முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் பெரும்பாலும் குழப்பத்தை உணர்கிறார்கள், குறிப்பாக அவர்களின் நினைவுகள் மங்கத் தொடங்கும் போதும் அவர்களின் செயல்பாடுகள் மோசமடையத் தொடங்கும் போதும் அவ்வாறு உணர்கிறார்கள். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்புக்குரியவரின் நோய் நிலை முற்றும்போது, அவரது வழக்கமான பணிகளைச் செய்வதில் அவர் சிரமங்களை எதிர்கொள்ளலாம். அன்றாட வழக்கத்தை வடிவமைப்பது அவருக்குச் சில கட்டமைப்பை வழங்குவதற்கான ஒரு சிறந்த வழியாகும். அவர் அனுபவிக்கும் திட்டமிடல் நடவடிக்கைகள் மனக்கிளர்ச்சியைக் குறைப்பதற்கும் அவரது மனநிலையை மேம்படுத்துவதற்கும் உதவியாக இருக்கலாம்.
அன்றாட வழக்கத்தை வடிவமைப்பதற்கு முன், உங்கள் அன்புக்குரியவரைப் பற்றிய பின்வரும் விஷயங்களைக் கருத்தில் கொள்வது, அவருக்கான வழக்கத்தைத் தனிப்பயனாக்க உதவும்:
- அவருடைய விருப்பு, வெறுப்பு, பலம், திறன்கள் மற்றும் ஆர்வங்கள்
- அவர் தனது நாட்களை வழக்கமாக எப்படித் திட்டமிடுகிறார்
- அவர் ஒரு நாளில் அதிக விழிப்புணர்வை உணரும் நேரங்கள்
- உணவு உண்ண, குளிக்க, உடை உடுத்தப் போதுமான நேரத்தைக் கொண்டிருப்பது
- அவரை வழக்கமான நேரத்தில் விழித்தெழுப்புவதன் மூலமும், படுக்கைக்குச் செல்ல வைப்பவதன் மூலமும் அவர் ஒரு நல்ல தூக்கச் சுழற்சியைப் பராமரிப்பதை உறுதி செய்வது.
முதுமைக்கால மறதி நோயின் தொடக்கக் கட்டம் முதல் மிதமான கட்டம் வரைக்கும் ஏற்ற அன்றாட வழக்கத்திற்கான உதாரணம்
ஒரு வழக்கத்தை அமைப்பது, விஷயங்களை தொடர்ந்து கண்காணிக்க வைக்கிறது
அனிதாவின் தாய் முதுமைக்கால மறதி நோய் மற்றும் மனக்கவலைகளுடன் வாழ்ந்தார். தனது தாயுடனான அனிதாவின் பயணமானது, உறுதியுடன் இருப்பது எவ்வளவு ஆறுதலாக இருக்கும் என்பதையும், ஒரு கட்டமைக்கப்பட்ட வழக்கம் அவரைச் சுற்றியுள்ள பராமரிப்பாளர்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் அனிதாவிற்கு உணர்த்தியது.
ஆதாரம்: ForgetUsNot என்பது லியன் ஃபவுண்டேஷன், கூ டெக் புவாட் மருத்துவமனை மற்றும் டிமென்ஷியா சிங்கப்பூர் ஆகியவற்றின் முனைப்பாகும்