Help Us Improve
5 நிமிட வாசிப்பு

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் பல நபர்கள் நடந்துக்கொண்டே  இருக்க வேண்டுமென்ற உந்துதலுடன் இருப்பார்கள், சில சந்தர்ப்பங்களில் தங்களின் வீட்டை விட்டும் வெளியேறிவிடுவார்கள். இது சில சமயங்களில் “சுற்றித் திரிதல்” என்று அழைக்கப்படும். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு தாம் எங்கே செல்ல வெளியே வந்தோம் என்பதோ, என்ன செய்ய நினைத்திருந்தோம் என்பதோ நினைவிருக்காது.

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் பாதுகாப்பான சூழலில்  அதாவது தங்களின் சொந்த வீடுகளிலோ அல்லது பகல்நேரப் பராமரிப்பு மையங்களிலோ மற்றவர்களின் கண்காணிப்பில் உலாவுவது சரியே. இருப்பினும், முதுமைக்கால மறதி நோயுள்ளவர்கள் வெளியே அக்கம்பக்கத்தில் தனியே சுற்றித் திரியும் வேளையில் ஆபத்தான சூழ்நிலைகளைச் சந்திக்கும்போது, சுற்றித் திரிவது கவலைக்குரிய விஷயமாகிறது. உதாரணத்திற்கு, இவர்கள் பெரும்பாலும் ஒருமுகப்படுத்தலில் பிரச்சனைகளை அனுபவிக்கிறார்கள், இது அவர்கள் வீடு திரும்புவதற்கு வழியைக் கண்டுபிடிப்பதில் சிரமபடுகிறார்கள்  (காணாமல் போய் விடுகிறார்கள்). முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் வீட்டிற்கு வெளியில் இருக்கும்போது அல்லது பராமரிப்பாளரால் அவரைக் கண்டுபிடிக்க இயலாதபோது, சுற்றித் திரிவது பிரச்சனையாகிறது.

அதுமட்டுமல்லாது, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் மூத்தோர்களில் கணிசமான தொகையினரின் முதன்மைப் பராமரிப்பாளர்களும் மூத்தோர்களாகவே (உதாரணத்திற்கு, அவர்களின் வாழ்க்கைத்துணையாகவே) உள்ளனர். இந்த மூத்தோர்கள் கீழே விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம், மேலும் கீழே விழுவதனால் ஏற்படக்கூடிய காயங்களால் சிரமப்படவும் அதிக வாய்ப்புள்ளது.

சுற்றித் திரியும் நடத்தைக்கான சாத்தியமான காரணங்கள்

சுற்றித் திரியும் நடத்தை பின்வருபவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படலாம்:

சலிப்பு

மன மற்றும் உடல் ரீதியான தூண்டுதல் இல்லாத ஒருவர் ஏதோவொன்றைச் செய்ய வேண்டுமென்று தேடுவதால், நடைப்பயிற்சி செய்ய வெளியே செல்லலாம்.

அமைதியின்மை அல்லது ஆற்றலைப் பயன்படுத்த வேண்டுமென்ற அவசியம்

உங்கள் அன்புக்குரியவர் சுறுசுறுப்பான வாழ்க்கையை வழக்கமாகக் கொண்டிருந்து, திடீரென்று வீட்டில் முடங்கினால், வெளியே சென்று பழைய வாழ்க்கையைத் தொடர வேண்டுமென்ற உந்துதல் அவரிடம் இருக்கலாம்.

நினைவாற்றல் பிரச்சினைகள் மற்றும் குழப்பம்

உங்களது அன்பிற்குரியவர் ஒரு இடத்திற்குப் புறப்பட்டுவிட்டு, பிறகு அவர்  எங்கே செல்கிறோம் அல்லது ஏன் செல்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடும். சில நேரங்களில் உங்கள் அன்புக்குரியவர் சுற்றித் திரிந்து, பிறகு அந்த அறைக்குள் தான் எப்படி முதலில் வந்தோம் என்பதை மறந்துவிடக்கூடும். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களிடத்து இது அடிக்கடி நிகழக்கூடும். உங்கள் அன்புக்குரியவர் தாங்கள் கடந்து வந்த பாதைகளை ‘தடமறிய’ முயற்சிக்கக்கூடும். அதேபோல், அவர்களுக்கு ஒரு பகுதி நினைவில் இல்லை என்றால், அவர்களுக்குப் பழக்கமான ஒன்றைக் கண்டுபிடிக்கும் வரை அவர்கள் சுற்றித் திரியக்கூடும்.

