முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் சில நேரங்களில் சாப்பிட மறுக்கக்கூடும். அவர்கள் சாப்பிடும் நேரங்களில் கோபமமோ, கிளர்ச்சியோ அடையலாம் அல்லது அவர்களுக்குச் சாப்பிடுவது சவாலாக இருக்கலாம். இது பல்வேறு காரணங்களால் நிகழலாம்:
- சாப்பாடு அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம்
- அவசரப்படுத்தப்படுவதாக அவர்கள் உணரலாம்
- சூழலோ சுற்றியிருக்கும் நபர்களோ அவர்களுக்கு அசௌகரியமாக இருக்கலாம்
- அவர்கள் அனுபவிக்கும் சிரமங்களினால் விரக்தியாக உணரலாம்
அவர்களுக்கு உண்மையில் என்ன பிரச்சனை என்பதை அடையாளம் காண்பது, அதிலும் குறிப்பாக அவர்களுக்குத் உரையாடுவதில் சிரமங்கள் இருந்தால், இது சவாலானதாக இருக்கலாம். இத்தகைய செயல்பாடுகளை அவர்கள் வேண்டுமென்றே செய்வதில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
உங்களது அன்பிற்குரியவரை சீக்கிரம் சாப்பிடவோ நீர் பருகவோ அவசரப்படுத்தாதீர்கள் அல்லது வற்புறுத்தாதீர்கள். அதற்குப் பதிலாக, அவர்களது உடல் பாவனைகள் மற்றும் சைகைகள் மூலம் எதனையும் சொல்ல முற்படுகிறார்களா என்று கவனியுங்கள். உணவை சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன்பு, அவர்கள் அமைதியடையவும் அவர்களது பதட்டம் குறையும்வரை காத்திருங்கள்.
இதைத் தடுக்க நீங்கள் கவனிக்கக்கூடியவை மற்றும் பரிந்துரைக்கப்படும் உத்திகள்
சாப்பிட சொல்லும்போது மறுப்பது, உணவைத் துப்புவது
• அவர்களின் வாயில் புண்கள் எதுவும் உள்ளனவா அல்லது சொத்தை பற்கள் உள்ளனவா என சோதியுங்கள்
• சாப்பிடும்போது அல்லது நீர் பருகும்போது அவர்கள் சுயமாக செயல்பட ஊக்குவியுங்கள்; அவர்களால் தன்னால் சுயமாக சாப்பிட இயலாவிட்டால், கரண்டிகளை அவர்களின் வாய்க்குக் கொண்டு செல்ல உங்கள் கையை மெதுவாக அவர்களின் கைமீது வைத்து வழிநடத்துங்கள்
• அவர்களுக்குப் பழக்கமான அல்லது பிடித்தமான உணவு மற்றும் பானங்களை வழங்குங்கள்
• உணவு கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் வாசனை ஈர்க்கும் விதமாகவும் வெவ்வேறு சுவைகள், நிறங்கள் மற்றும் மணங்களுடைய உணவைத் தயார் செய்யுங்கள்
• அவர்களுக்குப் பழக்கமான பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள்
• பரிமாறப்படும் உணவு சரியான அளவில் சூடாக இருப்பதை உறுதி செய்யுங்கள்
மிக வேகமாக சாப்பிடுதல்
• அவர்கள் சாப்பிடும்போது மேற்பார்வையிட்டு, வார்த்தைகள் மற்றும் சைகைகளைப் பயன்படுத்துங்கள், உதாரணத்திற்கு விழுங்குவதற்கு முன் உணவை மெல்லுமாறு அவர்களிடம் கூறுங்கள்
• அவர்கள் சாப்பிடும் வேகத்தைக் கட்டுபடுத்த உங்களது கையாக அவர்கள் மீது மென்மையாக வைத்திடுங்கள்
• உணவு அவர்களது தொண்டையில் அடைத்துக் கொள்வதைக் குறைக்க அவற்றைச் சிறு துண்டுகளாக வெட்டுங்கள்
சாப்பிடும் நேரங்களில் கவனச்சிதறலுடன் இருத்தல் / சாப்பாட்டில் கவனமில்லாமல் இருத்தல்
• சாப்பிடும் மேசை அலங்காரங்களை குறைவாக வைத்திடுங்கள்
• கவனச்சிதறல்கள் உண்டாக்கும் விஷயங்கள் குறைந்தபட்சம் இருப்பதை உறுதிசெய்யுங்கள், உதாரணத்திற்கு அமைதியான மற்றும் நிசப்தமான சூழல், அல்லது குறைவான மக்கள் இருப்பது.
• சாப்பிடும் நேரங்களில் பின்னணியில் அமைதியளிக்கும் இதமான இசையை இயக்கிடுங்கள்
• பொருத்தமான மற்றும் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்யுங்கள்