பொதுப் போக்குவரத்து என்பது சிங்கப்பூரில் உள்ள மக்களின் பொதுவான போக்குவரத்து முறையாகும். போக்குவரத்தை எளிதாக அணுகும் வசதி முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் தங்கள் நண்பர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகத்துடன் தொடர்பில் இருக்க உதவுகிறது. மருத்துவமனை போன்ற சுகாதாரச் சேவை இடங்களுக்கு செல்வதற்கான வசதியையும் இது வழங்குகிறது.
முதுமைக்கால மறதி நோய்நிலை அதிகரிக்கையில், சிக்கலான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பைப் பயன்படுத்துவது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு மிகவும் சிக்கலானதாக ஆகிவிடக்கூடும். இந்தச் சவாலை சமாளிப்பதற்கான ஒரு வழி, உங்கள் அன்பிற்குரியவருக்கென சொந்த போக்குவரத்தை ஏற்பாடு செய்வதாகும், அதே சமயம் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களை அவர்களால் முடிந்தவரை பிறரைச் சாராமல் வாழ வசதி அளிப்பதும் முக்கியமாகும். எனவே பராமரிப்பாளர்கள், தங்கள் சமூகத்தில் கிடைக்கப்பெறும் போக்குவரத்து குறித்தும், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் தங்கள் அன்பிற்குரியவர்களுக்கு பொதுப் போக்குவரத்தில் பயணத்தை பாதுகாப்பான அனுபவமாக மாற்றுவதற்கான வழிகள் குறித்தும் அறிந்திருப்பது அவசியம்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
முதுமைக்கால மறதி நோய், உங்கள் அன்புக்குரியவர் போக்குவரத்தை பயன்படுத்துவது சவாலானதாக இருக்கலாம். சில காரணங்கள் பின்வருமாறு:
- போக்குவரத்து வழிகளை நினைவில் வைத்துக் கொள்ள சிரமப்படுவது
- நேரம் மற்றும் இடம் பற்றிய குழப்பங்கள்
- பயணத்தின் போது பொருட்களை (எ.கா. ezlink அட்டை, பை) எங்கேனும் வைத்து விடுவது
- முடிவெடுப்பதில் சிரமம் , இதனால் போக்குவரத்து குறித்த திட்டமிடல் மற்றும் ஏற்பாடுகளில் சிரமம் ஏற்படுவது
- போக்குவரத்து ஓட்டுநர்களிடம் அவர்கள் செல்ல விரும்பும் பயண வழியைத் தெரியப்படுத்த சிரமப்படுவது
- பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது மனநிலை அல்லது நடத்தையில் மாற்றங்கள் ஏற்படுவது
• முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் தனியாகப் பயணம் செய்வதை வசதியாகக் கருத மாட்டார்கள் என்பதால், அவருடன் பராமரிப்பாளர் ஒருவர் துணையாகச் செல்ல வேண்டும். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒருவரை வெளியே செல்ல அனுமதிக்காதது அவரை சமூக ரீதியாக தனிமைப்படுத்தி, மனச்சோர்வடையும் நிலைக்கு ஆழ்த்தக்கூடும்.
உங்கள் அன்பிற்குரியவர்களுடன் பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கான உதவிக்குறிப்புகள்
1. அவர்கள் பயணம் செய்வதற்கு முன் பாதையை கவனமாகத் திட்டமிடுங்கள்
உங்கள் அன்பிற்குரியவருடன் சேர்ந்து பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுங்கள், மேலும் அவர்களுக்குப் பழக்கமான அடையாளங்களைச் சுட்டிக்காட்டுங்கள், இதனால் அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கும்.
2. பயணம் செய்வதற்குப் போதுமான நேரத்தை வழங்கிடுங்கள்
உங்கள் அன்பிற்குரியவர்கள் அவர்களின் பயணத்தை சுமூகமான முறையில் பயணிக்க அதிக நேரத்தை ஒதுக்குவது உதவியாக இருக்கும், மேலும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல அவசரப்பட வேண்டாம்.
3. உங்கள் அன்பிற்குரியவரை அசௌகரியமாக உணரக்கூடிய சூழ்நிலைகளைக் கவனியுங்கள்
முடிந்ந அளவில் மக்கள் கூட்டம் அதிகமிருக்கும் நேரங்கள் மற்றும் பரபரப்பான பகுதிகளில் பயணம் செய்வதைத் தவிருங்கள், இது உங்கள் அன்பிற்குரியவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்.
