எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுங்கள்

முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த பங்காளர் என்றால் என்ன?

முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த பங்காளர்கள் என்பவர்கள், தங்களுடைய வணிகங்கள்/சேவை வழங்கலில் முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த நடைமுறைகளைச் செயல்படுத்துவதற்கு நீண்ட கால அர்ப்பணிப்பைச் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன பெருநிறுவனங்களாகும்.

முதுமைக்கால மறதி நோய் பரவல் அதிகரித்து வருவதால், நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் அல்லது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஊழியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காணலாம். முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த நடைமுறைகளை ஒருங்கிணைக்க ஆர்வமுள்ள நிறுவனங்கள், இந்த நான்கு முக்கியப் பகுதிகளில் அதிகரித்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்ய தங்கள் வணிகங்கள் நன்கு தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வதில் பங்கு வகிக்க முடியும்.

1. மக்கள்: முதுமைக்கால மறதி நோய் விழிப்புணர்வு மீதான ஊழியர் பயிற்சியை அறிமுகப்படுத்துங்கள்

ஊழியர்களிடையே முதுமைக்கால மறதி நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரியுங்கள், குறிப்பாக சமூக முன்களப் பணியாளர்கள் இதன்மூலம் முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளையும் அடையாளங்களையும் அறிந்து கொள்வார்கள். அவர்கள் தங்கள் வாளகங்ளைப் பார்வையிடும்போது மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கக்கூடிய அல்லது திசைதிருப்பப்பட்டிருக்கக் கூடிய மற்றும் உதவி தேவைப்படும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களைத் தொடர்ந்து கண்காணித்து உதவிட முடியும்.

கிடைக்கப்பெறும் விருப்பத்தேர்வுகள்:

  • o கணினிவழிக் கற்றல்: ஊழியர்கள் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக தங்கள் சொந்த வேகத்தில் முதுமைக்கால மறதி நோய் விழிப்புணர்வு பாடத்தொகுதியை இணையம் வழியாக முடிக்க நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஊக்குவிக்கலாம்.
  • தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சிப் பட்டறைகள்: நிறுவனங்கள் தங்கள் சேவைக்கு ஏற்றவாறு பொருத்தமான பயிற்சியை வழங்குவதற்கு, தொடர்புடைய சமூகச் சேவை நிறுவனங்களை (அதாவது டிமென்ஷியா சிங்கப்பூர் மற்றும் ட்சாவோ அறக்கட்டளை) ஈடுபடுத்தலாம். பாகமேற்று நடித்தல், நிகழ்வு ஆய்வுகள் அல்லது அனுபவ ரீதியான கற்றல் ஆகியவற்றை உள்ளடக்கிய பயிற்சியைத் தனிப்பயனாக்க இதற்கு வழக்கமாக கட்டணம் வசூலிக்கப்படுவது தேவைப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு  [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • உள்ளமைந்த ஊழியர் பயிற்சி: ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, தங்களின் உள்ளமைந்த பயிற்சியாளர்களுக்காக AIC உருவாக்கிய பயிற்சி உள்ளடக்கத்தை நிறுவனங்கள் இணைக்கலாம். இது புதிய ஊழியர்கள் சேவைத் தொடர்ச்சிக்குத் தொடர்புடைய முதுமைக்கால மறதி நோய் பயிற்சியைப் பெறுவதை உறுதி செய்யும்.

2. திட்டம்: வணிகச் சலுகைகளை அதிகரித்தல்

சமூக மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவது மூத்தோர்களுக்கு முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கவும், அந்த நோய் நிலையுடன் வாழ்பவர்களுக்கு முதுமைக்கால மறதி நோய் ஏற்படுவதைத் தாமதப்படுத்தவும் உதவும். அர்த்தமுள்ள நடவடிக்கைகள் பராமரிப்பாளர்களுக்கு இடை ஓய்வு அளிக்கும் ஒரு வடிவமாகவும் இருக்கலாம். இது நல்ல மனநலத்தைப் பராமரிக்க உதவுகிறது, இதனால் பராமரிப்பு வழங்கல் தொடர்பான அவர்களின் மன உளைச்சல் குறைகிறது. முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்கின்ற நோயாளிகள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்குத் தேவையான தங்கள் திட்டச் சலுகைகளை (அதாவது கலை, இசை, நடனம், விளையாட்டு) அல்லது பலன்களை (தள்ளுபடிகள் மற்றும் விலைக் கழிவுகள் போன்றவை) அதிகரிப்பதை நிறுவனங்கள் பரிசீலிக்கலாம்.

