Help Us Improve

நாம் உண்ணும் உணவு வகை நமது ஆரோக்கியத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கும். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்குச் சிறப்பு உணவுமுறை தேவையில்லை என்றாலும், இந்த நோய் சரியான ஊட்டச்சத்து, நீர்ச்சத்து மற்றும் உடல்எடைப் பராமரிப்பு ஆகியவற்றில் சவால்களை ஏற்படுத்தலாம். உங்கள் அன்பிற்குரியவர் நன்கு சமச்சீரான மற்றும் சத்தான உணவை உட்கொள்வதையும், போதுமான அளவு திரவ உணவுகளை அருந்துவதையும், உடல் மற்றும் மன நலனைப் பேணுவதையும் உறுதிப்படுத்துவதற்கான சில வழிகள் இதோ இங்கே உள்ளன. 

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு முறையான ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து ஏன் மிகவும் முக்கியமானது?

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து தேவைகள், அவர்களின் வயதில் இருக்கும் பிறரைப் போலவே இருக்கும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள், மேலும் நோய் மற்றும் காயங்களிலிருந்து மெதுவாக குணமடைவார்கள். இருப்பினும், ஓய்வற்ற நடத்தைகளால் (மேலும் கீழும் வேகமாக ஏறி இறங்குவது, சுற்றித் திரிவது மற்றும் பதற்றமாக இருப்பது போன்றவை) அதிக உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு, உடல்எடை இழப்பைக் குறைக்க அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படலாம். 

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் பெரும்பாலான நபர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் நல்ல ஊட்டச்சத்தைப் பராமரிப்பது சவாலாக இருக்கலாம். அவர்கள் அனுபவிக்கும் சில மாற்றங்களில் பசியின்மை, உண்ணவும், நீர் அருந்தவும் மறந்துவிடுவது, மெல்லுவது அல்லது விழுங்குவது எப்படி என்பதை மறந்துவிடுவது அல்லது தீராத பசி ஏற்படுவது என்பன அடங்கும்.1 

முதுமைக்கால மறதி நோயின் பிற்பகுதியில் உள்ளவர்கள் கணிசமான அளவு உடல்எடை குறைய நேரிடக்கூடும். உணவு உட்கொள்ளலை ஊக்குவிப்பதற்கும், தகுந்த  உணவுச் சூழலை உருவாக்குவதற்கும் உதவும் உத்திகளைப் பற்றி இங்கே அறிக. இந்த உத்திகளைப் பயன்படுத்திய பிறகும் தொடர்ந்து உடல்எடை குறைந்தால் அல்லது மோசமான பசியின்மை இருந்தால், உணவுமுறை நிபுணரிடம் ஆலோசனை பெற பரிந்துரைக்கப்படுகிறது. 

ஆரோக்கியமான மூப்படைதலுக்கு நன்றாக சாப்பிடுங்கள்

நன்கு சமச்சீரான சத்தான உணவை உண்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. எனது ஆரோக்கியமான தட்டு சமச்சீரான மற்றும் ஆரோக்கியமான உணவுக்குத் தேவையான பகுதிகளைக் காட்டுகிறது, இதுவே ஒருவர் இலக்காக கொள்ளக்கூடிய வழிகாட்டுதலாகும்.

முழு தானியங்களின் ¼ பகுதி தட்டு

முழு தானியங்கள் நமக்கு ஆற்றல், நார்ச்சத்து, வைட்டமின்கள் (எ.கா. வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ) மற்றும் தாதுக்கள் (எ.கா. துத்தநாகம், மெக்னீசியம்) ஆகியவற்றை வழங்குகிறது. இவை அதிக அளவில் பதப்படுத்தப்படாததால், மற்றும் அவற்றின் அசல் வடிவத்தில் இருப்பதால், இவற்றில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முழு தானியங்களை அதிகம் சாப்பிடுவது சர்க்கரை நோய், இதய நோய்கள் மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற நாள்பட்ட நோய்கள் உண்டாகும் அபாயத்தைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. 

முழு தானியங்களில் பழுப்பு அரிசி, முழு தானிய ரொட்டி, மற்றும் ஓட்மீல் ஆகியவை அடங்கும். முழு தானியங்களை, பழுப்பு அரிசி வெர்மிசிலி, முழு தானிய மாவிலிருந்து சப்பாத்தி மற்றும் முழு தானிய காலை உணவு தானியங்கள் போன்ற பொருட்களைத் தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.  