இரவை பகல் என்று நினைத்து குழப்பிக் கொள்ளுதல்

உங்களது அன்பிற்குரியவர் தூக்கப் பிரச்சனைகளால் சிரமப்படக்கூடும், அல்லது காலையில் சீக்கிரமே எழுந்து, அதன் காரணமாக மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் சிரமப்படக்கூடும். அவர் இரவு நேரத்தைப் பகல் என்று எண்ணிக்கொண்டு, வெளியே சென்று சற்று நடமாட முடிவெடுக்கக்கூடும்.

பழக்கமான நபர்களை / பொருட்களை / இடங்களைத் தேடுதல்

உங்களது அன்பிற்குரியவர் குழப்பமடைகையில், தங்களுடைய கடந்த காலத்துடன் சம்பந்தப்பட்ட யாரேனும் நபரை, ஏதேனும் பொருளை அல்லது இடத்தைத் தேடி அலையக்கூடும்.​ அவர்கள் வெகுநாள் பார்க்காத பழைய நண்பரைக் கண்டுபிடித்து பார்க்க திடீரென்று முடிவு செய்யும்போது இத்தகைய சுற்றித் திரிதல் நிகழக்கூடும். அவர்கள் சிறிது காலம் வாகனம் ஓட்டவில்லை என்றாலும், அவர்கள் தங்கள் காரை எங்கே நிறுத்தினார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கலாம். நேரம் மற்றும் இடம் சம்பந்தமான குழப்பம் முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளில் ஒன்றாகும்.

பழக்கத்தை அல்லது வழக்கத்தைத் தொடருதல் 

உங்களது அன்பிற்குரியவருக்கு அவர் வழக்கமாகப் பின்பற்றும் மிகவும் குறிப்பிட்ட பழக்கமோ வழக்கமோ இருந்திருந்தால், அவர் அதைத் தொடர விரும்பக்கூடும். நெடுந்தூரம் நடைப்பயிற்சி செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் உங்களது அன்பிற்குரியவர் அதைத் தொடர விரும்பலாம். அவர் ஷாப்பிங் செல்லவோ, பிறகு அவர் முன்பு வேலை செய்த இடங்களுக்குத் திரும்பவோ முயற்சி செய்யக்கூடும், கடந்த காலத்தில் அவர் இவ்வாறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தால்.

எதையேனும் விட்டு விலக முயற்சி செய்தல்

அவர்கள் தற்போது இருக்கும் சூழ்நிலை அல்லது இடம் ஏதேனும் விதத்தில் மன அழுத்தம் நிறைந்ததாகவோ அல்லது விரும்பத்தகாததாக இருந்தால், அவர்கள் அதை விலகிச் செல்லக்கூடும். அதே போல, அவர்களைச் சுற்றியிருக்கும் சூழல் சத்தம் நிறைந்ததாக இருந்தால், மிகவும் நிசப்தமான மற்றும் அமைதியான ஏதேனும் இடத்தைக் கண்டறிய அவர்கள் வெளியே செல்லக்கூடும்.

சூழல் மாற்றம்

உங்கள் அன்பிற்குரியவர் புதிய வீட்டுச் சூழல் அல்லது பகல்நேரப் பராமரிப்பு மையம் போன்ற புதிய சூழலில் நிச்சயமற்றவராகவும் மற்றும்/அல்லது தவிப்பவராகவும் உணரக்கூடும்.

உடல் அசௌகரியம் அல்லது வலி

அசௌகரியமில்லா உடைகள், அதிகப்படியான வெப்பம் அல்லது கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய அவசியம் போன்றவற்றின் காரணமாக ஏற்படும் அசௌகரியத்தைப் வெளிபடுத்த இயலாத நிலையில், அவைகளைப் போக்க உங்களது அன்பிற்குரியவர் நடக்கக்கூடும்.

இரவுநேரத்தில் சுற்றித் திரிதல்

சுற்றித் திரியும் நடத்தை, நடு இரவு உட்பட எந்த நேரத்திலும் நிகழலாம் என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் இது எந்த நேரம் என்பது குறித்து எளிதாகக் குழப்பமடைபவராக இருந்தால், அவர் அதிகாலை 2 மணிக்கு சுற்றித் திரிவதையும் நீங்கள் காணலாம், ஏனெனில் அவர் அந்த நேரத்தில் எங்கேனும் ஒரு இடத்தில் இருக்க வேண்டுமென்று நினைத்துக் கொள்ளலாம், மேலும் அந்த நேரத்தில் அவர்கள் தூங்க வேண்டுமென்பதைப் புரிந்துக் கொள்ளாமல் இருக்கலாம்.

சுற்றித் திரியும் நடத்தைகளைச் சமாளிப்பதற்கான சில வழிகள்

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் மத்தியில் சுற்றித் திரிய வேண்டுமென்ற உந்துதல் பொதுவாகவே இருக்கும். உங்களது அன்பிற்குரியவரின் தனித்தன்மை, அவர்களின் சமாளிக்கக்கூடிய இயலுமை, சுற்றித் திரிவதற்கு அவர் சொல்லும் காரணங்கள் மற்றும் அவரைச் சுற்றியுள்ள சூழலின் பாதுகாப்பு ஆகியவற்றைப் பொறுத்து, உங்களது அன்பிற்குரியவரின் சுற்றித் திரியும் நடத்தையைச் சமாளிப்பதற்கு நீங்கள் பின்வரும் உத்திகளைப் பயன்படுத்தலாம்:

தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்

வழக்கத்தைப் பின்பற்றுவது கட்டமைப்பை வழங்கும். முதுமைக்கால மறதி நோயுள்ள உங்களது அன்பிற்குரியவருக்காக தினசரி வழக்கத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.

பார்வைக்குப் படாத இடங்களில் பூட்டுகளை நிறுவுதல்

உயரமான அல்லது குறைந்த வெளிப்புறக் கதவுகளை நிறுவி, அதன் மேல் அல்லது கீழ்ப்புறத்தில் இழுக்கும் தாழ்ப்பாள் அமைப்பது நல்லது

சுற்றித் திரியும் நடத்தைக்கு அதிக சாத்தியமுள்ள நேரம் அல்லது சூழ்நிலைகளை அடையாளம் காணுதல்

பதிவுகள் அல்லது நாட்குறிப்பில் உங்களது அன்பிற்குரியவரின் சுற்றித் திரியும் நடத்தை நிகழும் பாங்கினை அடையாளம் காணுங்கள். அந்த நேரத்தில் செயல்பாடுகளுக்குத் திட்டமிடுங்கள். செயல்பாடுகளும் உடற்பயிற்சியும் கவலை, மனக்கிளர்ச்சி மற்றும் அமைதியின்மையைக் குறைக்கும்.

கதவு அல்லது ஜன்னலைத் திறக்கும்போது சமிக்கைக் காட்டும் சாதனங்களைப் பயன்படுத்துதல்

கதவுகள் அல்லது ஜன்னல்களைத் திறக்கும்போது சமிக்கைக் காட்டும் சாதனங்களைப் பயன்படுத்துங்கள். உதாரணத்திற்கு, கதவுகளை மணிகள் மீது படும்வகையில் அமைக்கலாம், மின்னணு வீட்டு அலாரங்களைப் பயன்படுத்தலாம்.

சம்பந்தப்பட்ட நபர் எதையோ இழந்ததைப் போலவோ, கைவிடப்பட்டதைப் போலவோ அல்லது எதிலும் விருப்பமில்லாததைப் போலவோ உணர்ந்தால் அவருக்கு உறுதியளித்தல்

உங்களது அன்பிற்குரியவர் "வீட்டிற்குச் செல்ல" அல்லது "வேலைக்குச் செல்ல" விரும்பினால், தேடல் மற்றும் சரிபார்ப்பை மையப்படுத்திய தகவல்தொடர்புகளைப் பயன்படுத்துங்கள், மேலும் அவர்களைத் திருத்துவதைத் தவிர்த்திடுங்கள்.

மேற்பார்வை செய்தல்

புதிய அல்லது மாறிய சூழ்நிலையில் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் எவரையும் மேற்பார்வையின்றி விட்டுவிடாதீர்கள். அவர்களைத் தனியே வீட்டில் வைத்து பூட்டவோ காரில் விட்டுச் செல்லவோ கூடாது.

பார்வைக்குப் படாத இடத்தில் கார் சாவிகளை வைத்தல் பார்வைக்குப் படாத இடத்தில் கார் சாவிகளை வைத்தல் பார்வைக்குப் படாத இடத்தில் கார் சாவிகளை வைத்தல்

சம்பந்தப்பட்ட நபர் வாகனம் ஓட்டவில்லை என்றால், கார் சாவிகளுக்கான மறைத்து வைக்கவும். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் வாகனம் ஓட்டுவதற்கு முயற்சிக்கக்கூடும். அந்த நபரால் இன்னும் வாகனம் ஓட்ட இயலுமானால், அவர்கள் வழி அறியா நிற்கையில் அவர்களை வழிநடத்துவதற்கு GPS சாதனத்தைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

செயல்பாடுகள் மூலம் வேறு விடயங்களில் கவனத்தைத் திசைத்திருப்புதல்

உங்களது அன்பிற்குரியவரை, அவரது ஆரம்ப நாட்களில் அவருக்குப் பரீட்சயமான எளிமையான மற்றும் அமைதியான செயல்பாட்டில் ஈடுபடுத்துங்கள்.