3.  செயல்முறை: முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களை ஆதரிப்பதற்கான உள்நிறுவனச் செயல்முறையை உருவாக்குதல்

தங்கள் வளாகத்தில் உள்ள முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களை ஆதரிப்பதற்காக உள்நிறுவன நடைமுறைகளை அமைப்பதற்கான விருப்பத்தேர்வை நிறுவனங்கள் ஆராயலாம். உதாரணமாக, பொதுப் போக்குவரத்து நிறுவனத்தினர், தங்கள் போக்குவரத்து முனையங்களில் தொலைந்து போனதாகத் தோன்றுகின்ற முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு உதவுவதற்கான செயல்முறைகளை அறிமுகப்படுத்தலாம். பொதுப் போக்குவரத்தில் சவாரி செய்யும் போது மறைந்துள்ள உடற்குறைபாடுகள் உள்ளவர்களுக்கு இருக்கைகளை வழங்குமாறு பயணிகளுக்கு சமிக்ஞை செய்யும் “எனக்கு இருக்கை கிடைக்குமா” என்ற நாடாவையும் போக்குவரத்துத் துறை அறிமுகப்படுத்தலாம்.

4. இடம்: முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த உள்கட்டமைப்பு வடிவமைப்புகளை இணைத்தல்

மேலும் முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த கட்டமைக்கப்பட்ட சூழலை உருவாக்குவது முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் பாதுகாப்பாக உலாவுவதற்குத் தொடர்ந்து உதவுகிறது. இத்தகைய வடிவமைப்புகளை அக்கம்பக்கங்கள், சமூக மன்றங்க போன்ற சமூக இடங்கள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் அல்லது பராமரிப்பு அமைப்புகள் போன்ற வசதிகளில் அறிமுகப்படுத்தலாம். முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களின் அறிவாற்றன் தேவைகளை இந்த வடிவமைப்புகள் கருத்தில் கொள்கின்றன (எ.கா. எளிதாக வழியைக் கண்டறியும் வகையில் பரந்த, வண்ணம்-குறியிடப்பட்ட நடைபாதைகள்). கட்டமைக்கப்பட்ட சூழலின் வடிவமைப்பிற்கான இந்த மாற்றங்கள் எல்லா வயதினருக்கும் பயனளிக்கின்றன.

 

முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த பங்காளர்கள் மற்றும் அவர்களின் பொறுப்புநிலைகளின் ஐந்து அடையாளம் காணப்பட்ட பிரிவுகள்

முதுமைக்கால மறதி நோய் நோயுடன் வாழ்பவர்கள் சமூகத்தில் நன்றாக வாழ்வதற்குச் சிறந்த முறையில் ஆதரிக்கும் நிலையில் இந்தப் பிரிவுகள் (முழுமையானவை இல்லை) உள்ளன.
முக்கியப் பிரிவு 1: கட்டுமானம்

பொறுப்பு நிலைகள்: உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துகிறது
அடிப்படைக் கோட்பாடு: முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் சிறந்த அணுகலைக் கொண்டிருப்பது (அதாவது, வழியைக் கண்டுபிடித்தல்) மற்றும் தங்களின் அக்கம்பக்கத்தில் பாதுகாப்பாக உலாவ இயலுவது (அவர்களின் அக்கம்பக்கத்தில் பாதுகாப்பான மற்றும் தடையற்ற அணுகல்)

பங்காளர்கள்
  • கட்டட, கட்டுமான ஆணையம்
  • வாழத்தகு நகரங்கள் மையம்
  • வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்
  • சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்புப் பல்கலைக்கழகம்
முக்கியப் பிரிவு 2: போக்குவரத்து

பொறுப்பு நிலைகள்: பயண அனுபவத்தை மேம்படுத்துகிறது அடிப்படைக் கோட்பாடு: முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாகப் பயணிக்க உதவுகிறது. முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கு வாழ்க்கைத் தரத்தையும்,

பங்காளர்கள்
  • கோ-அஹெட் சிங்கப்பூர் (Go-Ahead Singapore)
  • பொதுப் போக்குவரத்து மன்றம்
  • SBS டிரான்ஸிட் (SBS Transit)
  • SMRT கார்பரேஷன் லிமிடெட் (SMRT Corporation Ltd)
  • டவர் ட்ரான்ஸிட் சிங்கப்பூர் (Tower Transit Singapore)
முக்கியப் பிரிவு 3:கலை & பொழுதுபோக்கு

பொறுப்பு நிலைகள்: மன ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது
அடிப்படைக் கோட்பாடு: முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கு வாழ்க்கைத் தரத்தையும், பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் அதிகரிக்க உதவும் சேவைகளை மேம்படுத்துகிறது.​