4. தேவைப்பட்டால் கூடுதல் ஆதரவிற்காக நண்பர் அல்லது உறவினரை அழைத்துச் செல்லுங்கள்
5. மாற்றுப் போக்குவரத்து விருப்பத்தேர்வுகளைக் கருத்தில் கொள்ளுங்கள்
6. உங்கள் அன்பிற்குரியவர் தொலைந்துப் போகக்கூடிய சூழ்நிலைக்கு உங்களையும் உங்கள் அன்பிற்குரியவரையும் தயார்படுத்துங்கள்
உள்ளூர் போக்குவரத்து வழங்குநர்களின் முனைப்புத் திட்டங்கள்
நமது பொதுப் போக்குவரத்து அமைப்புகளை முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுக்கு உகந்ததாகவும், முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களை உள்ளடக்கியதாகவும் மாற்றுவதற்காக, முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்கள் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் பாதுகாப்பாகச் செல்ல உதவுவதற்காக, நமது உள்ளூர் போக்குவரத்து வழங்குநர்கள் பல குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். பராமரிப்பாளர்கள் கவனிக்க வேண்டிய உதவிகரமான வளமைகள் இவை.
டிமென்ஷியா கோ-டு பாயிண்ட்ஸ் (Go-To Points)
கோ-டு SMRT (Go-To SMRT)
ஆதாரம்: • SMRT கார்பரேஷன் (SMRT Corporation)
இந்த வீடியோ SMRT இன் கோ-டு (Go-To) முனைப்புத் திட்டத்தைக் காட்டுகிறது. நமது பொதுப் போக்குவரத்து வசதிகளை முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுக்கு இன்னும் உகந்ததாக மாற்றும் முயற்சியில், சிறப்புத் தேவைகள் மற்றும் முதுமைக்கால மறதி நோய் உள்ள மூத்தோர்கள் மற்றும் பயணிகளுக்கு உதவும் வகையில் முன் வரிசை ஊழியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இந்த முனைப்புத் திட்டம் டிமென்ஷியா கோ-டு-பாயிண்ட்ஸ், வீகேர் அறைகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்குகிறது.
கோ-டு முனைப்புத் திட்டம் ஏப்ரல் 2021 இல் SMRT நெட்வொர்க் முழுவதும் தொடங்கப்பட்டது, இது முதலுதவி, காணாமல் போன குழந்தைகள் அல்லது பெரியவர்களைக் கண்டறிவதற்கு உதவி மற்றும் அதன் பேருந்து பரிமாற்ற மற்றும் ரயில் நிலைய வளாகத்தில் பிற வகையான ஆதரவுகளை வழங்குகிறது. இந்த முனைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, MRT பரிமாற்ற நிலையங்கள் மற்றும் பேருந்து பரிமாற்ற நிலையங்கள் டிமென்ஷியா கோ-டு பாயிண்ட்ஸ் (GTPs) என்பதாக நியமிக்கப்பட்டுள்ளன. இந்த கோ-டு பாயிண்ட்ஸ், ‘பாதுகாப்பாக திரும்பும்’ இடங்களாகச் செயல்படுகின்றன, இங்கு பொதுமக்கள் முதுமைக்கால மறதி நோயுடன் தாங்கள் செல்ல வேண்டிய வழியைக் கண்டுபிடிக்க இயலாமல் அல்லது தாங்களைப் பராமரிப்பவர்களைக் கண்டுபிடிக்க இயலாமல் இருப்பவர்களை அழைத்து வரலாம். முதுமைக்கால மறதி நோய் பற்றிய தகவல்கள் மற்றும் வளமைகளை மக்கள் அணுகக்கூடிய இடமாகவும், முதுமைக்கால மறதி நோய் தொடர்பான சேவைகளுடன் மக்களை இணைக்கும் இடமாகவும் கோ-டு பாயிண்ட்ஸ் (GTPs) செயல்படுகின்றன.