உங்களது அன்பிற்குரியவரின் அனைத்து அடிப்படைத் தேவைகளும் பூர்த்திச் செய்யப்படுவதையும், அவர் எந்தவொரு உடல்நலக்குறைவைவோ, வலியையோ, அசௌகரியத்தையோ அனுபவிக்காமல் இருப்பதையும் உறுதிசெய்தல்

உங்களது அன்பிற்குரியவர் கழிப்பறைக்குச் சென்றாரா? அவர் தாகத்துடனோ பசியுடனோ இருக்கிறாரா? அவரை வழக்கமான உடல் பரிசோதனைகளுக்கு அழைத்துச் செல்லுங்கள், இது அவருக்கு இருக்கும் எதேனும் உடல்நலக்குறைவு, வலி அல்லது அசௌகரியமளிக்கும் விஷயங்களை அடையாளம் காண உதவுங்கள்.

குழப்பத்தை மற்றும் விருப்பமின்மையை ஏற்படுத்தும் பரபரப்பான இடங்களைத் தவிர்த்தல்

வணிக வளாகங்கள், மளிகைக் கடைகள் அல்லது பிற பரபரப்பான இடங்கள்.

சுற்றித் திரிவதை ஊக்கப்படுத்தக்கூடிய பொருட்களைத் தவிர்த்தல்

கைப்பைகள் அல்லது சாவிகள் போன்று சுற்றித் திரிவதை ஊக்கப்படுத்தக்கூடிய பொருட்களைப் பார்வையிலிருந்து அகற்றிடலாம்.

உங்களது அன்பிற்குரியவர் பாதுகாப்பாக சுற்றித் திரிவதை அனுமதிக்கும் வகையில், அவற்றுக்குத் தடைகளாக இருப்பவற்றை அகற்றிடுங்கள் - அவர்களை மேற்பார்வை செய்வதையும், அவருக்கு எல்லா நேரங்களிலும் நடைப்பாங்கு இருப்பதையும் உறுதிசெய்யுங்கள்.

அடையாள ஆவணத்தை எடுத்துச் செல்லுதல்

உங்களது அன்பிற்குரியவர்CARA உருப்பினருரிமை அட்டை (பாதுகாப்பாக திரும்பிவருதல் அட்டைக்குப் பதிலாக வழங்கப்படுகிறது) போன்ற அடையாள ஆவணத்தை எடுத்துச் செல்வதை உறுதி செய்யுங்கள். அவரைப் பிறரோ காவல் துறையினரோ கண்டுபிடிக்கும்போது இது உதவியாக இருக்கும். CARA உருப்பினருரிமைத் திட்டம் பற்றி மேலும் அறிக.

எங்களை மறந்துவிடாதீர் (ForgetUsNot) திட்டம்: தொலைந்து விடாதீர்கள்

வளமை: LIEN அறநிறுவனம், கூ டெக் புவாட் மருத்துவமனை, டிமென்ஷியா சிங்கப்பூர்

சமூகம் பற்றியும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் வீட்டிற்குச் செல்லும் வழியைக் கண்டறிய உதவுவது பற்றியும் Homage ஐச் சேர்ந்த பராமரிப்பு நிபுணர் லில்லி தே கூறுவதைக் கேளுங்கள்.

உங்களது அன்பிற்குரியவர் காணாமல் போனால், நீங்கள்:

