Help Us Improve
7 எட்டு நிமிட வாசிப்பு

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒருவரைப் பராமரிப்பதற்குக் கவனமான நிதித் திட்டமிடல் தேவைப்படுகிறது, மேலும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரின் குடும்பம் சிலநேரங்களில் நிதி உதவி நாட வேண்டியிருக்கலாம். பல அரசாங்கத் நிதியுதவித் திட்டங்கள் உள்ளன.

கீழே உள்ள தொகுதிகள் பின்வரும் 5 பகுதிகளில் கிடைக்கின்ற நிதி உதவிகளை பட்டியலில் காணலாம்:

• நடமாட உதவி
• அன்றாட நடவடிக்கைகளுக்கான உதவி
• பராமரிப்பு வழங்க உதவி
• மருத்துவக் கட்டண உதவி
• குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு

ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பட்டியலை விரிவாக்க ‘+’ என்ற சின்னத்தைக் கிளிக் செய்யவும்.

நிதி சார்ந்த உதவிகளின் பட்டியல்

நிதியுதவி ஆதாரங்களின் தகுதி அளவுகோல்களைக் காண கீழே உள்ள படத்தைக் கிளிக் செய்யவும்:

நிதியுதவித் திட்டங்களுக்கான சேவைகளை எவ்வாறு அணுகுவது

நிதியுதவித் திட்டங்களுக்கான மின்சேவைகள் செயலி இணையவாசல்

AIC இணைப்பு

நீண்டகாலப் பராமரிப்பு திட்டங்களுக்கான விண்ணப்பச் செயல்முறையை நெறிப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் (AIC) முயற்சிகளின் ஒரு பகுதியாக, 1 அக்டோபர் 2020 அன்று நிதியுதவித் திட்டங்களுக்கான மின்சேவைகள் (eServices for Financing Schemes, eFASS) செயலி இணையவாசலை AIC அறிமுகப்படுத்தியுள்ளது. நோயாளிகளும் பராமரிப்பாளர்களும் இத்தளத்தைப் பயன்படுத்தி இணையம் வழியாகத் தங்கள் நீண்டகாலப் பராமரிப்புத் திட்டங்களுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து நிர்வகிக்கலாம்.

eFASS பற்றிய மேலும் அதிகத் தகவல்கள்.

பராமரிப்புச் சேவைகள் மற்றும் திட்டங்கள் பற்றிய ஆலோசனை தேவையா? ஒரு அன்புக்குரியவரைப் பராமரிக்கிறீர்களா, மேலும் அதற்குப் பயிற்சி அல்லது உதவி தேவையா? AIC இணைப்பு பராமரிப்பாளர்களுக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் சரியான இடத்தில் சரியான பராமரிப்பைப் பெற அறிவுறுத்துகிறது. AIC இணைப்பில் உள்ள பராமரிப்பு ஆலோசகர்கள் வீட்டில் பராமரிப்பு அளித்தல், உதவித் திட்டங்கள் மற்றும் பராமரிப்பாளர் ஆதரவு பற்றிய தகவல்களை வழங்குகிறார்கள்.

இந்த இருப்பிங்களில் உள்ள நிதியுதவித் திட்டங்கள் மற்றும் பிற ஆதரவை எவ்வாறு அணுகுவது மற்றும் கூடுதல் தகவல்களுக்கு AIC இணைப்பை பார்வையிடவும்.

