எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுங்கள்

முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சிங்கப்பூர் இயக்கம் பற்றி

#DementiaFriendlySG இயக்கம் - அக்கறையுள்ள மற்றும் முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சிங்கப்பூரை ஒன்றிணைந்து உருவாக்குவோம்!

உதவிக் கரம் நீட்டுவோம், டிமென்ஷியா நண்பராக இருப்போம்

1. ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளுங்கள்

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒரு நபர் பேச்சு, உடலியக்க ஒருங்கிணைப்பு அல்லது மோசமான நினைவாற்றல் ஆகியவற்றுடனான சிரமங்களை எதிர்கொள்ளலாம். இவை, மூளையில் அறிவுத்திறன் வீழ்ச்சியின் விளைவாக அவர்களின் உடல் செயல்பாடுகள் பாதிக்கப்படும் சில சவால்களாகும்.

அவர்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அக்கம்பக்கத்தில் நடமாடும்போது அவர்களுக்கு நமது உதவி தேவைப்படலாம். முதுமைக்கால மறதி நோய் மற்றும் அதன் அறிகுறிகளைப் பற்றி அறிந்திருப்பதன் மூலம் நீங்கள் ஒரு பங்கை வகிக்க முடியும், இதன் மூலம் அவர்களுக்கு உதவி தேவைப்படும்போது நீங்கள் அவர்களைக் கவனிக்க முடியும்.

2. உங்களுக்கு அருகாமையில் உள்ள டிமென்ஷியா கோ-டு பாயிண்ட்ஸ் (GTPகள்) பற்றி அறிந்து கொள்ளுங்கள்

20 நவம்பர் 2022 அன்று, சிங்கப்பூரை முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்ததாக மாற்றுவதற்கான தேசிய இயக்கத்தை முன்னின்று நடத்துவதற்கான தொடக்கப் பிரச்சாரத்தை ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (AIC) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இந்தச் சமூக இயக்கமானது தனிநபர்கள், சமூகம் மற்றும் வணிகங்கள் என சமுதாயத்தை அணிதிரட்டி, அவர்களை அக்கறையுள்ள மற்றும் முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சிங்கப்பூரை உருவாக்குவதில் பங்கு வகிக்க வைப்பதற்குக் குறிக்கோள் கொண்டிருக்கிறது. முதுமைக்கால மறதி நோய் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், ஒரு டிமென்ஷியா நண்பராக ஒவ்வொரு தனிநபருக்கும் உதவிக்கரம் நீட்டுவதற்கும் இது குறிக்கோள் கொண்டிருக்கிறது. முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் சமூகத்தில் தொடர்ந்து நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு அக்கறையுள்ள மற்றும் ஆதரவான சூழலை உருவாக்குவது நமது மூப்படைகின்ற தேசத்திற்கு முக்கியமானது.

இந்த இயக்கம் முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சிங்கப்பூர் (DFSG) முனைப்பின் ஒரு பகுதியாகும், இது சிங்கப்பூரில் அதிகரித்து வரும் முதுமைக்கால மறதி நோய் பரவலுக்குத் தீர்வு காண 2016-இல் சுகாதார அமைச்சால் (MOH) அறிவிக்கப்பட்டது. AIC தலைமையில், இந்த இயக்கம் அனைவருக்கும் சமவாய்ப்புள்ள சமுதாயத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தைப் பரப்புகிறது மற்றும் சமூகத்தில் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களை ஆதரிப்பதில் எவரும் ஒரு டிமென்ஷியா நண்பராக மாற முடிவதற்கான வழிகளை எடுத்துரைக்கிறது.

உங்கள் அக்கம்பத்தில் தொலைந்து போனவராகத் தோன்றக்கூடிய யாரேனும் ஒருவரை நீங்கள் சந்தித்தால், அவர்களை உங்களுக்கு அருகாமையில் உள்ள முதுமைக்கால மறதி நோய் GTP-க்கு நீங்கள் அழைத்து வரலாம். இந்த GTPகள் சமூகத்தில் உள்ள முனையங்களாகும், இவை பெருநிறுவனங்கள் மற்றும் சமூகப் பங்காளர்களால் ஆதரிக்கப்படுகின்றன. இவை, வழி தெரியாமல் சுற்றித் திரியக்கூடிய முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் பாதுகாப்பாகத் தஞ்சமடைவதற்கான இடமாக விளங்குகின்றன. அவர்களின் குடும்பத்தினருடன் அவர்களை மீண்டும் ஒன்றிணைப்பதற்கு எவ்வாறு உதவுவது என்பதை அறிய ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த GTPகளில் முதுமைக்கால மறதி நோய் பற்றிய தகவல் சிற்றேடுகளைப் பெறலாம் அல்லது முதுமைக்கால மறதி நோய் பற்றிய வளஆதாரங்களைக் கண்டறியலாம்.