  1. அதனை அமைதியாக கையாள வேண்டும்.
  2. வீடு மற்றும் அவருக்குப் பழக்கப்பட்ட இடங்களில் நன்குத் தேட வேண்டும்.
  3. அவர் என்ன ஆடை அணிந்திருந்தார் என்பதை நினைவில் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
  4. அக்கம்பக்க இடங்களில் அல்லது அவர் வழக்கமாக செல்லக்கூடிய இடங்களில் நடந்துச் சென்று அல்லது வாகனத்தில் சென்று தேடிப் பார்க்க வேண்டும். ஒருவேளை அவர் வீட்டிற்குத் திரும்பினால் அல்லது தொலைபேசி அழைப்புச் செய்தால் பதிலளிப்பதற்கு வீட்டில் ஒருவரை இருக்கச் செய்ய வேண்டும்.
  5. உடனடியாக தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், காவல்துறையை தொடர்புக் கொள்ளுங்கள். அவர்களிடம், காணாமல் போயிருக்கும் நபருக்கு முதுமைக்கால மறதி நோய் உள்ளதென்றும், உங்களுக்கு அவர்களின் பாதுகாப்பு குறித்து இருக்கும் ஏதேனும் கவலைகளையும் தெரிவியுங்கள்.
  • CARA உறுப்பினர்களைப் பொறுத்தவரையில், காணாமல் போன முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்களது அன்பிற்குரியவரைப் பற்றி பொது உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க CARA செயலியைப் பயன்படுத்துங்கள்.
  • உங்களது அன்பிற்குரியவர் செம்பவாங் உட்லேண்ட்ஸ் சமூகத்தில் வாழ்ந்தால், நீங்கள் டிமென்ஷியா தேடல் செயற்படுத்தல் வலையமைப்பு (Dementia Search Activation Network, DSAN) ஐ அணுகலாம். டிமென்ஷியா தேடல் செயற்படுத்தல் வலையமைப்பு (Dementia Search Activation Network, DSAN) என்பது சமூக வளமை, ஈடுபாடு மற்றும் ஆதரவுக் குழு (CREST) ​​மூலம் அப்பகுதியில் முதுமைக்கால மறதி நோயுடன் வாழுபவர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்காக நடத்தப்படும் Telegram சேனலாகும். CARA போன்ற தேசிய செயலிகளிலிருந்து உட்லண்ட்ஸ் மற்றும் செம்பவாங் பகுதியில் காணாமல் போன மூத்தோர்கள் பற்றிய தகவலைப் பெற்றவுடன் இந்த Telegram சேனல் செயல்படுத்தப்படும். செயல்படுத்தப்பட்டதும், சேனலின் உரையாடல் செயல்பாடு 48 மணிநேரத்திற்கு செயல்படுத்தப்படும், அதன்போது பங்கேற்பாளர்கள் காணாமல் போன நபரைக் கண்டுபிடிக்க உதவக்கூடிய முக்கியமான தகவல்களைப் பகிரலாம். இந்தச் சேனலில் சேர ஆர்வமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்யலாம்.

உங்களது அன்பிற்குரியவர் வீடு திரும்பியதும்:

  1. காவல் துறையினருக்கு உடனடியாகத் தெரிவியுங்கள். 
  2. வீடு திரும்பியவர்களைத் திட்டவோ அவர்களிடம் கவலையை வெளிப்படத்தவோ செய்யாதீர், ஏனெனில் அது அவர்களைக் குழப்பமடைய செய்யக்கூடும் அல்லது பயமுறுத்தக்கூடும்.
  3. Provide reassurance and அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி, அவர்கள் தங்களின் வழக்கத்திற்கு இயன்றளவு விரைவாகத் திரும்பிட உதவுங்கள்.

வில்லியமின் கதை

CNA Insider: My Grandpa Has Dementia

Source: Channel News Asia

முதலில், வில்லியமின் முதுமைக்கால மறதி நோய்க்கான அறிகுறிகளாக மறதியும் குழப்பமும் இருந்தன, பிறகு சுற்றித் திரியும் மற்றும் காணாமல் போகும் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. வில்லியமின் முதுமைக்கால மறதி நோய் நள்ளிரவில் அவரைப் பதுங்கி வீட்டை விட்டு வெளியே செல்ல வைக்கிறது. குடும்பம் கேட்டைப் பூட்டிய பிறகும் அவர் வழியைக் கண்டுபிடித்து வெளியேறுகிறார்.

பெத்தானி மற்றும் அவரது தாயார் ஜெரால்டின் (வில்லியமின் மகள் மற்றும் முக்கியப் பராமரிப்பாளர்) அவர்களுக்கு உதவி தேவை என்பதை உணரும் வரை எப்படி சமாளித்தார்கள் என்பதைப் பாருங்கள்.

Was this article helpful?

Yes No
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest
  1. Changi General Hospital. (2020, October 5). Managing agitation and aggression in dementia. HealthHub. https://www.healthhub.sg/live-healthy/843/managing-agitaton-and-aggression-in-dementia

Was this article helpful?

Yes No
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest

Downloadable Resources

The following material contains bite-sized information about dementia. To download or print it, simply click the image. You may also select the language of the material by clicking the “Select Language” button.

Downloadable Resources

The following material contains bite-sized information about dementia. To download or print it, simply click the image. You may also select the language of the material by clicking the “Select Language” button.

Related Articles

Sed tristique blandit facilisis eleifend elit lobortis eros, massa aenean. Suspendisse aliquam eget tortor viverra nulla duis.
Skip to content