Playback speed:
முதுமைக்கால மறதி நோயின் வளர்ச்சியானது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களிடம் ஏற்படும் மாற்றங்களுடன் நடைபெறுகிறது:
- அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை (ADL) மேற்கொள்வதற்கான
- நடத்தைகள்
- அறிவுத்திறன் சார்ந்த செயல்பாடு
- மக்கள், இடங்கள் மற்றும் நேரம் குறித்த விழிப்புநிலை
முதுமைக்கால மறதி நோயின் வளர்ச்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய நடத்தை மாற்றங்களுக்குப் பராமரிப்பாளர்களிடமிருந்து பொருத்தமான பதில் செயல் தேவைப்படுகிறது.
தேவையான தகவல்களும் வளஆதாரங்களும் உங்களிடம் இருப்பதால், முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்குப் பராமரிப்பு அளிக்கும் அதே வேளையில், இந்த மாற்றங்களுக்குப் பதில் செயலாற்ற நீங்கள் மிகவும் தயாராக இருப்பீர்கள்.
முதுமைக்கால மறதி நோயின் வளர்ச்சி
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுங்கள்
“முதுமைக்கால மறதி நோய் பற்றிய அனைத்துத் தகவல்கள் – நிபுணர்களிடம் கேளுங்கள்” என்ற ஆறு பகுதி தொடரின் நான்காவது அத்தியாயத்தில், முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களின் அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிப்பது தொடர்பான கேள்விகளுக்கு திருமதி லோ முய் லாங் பதிலளிக்கிறார்.
இந்தக் காணொளியைப் பார்ப்பதன் மூலம், முதுமைக்கால மறதி நோய் நோயால் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் அன்புக்குரியவருக்கு, அவரது தனியுரிமைக்கு மதிப்பளிப்பதுடன், அவர் செய்ய விரும்புவதைத் தொடர ஆதரவளிப்பது அல்லது அவர் குளிப்பதற்கு உதவுவது போன்ற அவரது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள அவருக்கு எப்படி உதவலாம் என்பதற்கான சில பயனுள்ள உதவிக்குறிப்புகளை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
பின்வரும் கட்டுரைகள் பொதுவான உதவிக்குறிப்புகளை வழங்குகின்றன, இவை ஒரு நபரின் முதுமைக்கால மறதி நோயின் வளர்ச்சியின்போது பராமரிக்க உங்களுக்கு உதவலாம்.
நடத்தை யில் மாற்றங்கள்
முதுமைக்கால மறதி நோய் ஒரு நபரை எவ்வாறு வித்தியாசமாக நடந்துகொள்ளச் செய்யலாம் என்பதையும், இந்த மாற்றங்களை எவ்வாறு ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்வது என்பதையும் புரிந்துகொள்வது அவசியமாகும்.
கூடுதலாக, முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் அறிகுறிகளைக் கொண்டிருப்பார்கள் மற்றும் வித்தியாசமாக நடந்துகொள்வார்கள் என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த அறிகுறிகளும் நடத்தைகளும் கூட பல்வேறு வகையான முதுமைக்கால மறதி நோயில் வேறுபடுகின்றன, மேலும் ஒரு நபர் முதுமைக்கால மறதி நோயின் வெவ்வேறு கட்டங்களுக்கு முன்னேறும்போது இவை மாறுகின்றன.
எனினும், முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களிடம் பல பொதுவான நடத்தை மாற்றங்கள் காணப்படுகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் இதனுடன் இணைக்கப்பட்ட பக்கங்களில் அத்தகைய மாற்றங்களுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதற்கான உதவிக்குறிப்புகள் உள்ளன.
முதுமைக்கால மறதி நோயின் லேசான மற்றும் மிதமான கட்டங்களில் ஏற்படும் நடத்தை மாற்றங்கள்
முதுமைக்கால மறதி நோயின் லேசான மற்றும் மிதமான கட்டங்களில் பொதுவாக வெளிப்படும் சில நடத்தைகள் பற்றிய தகவல்கள் கீழே உள்ள கட்டுரைகளில் அடங்கியுள்ளன.
முதுமைக்கால மறதி நோயின் முற்றிய கட்டத்தில் ஏற்படும் நடத்தை மாற்றங்கள்
முதுமைக்கால மறதி நோயின் முற்றிய கட்டத்தில் ஏற்படும் சில பொதுவான நடத்தைகளில் அடங்குவன:
- அன்றாட பணிகளைச் செய்வதற்கான நடமாட்டம் மற்றும் இயலுந்திறனை இழப்பது
- பேசும் திறனை இழப்பது
- உணவு உண்ண மறுப்பது
- விழுங்குவதில் பிரச்சினைகள்
முதுமைக்கால மறதி நோயின் முற்றிய கட்டத்தில் இந்த நடத்தைகளில் சிலவற்றை நிர்வகிப்பது பற்றிய பின்வரும் கட்டுரைகளைப் படிக்கவும்: