முதுமைக்கால மறதி நோய் என்பது அதிகரிக்கக்கூடிய நோய்நிலை ஆகும், இதில் மிதமானது அல்லது முற்றிய முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுக்கு குளித்தல், ஆடை அணிதல், அழகுப்படுத்தல், கழிப்பறைக்குச் சென்று வருதல், நடைபயிற்சி செய்தல் மற்றும் உண்ணுதல்
போன்றவைகளை அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை (ADLகளை) மேற்கொள்வதற்கு ஆதரவுத் தேவைப்படும்.
பலருக்கு, குளியலும் குளியறை செயல்பாடுகளும் தனிப்பட்ட மற்றும் அந்தரங்க செயல்பாடுகளாக இருக்கும். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கும் இது பொருந்தும். எனவே, உதவியைப் பெறுவது அவர்களுக்கு அசௌகரியமாக இருக்கலாம், மேலும் இந்த மாற்றத்திற்குப் பழகுவது அவர்களுக்குக் கடினமாக இருக்கலாம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. இந்த நிச்சயமற்ற உணர்வுகள் பராமரிப்பாளர்களுக்கும் இருக்கும், எனவே இவர்கள் தங்கள் அன்பிற்குரியவர்களைக் குளிக்கச் சம்மதிக்க வைப்பதில் அல்லது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இச்செயல்பாட்டை அமைதியானதாகவும் வசதியானதாகவும் ஆக்குவதில் அடிக்கடி சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
இருப்பினும், உங்களைப் போன்ற பராமரிப்பாளர்கள் இந்தச் செயல்பாடுகளை புரிந்துணர்வுடனும் பரிவுணர்ச்சியுடனும் அணுகுவது மிகவும் முக்கியம், ஏனெனில் இது கவலை மற்றும் விரக்தியின் உணர்வுகளைக் குறைப்பதில் மிகவும் பயனளிக்கும், அத்துடன் உங்களுடைய மற்றும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்பற்குரியவருடைய வாழ்க்கைத் தரம் மேம்படும்.
முதுமைக்கால மறதி நோய் குளியலையும் குளியறை செயல்பாடுகளையும் எப்படிப் பாதிக்கும்?
முதுமைக்கால மறதி நோய் ஒவ்வொருவரையும் வித்தியாசமாகப் பாதிக்கிறது. இதில் அவர்களுடைய அறிகுறிகளின் அனுபவம், நோய்நிலை முற்றுகின்ற விகிதம், அத்துடன் தேவையான ஆதரவின் வகை மற்றும் ஆதரவின் அளவு ஆகியவை அடங்கும்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களை அறிகுறிகள் எவ்வாறு பாதிக்கின்றன மற்றும் இந்த அறிகுறிகள் நோய்நிலையின் லேசான, மிதமான மற்றும் முற்றிய நிலைகளில் எப்படி படிப்படியாக உருவாகின்றன என்பதை இங்கே கண்டறியுங்கள்.
தனிப்பட்ட சுகாதாரத்தின் பின்னணியில், மிதமான (மற்றும் சில சமயங்களில், லேசான) முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு, குளிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய தேவையான நடவடிக்கைகள் போன்ற செயல்பாடுகளை சரியான வரிசையில் மேற்கொள்வது சவாலாக இருக்கலாம். தங்களைச் சுற்றியுள்ள பொருட்களைக் கண்ணோட்டமிடுவது, அடையாளம் காண்பது மற்றும் புரிந்துகொள்வதிலும் அவர்களுக்குச் சிரமம் இருக்கலாம், இது குளியலையும் குளியலறை செயல்பாடுகளையும் துன்பகரமானதாக ஆக்கும். மாறாக, முற்றிய முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளைச் செய்யவே தங்கள் பராமரிப்பாளர்களை முழுமையாகச் சார்ந்திருக்க வாய்ப்புள்ளது.
குளியல் மற்றும் குளியறை அனுபவத்தை மேம்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள்:
1. என் அன்பிற்குரியவர் நான் அவரிடம் குளிக்கச் சொன்னால் குளிக்க மறுக்கிறார். நான் என்ன செய்வது?
இதுபோன்ற தருணங்களில், உங்கள் அன்பிற்குரியவர் ஏன் குளிக்க விரும்பவில்லை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இதோ இங்கே:
- என் அன்பிற்குரியவர் அவர் ஏற்கனவே குளித்துவிட்டதாக நினைக்கிறாரா?
- என் அன்பிற்குரியவர் மற்றவர்கள் சுற்றியிருக்கும்போது குளிப்பதற்குக் அச்சப்படுகிறாரா அல்லது கூச்சப்படுகிறாரா?
- அவருக்குக் குளிப்பதை கடினமாகவோ அல்லது வேதனையாகவோ ஆக்கும் உடல்ரீதியான பிரச்சனைகள் ஏதேனும் உள்ளனவா?
- துாவாலைக்குழாயில் துாவாலைக்குழாயின் தலைப்பகுதியைப் பயன்படுத்துவது அவருக்கு அசௌகரியமாக இருக்கிறதா?
- அவர் சிறிது நேரம் கழித்து குளிக்க விரும்புகிறாரா? அவருக்கு முதுமைக்கால மறதி நோய் இருப்பது கண்டறியப்படுவதற்கு முன்பு, அவர் எந்த நேரத்தில் குளிக்க விரும் புவார் என்று கண்டறியுங்கள்
- எனது அன்பிற்குரியவர் குளியலறையில் குளிப்பதை பாதுகாப்பற்றதாக உணர்கிறாரா? இதற்கு முன்பு அவர் குளியலறையில் விழுந்த அல்லது கிட்டத்தட்ட விழப்போன சம்பவங்கள் உள்ளனவா?
குளியல் அல்லது குளியலறை செயல்பாடுகள், பொருட்கள், குளிக்கும் நேரம் போன்றவை சம்பந்தமாக உங்கள் அன்பிற்குரியவரின் விருப்பங்களை கருத்தில் கொள்வது முக்கியம்.
ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் அவர் குளிப்பதை உறுதிப்படுத்துவதும் பயனுள்ளதாக இருக்கும், இதனால் அது அவருடைய நாளின் இயல்பான ஓட்டத்தின் ஒரு பகுதியாக மாறும். இந்த முன்கணிப்பு அவரது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கும், இதனால் அவர் விருப்பத்துடன் குளிக்கச் செல்லக்கூடும்.
அதோடு உங்கள் அன்பிற்குரியவரிடம் காரணங்களைச் சொல்லியும் அவர் குளிப்பதற்கு ஊக்குவிக்கலாம். உதாரணமாக, இன்று வீட்டிற்கு யாராவது வரலாம் அல்லது சில நேரம் கழித்து நாம் வெளியே செல்ல திட்டமுள்ளது என்று குறிப்பிடலாம் அல்லது குளித்த பிறகு அவர் சூடான தேநீர் அருந்தலாம் மற்றும் வேடிக்கையாக ஏதாவது செய்யலாம் என்று குறிப்பிடலாம். உரையாடலை பொதுவாக நேர்மறையாக வைத்திருக்கவும், குளிப்பதைப் பற்றி விவாதிப்பதையோ வாதிடுவதையோ தவிர்க்கவும்.
2. என் அன்பிற்குரியவர் குளிக்க வேண்டியிருக்கும்போது பெரும்பாலும் மன உளைச்சலுடனும் கிளர்ச்சியுடனும் இருப்பார். அவரை நிம்மதியாக உணர வைக்க நான் என்ன செய்ய வேண்டும்?
குளியல் அல்லது குளியலறைச் செயல்பாடுகளுக்குச் செல்வதற்கு முன், உங்கள் அன்பிற்குரியவரின் சுற்றுப்புறச் சூழல் ஆசுவாசப்படுத்தக்கூடியதாகவும், செயல்பாட்டிற்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதி செய்வது அவசியம்.