நடமாட்ட உதவிக்கு

மூத்தோர் நடமாட, இயங்க உதவிநிதி Seniors Mobility and Enabling Fund (SMF)

சிங்கப்பூரர் மூத்தோர்களுக்கு மானியங்களை நீட்டிப்பதன் மூலம் சமூகத்திற்குள் மூத்தோர்கள் வாழ்வதற்கான முழுமையான ஆதரவை SMF வழங்குகிறது:

• தினமும் சுயசார்புடன் வாழ்வதற்கும், சமூகத்தில் நடமாட்டத்துடன் நீடிப்பதற்கும் நடமாட்டச் சாதனங்களும் துணைபுரியும் சாதனங்களும் தேவைப்படுவது

• அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூடிய இல்லப் பராமரிப்பு மற்றும் சமூகத்திற்குள்ளேயே பராமரிப்பையும், தங்கள் பராமரிப்புக்காக வீட்டு சுகாதாரப் பொருட்களையும் பெறுதல்

மேலும் விவரங்களை இங்கு கண்டறியுங்கள்.

அன்றாட நடவடிக்கைகளுக்கான உதவிக்கு

சுறுசுறுப்பான மூத்தோருக்கான மேம்பாட்டுத் திட்டம் (Enhancement for Active Seniors, EASE)

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் 2012-இல் வீட்டை மாற்றியமைப்பதற்கு மானியம் அளிப்பதற்கான EASE-ஐ அறிமுகப்படுத்தியது, இதனால் வயதான குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் சௌகரியமாகவும் நிம்மதியாகவும் வாழலாம்.

EASE திட்டத்தின் மூலம் ஒரு வீட்டில் நிறுவ முடிபவை:

• அதிகபட்சம் இரண்டு குளியலறைகள் அல்லது கழிவறைகளில் உள்ள தரை பதிகற்களில் வழுக்கலைத் தடுக்கும் மேற்பூச்சு.
• வீட்டில் கைப்பிடிச் சட்டங்கள் (முதல் கழிப்பறைக்கு எட்டு அல்லது பத்து கைப்பிடிச் சட்டங்கள் மற்றும் இரண்டாவது கழிப்பறைக்கு ஆறு கைப்பிடிச் சட்டங்கள்)
• வீட்டில் மற்றும்/அல்லது பிரதான வாயிலில் அதிகபட்சம் ஐந்து சரிவுப்பாதைகள் – நிறுவ முடிந்தால்

மேலும் விவரங்களை இங்கு கண்டறியுங்கள்.


எல்டர்ஷீல்டு

எல்டர்ஷீல்ட் என்பது ஒரு அடிப்படையான நீண்டகாலப் பராமரிப்புக் காப்பீட்டுத் திட்டமாகும், இது சிங்கப்பூரர்களுக்கு,  குறிப்பாக வயதான காலத்தில் கடுமையான இயலாமைக்கான செலவினங்களைச் சமாளிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எல்டர்ஷீல்டு திட்டம் 2020-இன் நடுப்பகுதியில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கேர்ஷீல்டு லைஃப் திட்டத்தினுள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

• 2019-ஆம் ஆண்டு வரை, மெடிசேவ் கணக்குகள் வைத்திருந்த சிங்கப்பூரர்களும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளும், இதிலிருந்து விலகுவதற்கு விருப்பம் தெரிவிக்காத வரை, அவர்களின் 40வது வயதில் தானாக எல்டர்ஷீல்டு திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.
• 2020 முதல், 40 வயதில் எல்டர்ஷீல்டில் புதிய தன்னியக்கப் பதிவு செய்தல்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. 1980 மற்றும் அதற்குப் பிறகு பிறந்த சிங்கப்பூரர்கள் மற்றும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் 1 அக்டோபர் 2020 அன்று அல்லது அவர்கள் 30 வயதை எட்டும்போது தானாகவே கேர்ஷீல்டு லைஃப் மூலம் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.

ஒரு நபர் வைத்திருக்கும் திட்டத்தைப் பொறுத்து, எல்டர்ஷீல்டு 60 மாதங்கள் வரை மாதத்திற்கு $300 என்ற மாதாந்தர ரொக்கப் பலனை அல்லது ஒரு நபர் கடுமையான இயலாமையைக் கொண்டிருந்தால் 72 மாதங்கள் வரை மாதத்திற்கு $400 என்ற மாதாந்தர ரொக்கப் பலனை அளிக்கும்.  எல்டர்ஷீல்டை நிர்வகிக்க சுகாதார அமைச்சு பின்வரும் மூன்று தனியார் காப்பீட்டு நிறுவனங்களை நியமித்துள்ளது: Aviva, Great Eastern மற்றும் NTUC Income.