ஒரு நாளைக்கு குறைந்தது 2-3 பரிமாறும் அளவுகளில் மாவுச்சத்து உணவுகள்/முழு தானிய உணவுகளை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

1 பரிமாறும் அளவு புரதம் பின்வருவனவற்றுக்குச் சமம்:

 

1 உள்ளங்கை அளவு குறைந்த கொழுப்புள்ள இறைச்சி/கோழி/மீன் 

2 குவளை குறைந்த கொழுப்புள்ள பால்

4 துண்டுகள் குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டி 

¾ கப் சமைத்த பீன்ஸ்/பட்டாணி/பருப்பு வகைகள் (120 கிராம்)

4 துண்டுகள்  சோயா மொச்சை (tempeh) (120 கிராம்) 

¾ துண்டு டௌ குவா (tau kwa) (150 கிராம்)

பலவகையான முழு தானியங்களை உணவில் சேர்ப்பது ஒருவர் அதிக ஊட்டச்சத்துக்களைப் பெறுவதையும், உணவு நேரத்தை மிகவும் சுவாரஸ்யமாக்குவதையும் உறுதிப்படுத்த உதவும். மளிகைப் பொருட்கள் வாங்கச் செல்லும்போது “Higher in Wholegrains” (முழு தானியங்கள் அதிகமுள்ள) ஆரோக்கியமான தேர்வுச் சின்னத்தை கவனியுங்கள். 

ஒரு நாளைக்கு மேலே உள்ள புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்வது, ஒருவர் தினந்தோறும் போதுமான அளவு இரும்பு மற்றும் வைட்டமின் பி12 பெறுவதை உறுதிசெய்ய உதவும். இரும்பு மற்றும் வைட்டமின் பி12 நமது இரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் உருவாவதற்கு உதவுகிறது, இவை நமது உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லத் தேவைப்படுகின்றன. உணவுகளில் இரண்டு வகையான இரும்புச்சத்து உள்ளது. ஹீம் இரும்பு விலங்கு மூலங்களிலிருந்தும் (இறைச்சி, கோழி, மீன் போன்றவை) ஹீம் அல்லாத இரும்பு முட்டை மற்றும் தாவர மூலங்களிலிருந்தும் (பீன்ஸ், பருப்பு வகைகள், பட்டாணி போன்றவை), கொட்டைகள், (nuts) பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்தும் வருகிறது. ஹீம் அல்லாத இரும்பை விட நம் உடல் ஹீம் இரும்பை நன்றாக உறிஞ்சுகிறது. வைட்டமின் சி நிறைந்த உணவுகளை (எ.கா. ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி, முட்டைக்கோஸ்), ஹீம் அல்லாத இரும்புச்சத்து உள்ள உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது, மற்றும் காபி/டீயை சாப்பிட்டு நேரம் கழித்து குடிப்பது இரும்புச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்க உதவும் சில வழிகள் ஆகும். வைட்டமின் பி12 இன் ஆதாரங்களில் இறைச்சி, மீன் முட்டை, தயிர், செறிவூட்டப்பட்ட சோயாபால் மற்றும் செறிவூட்டப்பட்ட தானியங்கள் ஆகியவை அடங்கும்.  

பால் பொருட்கள் (குறைந்த கொழுப்புள்ள பால்/பாலாடைக்கட்டி/தயிர்), அதிக கால்சியம் நிறைந்த சோயா பால், டோஃபு மற்றும் தகர டப்பாவில் அடைக்கப்பட்ட குறைந்தளவு சோடியம் உள்ள மத்தி மீன்கள் ஆகியவை புரதம் மற்றும் கால்சியத்தின் நல்ல ஆதாரங்களாகும். கால்சியம் நமது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் எலும்புத் தேய்மான நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. 2 குவளை அதிக கால்சியமும் குறைந்த கொழுப்பும் உள்ள பால் அல்லது அதிக கால்சியம் நிறைந்த சோயா பால் குடிப்பதால், ஒரு நாளைக்கு 1000மிகி கால்சியம் தேவையைப் பூர்த்திச் செய்ய முடியும். வைட்டமின் டி நம் உடல் கால்சியத்தை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. வைட்டமின் D இன் உணவு ஆதாரங்களில் எண்ணெய் மீன் (எ.கா. சால்மன், கானாங்கெளுத்தி, காட் மீன் (cod fis), முட்டை, செயற்கை வெண்ணெய், செறிவூட்டப்பட்ட தானியங்கள், செறிவூட்டப்பட்ட பால் (பால், பாலாடைக்கட்டி, தயிர்) மற்றும் செறிவூட்டப்பட்ட சோயா பால் ஆகியவை அடங்கும். மேலேயுள்ள புரதம் மற்றும் கால்சியம் தேவைகளைப் பூர்த்திச் செய்தால், ஒரு நாளைக்குப் பரிந்துரைக்கப்படும் அளவு டி வைட்டமினை ஒருவர் பெறுகிறார் என்று அர்த்தம்.