- குளியலறை அல்லது குளிக்கும் அறையில் முறையாக வெளிச்சம் இருப்பதை உறுதிப்படுத்தவும்.
- குளியல் அல்லது குளியலுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை ஒழுங்கமைக்கவும். உங்கள் அன்பிற்குரியவர் அவற்றை எளிதாக அடையாளம் காணும் வகையில் பொருட்களை அடையாளக் குறியீடு இடலாம்
- குளியலறை ஒழுங்கீனமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இதனால் உங்கள் அன்பிற்குரியவர் அவருக்குத் தேவையானதைக் கண்டுபிடிக்க போதுமான அளவு இடம் இருக்கும்.
- உங்கள் அன்பிற்குரியவருக்கு உடல் ரீதியான செயல்பாடுகளை மிகவும் கடினமாகக் கண்டால், குளிக்கும் போது அவர்கள் அடையும் களைப்பைக் குறைக்கும் விதமாக, நீங்கள் குளியலுக்கான நாற்காலியை ஏற்பாடு செய்யலாம் மற்றும் சாய்ந்துக் கொள்ளும் பிடிமானம் கொண்ட தாங்கியை சுவரில் சாய்த்து வைக்கக்கூடிய பிளாஸ்டிக் நாற்காலியைப் பயன்படுத்தலாம், இது நாற்காலி நிலையாக இருப்பதை உறுதி செய்யும். உங்கள் அன்பிற்குரியவர் பிடித்துக் கொள்ளக்கூடிய கைப்பிடிகளை நீங்கள் நிறுவலாம் அல்லது கூடுதல் பாதுகாப்பிற்காக வழுக்காத விரிப்புகளைப் பயன்படுத்தலாம்.
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் சில நபர்கள் கண்ணாடியில் தங்களைப் பார்க்கும்போது அவர்களுக்குக் கவனச்சிதறல், குழப்பம் அல்லது கிளர்ச்சி ஏற்படலாம். உங்கள் அன்பிற்குரியவர் அசௌகரியமடையும் அதிருப்தியடையும் உணர்வுகளைக் குறைக்க குளியலறையில் உள்ள கண்ணாடிகளை துவாலை கொண்டு மூடுவதற்கு அறிவுறுத்தப்படுகிறது.
- தண்ணீரின் வெப்பநிலையை சோதித்து, அது மிகவும் சூடாகவோ அல்லது மிகவும் குளிர்ச்சியாகவோ இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும். நீங்கள் கையில் வைத்திருக்கக்கூடிய லேசாக தெளிக்கும் தூவாலைக்குழாயின் தலைப்பகுதி அல்லது வாளியைப் பயன்படுத்தலாம், இவ்வாறு செய்வது அவரது சருமத்திற்கு இதமாக இருக்கும்.
- மனதை அமைதிப்படுத்தும் உணர்வை உருவாக்க செயல்பாட்டின்போது மனதை ஆசுவாசப்படுத்தும் இசையை இசைக்கவும்.
- குளியல் செயல்முறையில் அவர்களுக்கு உதவும் அதே வேளையில், உங்கள் அன்பிற்குரியவருடன் தெளிவாகவும், மென்மையாகவும், ஊக்கமளிக்கும் விதமாகவும் பேசவும்.
சுற்றியிருக்கும் சூழல் மேம்பாடுகளுடன் சேர்த்து, ஒவ்வொரு உரையாடலையும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்த, பராமரிப்பாளர்கள் தங்கள் அன்பிற்குரியவருடன் அவர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு தொடர்புகொள்வது முக்கியம். உங்கள் அன்பிற்குரியவருடன் எவ்வாறு சிறந்த முறையில் தொடர்புகொள்வது என்பதை இங்கே கண்டறியவும்.