AIC மற்றும் கேர்ஷீல்டு லைஃப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.


கேர்ஷீல்டு லைஃப்

கேர்ஷீல்டு லைஃப் என்பது சிங்கப்பூர்கள் மற்றும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கான நீண்டகாலப் பராமரிப்புக் காப்பீட்டுத் திட்டமாகும், இது 1 அக்டோபர் 2020 அன்று தொடங்கப்பட்டது. இது ஒரு நபர் கடுமையான இயலாமையைக் கொண்டிருந்தால், குறிப்பாக அவரது முதுமைக் காலத்தின் போது மற்றும் நீண்ட காலத்திற்குப் பராமரிப்பு தேவைப்படுபவராக இருந்தால் அடிப்படை நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.

கடுமையான இயலாமை உள்ள/ஏற்படுகின்ற கேர்ஷீல்டு லைஃப் காப்பீடுத்தாரர்கள் உரிமைகோரல்களைச் செய்யத் தகுதியுடையவர்கள், மேலும் அவர்கள் கடுமையான இயலாமையைக் கொண்டிருக்கின்ற மற்றும் வழங்கீட்டுத் தொகைகளைப் பெறுவதற்குத் தேவையான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்கின்ற காலம் வரை வழங்கீட்டுத் தொகைகளைப் பெற முடியும். 2020-இல் மாதத்திற்கு $600 என்ற ரொக்கத்தொகையில் வழங்கீட்டுத் தொகைகள் தொடங்குகின்றன, இது 67 வயது வரை அல்லது வெற்றிகரமான உரிமைக்கோரல் செய்யப்படும் வரை, இவற்றில் எது முன்னர் நிகழ்கிறதோ அது வரை  ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.

 AIC மற்றும் கேர்ஷீல்டு லைஃப் பற்றி  மேலும் அறிந்துகொள்ளுங்கள்.


இயலாமையுள்ள மூத்தோருக்கான இடைக்கால உதவித் திட்டம் (Interim Disability Assistance Programme for the Elderly, IDAPE)

IDAPE என்பது 2002-இல் எல்டர்ஷீல்டுக்குத் தகுதிபெற்றிருக்காத ஒரு சிறிய மூத்தோர் குழுவுக்காக அமைக்கப்பட்ட உதவித் திட்டமாகும், ஏனெனில் அவர்கள் மிகவும் வயதானவர்களாக அல்லது ஏற்கனவே இயலாமைகளைக் கொண்டவர்களாக இருக்கலாம்.

இந்த மூத்தோர்களுக்குக் கடுமையான இயலாமைகள் ஏற்பட்டால், அவர்கள் 72 மாதங்கள் வரை $150 அல்லது $250 மாதாந்தர ரொக்கப் பணத்தை (அவர்களது நிதிச் சூழ்நிலையைப் பொறுத்து) பெறலாம். பணமளிப்புகள் இயலாமையைக் கொண்டIDAPE உரிமைகோருபவர்களின் பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் காலம் வரை, அவை எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

உதாரணமாக, பணமளிப்புகளைப் பின்வருமாறு உபயோக்கலாம்:

• மருத்துவக் கட்டண ம்
• தாதிமைப் பராமரிப்புச் செலவுகள்
• இயலாமையைக் கொண்ட IDAPE உரிமைகோருபவரைப் பராமரிக்க ஒரு வெளிநாட்டு இல்லப் பணியாளரை (FDW) உதவியாளராக நியமித்தல்

ஒரு மூத்தோர் தன்னை, 21 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒரு பராமரிப்பாளரை அல்லது அவர் வசிக்கும் தாதிமை இல்லத்தை IDAPE வழங்கீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள நியமனம் செய்யலாம்.

