
முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சிங்கப்பூர்
முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சிங்கப்பூர் (Dementia-Friendly Singapore, DFSG) பற்றி
முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சிங்கப்பூர் என்றால் என்ன?
முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சிங்கப்பூர் (Dementia-Friendly Singapore, DFSG) என்பது 2016-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் முதுமைக்கால மறதி நோயின் பரவலுக்குத் தீர்வுகாண சுகாதார அமைச்சால் (Ministry of Health, MOH) அறிவிக்கப்பட்ட தேசிய அளவிலான முனைப்பாகும். 2015-இல் சொங் பாங்கை முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்ததாக மாற்றுவதன் முயற்சியாக, லியன் அறக்கட்டளை, KTPH மற்றும் பங்காளர்களால் ’எங்களை மறந்துவிடாதீர்’ (Forget Us Not) என்ற இயக்கத்தில் இருந்து இது உருவாக்கப்பட்டது.
DFSG-இன் கீழ், ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (Agency for Integrated Care, AIC) மற்றும் சமூகப் பங்காளர்கள் 3Es மூலோபாயத்தின் மூலம் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு ஆதரவாக முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சமூகங்களையும் தேசத்தையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவித்தல், முன்கூட்டியே அடையாளம் காணுதல் மற்றும் பராமரிப்பு மற்றும் ஆதரவை வழங்குதல் ஆகியவை விரும்பத்தக்க விளைவுகளாகும்.
மனதில் உள்ள முடிவு என்ன?
கட்டம் 1 - முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சமூகங்களை உருவாக்குதல்
தொடக்கக் கட்டம்
நிதியாண்டு 15 – 16
- யீஷூனில் KTPH உடன் அடித்தள ஈடுபாட்டை AIC தொடங்கியது
- சமூகப் பராமரிப்பு மன்றத்தில் யீஷூன் DFC கருத்தாக்கம் செய்யப்பட்டு முன்வைக்கப்பட்டது
- முதல் DFC தொடங்கப்பட்டது (யீஷூன்)
- லீன் அறக்கட்டளை, “எங்களை மறந்துவிடாதீர்” இயக்கத்தை (1வது தேசிய DFC இயக்கம்) தொடங்கியது
- பங்களார்கள் கூட்டணி நிறுவப்பட்டது – இது ஒரு கூட்டமைப்பு அணுகுமுறையாகும்
⇒ தொடக்கக் கருத்தாக்கம், அடித்தள ஈடுபாடு மற்றும் DFC-இல் ஆரம்ப ஆர்வம்
கட்டம் 1 DFC-ஐ நடைமுறைப்படுத்தல்
நிதியாண்டு 17 – 19
- டோட் போர்டு டிமென்ஷியா கேர் நிதியுதவியின் ஆதரவுடன், AIC 8 தளங்களுக்கு DFCகளை விரிவுபடுத்தியது
- வணிகங்கள், பெருநிறுவனங்கள், நம்பிக்கை சார்ந்த குழுக்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஈடுபாடு விரிவுப்படுத்தப்பட்டது
- முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த வடிவமைப்பில் கட்டடம் மற்றும் போக்குவரத்துத் துறைகளின் ஆர்வம்
- டிமென்ஷியா ஃபிரண்ட்ஸ் கைப்பேசி செயலி தொடங்கப்பட்டது
- DFCகளை அமைப்பதில் ஆர்வமுள்ள பங்காளர்களுக்கு உதவுவதற்காக 3E கட்டமைக்கப்பட்ட கட்டமைப்பு மற்றும் DFC நடைமுறைப்படுத்தல் வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது
⇒ நேரடி நடைமுறைப்படுத்தல் மற்றும் ஈடுபாடு மூலம் மேம்படுத்துதல்
⇒ பராமரிப்பு வழங்குநர்களுக்கு அப்பால் நகர்த்துதல்
⇒ கற்றல் புள்ளிகளைக் கட்டமைக்கப்பட்ட கட்டமைப்பாக ஒருங்கிணைத்தல்
கட்டம் 2-ஐ DFSG-க்கு மாற்றுதல்
நிதியாண்டு 20 – 21