இந்த கோ-டு பாயிண்ட்ஸில் உள்ள முதல் வரிசை ஊழியர்கள், மூத்தோர்கள், சிறப்புத் தேவைகள் மற்றும் இயலாமைகள் உள்ளவர்கள் மற்றும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் உள்ளிட்ட சில குழுக்களைச் சேர்ந்த நபர்கள் சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளைக் கையாள பயிற்சி பெற்றுள்ளனர். தேவைப்பட்டால் முதலுதவி அளிப்பதற்கும் அவர்கள் உதவலாம். உங்கள் அன்பிற்குரியவர்கள் காணாமல் போனால், அருகில் உள்ள கோ-டு பாயிண்ட்டிற்குச் சென்று, பிறர் உங்கள் அன்பிற்குரியவரை அழைத்து வந்திருக்கிறார்களா என்றுப் பார்க்கவும். கோ-டு பாயிண்ட்ஸ் ‘பாதுகாப்பாக திரும்பும் இடங்களாக’ செயல்படுகின்றன, இங்கு பொதுமக்கள் முதுமைக்கால மறதி நோயுடன் வழி தெரியாமல் தொலைந்து நிற்பவர்களை அழைத்து வரலாம். கோ-டு பாயிண்ட்ஸில் உள்ள ஊழியர்கள் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களைக் கண்டறிந்து, அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை கண்டுபிடிப்பதற்கு அல்லது பராமரிப்பாளர்களுடன் மீண்டும் ஒன்றிணைவதற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்.
உங்கள் திட்டமிட்ட பயணத்தில் உள்ள நிலையங்கள் கோ-டு பாயிண்ட்ஸ்களா என்பதைச் சரிபார்க்க, பட்டியலிடப்பட்ட கோ-டு பாயிண்ட்ஸ் கோப்பகத்தைப் பயன்படுத்தி அவற்றைத் தேடலாம். மாற்றாக, வரிசைப்படுத்தப்பட்ட கோ-டு பாயிண்ட்ஸ் பட்டியலைக் கண்டறிய கீழே உள்ள பட்டன்களைக் கிளிக் செய்யலாம்.
வீகேர் அறைகள்
உங்கள் அன்பிற்குரியவர் பெரிய பேருந்து பரிமாற்ற நிலையங்கள் வழியாகப் பயணம் செய்யும்போது சோர்வாகத் தோன்றினால், அங்கு உள்ள பேருந்து வரிசைகளிலும், ரயில் நிலையங்களில் உள்ள முன்னுரிமைப் போர்டிங் வரிசைகளிலும் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளைத் தேடுங்கள், இவை உங்கள் அன்பிற்குரியவருக்கு நடமாடுவதில் சிரமம் இருந்தால் அல்லது அவர் சர்க்கர நாற்காலியைப் பயன்படுத்தினால், பயணத்தை மிகவும் சௌகரியமாக்க உதவும்.
நிலையங்கள் வழியாகப் பயணிக்கும்போது உங்கள் அன்பிற்குரியவர் மன உளைச்சலில் இருப்பதாகத் தோன்றினால், நீங்கள் அவர்களை அமைதியான வீகேர் அறைக்கு அழைத்துச் செல்ல விரும்பலாம். எந்தெந்த நிலையங்களில் வீகேர் அறைகள் உள்ளன என்பதைப் பார்க்க, கீழே உள்ள பட்டியலை விரிவாக்கவும்.