உங்கள் பிராந்தியத்தில் உள்ள GTPகளின் பட்டியலைக் காண கீழே உள்ள பதாகையைக் கிளிக் செய்யவும்.

3. CARA செயலியைப் பதிவிறக்குங்கள்

செயலி மூலம் சமூகத்தில் வழிதவறி காணாமல் போன முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களைக் கண்டறிய நீங்கள் உதவலாம். ‘சமூகம் (Community), உத்தரவாதம் (Assurance), வெகுமதிகள் (Rewards) மற்றும் ஏற்பு (Acceptance)’ என்பதன் சுருக்கமான CARA, டிமென்ஷியா சிங்கப்பூர் முனைப்பு மூலம் உருவாக்கப்பட்டதாகும். இது முதுமைக்கால மறதி நோய் பற்றியும், முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கான முதுமைக்கால மறதி நோய் திட்டத்தைப் பற்றியும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கிறது.

பின்வருவனவற்றுக்காகச் செயலியைப் பதிவிறக்குங்கள்:

  • நம்பகமான வளஆதாரங்களையும் ஆதரவையும் அணுகுதல்
  • முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கானத் தனிப்பட்ட அடையாளங்காட்டி மற்றும் உறுப்பினர் அட்டையைப் பெறுதல்
  • வழி தெரியாமல் சுற்றித் திரிகின்ற முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒருவரைப் பாதுகாப்பாக வீட்டில் சேர்ப்பதற்கான ஆதரவைப் பெறுதல்

ஒவ்வொருவரும் ஒரு டிமென்ஷியா நண்பர்களாக இருக்க முடியும்

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இந்த நபர்கள் கூறுவதைக் கேளுங்கள். டிமென்ஷியா நண்பர்களாக நாம் வெளிப்படுத்தக்கூடிய பல்வேறு முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த வழிகளை இந்த சுயவிவரப் பிரதிநிதித்துவங்கள் விளக்குகின்றன.

நீங்கள் எப்படி ஒரு டிமென்ஷியா நண்பராக முடியும் என்பதைப் பற்றி மேலும் படிக்கவும்.

இயக்கத்தில் இணையுங்கள்

இன்றே டிமென்ஷியா நண்பராக மாறி, உங்கள் ஜிஃபி பின்னைச் சேகரியுங்கள்! (இருப்புகள் உள்ளவரை மட்டுமே.)

சிங்கப்பூரர்கள் பின்வரும் வழிகளில் #DementiaFriendlySG இயக்கத்தில் சேரலாம்:

  • சமீபத்திய நிகழ்வுகள், போட்டிகள் மற்றும் வினாடி வினாக்களைப் பின்தொடர்வதற்கும், முதுமைக்கால மறதி நோய் குறித்த செய்திகள் மற்றும் நிகழ்வுகளைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்வதற்கும் முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சிங்கப்பூர் முகநூல் பக்கத்தை லைக் செய்யவும்.
  • முதுமைக்கால மறதி நோய் விழிப்புணர்வு குறித்த கணினிவழிக் கற்றல் பாடத்தொகுதியை நிறைவு செய்வதன் மூலம் முதுமைக்கால மறதி நோய் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
  • வழி தவறி காணாமல் போன முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களைத் தேடிக் கண்டறிவதற்கு CARA செயலியைப் (டிமென்ஷியா சிங்கப்பூர் உருவாக்கியது) பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
  • முதுமைக்கால மறதி நோய் மற்றும் பராமரிப்பு வழங்கல் வளஆதாரங்கள் பற்றி DementiaHub.SG -இல் மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

ஜிஃபி Challenge

முகநூலில் முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சிங்கப்பூர் முனைப்பைப் பின்தொடருங்கள், மேலும் எங்கள் ஜிஃபி சவாலை எதிர்பாருங்கள், இது தொடர்ச்சியான இயக்க நடவடிக்கைகளை வெளியிடும்.

