Help Us Improve
7 நிமிட வாசிப்பு

முதுமைக்கால மறதி நோயின் பல்வேறு கட்டங்களில் தகவல்தொடர்பு எவ்வாறு பாதிக்கப்படலாம்

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒரு நபரின் நிலை அடுத்தடுத்த கட்டத்திற்குச் செல்கையில், ​​​​மற்றவர்கள் அவர்களிடம்  உரையாடுவதற்கான விதமும் தகவல் பரிமாறிக்கொள்ளும் விதமும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்பவும், ஒவ்வொரு உரையாடலும் அல்லது கருத்துப் பரிமாற்றமும் அதிகம் பயனளிக்கும் விதமாகவும் மாற வேண்டும்.

ஆரம்ப நிலை

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்

⇒ சில வார்த்தைகளைத் தெளிவாகப் பேசுவதில் சிரமத்துடன் அர்த்தமுள்ள உரையாடல்களைப் பின்பற்றவும் தொடரவும் முடியும்

⇒ அறிவுறுத்தல்கள் வழங்குவதில்/பெறுவதிலும் கடினமான யோசனைகளைப் புரிந்துகொள்வதிலும் சில சிரமங்களை வெளிப்படுத்தக்கூடும்

⇒ தகவலை அடிக்கடி உறுதிப்படுத்திக் கொள்ள கேள்விகள் கேட்கக்கூடும் அல்லது மீண்டும் மீண்டும் அதே விஷயங்களை உரையாடக்கூடும்

⇒ நீண்ட கால சமூக அமைப்புகளில் செயல்படுவதில் சிரமத்துடன் சுருக்கமான சமூகத் தகவல் பரிமாற்றங்கள் தேவைப்படும் இடங்களில் தொடர்புகொள்ள முடியும்

⇒ Difficulty with following lengthy conversations

⇒ சொல்லப்படும் விஷயங்களைப் பின்பற்றக்கூடும், ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு அதை மறந்துவிடக்கூடும்

⇒ நகைச்சுவைகள் மற்றும் கிண்டலான கருத்துக்கள் குழப்பமானதாக இருக்கலாம், மேலும் சூழல் உணர்ச்சிகரமான உணர்வுகளைத் தூண்டக்கூடும்

⇒ அதிகப்படியான தூண்டுதலால் உணர்ச்சிவசப்படக்கூடும்

மிதமான நிலை

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்

⇒ எளிமையான ஒரு படிநிலை அறிவுறுத்தல்களைப் பின்பற்றக்கூடும்

⇒ உரையாடல்களைப் பின்பற்றுவதில் அல்லது தொடர்வதில் அதிக சிரமத்தை வெளிப்படுத்தத் தொடங்கக்கூடும்

⇒ எழுதப்பட்டிருக்கும் தகவல்களை ஒவ்வொரு சொல்லாக புரிந்துகொள்ளக்கூடும்

⇒ உரையாடல்களில் சொற்களின் பயன்பாட்டைக் குறைக்கக்கூடும்

⇒ திரும்பத் திரும்ப கேள்விகள் கேட்கக்கூடும்

⇒ தகவல் பரிமாற்றம் அதிகத் தகவல்களை வேண்டுவதாக இருந்தால், தகவல் பரிமாற்றத்திலிருந்து விலகக்கூடும்

⇒ ஆளுமை மற்றும் நடத்தை மாற்றங்களை அனுபவிக்கக்கூடும்; எ.கா. அர்த்தமுள்ள உரையாடல்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய சந்தேகம் மற்றும் பிரமைகள்

மேம்பட்ட நிலை

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்

⇒ அர்த்தமுள்ள வாசகங்களைத் தெளிவாகப் பேச முடியாமல் போகக்கூடும்

⇒ உரையாடலில் ஒரு நபர் பேசிய விஷயங்களை மீண்டும் சொல்ல ஆரம்பிக்கக்கூடும்

⇒ சொற்களை நினைவுபடுத்தும் திறன் குறையக்கூடும் என்பதால், வாய்மொழித் தகவல்தொடர்புகளில் சிரமப்படக்கூடும்