மேலும் விவரங்களை இங்கு கண்டறியுங்கள்.


எல்டர்ஃபண்டு

எல்டர்ஃபண்டு என்பது 31 ஜனவரி 2020 அன்று தொடங்கப்பட்ட விருப்புரிமையான உதவித் திட்டமாகும்.

இது, கேர்ஷீல்டு லைஃப், எல்டர்ஷீல்டு மற்றும் இயலாமையுள்ள மூத்தோருக்கான இடைக்கால உதவித் திட்டம் (IDAPE) ஆகியவற்றிலிருந்து பயனடைய முடியாத மற்றும் தங்களின் நீண்டகாலப் பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமான மெடிசேவ் இருப்புத்தொகைகளையும் தனிப்பட்ட சேமிப்புகளையும் கொண்டிருக்காத 30 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குறைவான வருமானம் கொண்ட, கடுமையான இயலாமையுள்ள சிங்கப்பூரர்களை இலக்காகக் கொண்டது

தகுதியுடைய சிங்கப்பூரர்கள், அவர்கள் தகுதியுடையவர்களாக இருக்கின்ற மற்றும் பணம் பெறுவதற்குத் தேவையான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்கின்ற காலம் வரை, மாதத்திற்கு $250 வரை ரொக்கத்தைப் பெறலாம்.

மேலும் விவரங்களை இங்கு கண்டறியுங்கள்.


நீண்டகால பராமரிப்பிற்கான மெடிசேவ்

மெடிசேவ் கேர் (நீண்டகால பராமரிப்பிற்கான மெடிசேவ்) என்பது 1 அக்டோபர் 2020 அன்று தொடங்கப்பட்ட ஒரு நீண்டகாலப் பராமரிப்புத் திட்டமாகும். இது, கடுமையான இயலாமையைக் கொண்ட 30 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகளை, அவர்களின் நீண்டகாலப் பராமரிப்புத் தேவைகளுக்காக அவர்களின் சொந்த மற்றும்/அல்லது வாழ்க்கைத்துணைகளின் மெடிசேவ் கணக்குகளில் இருந்து மாதத்திற்கு மொத்தம் $200 வரை மாதாந்தர ரொக்கப் பணத்தை எடுக்க அனுமதிக்கிறது.

 AIC மற்றும் கேர்ஷீல்டு லைஃப் ஆகியவற்றிடம் இருந்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

பராமரிப்பு வழங்கல் உதவிக்காக

பராமரிப்பாளர் பயிற்சி மானியம் (Caregiving Training Grant, CTG)

CTG என்பது $200 ஆண்டு க்கொருமுரை வழங்கப்படும் மானியமாகும், இது பராமரிப்பாளர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு சிறப்பாகப் பராமரி அளிப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள உதவுகிரது  ஒவ்வொரு நிதியாண்டிலும் (அதையடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரை) ஒவ்வொரு பராமரிப்பு பெறுபவருக்கும் $200 மானியம் வழங்கப்படுகிறது. ஒரு பரமரிப்பைப் பெறுபவரின் ஒன்றுக்கு மேற்பட்ட பராமரிப்பாளர்கள் பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பினால், வழங்கப்படும் $200 மானியம் குடும்ப உறுப்பினர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.CTG என்பது $200 ஆண்டு க்கொருமுரை வழங்கப்படும் மானியமாகும், இது பராமரிப்பாளர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு சிறப்பாகப் பராமரி அளிப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள உதவுகிரது  ஒவ்வொரு நிதியாண்டிலும் (அதையடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரை) ஒவ்வொரு பராமரிப்பு பெறுபவருக்கும் $200 மானியம் வழங்கப்படுகிறது. ஒரு பரமரிப்பைப் பெறுபவரின் ஒன்றுக்கு மேற்பட்ட பராமரிப்பாளர்கள் பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பினால், வழங்கப்படும் $200 மானியம் குடும்ப உறுப்பினர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

மேலும் விவரங்களை இங்கு கண்டறியுங்கள்.


