சில சமயங்களில், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்புக்குரியவர் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளலாம், திடீர் உணர்வு வெளிப்பாடுகளைக் காட்டலாம் அல்லது அவர்களைச் சுற்றியுள்ள நபர்களிடம் கோபமாக நடந்து கொள்ளலாம்.
மனக்கிளர்ச்சி மற்றும் ஆக்ரோஷமான நடத்தையை வரையறுத்தல்
மனக்கிளர்ச்சி
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒருவர் வாய்மொழியான அல்லது உடலியக்கப் பதற்றத்தை அனுபவிக்கும் நடத்தைகளின் தொகுப்பு.
தனிப்பட்ட கவனிப்பு நடவடிக்கைகளின் போது உதவப்படும்போது அந்த நபர் விரக்தியை வாய்மொழியாக வெளிப்படுத்தலாம் அல்லது ஒத்துழைக்க மறுக்கலாம்.
ஆக்ரோஷம்
மனக்கிளர்ச்சியின் மேலும் சில நடத்தைகள்: இதில் ஒருவரை இழிவுபடுத்தல், அச்சுறுத்தல், உடைமைகளைச் சேதப்படுத்துதல், மற்றொரு நபருக்கு எதிரான உடல்ரீதியான வன்முறை அல்லது சிறிய பின்னடைவு அல்லது விமர்சனங்களுக்கு அளவுக்கதிகமாக எதிர்வினையாற்றுதல் ஆகியவற்றின் மூலம் நடத்தைகள் வெளிப்படுத்தப்படலாம்.1
மனக்கிளர்ச்சி மற்றும் ஆக்ரோஷத்திற்கான சாத்தியமான காரணங்கள்
சிலநேரங்களில், உங்கள் அன்புக்குரியவர் தனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்ற ஒரு நிறைவேறாத தேவையின் விளைவாக மனக்கிளர்ச்சியை வெளிப்படுத்தலாம் அல்லது ஆக்ரோக்ஷமாக நடந்து கொள்ளலாம். அவர்களின் மனக்கிளர்ச்சி மற்றும் ஆக்ரோக்ஷமான நடத்தையைச் சமாளிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. எனினும், மனக்கிளர்ச்சி மற்றும்/அல்லது ஆக்ரோக்ஷமான நடத்தையைத் தூண்டும் காரணத்தை/நிறைவேறாத தேவையைக் கண்டறிவது மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான பயனுள்ள வழிகளைக் கண்டறிவது எப்போதும் பயனுள்ளதாக இருக்கும்.1
கீழே உள்ள அட்டவணை உங்கள் அன்புக்குரியவர் அனுபவிக்கக்கூடிய சில சாத்தியமான நிறைவேறாத தேவைகளைப் பட்டியலிடுகிறது:
உயிரியல் சார்ந்தது
முதுமைக்கால மறதி நோயின் முன்னேற்றமானது நடத்தைகள் மீதான கட்டுப்பாட்டை இழக்கச் செய்கிறது
வலி, காய்ச்சல், நோய் அல்லது மலச்சிக்கல் போன்ற உடல் அசௌகரியம்
மருந்துகளுக்குப் பாதகமான எதிர்வினை
சோர்வு / தூக்கமின்மை
பார்வை/செவித்திறன் குறைபாடு காரணமாக தவறான புரிதல்கள்
மாயத்தோற்றங்கள் மற்றும் பிரமைகள்
சமூகம்
சமூகத் தொடர்பு இல்லாமை மற்றும் தனிமை
சலிப்பு, செயலற்ற தன்மை மற்றும் உணர்திறன் இல்லாமை
வழக்கமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் மாற்றம்
உளவியல் சார்ந்தது
பணிகளை முடிக்க இயலாத போது விரக்தியடைதல்
மனச்சோர்வு ஏற்படுவதற்கான சாத்தியம்
தனிப்பட்ட விஷயத்தில் பிறர் தலையிடுவதாகக் கருதுதல்
சுயசார்புக்கும் சுதந்திரத்திற்கும் அச்சறுத்தல் ஏற்படுவதாகக் கருதுதல்
புறக்கணிக்கப்படுவதாக உணர்தல்
சுற்றுப்புறங்கள் அல்லது மக்களைத் தன்னால் இனி அடையாளம் காண முடியாததால் அச்சம்
மனக்கிளர்ச்சி மற்றும் ஆக்ரோஷத்தை நிர்வகிப்பதற்கான சில வழிகள்
தகவல்தொடர்பு மற்றும் உரையாடும் பாணி
அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள் மற்றும் ஆழ்ந்து சுவாசியுங்கள். சாத்தியமான முரண்பாடுகளைத் தவிருங்கள். அச்சம், எச்சரிக்கை, மனப்பதற்றம் அல்லது கோபத்தின் எந்த வெளிப்பாடும் நிலைமையை மோசமாக்கலாம்.
- பொறுமையாக இருங்கள், அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.