⇒ அவரிடம் பேசப்படும் எளிய வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியாமல் போகக்கூடும்

⇒ வார்த்தைகள் மற்றும் ஒலிகளை இணைத்து அல்லது கோர்த்து தனது கருத்தை வாய்மொழியாக வெளிப்படுத்தக்கூடும்

⇒ உரையாடல்களைத் துண்டிக்கக்கூடும்

⇒ அவரை நோக்கிப் பேசப்படும் உரையாடல்கள் பற்றி தெரியாமல் போகக்கூடும், மற்றவர்களுடன் பேசவே முடியாமல் போகக்கூடும்

⇒ பிறர் அவரிடம் தொடர்புகொள்ளும் விஷயங்களைப் புரிந்துகொள்ள காட்சிக் குறிப்புகள், சூழல், குரல் தொனி மற்றும் தொடுதல் போன்றவற்றை அதிகம் நம்பியிருக்கக்கூடும்; சொற்கள் அல்லாத தொடர்பு முறைகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது

⇒ அவரின் சொந்த நாட்டில் பயன்படுத்தக்கூடிய பழக்கமான மொழியில் அல்லது அவரின் தாய்மொழியில் பேச ஆரம்பிக்கக்கூடும்

பின்வருபவற்றைத் தழுவியுள்ளது: கூ டெக் புவாட் மருத்துவமனை மருத்துவமனையின் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் தகவல்தொடர்புத் திறன்கள் மற்றும் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் (AIC) முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்தல்: பராமரிப்பாளர்களுக்கான வளமைத் தொகுப்பு (பராமரிப்பு வழங்குதல்)

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது

பராமரிப்பாளர்களுக்கு

CARE அணுகுமுறை உடன் தகவல் பரிமாற்றம் செய்தல்

ஆதாரம்: முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சிங்கப்பூர் முனைப்புத்திட்டம்

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுடன் பேசுதல்

இந்த வீடியோ முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுடன் பராமரிப்பாளர்கள் எவ்வாறு பேசலாம் என்பது குறித்த சில ஆலோசனைகளை வழங்குகிறது.

ஆதாரம்: LIEN அறநிறுவனத்தின் எங்களை மறந்துவிடாதீர் (ForgetUsNot) திட்டம்

பொது இடங்களில் பராமரிப்பளித்தல்

ஒரு பெண்ணும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் அவரது தாயும் பொதுமக்களுடன் உரையாடிய கடந்த கால அனுபவத்தைப் பகிரும் பராமரிப்பாளர்.

ஆதாரம்: LIEN அறநிறுவனத்தின் எங்களை மறந்துவிடாதீர் (ForgetUsNot) திட்டம்

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான உதவிக்குறிப்புகள்

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒரு நபரின் நிலை அடுத்தடுத்த கட்டத்திற்குச் செல்கையில், ​​​​மற்றவர்கள் அவர்களிடம் உரையாடும் விதமும் தகவல் பரிமாறிக்கொள்ளும் விதமும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்பவும், ஒவ்வொரு உரையாடலும் அல்லது கருத்துப் பரிமாற்றமும் அதிகம் பயனளிக்கும் விதமாகவும் மாற வேண்டும்.

1. முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் சமீபத்தில் என்ன செய்தார்கள் என்று கேட்டு அவர்களின் நினைவுத்திறனைச் சோதிக்கக்கூடாதது

நோயின் காரணமாக, அவர்களால் பல விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள இயலாது. “உங்களுக்கு ஞாபகம் இல்லையா?” என்று கேட்டு அவர்களை விரக்திக்கு ஆளாக்காதீர்கள். அவர்கள் என்ன செய்தார்கள் மற்றும் பின்னர் செய்யப் போகிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக, நாட்குறிப்புகள், கடிகாரங்கள் அல்லது காலெண்டர்கள் போன்ற நினைவுத்திறனுக்கான உதவிக் கருவிகளைப் பயன்படுத்துங்கள்.