உடற்குறைகள் உள்ளவர்களுக்கான வெளிநாட்டு இல்லப் பணியாளர் (Foreign Domestic Worker, FDW) தீர்வை சலுகை

FDW தீர்வை சலுகையானது, குடும்பங்கள் வெளிநாட்டு இல்லப் பணியாளர் தீர்வையை ஒரு மாதத்திற்கு $300-க்குப் பதிலாக $60 என்ற சலுகை விகிதத்தில் செலுத்த அனுமதிக்கிறது. ஏதேனும் ஒரு நேரத்தில் இரண்டு அன்புக்குரியவர்களுக்குப் பராமரிப்பு அளிக்கின்ற ஒவ்வொரு குடும்பமும் இரண்டு FDW தீர்வை சலுகைகள் வரை பெற லாம்

மேலும் விவரங்களை இங்கு கண்டறியுங்கள்.


இல்லப் பராமரிப்பு மானியம்

HCG என்பது குறைந்தபட்சம் நிரந்தர மிதமான உடற்குறையையுடன் உள்ள, அதாவது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை (ADLகள்) மேற்கொள்வதற்கு எப்போதும் சிறிது உதவி தேவைப்படுகின்ற அன்புக்குரியவர்களை ஆதரிப்பதற்கு வழங்கப்படும் $200 மாதாந்தர ரொக்க வழங்கீட்டுத் தொகையாகும்.

சமூகத்தில் உள்ள மூத்தோர் பராமரிப்பு மற்றும் பராமரிப்பாளர் ஆதரவுச் சேவைகள் அல்லது வெளிநாட்டு இல்லப் பணியாளர் (FDW) ஒருவரை பணியமர்த்துதல் போன்ற பராமரிப்புச் செலவுகளை ஈடுசெய்ய இந்த மானியத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்..

மேலும் விவரங்களை இங்கு கண்டறியுங்கள்.

மருத்துவக் கட்டண உதவிக்கு

சமூக சுகாதார உதவித் திட்டம் (Community Health Assist Scheme, CHAS)

முன்னோடித் தலைமுறை (Pioneer Generation, PG) மற்றும் மெர்டேக்கா தலைமுறை (Merdeka Generation, MG) அட்டைதாரர்கள் உட்பட அனைத்து சிங்கப்பூரர்களுக்கும், இத்திட்டத்தில் பங்கேற்கின்ற பொது மருத்துவர் (ஜிபி) மற்றும் பல் மருந்தகங்களில் மருத்துவ மற்றும்/அல்லது பல் மருத்துவப் பராமரிப்புக்கான மானியங்களைப் பெற சாஸ் உதவுகிறது.

மேலும் தகவல்களுக்கு, CHAS-ஐப் பார்வையிடுங்கள்.

*CHAS நீலம்/ஆரஞ்சு, MG மற்றும் PG அட்டைதாரர்களுக்கு மட்டும்


மருத்துவக் கட்டண விலக்கு அட்டை (Medical Fee Exemption Card, MFEC)