- அங் மோ கியோ
- அல்ஜுனிட்
- பூகிஸ்
- புவன விஸ்தா
- பீஷான்
- கென்பரா
- ஜூரோங்
- யீஷூன்
- சிமெய்
- நொவீனா
- கெண்ட் ரிட்ஜ்
- கெம்பாங்கான்
- லேக்சைட்
- லவண்டர்
- பாய லேபார்
- குவீன்ஸ்டவுன்
- ரெட்ஹில்
- யீஷூன் ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து நடுவம்
- உட்லண்ட்ஸ் ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து நடுவம்
- புக்கிட் பாஞ்சாங் போக்குவரத்து நடுவம்
- செம்பவாங் பேருந்து பரிமாற்ற நிலையம்
- சுவா சூ காங் பேருந்து பரிமாற்ற நிலையம்
‘உங்கள் வழியைக் கண்டறிந்திடுங்கள்’ முனைப்புத் திட்டம்
உங்கள் வழியைக் கண்டறிந்திடுங்கள் முனைப்புத் திட்டம், பேருந்து பரிமாற்ற நிலையங்கள் மற்றும் பெருவிரைவு ரயில் நிலையங்களில் முதுமைக்கால மறதி நோயுள்ளவர்கள் எளிதில் பயணிக்க உதவ நினைவூட்டல் அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. இந்த முனைப்புத் திட்டம் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டது, இவர்களிடம் சுவரோவிய வடிவமைப்புகள், பேருந்து நிறுத்தங்களின் அமைவிடம் மற்றும் வண்ணக் குறியீட்டு முறை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தச் சுவரோவியங்களில் வெவ்வேறு வெளியேறும் பாதைகளைக் குறிப்பதற்கு சிறுவயது விளையாட்டுகள் அல்லது மூத்தோர்களுக்கான செயல்பாடுகளின் பரிச்சயமான படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்பிற்குரியவர், தொடர்புடைய சுவரோவியம் மற்றும் வண்ணத்துடன், வழிக்காட்டும் தள அடையாளங்களையும் பயன்படுத்தி, பேருந்து நிலையத்தை எளிதில் அடையாளம் காண முடியும். ‘உங்கள் வழியைக் கண்டறிந்திடுங்கள்’ முனைப்புத் திட்டத்தின் கீழ் உள்ள சில அக்கம்பக்கங்களும் நிலையங்களும் வழிக் கண்டறியும் சுவரோவியங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, உங்கள் அன்புக்குரியவர் தோ பாயோவிற்குப் பயணித்தால், பேருந்து பரிமாற்ற நிலையம் இடதுபுறத்தில் உள்ள படத்தில் உள்ளது போல தொடர்புடைய பழமையான நினைவுச் சுவரோவியங்களுடன் கூடிய ‘வட்டாரமாக’ இருக்கும்.
பட ஆதாரம்: SBS டிரான்ஸிட் (SBS Transit)
‘உங்கள் வழியைக் கண்டறிந்திடுங்கள்’ முனைப்புத் திட்டம்
“உங்கள் வழியைக் கண்டறியுங்கள்” என்பது SBS டிரான்ஸிட் லிமிடெட் மற்றும் டிமென்ஷியா சிங்கப்பூர் வழங்கும் முனைப்புத் திட்டமாகும், இது முதுமைக்கால மறதி நோயுடன் வாழுபவர்கள் பேருந்து பரிமாற்ற நிலையங்கள் மற்றும் MRT நிலையங்களில் மிகவும் எளிதாகவும் நம்பிக்கையுடனும் பயணித்து, தங்களது வழிகளைக் கண்டறிய உதவுகிறது.
இரண்டு பாகங்கள் கொண்ட தொடரின் முதல் பகுதியில், முதுமைக்கால மறதி நோய்க்காக முக்கியமாக வாதிடுபவரும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழுபவருமான எமிலி ஓங் அவர்கள் பயணம் செய்கிறார், அவர் மூலோபாய ரீதியாக நிறுவப்பட்ட சுவரோவியங்களைப் பயன்படுத்தி ஆங் மோ கியோ பேருந்து பரிமாற்ற நிலையத்தில் தனது வழியைக் கண்டறிகிறார்.
ஆதாரம்: டிமென்ஷியா சிங்கப்பூர்
இரண்டு பாகங்கள் கொண்ட தொடரின் இந்தப் பகுதியில், முதுமைக்கால மறதி நோய்க்காக வாதிடுபவரும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழுபவருமான அஞ்சாங், கோவன் பெருவிரைவு ரயில் நிலையத்தில் உலாவுகிறார். அவர் தனது அன்பிற்குரியவரைக் கண்டுபிடித்துச் சென்றடைய அவர் நம்பியிருக்கும் சுவரோவியத்தை உங்களால் அடையாளம் காண முடியுமா?
ஆதாரம்: டிமென்ஷியா சிங்கப்பூர்
எனக்கு இருக்கை கிடைக்குமா’ முனைப்புத் திட்டம்
பராமரிக்கும் சிங்கப்பூர் பயணிகள் குழு (Caring SG Commuters Committee) வழங்கும் எனக்கு இருக்கை கிடைக்குமா முனைப்புத் திட்டமானது, கண்ணுக்குத் தெரியாத மருத்துவ நிலைமைகளைக் கொண்ட பயணிகள், தங்களுக்குப் பொதுப் போக்குவரத்தில் இருக்கை வேண்டுவதைச் சக பயணிகளுக்கு விழிப்பூட்ட உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள், பெருவிரைவு ரயில் நிலையங்கள், பேருந்து பரிமாற்ற நிலையங்கள் அல்லது TransitLink பயணச்சீட்டு அலுவலகங்களில் உள்ள பயணிகள் சேவை நிலையங்களில் இருந்து சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அட்டை மற்றும் லேன்யார்டைப் பெறலாம்.