2. செயல்பாடுகளையும் தகவல்தொடர்பையும் எளிமையாக்குங்கள்.

ஒரு செயல்பாட்டை எளிய, படிப்படியான பணிகளாகப் பிரித்திடுங்கள். அந்த நபரால் ஒரு நேரத்திற்கு ஒரு படிநிலையில் கவனம் செலுத்தவும் செயல்பாட்டை முடிக்கவும் முடியும். வாக்கியங்களை சிறியதாகவும் எளிமையாகவும் பயன்படுத்துங்கள்.

3. ஆறுதல் வார்த்தைகளையும் பாராட்டுகளையும் வழங்குங்கள்

இது நபரின் தன்மதிப்பீட்டை அதிகரிக்கும் மற்றும் நேர்மறையான நடத்தையை வலுப்படுத்தும்.

4. முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபருடன் வாக்குவாதம் செய்யாதீர்.

அவர்கள் பார்ப்பது, கேட்பது அல்லது நினைவுபடுத்துவதும் நீங்கள் பார்த்தது, கேட்டது அல்லது அறிந்ததும் ஒரே மாதிரியாக இருக்காது.

5. பயனளிக்காத நடத்தையைத் தூண்டுபவற்றை அடையாளம் கண்டு, அகற்றுங்கள்.

உதாரணமாக, ஒரு நபர் ஒவ்வொரு முறையும் வாசலில் உள்ள காலணிகளைப் பார்க்கும்போது வீட்டை விட்டு வெளியே செல்ல விரும்பினால், ​​காலணிகளை அவரது பார்வைக்குப் படாத இடத்தில் வைக்கவும்.

6.நடத்தை மாற்றங்களுக்கான அடிப்படை காரணங்களை அடையாளம் காணுங்கள்.

அவர்களால் வெளிப்படுத்த முடியாத அடிப்படைத் தேவைகள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய முயற்சியுங்கள். உதாரணமாக, அவர்கள் இந்த நடத்தை மாற்றங்களை அவர்கள் மிகவும் சோர்வாகவோ அயர்வாகவோ உணரும்போது வெளிப்படுத்தலாம். அவர்களுக்குப் பருக ஏதேனும் தேவைப்படலாம் அல்லது கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். அவர்கள் அசௌகரியமாக இருப்பதைப் போல தென்பட்டால், அது மருத்துவப் பிரச்சனையாக இருக்கலாம்.

7. சமூகச் செயல்பாடுகளைத் தொடருங்கள்.

முதுமைக்கால மறதி நோயுள்ள பெரும்பாலான நபர்கள், அவர்களின் நிலையின் தீவிரத்தைப் பொருட்படுத்தாமல் உடல் அல்லது சமூக ரீதியான செயல்பாடுகளால் பயனடைவார்கள். சமூகச் செயல்பாடுகள் அவர்கள் மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பதை உறுதிசெய்து, நலமுடன் இருக்கும் உணர்வை அளித்திடும். முதுமைக்கால மறதி நோயின் லேசானது முதல் மிதமானது வரையிலான நிலைகளில் இருப்பவர்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சிறிய அளவிலான ஒன்றுகூடல்களில் இருப்பதில் மகிழ்ச்சி அடைவார்கள், ஏனெனில் அவர்கள் இன்னமும் உரையாட முடியும்.

சீட்டாட்டம் மற்றும் இதர பொழுதுபோக்கு செயல்பாடுகள் அவர்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்கும். இருப்பினும், முதுமைக்கால மறதி நோயின் மிகவும் மேம்பட்ட கட்டத்தில் உள்ளவர்கள், அவர்களுக்கு அதிக காட்சி மற்றும் வாய்மொழிக் குறிப்புகள் தேவைப்படுவதால், ஒருவருக்கொருவர் என்ற முறையிலேயே தொடர்புகொள்ள விரும்புவார்கள் –  Recreational activities 

8. பாதுகாப்பான, வெளிப்புற செயல்பாடுகளை அனுபவித்து மகிழுங்கள்.

