முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள், நோக்குநிலை, உணர்வுக் கூர்மை, காட்சி-இடஞ்சார்ந்த விழிப்புணர்வு மற்றும் நடமாட்டம் ஆகியவற்றின் இழப்பு காரணமாக இயற்கைச் சூழலில் உலாவுவதற்கான சவால்களை எதிர்கொள்ளலாம். அவர்களின் உணர்திறன் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களானது, ஒலி அளவுகள், வெளிச்சம், செயல்பாடு மற்றும் மக்கள் போன்ற சுற்றுச்சூழல் தூண்டிகளுக்கான அவர்களின் சகிப்புத்தன்மையைக் குறைக்கலாம். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் சிலருக்கு, உணர்திறன் தூண்டுதலின் பற்றாக்குறை மற்றும் தொழில்சார்ந்த ஈடுபாடுகள் இல்லாதிருப்பது ஆகியவை உடல்நலக்குறைவை ஏற்படுத்துகின்றன, இது சுய மதிப்பு மற்றும் சுய அடையாளத்தை இழக்க வழிவகுக்கிறது.
சிங்கப்பூரில் முதுமைக்கால மறதி நோயை கண்டுணருங்கள் (Experience Dementia in Singapore)என்பது ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) பயன்பாடாகும், இது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒரு நபரின் கண்ணோட்டத்தை உங்களுக்கு வழங்குகிறது. சிங்கப்பூரில் உள்ள ஒரு பொதுவான அடுக்குமாடிக் குடியிருப்பில் எதிர்கொள்ளும் சவால்களை கண்டுணர்வதற்கு, முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களில் ஒருவராக மாறுங்கள், மேலும் வீட்டில் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவரின் நல்வாழ்வை ஆதரிக்கும் வகையில் சுற்றுச்சூழலை நம்மால் எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த இல்லமானது, முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடுவது, கழிப்பறைக்குச் செல்வது, குளிப்பது மற்றும் அவர்களின் பொழுதுபோக்கை அர்த்தமுள்ள முறையில் தொடர்வது போன்ற அன்றாடச் செயல்பாடுகளைச் செய்வதில் தங்கள் சுயசார்பைத் தக்கவைத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முடிந்தவரை, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட உதவ வேண்டும்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களின் வீடுகளுக்கான வளஆதாரங்களின் பட்டியல்
உள்ளூர் வளஆதாரங்கள்
360° விர்ச்சுவல் ரியாலிட்டி முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த HDB வீட்டு வடிவமைப்பு வழிகாட்டி
360° விர்ச்சுவல் ரியாலிட்டி முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த HDB வீட்டு வடிவமைப்பு கையேடு என்பது முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மற்றும் சிங்கப்பூரில் உள்ள பராமரிப்பு நிபுணர்களுக்காக ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு மற்றும் டிமென்ஷியா சிங்கப்பூர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வளஆதாரமாகும். முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு மிகவும் அணுகக்கூடிய, வசதியான மற்றும் பாதுகாப்பான ஒரு முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த இல்லத்தை உருவாக்க இது பல முன்மொழியப்பட்ட மாற்றங்களை வழங்குகிறது.
இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி வழிகாட்டியில் சிறந்த பார்வை மற்றும் பயனர் அனுபவத்திற்கு, ஒரு மேசைக்கணியைப் பயன்படுத்தி அதை அணுகுவதற்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
Related Resource
360 டிகிரி விர்ச்சுவல் ரியாலிட்டி முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த HDB வீட்டு வடிவமைப்பு வழிகாட்டி
ஆதாரம்: ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு
பராமரிப்பாளரான மிச்செல் தனது அப்பா தாமஸுக்காகத் தனது வீட்டை மிகவும் வசதியானதாக மாற்றச் செய்த சில மாற்றங்களைப் பற்றிப் பேசுகிறார். இந்தக் காணொளி, வடிவமைப்பின் மூலம் தங்கள் அன்புக்குரியவருக்கு அவரது வீட்டை மேலும் முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்ததாக மாற்றுவதற்கு, பராமரிப்பாளர்களுக்கான உள்ளூர் மயமாக்கப்பட்ட விர்ச்சுவல் ரியாலிட்டி வீட்டு வடிவமைப்பு வழிகாட்டியை அறிமுகப்படுத்துகிறது.
