுதல் முதலானவற்றின் மேலாண்மை போன்ற தாதிமைப் பராமரிப்பு.
- பராமரிப்புப் பயிற்சிகள், வெளியூர் பயணம் போன்ற உடல் மற்றும் சமூக ரீதியான நடவடிக்கைகள்.
- முதுமைக்கால மறதி நோய்/மனநல மருத்துவ வசதிகளுக்கு
- முதுமைக்கால மறதி நோயின் முன்னேற்றத்தை மெதுவாக்க, அறிவாற்றலைத் தூண்டுவதற்கான திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் வழங்கப்படும்
இதனால் பராமரிப்பாளர்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?
- பராமரிப்பாளர்களுக்குத் தங்கள் அன்புக்குரியவர்களுக்காகப் பல நாட்கள் முதல் சில வாரங்கள் வரை குறுகிய காலப் பராமரிப்பு விருப்பத்தேர்வுகள் தேவைப்பட்டால், உதாரணத்திற்கு உங்கள் வெளிநாட்டுப் பணிப்பெண் வீட்டு விடுப்பில் செல்லும்போது, அவர்கள் இடைகால ஓய்வுப் பராமரிப்புக்காகத் தாதிமை இல்லங்களின் உதவியை நாடலாம்.
தாதிமை இல்லம் ஒருவரின் முதுமைக்கால மறதி நோய்/பராமரிப்புப் பயணத்தில் எப்போது இணைகிறது?
- நோயறிதலுக்கு பின்பு
சேவை வழங்குநர்களின் பட்டியல்:
- உங்கள் அன்புக்குரியவர்களின் நிலை மற்றும் தேவைகளை நன்கு அறிந்த மருத்துவமனை, பலதுறை மருந்தகம் அல்லது தனியார் மருத்துவரிடம் இருந்து நீங்கள் பரிந்துரையைப் பெற வேண்டியிருக்கும். ஒரு கலந்துரையாடலுக்காக நீங்கள் சேவை வழங்குநரையும் தொடர்பு கொள்ளலாம்.
- உங்களுக்கு அருகாமையில் உள்ள சேவை வழங்குநர்களைக் கண்டறியுங்கள்: Care Services Recommender
கூடுதல் வளஆதாரம்

முதுமைக்கால மறதி நோய் ஆதரவு மற்றும் சேவைகளின் விவரத் திரட்டுப் பட்டியல்
இந்த வளஆதாரம் சிங்கப்பூரில் உள்ள 4 முக்கிய பகுதிகளால் வகுக்கப்பட்டுள்ள, சமூகத்தில் உள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகளின் விரிவான பட்டியலை விவரிக்கிறது, எனவே உங்களுக்கு அருகிலுள்ள சேவை வழங்குநரை நீங்கள் எளிதில் கண்டறியலாம்.
Tell us how we can improve?
- Retrieved on 23 November 2023 from https://supportgowhere.life.gov.sg/.
- Introduction to Community Care Services. Retrieved on 23 November 2023 from https://www.aic.sg/care-services