முதுமைக்கால மறதி நோய் உள்ளவர் படிகள், படிக்கட்டுகள், சாலைகள் மற்றும் நெரிசலான வணிக வளாகங்கள் போன்ற பொது இடங்களில் – குறிப்பாக அவருக்கு கீல்வாதம், இதய பிரச்சனைகள் அல்லது பக்கவாதம் இருந்தால், அவர் கீழே விழுந்து விடாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

நடைபாதைகள் மற்றும் ஓய்வெடுக்க அமைக்கப்பட்டிருக்கும் இருக்கைகள் கூட இருக்கும் பொது இடங்கள் அவர்கள் பார்வையிட ஏற்ற இடமாக இருக்கும். அவர்கள் பங்கேற்கக்கூடிய சில செயல்பாடுகளில் அக்கம் பக்கத்திலுள்ள பூங்காக்கள் மற்றும் சமூகத் தோட்டங்கள், சமூகக் குழுவுடனான தாய் சி/கிகோங் அல்லது டிமென்ஷியா சிங்கப்பூர் (முன்னர் ஆல்சைமர் நோய் சங்கம் என அழைக்கப்பட்டது) ஏற்பாடு செய்யும் மெமரிஸ் கஃபே அல்லது ஃபேமிலி ஆஃப் விஸ்டம் போன்றவை அடங்கும்.

பின்வருபவற்றைத் தழுவியுள்ளது:  HealthHub.sg

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுடன் உரையாடுவதற்கான உதவிக்குறிப்புகள்

நேருக்கு நேரான தகவல் பரிமாற்றம்

முகத்திற்ககு எதிரே சென்று நபரை அணுகுங்கள்.

நபரின் கவனத்தை ஈர்த்திடுங்கள்.

கண்ணைப் பார்த்து உரையாடுங்கள்.

குரலின் தொனி மற்றும் ஒலியளவு

மெதுவாகவும் தெளிவாகவும் பேசுங்கள். 

இதமான, அமைதியான மற்றும் ஆறுதலளிக்கும் குரல் தொனியைப் பயன்படுத்துங்கள்.

மனநிலையை லேசாக்க நேர்மறையான மற்றும் நல்ல இயல்புடைய நகைச்சுவையைப் பயன்படுத்துங்கள்.

குரலின் உச்சத்தில் மற்றும் உரத்தக் குரலில் பேசுவதைத் தவிர்த்திடுங்கள்.

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபருக்கு காது கேளாமை இருந்தால், செவிப்புலன் கருவிகளைப் பயன்படுத்த அவர்களை ஊக்குவிப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள், மேலும் உரையாடலை எளிதாக்குவதற்கு படங்கள்/வரைபடங்களைப் பயன்படுத்துங்கள்.

உரையாடல் தலைப்புகள் மற்றும் செயல்பாடுகள்

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒருவருடன் நீங்கள் உரையாடி  கொண்டிருந்தால், நீங்கள் என்ன செய்யலாம் என்பதற்கான சில பரிந்துரைகள் இதோ இங்கே காண்க:

பகிர்ந்துகொண்ட அனுபவங்களைப் பற்றி பேசுங்கள்: ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்லது நினைவு பற்றிய உங்கள் அனுபவத்தை நீங்கள் விவரிக்கலாம். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரின் நினைவுகளைத் தூண்டலாம்.

ஒன்றாக சேர்ந்து புகைப்படங்களைப் பார்க்கலாம்: உரையாடலைத் தொடர புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் உள்ள புகைப்படங்களைப் பார்க்கலாம்.

நினைவில் கொள்ளக்கூடிய பொருட்களை ஒன்றாகச் சேர்ந்துப் பார்க்கலாம்: முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒரு நபருக்கு குறிப்பாக விலைமதிப்பற்ற பொருட்கள் எதுவும் இருந்தால், நீங்கள்

அவற்றைப் பார்த்து அவற்றைப் பற்றி பேசலாம்.