அதோடு குளியலை அவசரப்படுத்த வேண்டாம். உங்கள் அன்பிற்குரியவர் அவசரப்படுத்தப்படுவதாக உணராமல் இருக்க, அவர் குளிப்பதற்கு அதிக நேரம் அனுமதிக்கவும். அவர் தகவலைச் செயலாக்குவதற்கு அதிக நேரம் எடுக்கலாம், இது அவர் சில முடிவுகளை எடுக்கும் திறனைப் பாதிக்கிறது. உங்கள் அன்பிற்குரியவருக்கு அவர் எடுக்க வேண்டிய படிநிலைகளை நினைவூட்ட விரும்பலாம், மேலும் குளிப்பதற்குத் தேவையான பொருட்களை அடையாளம் காண்பதில் அவருக்கு ஆதரவளிக்கலாம். இதற்கு சிறிது நேரம் ஆகலாம், ஆனால் உங்கள் அன்பிற்குரியவர் நடக்கும் விஷயங்களைக் கட்டுப்படுத்தும் உணர்வைக் கொண்டிருப்பார், இது அவரது பதட்டத்தைக் குறைக்கும் மற்றும் அவரது நம்பிக்கையின் அளவை அதிகரிக்கும்.
உங்கள் அன்பிற்குரியவருக்கு குளிப்பது மிகவும் கவலையளிக்கும் சந்தர்ப்பங்களில், அவர்களின் தனிப்பட்ட சுகாதாரத்தைப் பராமரிக்க மாற்று வழிகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். உதாரணமாக, அவர்கள் உட்கார்ந்திருக்கும்போது அல்லது படுக்கையில் படுத்திருக்கும்போது அவர்களுக்கு பஞ்சு அல்லது துவாலைக் கொண்டு துடைக்கலாம். உடல் துடைப்பான்கள் (வைப்ஸ்) தயாரிப்பும் நல்ல மாற்றீடாக இருக்கும்.
3. என் அன்பிற்குரியவர், குளிக்கும்போது அல்லது குளியலறையில் அவருக்கு நான் உதவும்போது சங்கடமாக உணர்கிறார். இந்தச் செயல்பாட்டின்போது அவரது கண்ணியத்தைப் பாதுகாக்க நான் என்ன செய்ய வேண்டும்?
உங்களால் முடிந்தவரை குறிப்பாக குளித்தல் மற்றும் குளியலறை செயல்பாடுகள் போன்ற அவரது தனிப்பட்ட மற்றும் அந்தரங்கமான செயல்பாடுகளின்போது தனியுரிமைக்கு மதிப்பளிப்பது முக்கியம். நீங்கள் இதற்குப் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
- அவர் கழுவும்போது அல்லது ஆடை உடுத்தும்போது யாரும் உள்ளே வரமாமல் இருப்பதை உறுதி செய்யலாம்
- அவரது தனியுரிமைக்காக ஜன்னல்கள் அல்லது தூவாலைக்குழாய் பகுதியின் திரைச்சீலைகளை மூடலாம்
- நீங்கள்/அவர் கழுவும் அவரது உடலின் பகுதி மட்டும் தெரியும்படி வைக்கலாம். உடலின் மற்ற பகுதியை துவாலை கொண்டு மூடலாம் உங்கள் அன்புக்குரியவருக்கு மெதுவாக குளிக்கும் செயல்முறையை எளிதாக்க அவரது கைகள் மற்றும் கால்கள் போன்ற உடலின் முனைப்பகுதிகளில் இருந்து தொடங்கவும் நீங்கள் விரும்பலாம்
நிபுணரிடம் கேளுங்கள்: அத்தியாயம் 4 – முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்தல் (அன்றாட நடவடிக்கைகள்)
ஆதாரம்: ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (AIC)
இந்த அத்தியாயத்தில், பீஸ்ஹேவன் தாதிமை இல்லங்கள் மற்றும் பீஸ்ஹேவன் பகல்நேரப் பராமரிப்பு நிலையங்களின் நிர்வாக இயக்குநர் அம்மையார் லோ முயி லாங், குளிக்கும்போது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் அன்பிற்குரியவரின் தனியுரிமையை மதிப்பது எப்படி என்பது உட்பட முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிப்பது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
உங்கள் அன்பிற்குரியவர் குடும்பத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட நபரை (அல்லது) அவருடைய அதே பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் அவருக்கு உதவியாய் இருப்பதற்கு விரும்பலாம். குளிக்கும்போது பிறருக்கு மேல் ஒரு குறிப்பிட்ட நபர் அவருக்கு உதவியாய் இருப்பதற்கு விரும்பலாம்.