- உங்கள் அன்புக்குரியவரை மெதுவாக அணுகுங்கள், கண் தொடர்புகளைப் பராமரியுங்கள், உரையாட ஊக்குவியுங்கள்.
- உங்கள் அன்புக்குரியவரின் உணர்வுகளைச் சரிபாருங்கள் – அவர்களுக்கு உறுதியளியுங்கள், அவர்கள் உணரும் விதத்தை ஒப்புக்கொள்ளுங்கள்.
• உங்கள் அன்புக்குரியவரை நீங்கள் பராமரிக்கும் போது அவர் மனக்கிளர்ச்சி/ ஆக்ரோக்ஷம் அடைந்தால், "உங்கள் சட்டையைக் கழற்ற உங்களுக்கு உதவப் போகிறேன்" அல்லது "உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்" என்பது போன்ற சுருக்கமான எளிய வாக்கியங்களில் உங்கள் செயல்களை விளக்கவும்.
• அவர்களுக்குச் சிறிது நேரத்தையும் இடத்தையும் கொடுங்கள், சிறிது நேரத்தில் திரும்பி வந்து மெதுவாக முயற்சியுங்கள்.
• முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்புக்குரியவர் உடல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டால்
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்புக்குரியவர் உடல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டால்
• நீங்கள் உடல்ரீதியாகக் காயமடைவதைத் தடுக்க உங்களுக்கும் நபருக்கும் இடையில் சிறிது இடைவெளியை (குறைந்தது ஒரு கரம் அளவிற்கு நீளம்) பராமரியுங்கள்.
• கோபத்தை வெளிப்படுத்துவது அவர்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ தீங்கு விளைவிக்காத வரை, அதைக் கட்டுப்படுத்த அல்லது அடக்க முயற்சிக்காதீர்கள்.
• தேவைப்பட்டால் உதவிக்கு அழைக்கவும்.
• கத்தரிக்கோல், கத்திகள் அல்லது ஏதேனும் கூர்மையான பொருள்கள் போன்ற ஆபத்தான பொருட்களை விலக்கி வைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யுங்கள்.
• மனக்கிளர்ச்சி அல்லது மூர்க்கத்தனத்தைக் குறிக்கும் அடையாளங்கள் அல்லது நடத்தைகளை அடையாளம் கண்டறியுங்கள் மற்றும் அறிந்து வைத்திருங்கள். உங்கள் அன்புக்குரியவருக்கு திடீர் உணர்வு வெளிப்பாடுகள் ஏற்படுவதற்கு முன், அவரது கவனத்தை தகுந்த நடவடிக்கைகளின் மூலம் முன்கூட்டியே வேறொரு விஷயத்திற்குத் திசை திருப்புங்கள்.
• பசி, தாகம் மற்றும் போதுமான தூக்கம் போன்ற உங்கள் அன்புக்குரியவரின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்யுங்கள்.
• உங்கள் அன்புக்குரியவரின் அன்றாட வழக்கங்கள், சுற்றுச்சூழல் மற்றும் பராமரிப்பாளர்கள் ஆகியவற்றில் நிலைத்தன்மையைப் பராமரிக்க முயற்சியுங்கள்.
• உங்கள் அன்புக்குரியவரின் மருத்துவ நிலைமைகள் மற்றும் மருந்துகள் மருத்துவரால் தொடர்ந்து மீளாய்வு செய்யப்படுவதை உறுதிசெய்யுங்கள்.
இதிலிருந்து தழுவப்பட்டது: சாங்கி பொது மருத்துவமனை
கேலனின் தாய்: முதுமைக்கால மறதி நோய்க்குள் ஒரு பயணம் பல ஆண்டுகளாக ஆவணப்படுத்தப்பட்டது
கேலன் இயோ தனது தாயாருக்கு முதுமைக்கால மறதி நோய் இருப்பது கண்டறியப்பட்டதில் இருந்து, பல ஆண்டுகளாக அவருக்கு ஏற்பட்ட கடுமையான மாற்றங்களை ஆவணப்படுத்துகிறார்.
அவரது தாய், தன்னைச் சுற்றி இருப்பதற்குத் தனது நண்பர்கள் விரும்ப வேண்டும் என்று விரும்பியவர். பின்னர் ஒரு நாள் அவர் நினைவுகளை இழக்க ஆரம்பித்தார். தான் யார் என்ற நினைவை இழந்ததில் விரக்தியடைந்த அவர், வன்முறையான கோபத் தருணங்களை அனுபவித்தார். அவருடன் இருப்பது ஒரு பெரும் சோதனையாக மாறியது. இவை #முதுமைக்கால மறதி நோயை எதிர்கொள்வதற்கான சவால்களாகும்.
ஆதாரம்: CNA இன்சைடர்
Tell us how we can improve?
- Changi General Hospital. (2020, October 5). Managing agitation and aggression in dementia. https://www.healthhub.sg/live-healthy/843/managing-agitaton-and-aggression-in-dementia