½ தட்டு காய்கறிகள் மற்றும் பழங்கள்

முழு தானியங்களைப் போலவே, காய்கறிகள் மற்றும் பழங்கள் நார்ச்சத்து நிறைந்தவை. இவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள், தாவர வேதிப்பொருட்கள் மற்றும் உயிரகத்தடுப்பிகள் போன்றவையும் நிறைந்துள்ளன. தினசரி போதுமான அளவு நார்ச்சத்து உட்கொள்வது இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற நாள்பட்ட நோய்களிலிருந்து ஒருவரைப் பாதுகாக்க உதவுகிறது. நார்ச்சத்து நமது குடல் இயக்கத்தை ஒழுங்குப்படுத்த உதவுகிறது, இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அளவுகளைக் கட்டுப்படுத்துகிறது, உடல் எடை அதிகரிப்பை நிர்வகிக்கிறது. 

பெண்கள் ஒரு நாளைக்கு 20கிராம் நார்ச்சத்தும் ஆண்கள் ஒரு நாளைக்கு 26கிராம் நார்ச்சத்தும் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒரு நாளைக்கு 2 பரிமாறும் அளவு காய்கறிகளுக்கும் 2 பரிமாறும் அளவு பழங்களுக்கும் சமம். சோளம், சக்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்துள்ள அல்லது வேர்க் காய்கறிகளை எடுத்துக் கொள்வது ஒரு நாளைக்கு 2 பரிமாறும் அளவு காய்கறிகளின் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. 

1 பரிமாறும் அளவு பழங்கள் என்பது பின்வருவனவற்றுக்குச் சமம்: 

1 சிறிய ஆப்பிள், அரஞ்சு, பேரிக்காய் அல்லது மாம்பழம் (130கிராம்) 

ஒரு கீற்று பப்பாளி, அன்னாசி அல்லது தர்பூசணி (130கிராம்)

1 நடுத்தர அளவு வாழைப்பழம் 

10 திராட்சைகள் அல்லது லொங்கன்கள் (longans)

1 பரிமாறும் அளவு காய்கறிகள் என்பது பின்வருவனவற்றுக்குச் சமம்: 

 

1/4 பகுதி வட்ட வடிவ தட்டில் சமைத்த காய்கறிகள் 

150கிராம் சமைக்காத கீரைக் காய்கறிகள்

(100கிராம்) 

3/4 கப் கீரை அல்லாத சமைத்த காய்கறிகள் (100கிராம்)

(100g) 

100கிராம் கீரை அல்லாத சமைக்காத காய்கறிகள்

3/4 கப் கீரை அல்லாத சமைத்த காய்கறிகள் (100கிராம்)

 

ஒட்டுமொத்தத்தில், பின்வருவன பரிந்துரைக்கப்படுகின்றன:

  • பல்வேறு உணவுப் பிரிவுளைச் சேர்ந்த பல்வேறு விதமான சத்துள்ள உணவுகளை உண்ணுங்கள்
  • ஒரு நாளைக்கு குறைந்தது 3 வேளை உண்ணுங்கள்
  • ஒரு நாளைக்கு 2 பரிமாறும் அளவு காய்கறிகளும் 2 பரிமாறும் அளவு பழங்களும் உண்ணுங்கள்
  • நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் உப்பு குறைவாக உள்ள உணவை உண்ணுங்கள்
  • கால்சியம், வைட்டமின் டி, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் B12 உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள்
  • சேர்க்கப்படும் சர்க்கரையுள்ள உணவுகளை மிதமான அளவு உட்கொள்ளுங்கள்