கழிவறையில் அவர்களுக்கு உதவ புதிதாக யாரேனும் (அதாவது வீட்டு உதவியாளர், பராமரிப்பு நிபுணர், உங்கள் அன்புக்குரியவருக்கு நெருக்கமாக இல்லாத குடும்ப உறுப்பினர்) நியமிக்கப்பட்டால், புதிதாக நியமிக்கப்பட்ட நபருடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வதற்கும் அவர்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். புதிய நபரின் உதவியால் உங்கள் அன்பிற்குரியவர் மிகவும் சௌகரியமாக உணருவதற்குச் சிறிது நேரம் கொடுக்க மறக்காதீர்கள்.
இந்த முடிவுகளை எடுக்க உங்கள் அன்பிற்குரியவருக்கு நீங்கள் அதிகாரம் அளிப்பது முக்கியம், மேலும் செயல்பாட்டின்போது அவர் சௌகரியமாக உணரும் வகையில் அவரின் விருப்பத்தேர்வுகளைக் கருத்தில் கொள்வதும் முக்கியம்.
4. நான் இதற்குப் புதிது. என் அன்பிற்குரியவர் குளிப்பதற்கு நான் அவருக்கு எப்படி உதவுவது?
அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் – பராமரிப்பாளர்களுக்கான வளமை வழிகாட்டி
ஆதாரம்: ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (AIC)
ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு வழங்கும் இந்த வளமை உங்கள் அன்பிற்குரியவரின் தனிப்பட்ட சுகாதாரத் தேவைகளுக்கு எவ்வாறு ஆதரவளிப்பது என்பதற்கான படிப்படியான வழிகாட்டியாக உள்ளது. குளித்து விடுவது, ஷாம்பு போட்டு விடுவது, வாய் பராமரிப்பு செய்வது, ஷேவிங் செய்வது, கால் பராமரிப்பு செய்வது மற்றும் பல்வேறு விதமான கழுவுதல்களில் ஈடுபடுவது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
5. எனக்கு கூடுதல் ஆதரவு தேவை என்று நினைக்கிறேன். எனது அன்பிற்குரியவரின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளுக்கு உதவிக்காக நான் யாரை அணுகலாம்?
குறிப்பாக நீங்கள் அன்பிற்குரியவரைப் பரமாரிப்புச் செய்வதில் புதியவராக இருந்து, என்ன செய்வது என்று சரியாகத் தெரியாமல் இருந்தால், உதவியை நாடுவது முற்றிலும் சரி. இல்லம் சார்ந்த தனிப்பட்ட பராமரிப்புச் சேவை பயிற்சி பெற்ற பராமரிப்பு நிபுணர்களால் வழங்கப்படுகிறது, இச்சேவை அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள், மருந்துகள், மனதைத் தூண்டும் நடவடிக்கைகள், மூத்தோர் பராமரிப்பு மற்றும் பிற பராமரிப்புப் பணிகளுக்கு முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபருக்கும் அவர்களது பராமரிப்பாளர்களுக்கும் உதவுகிறது.
இல்லம் சார்ந்த பராமரிப்புச் சேவை தொடங்கும் முன், பதிவுசெய்யப்பட்ட செவிலியர், சிகிச்சையாளர் அல்லது மருத்துவர் உங்கள் அன்பிற்குரியவரின் அறிவாற்றல் மற்றும் செயல்பாட்டுத் திறன்களை மதிப்பீடு செய்து, அவருக்கு மிகவும் பொருத்தமான ஒரு பராமரிப்புத் திட்டத்தைக் கொண்டு வருவார்.