ஹேக் கேர்
LIEN அறக்கட்டளையின் ஹேக் கேர் (HACK CARE) என்பது முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஒரு வீட்டை முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்தத சூழலாக மாற்றுவதற்கான 240 பக்கங்களுக்கும் அதிகமான யோசனைகளின் பட்டியல் ஆகும். இது நடைமுறை சார்ந்த யோசனைகள், ஆச்சரியமான யோசனைகள் மற்றும் எளிய உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்களை ஒருங்கிணைத்து, பராமரிப்பு வழங்குவதில் உள்ள அன்றாட சவால்களைச் சமாளிக்கும் போது, அவற்றை அர்த்தமுள்ள மற்றும் செழுமைப்படுத்தும் தருணங்களாக உருமாற்றும் வேளையில் பராமரிப்பாளரின் வாழ்க்கையை எளிதாக்குகிறது.
முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த இல்லத்தை எப்படி வடிவமைப்பது
ஒரு நிபுணர் சொன்னது போல்
ஆதாரம்: கான்வாஸ்ட்
டிமென்ஷியா சிங்கப்பூரில் டைரக்டர் ஆஃப் கம்யூனிட்டி எனேபில்மென்ட்டாகப் பணிபுரியும் திருவாட்டி கோ ஹுவான் ஜிங் (Ms Koh Hwan Jing), கான்வாஸ்டின் இந்தச் சிறந்த பிரத்யேகமான தொகுப்பில் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பாதுகாப்பானதும், பொருத்தமானதுமான வீட்டை பராமரிப்பாளர்கள் எவ்வாறு வடிவமைக்கலாம் என்பதற்கான சில நடைமுறை உதவிக்குறிப்புகளை வழங்குகிறார்.
Image Source: Quanvast
அயல்நாட்டு வளஆதாரங்கள்
உங்கள் வீட்டை முதுமைக்கால மறதி நோய்க்கு ஏற்றதாக மாற்றுதல்
ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஆல்சைமர்’ஸ் சமுதாயம் ஒரு தகவல் சிற்றேட்டை உருவாக்கியுள்ளது, இது முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆதரவளிக்க முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற வீட்டை உருவாக்குவதற்கான சில வழிகளை விவரிக்கிறது.
இந்தத் தகவல் கையேட்டில் பல பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவும் வீட்டில் வாழ்வதற்கான வெவ்வேறு அம்சங்களை விவரிக்கிறது. இந்தத் தகவல் கையேட்டில் வழங்கும் சில உதவிக்குறிப்புகளுக்கு, பராமரிப்பு நிபுணர்களிடமிருந்தும் உதவியும் ஆதரவும் தேவைப்படலாம். இந்தப் பிரிவுகளில் அடங்குவன:
• வெளிச்சம்
• அறைகலன் மற்றும் தளபாடங்கள்
• தரையமைப்பு
• சாப்பிடுதல் மற்றும் அருந்துதல்
• குளியலறையைப் பயன்படுத்துதல்
• பொருள்கள் எங்கு உள்ளன என்பதை அறிவது
• பொருட்களை ஒழுங்காக வைத்திருத்தல்
• பாதுகாப்பாக இருத்தல்
இத்தகவல் கையேட்டில் ஒரு சரிபார்ப்பு பட்டியல் உள்ளது, அது தனிநபர்கள் தங்கள் வீடுகளை முதுமைக்கால மறதி நோய்க்கு ஏற்றவையாக உருவாக்குவதற்கான சில மாற்றங்களைப் பரிந்துரைக்கிறது.
வீட்டிற்குள்ளும் வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு
டிமென்ஷியா ஆஸ்திரேலியாவின் இந்த வளஆதாரத்தில், முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பராமரிப்பாளர்கள், வீட்டிற்குள்ளும் வீட்டைச் சுற்றிலும் உள்ள இயற்பியல் சூழலின் பாதுகாப்பை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதற்கான உதவிக்குறிப்புகள் அடங்கியுள்ளன.
ஏதேனும் பாதுகாப்பு அபாயங்கள் உள்ளனவா என்று தனிநபர்கள் தங்கள் வீடுகளை பரிசோதிப்பதற்கான ஒரு எளிய பாதுகாப்புப் பட்டியல் இந்தப் பக்கத்தில் உள்ளது.