Playback speed:
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் நோய்நிலை அதிகரிக்கையில், அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை (ADLகள்) செய்யும் அவர்களின் திறன்களும் மோசமடைகின்றன. ADLகள் என்பன பெரும்பாலான நபர்கள் சிறு வயதிலிருந்தே செய்யக் கற்றுக்கொண்ட மற்றும் எந்த உதவியும் இல்லாமல் அன்றாடம் செய்யக்கூடிய வழக்கமான நடவடிக்கைகளைக் குறிக்கின்றன.1 இருப்பினும், முதுமைக்கால மறதி நோய் காரணமாக, தனிநபர்களால் படிப்படியாக இந்த தினசரி வழக்கங்களைச் செய்ய முடியாமல் போகும்.2
ஆறு அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் (ADLகள்) அடங்குவன:
- தனிப்பட்ட சுகாதாரம் (குளிப்பது, பல் துலக்குவது போன்றவை)
- ஆடை அணிவது
- கழிப்பறைக்குச் சென்றுவருவது
- நடமாடுவது
- சக்கர நாற்காலியிலிருந்து படுக்கைக்கு மாறுதல்
- சாப்பிடுவது மற்றும் பருகுவது
ஒரு பராமரிப்பாளராக, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்பிற்குரியவரை ஆதரிப்பதில் நீங்கள் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். உங்கள் அன்புக்குரியவருக்காக அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை முழுமையாகச் செய்வதற்குப் பதிலாக, இந்த நடவடிக்கைகளை அவர்கள் செய்வதை எளிதாக்கித் தருவதன் மூலம் அல்லது பிற முறைகள் மூலம் அவர்களே இந்த நடவடிக்கைகளைச் செய்வதற்கான வழிகளைக் கண்டறிவதன் மூலம் நீங்கள் முறையான உதவியை வழங்கலாம். இது அவர்களின் சுயாதீனத்தை நீடிக்க உதவுகிறது, முடிந்தவரை தங்களால் முடிந்ததைச் செய்ய அவர்களுக்கு ஊக்கமளிக்கிறது.
தாதிமை கல்வியாளர் மே சிங், அவரது தாயார் லியோவ் யான் செங்கிற்கு ஊக்கம் அளிக்கும் பராமரிப்பை வழங்குவதில் அவருக்கிருந்த நம்பிக்கை குறித்து அவர் பகிர்வதைக் கேளுங்கள். அவரது தாய்க்குமுதுமைக்கால மறதி நோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகும், மே தனது தாயின் அன்றாடப் பணிகள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளாமல், எளிதாக செய்யக்கூடிய பணிகளை அவரே செய்ய அனுமதித்தார். அவர் சமையிலில் உள்ள சிறு சிறு வேலைகளுக்கு அவரது அம்மாவின் உதவியைப் பெற்று சமையலில் அவரைத் தொடர்ந்து ஈடுபடுத்துகிறார். மே தனது தொழில்முறை மற்றும் தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து பேசுகையில், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் தனது தாயையும் மற்றவர்களையும் பாராட்டுவது எவ்வளவு இன்றியமையாதது என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், மேலும் இது அவர்கள் தங்களை மதிப்புமிக்கவராகக் கருதும் எண்ணத்தை மேம்படுத்தும்.
ஆதாரம்: LIEN அறநிறுவனம், கூ டெக் புவாட் மருத்துவமனை, டிமென்ஷியா சிங்கப்பூர் வழங்கும் எங்களை மறந்துவிடாதீர்கள் முனைப்புத் திட்டம் (ForgetUsNot Initiative)
உண்ணுவதற்கு தேவையான உபகரணங்களின் நுட்பங்கள்
பராமரிப்பாளர்களான டேனியல் மற்றும் டேனி, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் தங்கள் பெற்றோர் சுயாதீனமாகச் சாப்பிடவும் குடிக்கவும் உதவும் வகையில், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் குச்சிகள் போன்ற உண்ணுவதற்கு தேவையான உபகரணங்களை எவ்வாறு மாற்றியமைத்துள்ளார்கள் என்பதைப் பாருங்கள்!