பட ஆதாரம்: போக்குவரத்து அமைச்சு
உங்கள் அன்பிற்குரியவர் தொலைந்துப் போகக்கூடிய சூழ்நிலைக்கு உங்களையும் உங்கள் அன்பிற்குரியவரையும் தயார்படுத்திக் கொள்ளுங்கள்
CARA கைப்பேசி செயலி
உங்கள் அன்பிற்குரியவர் பொதுப் போக்குவரத்தில் செல்வதற்கு முன், நீங்கள் அவர்களின் அடையாள அட்டை மற்றும் பிற தேவையான அடையாள ஆவணங்களின் நகல்களை எடுத்து வைத்துக்கொண்டு, அசல் நகலை உங்கள் நபரிடம் கொடுத்துவிடலாம். உங்கள் அன்பிற்குரியவர் அடையாள ஆவணத்தை வைத்திருப்பது (CARA உருப்பினருரிமை அட்டை போன்றவை), உங்கள் அன்பிற்குரியவர் தொலைந்துப் போனால் மற்றவர்கள் உங்களை எவ்வாறு தொடர்புகொள்வது அல்லது அவர்களை வீட்டிற்குத் திரும்ப அழைத்து வருவது என்பதை அறிய உதவும்.
பட ஆதாரம்: CARA
Image Source: CARA
ஈஸி-லிங்க் மொபைல் செயலியில் குடும்பக் கணக்கு
பொதுப் போக்குவரத்து அமைப்பில் சொந்தமாகச் செல்ல விரும்புகிற முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு, பராமரிப்பாளர்கள் தங்கள் போக்குவரத்து நகர்வுகளைக் கண்காணிக்கும் அதே வேளையில் அவர்களின் சமூக ஈடுபாடுகளை ஆதரிக்க தொழில்நுட்பங்களின் கலவையைப் பரிசீலிக்கலாம்.
ஈஸி-லிங்க் ஆனது, ஈஸி-லிங்க் செயலியில் குடும்பக் கணக்கு அம்சத்தை உருவாக்கியுள்ளது,
இது பராமரிப்பாளர்கள் தங்களைச் சார்ந்திருப்பவர்களைக் கண்காணிக்க, SimplyGo ஈஸி-லிங்க் அட்டைகளில் இணைக்கப்பட்ட குடும்பக் கணக்கு மூலம் அவர்களின் விரிவான போக்குவரத்து வரலாற்றின் இடங்களை அறிய உதவுகிறது.
தேவை ஏற்பட்டால், அவர்களின் அன்பிற்குரியவர்களின் தேடல் கண்ணோட்டத்தைச் சுருக்குவதற்கு இது உதவியாக இருக்கும். உங்கள் அன்பிற்குரியவர்களின் உங்கள் கண்ணில் புலப்படாமல் போனால் அல்லது அவர்களிடமிருந்து வேறு திசையில் பிரிந்தால், அமைதியாக இருந்து அவர்கள் கடைசியாக அறியப்பட்ட இடத்தைக் கண்காணிக்க முயற்சி செய்யுங்கள். குடும்பக் கணக்கு அம்சத்தின் மூலம் அவர்களின் அட்டையை நீங்கள் தொலைநிலை மூலமாகவும் பண நிரப்புதல் செய்யலாம்.