மருத்துவக் கட்டண விலக்கு அட்டையை (Medical Fee Exemption Card, MFEC) கொண்டு, அரசாங்க அல்லது மறுசீரமைக்கப்பட்ட மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள் ஆகியவற்றில் தரநிலையான மருத்துவ மற்றும் மருத்துவமனை அனுமதிச் சிகிச்சைக்கான செலவுகளையும், MOH-நிதியுதவி பெற்ற தாதிமை இல்லங்கள் அல்லது MSF-நிதியுதவி பெற்ற தங்குமிடங்கள் மற்றும் இயலாமையில் உள்ளவர்களுக்கான இல்லங்களில் தங்கியிருக்கும் உதவி தேவைப்படும் குடியிருப்பாளர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட இடைக்கால மற்றும் நீண்டகாலப் பராமரிப்புச் சேவைகளுக்கான செலவுகளையும் ஈடுசெய்ய முடியும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் $6000 அல்லது அதற்கும் குறைவான தனிப்பட்ட சேமிப்பைக் கொண்டிருக்க வேண்டும், மேலும் ஒரு மாதத் தனிநபர் குடும்ப வருமானம் $700 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். அவர்கள் சிங்கப்பூரர்களாக அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசியாக இருக்க வேண்டும், மேலும் MOH-நிதியுதவி பெற்ற தாதிமை இல்லங்கள் அல்லது       MSF-நிதியுதவி பெற்ற தங்குமிடங்கள் மற்றும் இயலாமையில் உள்ளவர்களுக்கான இல்லங்களில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் விவரங்களை இங்கு கண்டறியுங்கள்.


மெடிஃபண்டு

மருத்துவ அறக்கட்டளை நிதி (மெடிஃபண்டு) என்பது அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு அறக்கட்டளை நிதியாகும். மெடிஷீல்டு லைஃப், மெடிசேவ் மற்றும் ரொக்கம் உள்ளிட்ட அரசாங்க மானியங்கள் மற்றும் பிற பணமளிப்பு வழிவகைகளைப் பெற்ற பிறகு மீதமுள்ள கட்டணங்களைச் செலுத்துவதில் சிரமங்களை அனுபவிக்கின்ற சிங்கப்பூரர்களுக்கு உதவ இது பயன்படுகிறது.

மெடிஃபண்டின் ஒரு பகுதியான மெடிஃபண்டு சில்வர், 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு உதவி வழங்குகிறது.

மறுசீரமைக்கப்பட்ட மருத்துவமனைகள், தேசிய நிபுணத்துவ நிலையங்கள் மற்றும் இடைக்கால மற்றும் நீண்டகாலப் பராமரிப்புச் சேவைகளுக்குப் பணம் செலுத்த மெடிஃபண்டைப் பயன்படுத்தப்படலாம்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் கட்டாயம் சிங்கப்பூரராக, மானியம் பெறும் நோயாளியாக இருக்க வேண்டும், மெடிஃபண்டு அங்கீகரித்த நிலையத்தில் இருந்து சிகிச்சை பெற்றவராக அல்லது சிகிச்சை தேவைப்படுபவராக இருக்க வேண்டும், மேலும் மெடிஷீல்டு லைஃப், மெடிசேவ் மற்றும் ரொக்கம் உள்ளிட்ட அரசாங்க மானியங்கள் மற்றும் பிற வழிவகைகளுக்குப் பிறகு தங்கள் உடல்நலப் பராமரிப்புக் கட்டணங்களைச் செலுத்துவதில் சிரமங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு மற்றும் சுகாதார அமைச்சிடம் இருந்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.


மெடிஷீல்டு லைஃப்

மெடிஷீல்டு லைஃப் என்பது மருத்துவக் காப்பீடாகும், இது அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் வாழ்நாள் காப்புறுதிப் பாதுகாப்பை வழங்குகிறது. முந்தைய திட்டமான மெடிஷீல்டு போல் அல்லாமல், நீங்கள் மெடிஷீல்டு லைஃப் திட்டத்தில் இருந்து விலக முடியாது.

மெடிஷீல்டு லைஃப் திட்டத்திற்கான காப்புறுதிச் சந்தாக்களை மெடிசேவ் நிதிகளை அல்லது ரொக்கத்தைப் பயன்படுத்திச் செலுத்தலாம். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் சிங்கப்பூரர்களுக்கும், முன்னோடித் தலைமுறை உறுப்பினர்களுக்கும் கூட அரசாங்கம் மானியங்களை வழங்கியுள்ளது. மக்கள் மெடிஷீல்டில் இருந்து மெடிஷீல்டு லைஃப் திட்டத்திற்கு மாறுவதால், மெடிஷீல்டு லைஃப் திட்டத்தின் முதல் நான்கு ஆண்டுகளுக்கு மானியங்களும் உள்ளன.

ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு மற்றும் சுகாதார அமைச்சிடம் இருந்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு

மூத்தோர் ஆதரவுத் திட்டம் (Silver Support (SS) Scheme)

மூத்தோர் ஆதரவுத் திட்டமானது, தங்கள் பணிபுரியும் ஆண்டுகளில் குறைந்த வருமானம் பெற்ற மற்றும் தற்போது தங்கள் ஓய்வுக்காலத்தில் குறைவான வருமானத்தைக் கொண்டிருக்கின்ற மூத்தோர்களுக்குக் காலாண்டு ரொக்க உதவித்தொகையை வழங்குகிறது.

மூத்தோர் ஆதரவுத் (Silver Support, SS) திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. மத்திய சேமநிதிக் கழகம் ஆண்டுதோறும் மூத்தோர் ஆதரவுக்கான தகுதிவிதியைத் தானாகவே மீளாய்வு செய்கிறது. தகுதிபெறும் நபர்கள் முந்தைய ஆண்டு டிசம்பரில் மத்திய சேமநிதிக் கழகத்திடமிருந்து ஒரு அறிவிப்புக் கடிதத்தைப் பெறுவார்கள்.

மேலும் விவரங்களை இங்கு கண்டறியுங்கள்.


சமூகநல நிதித் (கொம்கேர்) திட்டங்கள் (ComCare Schemes)

அரசாங்க நிதியுதவித் திட்டங்களின் கொம்கேர் குழுவானது குறைவான வருமானத்தைக் கொண்ட தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்குச் சமூக உதவிகளை வழங்குகிறது, மேலும் இது சமூகச் சேவை அலுவலகங்களில் (Social Service Office, SSO) கிடைக்கிறது.

1. கொம்கேர் இடைக்கால உதவி

கொம்கேர் இடைக்கால உதவியானது 3 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு அவசர மற்றும் உடனடி உதவி தேவைப்படும் தனிநபர்கள் மற்றும்/அல்லது குடும்பங்களுக்கு வழங்கப்படலாம்.

மேலும் விவரங்களை இங்கு கண்டறியுங்கள்.

2. கொம்கேர் குறைந்த காலம் முதல் நடுத்தரக் கால உதவி

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வேலை கிடைக்காத காரணத்தினால் தற்காலிக நிதி உதவி தேவைப்படும் நபர்கள் அல்லது குடும்பங்களுக்கு கொம்கேர் குறுகிய காலம் முதல் நடுத்தரக் காலம் வரையிலான உதவி தனிநபர்கள் மற்றும்/அல்லது குடும்பங்களுக்கு வழங்கப்படலாம்.

மேலும் விவரங்களை இங்கு கண்டறியுங்கள்.

3. கொம்கேர் நீண்டகால உதவி (பொது உதவி)

கொம்கேர் நீண்டகால உதவியானது வேலை செய்ய முடியாத மற்றும் நிதி உதவி தேவைப்படும் நபர்களுக்கு வழங்கப்படலாம்.

மேலும் விவரங்களை இங்கு கண்டறியுங்கள்.

கொம்கேர் பொது உதவியைப் பெறுபவர்கள் CHAS-இன் கீழ் அடங்கியுள்ள நோய் நிலைகளின் சிகிச்சைக்காக முழு மானியங்களைப் பெறுகிறார்கள். மேலும் விவரங்களை இங்கு கண்டறியுங்கள்.