அப்பா சொந்தமாக சாப்பிட உதவுதல் | டேனியல் லிம்
ஆதாரம்: LIEN அறநிறுவனம், கூ டெக் புவாட் மருத்துவமனை, டிமென்ஷியா சிங்கப்பூர் வழங்கும் எங்களை மறந்துவிடாதீர்கள் முனைப்புத் திட்டம் (ForgetUsNot Initiative)
எனது முதுமைக்கால மறதி நோய் குவளையின் நுட்பம் | டேனி ராவென் டான்
ஆதாரம்: LIEN அறநிறுவனம், கூ டெக் புவாட் மருத்துவமனை, டிமென்ஷியா சிங்கப்பூர் வழங்கும் எங்களை மறந்துவிடாதீர்கள் முனைப்புத் திட்டம் (ForgetUsNot Initiative)
பயிற்சி வளமைகள்
பராமரிப்பின் அடிப்படைகள்
இந்தப் பயிற்சி வகுப்பானது உங்கள் அன்புக்குரியவரின் நடமாட்ட நிலைமையின் அடிப்படையில் அவரது அன்றாடத் தேவைகளைப் பராமரிப்பதற்குத் தேவையான அத்தியாவசியத் திறன்களைப் பற்றி விளக்குகிறது (நடமாட்ட நிலைமைகளில் பின்வருவன அடங்கும்: நடக்க இயலும், சக்கர நாற்காலியுடனான நடமாட்டம் அல்லது படுக்கையிலேயே இருப்பது). இந்த அத்தியாவசிய திறன்களில் சில:
- முக்கிய உயிராதார அறிகுறிகளை (வெப்பநிலை, இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு) கண்காணிப்பது மற்றும் அவசரநிலைகளை நிர்வகிப்பது
- தொற்றைக் கட்டுப்படுத்துவது (கை சுகாதாரம் மற்றும் எளிய காயம் பராமரிப்பு உட்பட) மற்றும் அடிப்படை தோல் பராமரிப்பை மேற்கொள்வது
- வாய்வழி மருந்துகளை வழங்குவது (மருந்து லேபிள்களைப் படிப்பது உட்பட)
- ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து
இந்த அடிப்படைத் திறன்களுக்கு மேலதிகமாக, உங்கள் அன்பிற்குரியவரின் அன்றாட நடவடிக்கைகளுக்கும் எப்படி ஆதரவளிப்பது என்பதைக் கற்றுக்கொள்வீர்கள், இதில் முக்கியமாக பின்வருவன அடங்கும்:
- சாப்பிடும்போது உதவி செய்வது
- கழிப்பறைக்குச் சென்றுவருவது
- தனிப்பட்ட சுகாதாரம்
- நடமாடுவது
உங்கள் அன்பிற்குரியவருக்கு கூடுதல் சிறப்பு கவனிப்பு தேவைப்பட்டால், உங்கள் பயிற்சி வகுப்பை கூடுதல் தேர்வுகள் மூலம் “நிரப்பிக்” செய்யலாம், இதில் பின்வருவன அடங்கும்:
- படுக்கை குளியல்
- இடம் மாற்றுவது , நிலைப்படுத்தம் மற்றும் நடமாட்டம் (சக்கர நாற்காலி)
- சிறுநீர் வடிகுழாய் பராமரிப்பு
- ஸ்டோமா பராமரிப்பு
உங்கள் அன்பிற்குரியவருக்கு கூடுதல் சிறப்பு கவனிப்பு தேவைப்பட்டால், உங்கள் பயிற்சி வகுப்பை கூடுதல் தேர்வுகள் மூலம் “நிரப்பிக்” செய்யலாம், இதில் பின்வருவன அடங்கும்:
.
Tell us how we can improve?
தொடர்புடைய வளமை
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்தல் – ஒரு அன்பான மகன் தனது தந்தையின் முதுமைக்கால மறதி நோய்க்கு ஏற்ற வீட்டை உருவாக்கிய விதம் ஆதாரம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆதரவுமிக்க குடும்பத்தை வழங்குவதன் மூலமும், முதுமைக்கால மறதி நோய்க்கு ஏற்ற இல்லத்தை உருவாக்குவதன் மூலமும் முதுமைக்கால மறதி நோயுடன் எவ்வாறு நலமாய் வாழ்வது என்பது பற்றி டேனியல் அவர்களும் பீட்டர் லிம் அவர்களும் விவாதிக்கின்றனர். டேனியல் தனது தந்தைக்கு, அவர் தனது எளிய தினசரி பணிகளைச் செய்ய அதிகாரம் அளிப்பதன் மூலம் அவரது அன்றாட நடவடிக்கைகளில் எவ்வாறு ஆதரிப்பது என்பது குறித்த உதவிக்குறிப்புகளையும் வழங்குகிறார்.
- Grey, H. (n.d.). A complete guide to activities of daily living (ADL) in Singapore. https://www.homage.sg/resources/activities-of-daily-living-adl/
- Changi General Hospital. (2019, April 12). Dementia and activities of daily living (ADL). https://www.healthhub.sg/a-z/diseases-and-conditions/518/managing-activities-of-daily-livings-CGH