போதுமான அளவு நீர் ஆகாரம் பருகுங்கள்

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் பெரியவர்கள், தாகமின்மை, நினைவாற்றல் குறைவு, நடமாட்டமின்மை அல்லது அவர்களின் தாகத்திற்கு இடையூறு செய்யும் மருந்துகள் போன்ற காரணங்களால் நீரிழப்புக்கு மிகவும் எளிதாக பாதிக்கப்படலாம்.2 நீர்ச்சத்தின் அளவுகள் குறைவாக இருப்பது கடுமையான குழப்பம்/சித்தப்பிரம்மை, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், மலச்சிக்கல் மற்றும் காயம் தாமதமாக குணமடைதல் போன்ற நிகழ்வுகளுடன் தொடர்புடையதாக உள்ளன.3

ஒரு நாளைக்கு 6-8 குவளைகள் தண்ணீர் அருந்துவது பரிந்துரைக்கப்படுகிறது. 

 

திரவ உட்கொள்ளலை அதிகரிப்பதற்கான உதவிக்குறிப்புகளில் பின்வருவன அடங்கும்:

  • நாள் முழுவதும் சிறு சிறு அளவுகளாக திரவங்கள் அருந்துமாறு அடிக்கடி ஊக்குவிக்கலாம் 
  • மூத்தோர்களின் கைக்கெட்டும் அருகில் தண்ணீர் குவளை/பாட்டிலை வைக்கலாம்
  • மூத்தோருக்கு வெறும் திரவங்களை அருந்துவதற்கு விருப்பமில்லை எனில், சூப், சாறுகள், பால், தேன் கலந்த தண்ணீர், பார்லி தண்ணீர் போன்ற பிற திரவ ஆதாரங்களை அருந்துமாறு பரிந்துரைக்கலாம் 

அறிவாற்றல் சார்ந்த செயல்பாட்டைப் பாதுகாத்தல்

அறிவாற்றல் மற்றும் செயல்பாட்டுக் குறைவைத் தடுப்பதற்கு உதவும் வகையில், தனிப்பட்ட ஊட்டச்சத்துக்களைக் காட்டிலும், முழு உணவுமுறைகளுக்கான (குறிப்பாக தாவர அடிப்படையிலான, நல்ல கொழுப்புகள் நிறைந்த உணவுமுறை) ஆதாரங்களைக் கருத்தில் கொள்ளுமாறு தற்போது சில ஆராய்ச்சி கூறுகின்றது.4 இது அநேகமாக உணவில் உள்ள பல்வேறு ஊட்டச் சத்துக்களின் ஒருங்கிணைந்த நன்மை விளைவுகளால் இருக்கலாம்.5

கொழுப்பு அதிகமுள்ள இறைச்சி, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதைக் குறைத்து, காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆரோக்கியமான உணவு முறைகள் இருதய அபாயங்களைக் குறைப்பதன் மூலம் அறிவாற்றல் குறைவதைத் தடுக்கும் நடவடிக்கையாக செயல்படக்கூடும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.4 

சில எடுத்துக்காட்டுகளில் மத்திய தரைக்கடல் உணவுமுறை, உயர் இரத்த அழுத்தத்தை நிறுத்தும் உணவுமுறை அணுகுமுறைகள் (DASH), நரம்புமண்டல சிதைவைத் தாமதப்படுத்தும் (MIND) உணவுமுறைக்கான மத்திய தரைக்கடல்-DASH சிகிச்சை மற்றும் NU-AGE உணவுமுறை ஆகியவை அடங்கும்.

முதுமைக்கால மறதி நோயைப் புரிந்துகொள்ளுதல்: பகுதி 7

ஆதாரம்:  ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (AIC)

இன்று, முதுமைக்கால மறதி நோய் உண்டாவதற்கான ஆபத்தை அதிகரிக்க அல்லது குறைக்கக்கூடிய உணவுமுறைக் காரணிகள் பற்றிய தெளிவான மற்றும் நிலையான தகவல்கள் எதுவும் இல்லை. இருப்பினும், மத்திய தரைக்கடல் உணவுமுறையைக் கடைபிடிப்பது அறிவாற்றல் குறைவு மற்றும் முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கக்கூடும். மத்திய தரைக்கடல் உணவுமுறை என்றால் தானியங்கள், பழங்கள், மீன் மற்றும் காய்கறிகளை அதிக விகிதத்தில் சாப்பிடுவதாகும்.