எங்கள் பங்காளர் நிறுவனங்களின் வளாகங்களில் #DementiaFriendlySG இயக்கப் பங்காளர் அச்சு ஓவியங்களைக் கண்டறியுங்கள்.

முதுமைக்கால மறதி நோய், மன ஆரோக்கியம் அல்லது பராமரிப்பு வழங்கல் வளஆதாரங்கள் குறித்த ஆலோசனை அல்லது ஆதரவு உங்களுக்குத் தேவைப்பட்டால், உங்களுக்கு அருகாமையில் உள்ள சமூகத்தைச் சென்றடையும் குழுவை (CREST) நீங்கள் தொடர்பு கொள்ளலாம். மனநல நிலைமைகள் மற்றும் முதுமைக்கால மறதி நோய் பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் CREST குழு கவனம் செலுத்துகிறது, ஆபத்தில் உள்ள நபர்களை முன்கூட்டியே அடையாளம் காண ஊக்குவிக்கிறது, தனிநபர்களுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குகிறது, மேலும் தேவைப்படும்போது தொடர்புடைய சுகாதார மற்றும் சமூகப் பராமரிப்புச் சேவைகளுடன் தனிநபர்களை இணைக்கிறது. CREST பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள், மேலும் அத்தகைய குழுக்களின் பட்டியலை இங்கு கண்டறியுங்கள்.

வேடிக்கையான உண்மைகள்

முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த “இதயங்களை” ஒன்று சேர்த்தல்

ஒரு சிறந்த மற்றும் அக்கறையுள்ள தேசத்தை உருவாக்க உதவக்கூடிய முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த நடத்தைகளை விளக்குவதற்கு, முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சின்னமான ஜிஃபி இடம்பெறுகின்ற இதயங்களின் கருத்தாக்கத்தை இந்த இயக்கம் பயன்படுத்துகிறது. முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு ஆதரவளிக்க ஒரு டிமென்ஷியா நண்பராக மாறுவதற்கு இது சமூக உறுப்பினர்களை அழைக்கிறது.

DFSG சின்னமான ஜிஃபியை சந்தியுங்கள்

முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த ஒத்துழைப்பு பற்றிய வினவல்களுக்கு, [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

முனைப்பு:

MOHlogo

இவர்களுடனான கூட்டிணைவில்

எங்களின் மூலோபாயப் பங்காளர்கள்:

EnableAsia logo
HPB logo
RPlogo
Singapore_Police_Force_crest

எங்களின் பராமரிப்புப் பங்காளர்கள்:

carecornerlogo
Club HEAL logo
Fei Yue Logo
filos logo
OJCSlogo
samhlogo
SLH_logo_transparent background
viriyalogo

முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சமூகங்கள்

யீஷூன்

ஹொங் கா வடக்கு

மெக்பர்சன்

குவீன்ஸ்டவுன்

பிடோக்

ஃபெங்ஷான்

டெக் கீ

தமான் ஜூரோங்

புக்கிட் பாத்தோக் கிழக்கு

உட்லண்ட்ஸ்

தோ பாயோ கிழக்கு

தோ பாயோ மேற்கு-தாம்சன்

கெபுன் பாரு

இயோ சூ காங்

கிளமெண்டி

முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த பங்காளர்கள் (பெருநிறுவனங்கள் / அமைப்புகள்)

கலை & பொழுதுபோக்கு

esplanadelogo

கட்டுமானம்

வங்கிச்சேவை

சில்லறை விற்பனை

shengsionglogo

போக்குவரத்து

டிமென்ஷியா கோ-டு பாயிண்ட்ஸ்

GTPகளாக பட்டியலிடப்பட்டுள்ள பங்காளர் முனையங்களின் முழுப் பட்டியலுக்கு, தயவுசெய்து இங்கு கிளிக் செய்யவும்.

ஒரு அக்கறையான மற்றும் முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சிங்கப்பூரை உருவாக்குவதற்கான இந்தப் பயணத்தில் எங்களுடன் இணைந்திருக்கும் எங்களின் டிமென்ஷியா நண்பர்கள், பெருநிறுவனங்கள் மற்றும் சமூகப் பங்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

Skip to content