ஒன்றாகச் சேர்ந்துப் படியுங்கள்: அந்த நபருக்குப் படிக்கத் தெரிந்தால், அவர்களுக்குப் பிடித்த புத்தகத்தைப் படிக்க விரும்புகிறீர்களா என்று அவர்களிடம் கேட்கலாம். நீங்கள் அவர்களின் புத்தகங்களைப் படித்து, அவற்றைப் பற்றிய உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

ஒன்றாக சேர்ந்து இசைக் கேளுங்கள்: பிரபலமான இசை அல்லது அவர்களது வாழ்க்கையின் முந்தைய காலத்தின் இசையை நீங்கள் இயக்கலாம், மேலும் இந்த இசையைப் பற்றி அவர்களுடன் பேசலாம், இசைக்கலைஞர்களின் பெயர்கள் மற்றும் இசை நுணுக்கங்களைக் குறிப்பிடலாம். நீங்கள் ஒன்றாக சேர்ந்துப் பாடலாம் அல்லது இசைக்கலாம்.

வாக்கியங்களின் சொற்றொடர்

எளிமையான, சிறிய அளவிலான மற்றும் நேரடியான வாக்கியங்களைப் பயன்படுத்துங்கள்.

மிகவும் சிந்திக்க வேண்டியிருக்கும் நீண்ட உரையாடல்களைத் தவிர்த்திடுங்கள். பணிகளை, தெளிவான, படிப்படியான வழிமுறைகளாகப் பிரித்திடுங்கள்.

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் புரிந்துகொள்ளக்கூடிய எளிய வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.

பல கேள்விகள் அவர்களை உணர்ச்சிவசப்பட வைக்கும்என்பதால் ஒரு நேரத்திற்கு ஒரு கேள்வியைக் கேளுங்கள்.

“ஆம்” அல்லது “இல்லை” என்று பதிலளிக்கக்கூடிய கேள்விகளைக் கேளுங்கள்.

“உங்களுக்கு காபி வேண்டுமா?” என்று கேளுங்கள்.

“நீங்கள் என்ன குடிக்க விரும்புகிறீர்கள்?” என்று கேட்பதைத் தவிர்த்திடுங்கள்.

நபருக்குத் தேர்வு செய்ய விருப்பங்களை வழங்கும்போது, ​​தேர்வுகளின் எண்ணிக்கையை இரண்டாகக் கட்டுப்படுத்திடுங்கள். 

பொறுமைக் காத்திடுங்கள்

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் பதிலளிப்பதற்கு போதுமான நேரத்தை வழங்குங்கள். ஒரு வாக்கியத்தை முடிக்க உதவி கேட்கும் வரை, நீங்கள் குறுக்கிடவோ வாக்கியங்களை நிறைவு செய்யவோ வேண்டாம். 

அவர்கள் பதிலளிக்கவில்லை என்றால், நீங்கள் சொன்னதை மறுபடியும் மென்மையாகவும், அமைதியாகவும், ஆறுதலளிக்கும் விதமாகவும் சொல்லுங்கள். 

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் என்ன உணர்கிறார், நினைக்கிறார் அல்லது அவருக்கு என்ன தேவைப்படுகிறது என்பதைக் கேட்க நேரம் ஒதுக்குங்கள். 

ஆதரவாக இருங்கள்

ஆறுதலையும் உறுதியையும் அளிப்பது அவர்களின் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள அவர்களை ஊக்குவிக்கும்

சில சமயங்களில், அவர்கள் சொல்வதை விட வெளிப்படுத்தப்படும் உணர்ச்சிகள் முக்கியமானதாக இருக்கும். வார்த்தைகள் அல்லது ஒலிகளுக்குப் பின்னால் நோக்கங்கள் எதுவும் உள்ளனவா எனத் தேடுங்கள். அவர்களின் உடல் பாவனையைக் கவனியுங்கள். 