பங்காளர்கள்
  • சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடம் (National Gallery Singapore)
  • தேசிய நூலக வாரியம் (National Library Board)
  • சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம் (National Museum of Singapore)
  • The Esplanade Co Ltd
முக்கியப் பிரிவு 4: வங்கிச் சேவை மற்றும் நிதி

பொறுப்பு நிலைகள்: நிதிசார்ந்த கல்வியறிவை மேம்படுத்துகிறது
அடிப்படைக் கோட்பாடு: முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் அவர்களின் நிதித் திட்டமிடலை மேம்படுத்த அதிகாரம் அளிக்கிறது

Partners
  • DBS
  • POSB
முக்கியப் பிரிவு 5: சில்லறை விற்பனை

பொறுப்பு நிலைகள்: சேவைத் தொடர்பு மையங்களை அதிகரியுங்கள் அடிப்படைக் கோட்பாடு: முதுமைக்கால மறதி நோய் விழிப்புணர்வை அதிக மக்களிடையே பரப்புவதற்கு அதிகமான சமூக முனையங்களை உருவாக்குங்கள்

பங்காளர்கள்
  • ஃப்ரேசர்ஸ் ப்ராப்பர்ட்டி சிங்கப்பூர் (Frasers Property Singapore)
  • NTUC நியாய விலைப் பேரங்காடிகள்
  • ஷெங் சியோங் பேரங்காடிகள் (Sheng Siong Supermarkets)
முக்கியப் பிரிவு
பங்காளர்கள்
பொறுப்பு நிலைகள்
அடிப்படைக் கோட்பாடு
1. கட்டுமானம்
• கட்டட, கட்டுமான ஆணையம்
• வாழத்தகு நகரங்கள் மையம்
• வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்
• சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்புப் பல்கலைக்கழகம்
• நகர மன்றம்
உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துகிறது
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் சிறந்த அணுகலைக் கொண்டிருப்பது (அதாவது, வழியைக் கண்டுபிடித்தல்) மற்றும் தங்களின் அக்கம்பக்கத்தில் பாதுகாப்பாக உலாவ இயலுவது (அவர்களின் அக்கம்பக்கத்தில் பாதுகாப்பான மற்றும் தடையற்ற அணுகல்)
2. போக்குவரத்து
• கோ-அஹெட் சிங்கப்பூர் (Go-Ahead Singapore)
• பொதுப் போக்குவரத்து மன்றம்
• SBS டிரான்ஸிட் (SBS Transit)
• SMRT கார்பரேஷன் லிமிடெட் (SMRT Corporation Ltd)
• டவர் ட்ரான்ஸிட் சிங்கப்பூர் (Tower Transit Singapore)
பயண அனுபவத்தை மேம்படுத்துகிறது
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாகப் பயணிக்க உதவுகிறது. முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கு வாழ்க்கைத் தரத்தையும், பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் அதிகரிக்க உதவும் சேவைகளை மேம்படுத்துகிறது.
3. கலை & பொழுதுபோக்கு
• சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடம் (National Gallery Singapore)
• தேசிய நூலக வாரியம் (National Library Board)
• சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம் (National Museum of Singapore)
• தி எஸ்பிளனேட் கோ லிமிடெட் (The Esplanade Co Ltd)
மன ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கு வாழ்க்கைத் தரத்தையும், பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் அதிகரிக்க உதவும் சேவைகளை மேம்படுத்துகிறது.
4. வங்கிச் சேவை மற்றும் நிதி
• DBS
• POSB
நிதிசார்ந்த கல்வியறிவை மேம்படுத்துகிறது
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் அவர்களின் நிதித் திட்டமிடலை மேம்படுத்த அதிகாரம் அளிக்கிறது
5. சில்லறை விற்பனை
• ஃப்ரேசர்ஸ் ப்ராப்பர்ட்டி சிங்கப்பூர் (Frasers Property Singapore)
• NTUC நியாய விலைப் பேரங்காடிகள்
• ஷெங் சியோங் பேரங்காடிகள் (Sheng Siong Supermarkets)
சேவைத் தொடர்பு மையங்களை அதிகரியுங்கள்
முதுமைக்கால மறதி நோய் விழிப்புணர்வை அதிக மக்களிடையே பரப்புவதற்கு அதிகமான சமூக முனையங்களை உருவாக்குங்கள்

சிறப்புக் கூட்டுத் திட்டப்பணிகள்

முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் சமூகத்தில் நன்றாக வாழ்வதற்கு இந்தப் பிரிவுகள் துணைபுரியலாம் என்று அடையாளம் காணப்பட்டன.