- கட்டமைப்பு, உதவித்தொகுப்புகள் மற்றும் குறுக்குப் பகிர்வுத் தளங்களைப் பகிர்வதன் மூலம் DFC-ஐ நடைமுறைப்படுத்த பங்காளர்களை இயலச் செய்வதற்கு நகர்த்துதல்
- AIC மேலும் மேம்பாட்டாளர் மற்றும் கலந்தாய்வுப் பொறுப்புநிலையை வகிக்கத் தொடங்குகிறது
- தர்க்க மாதிரி உட்பட SUTD-இன் DFC மதிப்பீட்டு ஆய்வு நிறுவப்பட்டது
⇒ துறை மேம்பாட்டாளர் பொறுப்புநிலைக்கு மாறுதல்
⇒ பங்காளர்கள் மற்றும் பங்குதாரர்களை இயலச் செய்வதற்கு வளஆதாரங்கள்/உதவித்தொகுப்புகளை உருவாக்குதல்
நிதியாண்டு 22-க்கு அப்பால்
- மேலும் நிலையான DFSG முயற்சிகளுக்கு மாறுதல்
- வலுவான வலையமைப்பை உருவாக்க, நிறுவப்பட்ட “சமூக முனையங்கள்/உள்கட்டமைப்பை” இணைப்பதில் AIC கவனம் செலுத்த வேண்டும்
⇒ பங்காளர்கள் தங்களின் சொந்த வலையமைப்புகளுக்குள் DFCகளை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரம் அளித்தல் மற்றும் இயலச் செய்தல் ஆகியவற்றின் வாயிலாக அளவிடுதல்
கட்டம் 2 - முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சிங்கப்பூர் இயக்கம் ஒன்றைத் தொடங்குதல்
நிதியாண்டு 22 முதல், DFCகளை உருவாக்குவதற்கான தற்போதைய முயற்சியானது சமூக முதன்மைச் சுகாதாரப் பெருந்திட்டத்தின் கீழ் DFSG இயக்கமாக உருவாகும்.
நடைமுறைப்படுத்தலின் அடுத்த கட்டமானது DFCகளுக்கு வெளியே முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த முனைப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் சிறந்த ஒருங்கிணைப்பிற்காக நிறுவப்பட்ட வலையமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். இது, மூப்படையும் மக்களிடம் முதுமைக்கால மறதி நோயின் பாதிப்பு அதிகரித்து வருவதால், சமூகத்தில் முதுமைக்கால மறதி நோய் மீதான விழிப்புணர்வு, ஆதரவு மற்றும் கவனிப்பு ஆகியவற்றுக்கான தேவையில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பைச் சிறப்பாக நிவர்த்தி செய்வதற்காகும். DFCகளின் அனுபவங்கள் மற்றும் முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த முனைப்புகளானது, மேலும் அதிகப் பங்காளர்களை ஈடுபடுத்துவதற்கு தேசிய அளவில் நடைமுறைப்படுத்தப்படலாம், இதனால் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களும் அவர்களைப் பராமரிப்பாளர்களும் பயனடைவார்கள்.
முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த முனைப்புகள் சமூகத்திற்குப் பயனுள்ளதாகவும் நிலையானதாகவும் இருக்க ஒரு அடிப்படைச் செயல்முறையாக இருக்க வேண்டும். எனவே, DFCகள் முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த தேசத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் போது, புதிய DFC-ஐ அமைப்பதற்காக அடித்தள அமைப்புத் தலைவர்களையும் பங்காளர்களையும் AIC தீவிரமாக அணுகாது. அதற்குப் பதிலாக, பங்காளர்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுவார்கள், இதனால் அவர்கள் DFC-இன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வார்கள், மேலும் அவர்கள் கட்டம் 2-இல் AIC உடனான வழக்கமான ஈடுபாட்டின் மூலம் ஒரு DFC-ஐ அமைக்க ஊக்குவிக்கப்படுவார்கள். AIC தற்போதைய DFCகளைத் தொடர்ந்து ஆதரிக்கும், மேலும் DFC-ஐ அமைக்க ஆர்வமுள்ள பங்காளர்களுக்குப் பொருத்தமான வளஆதாரங்களையும் வழங்கும்.