என்ன செய்வது, சொல்வது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால் பரவாயில்லை; முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபருக்கு உங்கள் இருப்பே ஆதரவின் மிக முக்கியமான அறிகுறியாக இருக்கும். 

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்துங்கள்

அவர்கள் இல்லாதது போல் கீழே பார்த்துப் பேசுவதையோ அல்லது எங்கோ பார்த்துப் பேசுவதையோ தவிர்த்திடுங்கள்.

முடிந்தவரை கண்ணைப் பார்த்துப் பேசுங்கள், அவர்களின் வெளிப்பாடுகள் மற்றும் வார்த்தைகளை நீங்கள் புரிந்துகொண்டதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். 

மற்றவர்களுடன் உரையாடும்போது அவர்களை விலக்கி வைக்காதீர்கள்.

பின்வருபவற்றைத் தழுவியுள்ளது: கூ டெக் புவாட் மருத்துவமனை மருத்துவமனையின் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் தகவல்தொடர்புத் திறன்கள் மற்றும் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் (AIC) முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்தல்: பராமரிப்பாளர்களுக்கான வளமைத் தொகுப்பு (பராமரிப்பு வழங்குதல்) 

முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்க்கையில் இறுதிக்கட்டங்களில் வாழும் நபர்களுடன் தொடர்புகொள்ளுதல்

தகவல் பரிமாற்றத்திற்கான உதவிக்குறிப்புகள்

⇒ முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபருடன் முடிந்தவரை கண்ணைப் பார்த்துப் பேசுங்கள்.

⇒ நீங்கள் சொல்வதை அவர்களால் பின்பற்ற முடியாது என்று நீங்கள் நினைக்காவிட்டாலும், அவர்களுக்கு விருப்பமான விஷயங்களைப் பற்றி பேசுங்கள் அல்லது கடந்த கால விஷயங்களை நினைவுபடுத்துங்கள். அவர்கள் உங்கள் குரலின் தொனிக்கு பதிலளிக்கலாம் மற்றும் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும் அவர்கள் உங்களுடன் ஒரு விதமான தொடர்பு இருப்பதை உணரலாம். 

⇒ நீங்கள் அவர்களுக்காக இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உறுதியளிக்க, அவர்களது கைகளைப் பற்றிக்கொள்வது அல்லது கட்டிப்பிடித்துக் கொள்வது போன்ற பொருத்தமான உடல் தொடர்புகளைப் பயன்படுத்துங்கள்.

⇒ உங்கள் நேரத்தை ஒதுக்கி, சொற்கள் அல்லாத சைகைகள்  எதனையும் பயன்படுத்துகிறார்களா எனப் பாருங்கள்.

⇒ சைகைகள், உடல் பாவனை, முகபாவனை மற்றும் தொடுதல் போன்ற சொற்கள் அல்லாத தகவல்தொடர்புகள் தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க உதவும்.

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பார்க்கச் செல்லுங்கள்

முதுமைக்கால மறதி நோயைப் புரிந்துகொள்ளுங்கள்

முதுமைக்கால மறதி நோய் எப்படி ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது உங்கள் அன்பிற்குரியவர் இந்நோயை எப்படி கடந்து வருகிறார் என்பதை நன்கு புரிந்துகொள்ள அனுமதிக்கும். உங்கள் அன்பிற்குரியவர் அனுபவிக்கும் சில நடத்தைகள் அல்லது உணர்வுகளைப் புரிந்துகொள்ள இது உதவியாக இருக்கும் – how dementia develops.  

எப்போதும் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்

உங்கள் பெயரையும் அவர்களுடன் நீங்கள் எவ்வாறு இணைந்திருக்கிறீர்கள் என்பதையும் அறிமுகப்படுத்தி உங்கள் அன்பிற்குரியவரிடம் பேச ஆரம்பியுங்கள். சில சமயங்களில் உங்கள் அன்பிற்குரியவர் உங்களை மறந்திருக்கலாம், மேலும் நீங்கள் யார் என்பதை நினைவுபடுத்த முயற்சிக்கும்போது பதட்டமடையலாம்.