வேலைநலன் துணை வருமானத் (WIS) திட்டம்

2007-இல் அறிமுகப்படுத்தப்பட்ட WIS திட்டம் என்பது குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற சிங்கப்பூரர்களுக்கான ஒரு பரந்த அடிப்படையிலான நடவடிக்கையாகும், இது நமது குறைவான வருமானத்தைக் கொண்ட பணியாளர்களின் ஊதியங்களை அதிகரித்து, அவர்களை ஓய்வூதியத்திற்காகச் சேமிக்க உதவுகிறது. இது அவர்களின் வருமானம் மற்றும் ஓய்வூதியச் சேமிப்புகளை ரொக்கப் பணமளிப்பு முறை மற்றும் மத்திய சேமநிதி சந்தாக்கள் மூலம் குறைநிரப்புகிறது.

மேலும் விவரங்களை இங்கு கண்டறியுங்கள்.

சமூகச் சேவை அலுவலகங்கள் (Social Service Offices SSO)

மேலும் பொதுவான நிதியுதவிக்கு, உங்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் என்னென்ன உதவித் திட்டங்கள் கிடைக்கலாம் என்பதைப் பற்றி மேலும் அறிய, உங்களுக்கு அருகாமையில் உள்ள சமூகச் சேவை அலுவலகத்தை அணுகலாம். நீங்கள் SSOகளிலும் நிதியுதவிக்காக விண்ணப்பிக்கலாம்.

உங்கள் குடியிருப்பு முகவரிக்கு அருகாமையில் உள்ள SSO-ஐக் கண்டறியுங்கள்.

மருத்துவச் சமூகச் சேவைகள்

சில மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்களில் மருத்துவச் சமூக சேவைகள் உள்ளன. மற்ற பொறுப்புகளுக்கு மத்தியில், மருத்துவச் சமூகப் பணியாளர்களும் அதிகாரிகளும் நிதியுதவி பற்றிய தகவல்களை வழங்க முடியும். மற்ற தேவைகளுக்கு மத்தியில், நிதி சார்ந்த தேவைகளுக்குத் தீர்வு காண சமூகத்தில் உள்ள வளஆதாரங்களைக் கண்டறிய அல்லது பரிந்துரைக்கப்படுவதற்கு நோயாளிகளுக்கும் அவர்களது பராமரிப்பாளர்களுக்கும் அவர்களால் உதவ முடியும்.

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒருவர் தற்போது மருத்துவமனை அல்லது சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தில் சேவைகளைப் பெறுகிறார் எனில், அவரும் மற்றும்/அல்லது அவரது பராமரிப்பாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவருக்குத் தொடர்புடைய நிதிச் சிக்கல்கள் தொடர்பாக மருத்துவச் சமூகச் சேவைத் துறையை அணுகலாம்.

கூடுதல் வளஆதாரங்கள்

LifeSG செயலி

சிங்கப்பூர் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட, அனைத்தும் ஓரிடத்தில் கிடைக்கின்ற கைப்பேசி செயலியில் திட்டங்கள் மற்றும் பிற அரசாங்கத் திட்டங்களின் பட்டியல் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன. கீழே உள்ள இணைப்புகளிலிருந்து LifeSG -ஐப் பார்வையிட்டு, செயலியைப் பதிவிறக்கவும்.

SchemesSG

குறிப்பிட்ட தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய நிதியுதவித் திட்டங்களைப் பொதுமக்கள் எளிதாகத் தேடுவதற்கான தளமாக உள்ள இந்த இணையதளம் ஒரு அடித்தள முனைப்பால் உருவாக்கப்பட்டதாகும்.  SchemesSG -ஐப் பார்வையிடவும்.

Was this article helpful?

Yes No
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest

Was this article helpful?

Yes No
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest

Downloadable Resources

The following material contains bite-sized information about dementia. To download or print it, simply click the image. You may also select the language of the material by clicking the “Select Language” button.

Downloadable Resources

The following material contains bite-sized information about dementia. To download or print it, simply click the image. You may also select the language of the material by clicking the “Select Language” button.

Related Articles

Sed tristique blandit facilisis eleifend elit lobortis eros, massa aenean. Suspendisse aliquam eget tortor viverra nulla duis.
Skip to content