இந்த உணவு முறைகளும் சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் (சிங்கப்பூர்) எனது ஆரோக்கியமான உணவுத்தட்டு (மை ஹெல்தி பிளேட்டு) வழங்கும் பரிந்துரைகளும் ஒரே மாதிரியாக உள்ளன, இருப்பினும் குறிப்பிட்ட உணவுப் பிரிவுகள் மற்றும் உண்ணும் அளவுகளுக்கான கூடுதல் ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன. பொதுவாக, இந்த உணவு முறைகள் பின்வருமாறு பரிந்துரைக்கின்றன: 

  • முழுதானியங்களைத் தேர்ந்தெடுங்கள் (ஒரு நாளைக்கு குறைந்தது 2 பரிமாறு அளவு முழுதானியங்களைச் சாப்பிடுவதை நோக்கமாகக் கொள்ளுங்கள்)
  • ழுப்பு குறைவாக உள்ள இறைச்சி மற்றும் எண்ணெய் மீனைத் தேர்ந்தெடுங்கள் (வாரத்திற்கு குறைந்தது 1 பரிமாறும் அளவு மத்தி, கானாங்கெளுத்தி மற்றும் சால்மன் போன்ற எண்ணெய் மீன்களை உணவ்சில் சேர்த்துக் கொள்வதை நோக்கமாகக் கொள்ளுங்கள்)
  • ஒரு நாளைக்கு குறைந்தது 2-3 பரிமாறும் அளவு காய்கறிகள் சாப்பிடுங்கள்
  • வாரத்திற்கு 2 பரிமாறும் அளவுகள் பெர்ரி பழங்கள் உட்பட, ஒரு நாளைக்கு குறைந்தது 2 பரிமாறும் அளவுகள் பழங்கள் சாப்பிடுங்கள்
  • ஆரோக்கியமான எண்ணெய்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள் (எ.கா. ஆலிவ் எண்ணெய்)

 

எவ்வாறாயினும், தற்போதைய ஆராய்ச்சியால் இந்த உணவுமுறைகளை எவ்வளவு காலம் கடைபிடிக்க வேண்டும் அல்லது எந்த வயதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை இன்னும் தீர்மானமாக கூற முடியவில்லை.4 எனவே, ஊட்டச்சத்துக்களுடன் நன்கு ஆரோக்கியமாக இருக்கும் தனிநபர்கள், அறிவாற்றல் குறைவதைத் தடுக்கும் நடவடிக்கையாக மேலே உள்ள பரிந்துரைகளைப் பின்பற்றுவதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடுள்ள நபர்களுக்கு கலோரி மற்றும் புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும், ஏனெனில் மோசமான ஊட்டச்சத்து எண்ணற்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 

கூடுதல் வளமைகள்

ஊட்டச்சத்து மற்றும் முதுமைக்கால மறதி நோய்
 

ஆதாரம்:  ஆல்சைமர் நோய் சர்வதேசம்

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் வாழ்க்கையை ஆரோக்கியமான உணவு மற்றும் சரியான ஊட்டச்சத்து எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து இந்த அறிக்கை ஆராய்கிறது. இந்த வெளியீட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்:

  • பிற்கால வாழ்க்கையில் முதுமைக்கால மறதி நோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்க அல்லது குறைக்கக்கூடிய வாழ்க்கைப் பாதை முழுவதுமுள்ள உணவுமுறைக் காரணிகள்;
  • உணவுமுறை ஊட்டச்சத்துக்கும் முதுமைக்கால மறதி நோய்த் தடுப்புக்கும் இடையேயான தொடர்பு;
  • முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகள்; மற்றும்
  • ஊட்டச்சத்து மற்றும் முதுமைக்கால மறதி நோய் பற்றிய கூடுதல் ஆராய்ச்சிக்கான தேவை. 