வருகையை வேடிக்கையானதாக ஆக்கிடுங்கள்!

பழைய புகைப்படம், முன்பு ஒன்றாக பயணம் செய்தபோது பகிர்ந்து கொண்ட நினைவுப்பொருள் அல்லது கடந்த நாட்களில் அவர் பயன்படுத்திய பொருள் போன்ற எதையாவது நீங்கள் எடுத்துச் செல்வதன் மூலம் வருகையை வேடிக்கையானதாக ஆக்குங்கள். பத்திரிக்கை அல்லது செய்தித்தாள் படிப்பது உங்கள் அன்பிற்குரியவரையும் ஈடுபடுத்த உதவும் மற்றும் நீங்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஏதாவது செய்யும் வாய்ப்பை வழங்கும். உங்கள் அன்பிற்குரியவரின் மனநிலையை மேம்படுத்த இசையைப் பயன்படுத்துங்கள். இசையானது, அதை CDயில் இருந்தோ அல்லது கருவி மூலமோ இசைத்தாலும், அது ஆசுவாசப்படுத்தும் அல்லது வேடிக்கையான சூழ்நிலையை உருவாக்கிவிடும். இது உங்கள் அன்பிற்குரியவர் கடந்த கால நினைவுகளை நினைவுகூர உதவும், அல்லது அவருக்கு நேரத்தை இன்பகரமானதாக ஆக்கும்!

உங்கள் அன்பிற்குரியவரின் உணர்வுகளை அங்கீகரியுங்கள்

திறந்த மனதுடன் இலகுவாக இருங்கள்: நீங்கள் திட்டமிட்டபடி உங்கள் வருகை அமையாமல் போகலாம், ஆனாலும் பரவாயில்லை. உங்கள் அன்பிற்குரியவருடனான உங்கள் வருகை குறித்து திறந்த மனதுடன் இருங்கள், உங்கள் அன்பிற்குரியவரின் ஆற்றல் நிலைகள், மனநிலை போன்றவற்றுக்கு ஏற்றவாறு உங்களை நீங்கள் மாற்றியமைத்துக்கொள்ளுங்கள். முதுமைக்கால மறதி நோய் உங்கள் அன்பிற்குரியவருக்கு கவலை, கோபம் மற்றும் கிளர்ச்சி போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும். அவர்களுக்கு ஆறுதல் வழங்க உங்கள் அன்பிற்குரியவர் எப்படி உணருகிறார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

உங்கள் தகவல்தொடர்பு பாணியை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்

பேசுவதைத் தவிர மற்ற தகவல்தொடர்பு முறைகள் குறித்து ஆராயுங்கள். உங்கள் அன்பிற்குரியவரின் உரையாடலைப் பாராட்ட அல்லது அதற்கு மாற்றீடாக அவரது கையைப் பற்றிக்கொள்ளுங்கள், அவரைக் கட்டி அணைத்திடுங்கள், அவரது தோள்பட்டையில் வருடிக் கொடுங்கள் அல்லது அவரது கையை மசாஜ் செய்யுங்கள்.

நீண்ட பதில்களைக் கொண்ட கேள்விகளுக்குப் பதிலாக ஒரு வார்த்தை பதில்களைக் கொண்ட கேள்விகளைக் கேட்பதன் மூலம் தெளிவாகத் தொடர்பு கொள்ளுங்கள். அவர் சொல்வதைப் பொறுமையாகக் கேளுங்கள், அவர் பதிலளிப்பதற்கு அவருக்கு நேரம் கொடுங்கள். முதுமைக்கால மறதி நோயால், உங்கள் அன்பிற்குரியவரின் சுய வெளிப்பாட்டுத் திறன் பாதிக்கப்படலாம். அவருடைய வாக்கியத்தை நீங்கள் நிறைவு செய்யாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு மாறாக, அவர் பேசும்போது பொறுமையாகக் கேளுங்கள், சரியான வார்த்தைகளைத் தேடுங்கள்.