உங்கள் அன்பிற்குரியவர் வழக்கமான ஈஸி-லிங்க் அட்டையைப் பயன்படுத்தும் நிலையில், அவரிடம் திறன்பேசி இல்லை என்றால், உங்கள் சொந்தக் கணக்கில் அவரது ஈஸி-லிங்க் அட்டையைச் சேர்த்த பிறகு அவரது போக்குவரத்து வரலாற்றையும் நீங்கள் பார்க்கலாம். உங்கள் அன்பிற்குரியவரின் ஈஸி-லிங்க் அட்டையின் பின்புறத்தில் காணப்படும் 16 இலக்க CAN ஐடியைப் பயன்படுத்தி SimplyGo செயலியில் “அட்டையை புதிய அட்டையாகச் சேருங்கள்”. நீங்கள் அவர்களின் ஈஸி-லிங்க் அட்டையை SimplyGo ஈஸி-லிங்க் என்பதற்கு, பேருந்து பரிமாற்ற நிலையங்கள் அல்லது பெருவிரைவு ரயில் நிலையங்களில் உள்ள எந்த ஒரு பயணச்சீட்டு இயந்திரம் மூலமாகவும் மேம்படுத்தலாம்.
மாற்றுப் போக்குவரத்து விருப்பங்களைக் கருத்தில் கொள்ளுதல்
நீங்கள் மக்கள் கூட்டம் அதிகமிருக்கும் நேரங்களில் பயணம் செய்ய வேண்டியிருந்தால் அல்லது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது உங்களுக்கும் உங்கள் அன்புபிற்குரியவருக்கும் கடினமாக இருந்தால், GrabAssist (கிராப்அசிஸ்ட்) போன்ற மாற்றுப் போக்குவரத்து விருப்பங்களை நீங்கள் பரிசீலிக்கலாம்.
GrabAssist (கிராப்அசிஸ்ட்) ஓட்டுநர்கள், சக்கர நாற்காலியில் இருந்து நபரை இறக்கி கார் இருக்கைக்கு பாதுகாப்பாக ஏற்றுவது போன்ற நடமாட்டம் சிரமம் உள்ள பயணிகளுக்கு உதவ பயிற்சி பெற்றுள்ளனர். GrabAssist Plus (கிராப்அசிஸ்ட் பிளஸ்) என்பது Grab மூலம் தொடங்கப்பட்ட ஒரு புதிய முனைப்புத் திட்டமாகும், இது பயணிகள் தங்கள் சக்கர நாற்காலிகளில் இருந்து இறங்காமல் பயணிக்க அனுமதிக்கிறது, ஏனெனில் இந்த வாகனங்களில் சாய்வான அணுகல் வசதி பொருத்தப்பட்டுள்ளன. GrabAssist Plus (கிராப்அசிஸ்ட் பிளஸ்) பயணங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே கிடைக்கும். செயலியில் உங்கள் பயணத்தை முன்பதிவு செய்யும்போது, ’மதிப்புக் கூட்டப்பட்டது’ என்ற தாவலின் கீழ் இந்தச் சேவைகளை நீங்கள் காணலாம்.
Tell us how we can improve?
- (2021, April 26). SMRT Media Release – SMRT demonstrates firm commitment to serve community through Go-To SMRT initiative.SMRT.
https://www.smrt.com.sg/Announcements/articleid/1321. - Yong, C. (2021, April 26). Smrt Mrt stations and bus interchanges to be turned into care centres. The Straits Times. https://www.straitstimes.com/singapore/smrt-to-train-staff-so-mrt-stations-and-bus-interchanges-can-be-first-place-of-call-for.
- (2022, April 1). SMRT Media Release – SMRT wins UITP Award for Go-To initiative. SMRT.
http://blog.smrt.com.sg/smrt-wins-uitp-award-for-go-to-initiative/ - (2022, February 27). SMRT Media Release – Media Release – SMRT and AIC Enhance Dementia-Friendly Transport in Singapore. SMRT.
https://www.smrt.com.sg/Announcements/articleid/smrt-and-aic-enhance-dementia-friendly-transport-in-singapore - Tan, A. (2022, February 27). Help for those with dementia who appear lost at all SMRT train stations by year-end. The Straits Times.
https://www.straitstimes.com/singapore/transport/all-smrt-train-stations-will-be-able-by-year-end-to-help-those-with-dementia-who-appear-lost - (2019, October 29). 5 Ways Yishun Integrated Transport Hub is Senior and Dementia friendly. AIC.
https://www.aic-blog.com/5-ways-yishun-integrated-transport-hub-senior-and-dementia-friendly - (2019, 30 April) Meet the Designers Of The “May I Have A Seat Please?” Lanyard. Caring SG Commuters Committee.
https://www.caringcommuters.gov.sg/in-the-spotlight/meet-the-designers-of-the-may-i-have-a-seat-please-lanyard