Playback speed:
முன்கூட்டியே பராமரிப்பைத் திட்டமிடுதல் (Advance Care Planning, ACP) என்பது ஒருவரின் எதிர்கால ஆரோக்கியம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பைத் திட்டமிடுவதற்கான செயல்முறையாகும். முதுமைக்கால மறதி நோயால் (டிமென்ஷியா) பாதிக்கப்பட்டிருக்கும் உங்களின் அன்புக்குரியவர் பின்வருனவற்றை மேற்கொள்ள ACP உடனான உரையாடல்கள் உதவும்:
- அவரது தனிப்பட்ட விழுமியங்களையும் நம்பிக்கைகளையும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வது
- கடினமான மருத்துவச் சூழ்நிலைகளில் அவரது விழுமியங்களும் நம்பிக்கைகளும் அவரது உடல்நலப் பராமரிப்புக்கான விருப்பங்களை எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை ஆராய்வது
- அவருக்கு என்றாவது இயலாத நிலை ஏற்படும் போது, அவர் சார்பாக உடல்நலப் பராமரிப்பு தொடர்பான முடிவுகளை எடுக்க ஒரு நம்பகமான உறுப்பினர்/உறவினரை நியமிப்பது
முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் உங்களின் அன்புக்குரியவர் தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கான திறனைக் கொண்டிருந்தாலும் கூட, அவரைப் பற்றிய கலந்துரையாடல்கள் கூடிய விரைவில் நடைபெற வேண்டும்
ACP என்றால் என்ன என்பது பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள். மேலும் தகவல்களுக்கு, AIC-ஐப் பார்வையிடுங்கள்.
யாருக்காக முன்கூட்டியே பராமரிப்பைத் திட்டமிடுதல்
ACP என்பது வழக்கமான உடல்நலப் பராமரிப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும். எந்த ஒருவரும் தங்கள் வயது அல்லது உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் இன்றே தங்கள் ACP-ஐத் தொடங்கலாம். அன்புக்குரியவர்கள் மற்றும் உடல்நலப் பராமரிப்புக் குழுவுடன் உடல்நலப் பராமரிப்பு தொடர்பான விருப்பங்களைப் பற்றி கலந்துரையாடி ஆவணப்படுத்துவது அனைவருக்கும் மன அமைதியை அளிக்கும்.
குறிப்பாக நாள்பட்ட நோய், ஆரம்பகால அறிவாற்றல் குறைபாடு, பலவீனமான அல்லது வாழ்க்கையின் முடிவை நெருங்கும் நபர்களுக்கு ACP மிகவும் முக்கியமானது.
ACP உரையாடல்கள்: திருவாட்டி ஜீ
ஆதாரம்: ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (Agency for Integrated Care)
திருவாட்டி ஜீ, தனது மகளை தனது பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தார். முன்கூட்டியே பராமரிப்பைத் திட்டமிடுதல் (ACP) உரையாடல்கள் மூலம், அவருடைய தனிப்பட்ட விருப்பங்கள் குறித்தும், அவரால் சுயமாகச் சிந்திக்கவோ பேசவோ முடியாமல் போனால் அவர் எப்படிக் கவனிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார் என்பது குறித்தும் அவரது அன்புக்குரியவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தாயைக் கவனித்துக் கொள்ளும் பயணத்தில் ACP எப்படி அவரது அன்புக்குரியவர்களுக்கு மன அமைதியை அளித்தது என்பதை இந்தக் காணொளி விளக்குகிறது.
முன்கூட்டியே பராமரிப்பைத் திட்டமிடுவதன் பலன்கள்
ACP-ஐ மேற்கொள்வது மேலும் முழுமையான உடல்நலப் பராமரிப்பை மேம்படுத்த உதவுகிறது:
• நோயாளிகள் அவர்களுடைய விழுமியங்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்றவாறு உடல்நலப் பராமரிப்பைப் பெறுகிறார்கள். ACP-ஐ மேற்கொண்ட பல நோயாளிகள் தேவையற்ற அல்லது அதிக வீரியமுள்ள மருத்துவச் சிகிச்சைகளைத் தவிர்த்தனர்.
• ACP-ஐ மேற்கொண்டவர்களின் குடும்பங்கள் குறைவான மனக்கவலையையும், குறைவான மன உளைச்சலையும் கொண்டிருந்தனர், மேலும் என்ன முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தனர்.
• நீங்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கைத் தரத்தைப் பற்றி உடல்நலப் பராமரிப்புக் குழு நன்றாகப் புரிந்து கொண்டு உங்கள் சிறந்த நலன்களுக்காகச் செயல்பட முடியும்.
முதுமைக்கால மறதி நோயைக் கொண்டிருக்கும் நோயாளிக்கு ACP உரையாடலின் முக்கியத்துவம்
ஆதாரம்: ஒருங்கிணைந்தபராமரிப்பு அமைப்பு (Agency for Integrated Care)
சரியான நேரத்தில், சரியான நபர்களுடனான சரியான உரையாடலானது, முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களையும் அவர்களின் அன்புக்குரியவர்களையும் எதிர்வரும் காலத்திற்குத் தயார்படுத்த உதவுகிறது. முதுமைக்கால மறதி நோய் உள்ள தங்கள் அன்புக்குரியவரின் பராமரிப்புத் திட்டத்தை ஒரு குடும்பம் ஒன்றாக நடைமுறைப்படுத்தும் காட்சியை இந்தக் காணொளி ஆராய்கிறது.
கூடுதல் வளஆதாரங்கள்
எனது மரபுடைமை
இது ஒரு சிங்கப்பூர் அரசாங்க இணையதளமாகும், இதில் வாழ்க்கை இறுதித் திட்டமிடல் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன. அவற்றின் பக்கங்கள் ஆங்கிலம், மாண்டரின் (中文), மலாய் (மேலேயு) மற்றும் தமிழ் (தமிழ்) ஆகிய மொழிகளில் உள்ளன.
• முன்கூட்டியே பராமரிப்புத் திட்டத்தை உருவாக்குவது பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
• முன்கூட்டியே திட்டமிடுவது பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் மரணத்தை நினைத்து அஞ்சுகிறீர்களா? இந்த கேள்வியை கேட்கலாமா?
ஆதாரம்: நம் தாத்தா கதை
இந்தக் காணொளியில், நேர்காணல் செய்யப்படுபவர் தங்கள் ஆரோக்கிய நிலைகள் உடனான தங்கள் பயணங்களைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் ACP பற்றியும், நீண்டகால அதிகாரப் பத்திரம் (Lasting Power of Attorney, LPA) பற்றியும் கூட கலந்துரையாடுகின்றனர்.