தொடர்பில் இருங்கள்

பெரும்பாலும், நினைவுத்திறன் இழப்பினால், அன்பிற்குரியவர்கள் மற்றும் நண்பர்களுடனான தகவல் பரிமாற்றம் சிறிதளவு நோக்கத்தைக் கொண்டிருக்கலாம் அல்லது எந்த நோக்கத்தையும் கொண்டிராமல் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும், உங்கள் அன்பிற்குரியவருக்கு உங்கள் நேரத்தையும் இருப்பையும் வழங்குவது அவர்களின் உணர்ச்சி ரீதியான நல்வாழ்வைத் தக்கவைக்க உதவுகிறது! அமைதியாக இருங்கள், அது ஒன்றும் ஒரு மோசமான விஷயம் அல்ல. நீங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதையும் நீங்கள் செலவிடும் நேரத்தையும் அனுபவித்து மகிழுங்கள்.

பொது இடங்களில் தொலைந்து போவது போல் தோன்றும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒருவருடன் பொதுமக்கள் எவ்வாறு தொடர்பு கொள்ளக்கூடாது என்பதற்கான எடுத்துக்காட்டுகள் பின்வரும் குறும்படத்தில் இடம்பெற்றுள்ளது.

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்ளக் கூடாது

பொது இடங்களில் தொலைந்து போவது போல் தோன்றும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒருவருடன் பொதுமக்கள் எவ்வாறு தொடர்பு கொள்ளக்கூடாது என்பதற்கான எடுத்துக்காட்டுகள் பின்வரும் குறும்படத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆதாரம்: சுகாதார மேம்பாட்டு வாரியம்

பின்வரும் காணொளியில் முதுமைக்கால மறதி நோய் இருப்பது போல் தோன்றும் நபருடன் பொது மக்கள் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதையும் அவர் இன்னொரு அமைப்புகளில் இருக்கும்போது தொலைந்து போவதையும் காட்டும் எதிர்மறை உதாரணங்கள் இடம்பெற்றுள்ளன. முதுமைக்கால மறதி நோய் வளர்ச்சியின் அடிப்படைகளை அங்கீகரிப்பதன் மூலம் அதே சூழ்நிலைகளில் உள்ள பொது மக்கள் எவ்வாறு உதவலாம் என்பதற்கான மாற்று உதாரணங்களையும் இது வழங்குகிறது.

ஆதாரம்: முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சிங்கப்பூர்

Was this article helpful?

Yes No
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest
  1. Khoo Teck Puat Hospital. (2010). Communication Skills with Persons with Dementia. Retrieved November 21, 2019.
  2. Health Promotion Board (n.d.). How to Communicate With a Loved One With Dementia. HealthHub.sg. Retrieved May 3, 2021, from https://www.healthhub.sg/live-healthy/994/how-to-communicate-with-a-loved-one-with-dementia
  3. Agency for Integrated Care. (2018). Living with Dementia – A Resource Kit for Caregivers, Providing Care. https://www.aic.sg/resources/Documents/Brochures/Mental%20Health/4%20Books/Book%203%20-%20PROVIDING%20CARE.pdf
  4. Agency for Integrated Care. (2018). Living with Dementia – A Resource Kit for Caregivers, Planning Care. https://www.aic.sg/resources/Documents/Brochures/Mental%20Health/4%20Books/Book%202%20-%20PLANNING%20CARE.pdf

Was this article helpful?

Yes No
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest

Downloadable Resources

The following material contains bite-sized information about dementia. To download or print it, simply click the image. You may also select the language of the material by clicking the “Select Language” button.

Downloadable Resources

The following material contains bite-sized information about dementia. To download or print it, simply click the image. You may also select the language of the material by clicking the “Select Language” button.

Related Articles

Sed tristique blandit facilisis eleifend elit lobortis eros, massa aenean. Suspendisse aliquam eget tortor viverra nulla duis.
Skip to content