முதுமைக்கால மறதி நோயுள்ள நிலையில் நன்கு சாப்பிடுதல்

ஆதாரம்:  அயர்லாந்தின் ஆல்சைமர்’ஸ் சமுதாயம்

பராமரிப்பாளர்களுக்கு பின்வரும் விஷயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குகிறது: 

  • முதுமைக்கால மறதி நோய் ஒரு நபரின் பசியையும் உணவின் அனுபவத்தையும் எவ்வாறு பாதிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுதல்;
  • முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒரு நபரின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்திச் செய்தல்;
  • முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒருவருக்கு உணவுத் தயாரிப்பு மற்றும் உணவு நேரங்களை அனுபவித்து, ஈடுபட ஊக்குவித்தல்; ற்றும்
  • உடல்எடை குறைப்பு, உடல்எடை அதிகரிப்பு மற்றும் ஏற்படக்கூடிய பிற சிக்கல்களைக் கையாளுதல். 

கண்ணியத்துடன் உண்ணுதல் மற்றும் வாழ்தல்  

ஆதாரம்:  இஸ்ரேல் சுகாதார அமைச்சகம்

பராமரிப்பு வல்லுநர்கள் மற்றும் குடும்பப் பராமரிப்பாளர்களுக்கான இந்த வழிகாட்டி முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு பின்வருவனவற்றைப் பற்றிய தகவல்கள், உதவிக்குறிப்புகள் மற்றும் அதை நிவர்த்திச் செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குகிறது:

  • சாப்பிடுதல் மற்றும் உணவைத்தேர்ந்தெடுப்பதில் சிரமங்கள்;
  • மலச்சிக்கல் பிரச்சனைகள்;
  • முதுமைக்கால மறதி நோய் அதிகரிக்கையில் சாப்பிடுவதில் மற்றும் விழுங்குவதில் ஏற்படும் மாற்றங்கள்; மற்றும்
  • ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களைப் பராமரித்தல்.

எழுத்தாளர் சுயசரிதை

கிளாரிசா தாய், மூத்த உணவியல் நிபுணர்

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் உணவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, கிளாரிசா 2019 முதல் தான் தோக் செங் மருத்துவமனையில் உணவியல் நிபுணராக பணியாற்றி வருகிறார்.  மூத்தோர்களின் ஆரோக்கியம், வாழ்க்கைத் தரம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்த உதவும் வகையில், அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வம் கொண்டுள்ளார்.

Was this article helpful?

Yes No
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest
  1. Volkert D, Chourdakis M, Faxen-Irving G, et al. ESPEN guidelines on nutrition in dementia. Clinical Nutrition [Internet]. 2015 [cited 2022 Aug];34(6):1052-73. Available from https://nutritotal.com.br/pro/wp-content/uploads/sites/3/2016/03/ESPEN_demencia.pdf
  2. El-Sharkawy AM, Watson P, Neal KR, et al. Hydration and outcome in older patients admitted to hospital (The HOOP prospective cohort study). Age Ageing [Internet]. 2015 [cited 2022 Sept];44(6):943-947. Available from https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4621229/
  3. Bruno C, Collier A, Holyday M, Lambert K. Interventions to improve hydration in older adults: A systematic review and meta-analysis. Nutrients [Internet]. 2021 [cited 2022 Sept];13(10):3640. Available from https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4621229 DOI: 10.1093/ageing/afv119
  4. Lavingston G, Huntley J, Sommerlad A, et al. Dementia prevention, intervention, and care: 2020 report of the Lancet Commission. The Lancet [Internet]. 2020 [cited 2022 Aug];396(10248):413-446. Available from https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC7392084/
  5. Scarmeas N, Anastasiou CA, Yannakoulia M. Nutrition and prevention of cognitive decline. The Lancet Neurology [Internet]. 2018 [cited 2022 Aug];17(11):1006-15. Available from http://old.school.med.uoa.gr/uploads/media/LancetNeurology2018.pdf

Was this article helpful?

Yes No
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest

Downloadable Resources

The following material contains bite-sized information about dementia. To download or print it, simply click the image. You may also select the language of the material by clicking the “Select Language” button.

Downloadable Resources

The following material contains bite-sized information about dementia. To download or print it, simply click the image. You may also select the language of the material by clicking the “Select Language” button.

Related Articles

Sed tristique blandit facilisis eleifend elit lobortis eros, massa aenean. Suspendisse aliquam eget tortor viverra nulla duis.
Skip to content