கீழேயுள்ள இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம், முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த பங்காளர்களைக் கொண்ட ஏற்கனவே உள்ள கூட்டுப்பணித் திட்டங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்:

வங்கி ஊழியர்களுக்கான முதுமைக்கால மறதி நோய் விழிப்புணர்வுப் பயிற்சி

DBS/POSB தனது உள்நிறுவனப் பயிற்சியில் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் முதுமைக்கால மறதி நோய் விழிப்புணர்வுப் பாடத்திட்டத்தை இணைத்துள்ளது. இது வாடிக்கையாளர்களிடம் முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளை அடையாளம் காணும் திறன்களைக் கொண்ட ஊழியர்களை ஈடுபடுத்துகிறது, மேலும் முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளை வெளிப்படுத்தும் நபர்களுடன் எவ்வாறு சிறப்பாக தொடர்புகொள்வது என்பது குறித்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது.
படம்: சிங்கப்பூர் மேம்பாட்டு வங்கி
(Development Bank of Singapore)

உங்கள் வழியைக் கண்டறிந்திடுங்கள்’ முனைப்பு

இது முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள், பரபரப்பான பேருந்து நிலையங்கள் மற்றும் பெருவிரைவு இரயில் நிலையங்களில் உலாவ உதவுவதற்கான SBS ட்ரான்ஸிட்டின் ஒரு முனைப்பாகும். வழியைக் கண்டறிய உதவுவதற்காக பாரம்பரிய பொருட்களைப் பற்றிய பழைய நினைவுகளை ஏற்படுத்தும் சுவரோவியங்களைப் பயன்படுத்துதல்.

SMRT கோ-டு முனைப்பு

கோடு-டு SMRT என்பது SMRT கார்ப்பரேஷனின் ஒரு முனைப்பாகும், இது முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதற்காகத் தனது பயணிகள் சேவைகள் மற்றும் வசதிகளை மேம்படுத்துகிறது. முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த கோ-டு முனையங்கள் சமூகத்தில் தொடர்பு மையங்களாகச் செயல்படுகின்றன, இவை உதவி தேவைப்படுபவர்களைத் தொடர்புடைய முதுமைக்கால மறதி நோய் தொடர்பான சேவைகளுடன் இணைக்கின்றன.
படம்: SMRT

முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த கருணை இருக்கைகள்

எங்களின் பொதுப் போக்குவரத்து வலையமைப்பை அதிக முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்ததாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் 2022-ஆம் ஆண்டின் இறுதியில் டிமென்ஷியா கோ-டு பாயிண்ட்ஸ் (GTP) என பட்டியலிடப்படும். முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த தேசமாக மாறுவதற்குப் பயணிகள் ஒரு பங்கை வகிக்கக்கூடிய எளிய வழிகளை கருணை இருக்கைகள் முனைப்பு முன்னிலைப்படுத்துகிறது.
படம்: SMRT

முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த குடியிருப்புப்பேட்டை

யீஷூன், நீ சூன் மற்றும் பிற அக்கம்பக்கங்களில், சிங்கப்பூர் முழுவதும் பராமரிப்பாளர்களின் சுமையை குறைக்கவும், முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு ஆதரவு அமைப்புகளை வழங்கவும், அடித்தளச் சமூகம் சார்ந்த முனைப்புகள் உருவாகியுள்ளன.
படம்: த ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் (The Straits Times)

ஆர்ட் வித் யு

ஆர்ட் வித் யூ’ என்பது டிமென்ஷியா சிங்கப்பூர் உடன் இணைந்து தேசியக் கலைக்கூடத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சான்று அடிப்படையிலான அரும்பொருளகத் திட்டமாகும், இது முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த மற்றும் அனைவருக்கும் சமவாய்ப்புள்ள சூழலை உருவாக்குவதன் மூலம் பராமரிப்பாளர்கள் மற்றும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களின் நல்வாழ்வை ஆதரிக்கும் நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள ஈடுபாடுகளை ஊக்குவித்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
படம்: தேசியக் கலைக்கூடம் (National Gallery)

சத்தமாகப் பாடுங்கள்! பராமரிப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை

சத்தமாகப் பாடுங்கள்! என்பது டிமென்ஷியா சிங்கப்பூர் (முன்னர் ஆல்சைமர் நோய் சங்கம்) உடன் இணைந்து எஸ்பிளனேட் மூலம் மேற்கொள்ளப்படும் சமூக ஈடுபாட்டுத் திட்டமாகும். பாடல்கள் மற்றும் குரல் பாடலை நினைவுபடுத்துவதன் மூலம் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு இசையுடன் அவர்களின் ஈடுபாட்டை ஆழப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்க இத்திட்டம் முயற்சி செய்கிறது.
படம்: எஸ்பிளனேட் தியேட்டர்ஸ் பை தி பே (Esplanade Theatres by the Bay)

Skip to content