பெயர் |
முகவரி |
தொலைபேசி |
துடிப்புடன் செயல்படும் உலகளாவிய இல்லம் சார்ந்த மற்றும் சமூகப் பராமரிப்பு (Active Global Home & Community Care) |
51 Goldhill Plaza, #12-11 Singapore 308900 |
6536 0086 |
பெதஸ்டா பராமரிப்பு மற்றும் ஆலோசனை சேவைகள் நிலையம் |
300 Bedok North Ave 3 Singapore 469717 |
6445 1500 |
ஆறுதல் காப்பாளர்கள் (தோ பாயோ / பீஷான்) |
627 Aljunied Road #07-03 Pacific Building Singapore 389837 |
6282 0577 |
ஆறுதல் பராமரிப்பாளர்கள் (பிடோக்) |
1301 Bedok North Ave 4 #04-02 Goldbell Centre Singapore 489945 |
6446 7361 |
ஆறுதல் பராமரிப்பாளர்கள் (புக்கிட் மேரா) |
221 Henderson Road #07-18 Henderson Building Singapore 159557 |
6336 3376 |
டோர்காஸ் இல்லம் சார்ந்த பராமரிப்புச் சேவை |
Blk 105 Jalan Bukit Merah #01-1912 Singapore 160105 |
6377 5183 |
தலைமுறை இல்லம் சார்ந்த பராமரிப்பு பிரைவேட் லிமிட்டெட் (Generation Home Care Pte Ltd) |
1 Kim Seng Promenade #15-12 Great World City West Tower Singapore 237994 |
6402 6407 |
உடற்குறையுள்ளோர் நல சங்கம் (வாம்ப்போ) |
15 Whampoa Drive Singapore 327725 |
6254 3006 |
அன்பு இதய பல்துறை சேவை நிலையம் |
210 Jurong East Street 21 #01-389 Singapore 600210 |
6897 4766 |
ஒழுக்கநெறி இல்லம் சார்ந்த உதவிச் சேவை (ஈஸ்ட்) |
2 Chai Chee Lane Singapore 469030 |
6441 6280 |
ஒழுக்கநெறி இல்லம் சார்ந்த உதவிச் சேவை (வெஸ்ட்) |
301 Henderson Road Singapore 108931 |
6273 2239 |
தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் சுகாதாரம் (இல்லம் சார்ந்த பராமரிப்பு) |
6715 6715 |
|
சன்லவ் (இல்லம் சார்ந்த உதவிச் சேவை) |
70 Buangkok View Singapore 534190 |
6386 9312 |
SWAMI இல்லம் |
5 Sembawang Walk Singapore 757717 |
6257 6117 |
தெம்புசு மறுவாழ்வு நிலையம் – சத்ய சாய் சமூகச் சேவை |
715 Jurong West Street 71 #01-47 Singapore 640715 |
6790 7226 |
மூத்த சிங்கப்பூரர்களுக்கான தாங் தெக் இல்லம் |
91 Geylang East Ave 2 Singapore 389759 |
6846 0069 |
டச் இல்லப் பராமரிப்பு |
Blk 173 Toa Payoh Lorong 1 #01-1264 Singapore 310173 |
6258 6797 |
உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள பிற சேவைகளுக்கு, ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (Agency for Integrated Care, AIC) மின்வழி கண்டறியும் கருவியைப் பார்க்கவும்.
உங்கள் அன்பிற்குரியவரை அவரது அன்றாட நடவடிக்கைகளில் எவ்வாறு ஆதரிப்பது என்பதைப் பற்றிய சிறந்த புரிதலைப் பெற நீங்கள் பாடப்பயிற்சிகள் அல்லது பயிற்சித் திட்டங்களில் சேர விரும்பலாம். இல்லம் சார்ந்த தனிப்பட்ட பராமரிப்புப் பற்றி கிடைக்கப்பெறும் பராமரிப்பு வழங்கல் பயிற்சி வகுப்புகளைப் பார்க்க, AIC பராமரிப்பாளர் பயிற்சி வகுப்புகள் மின்வழி காலெண்டரைப் பார்க்கவும்.
கூடுதல் வளமைகள்
மூத்தோர்களுக்கான பராமரிப்பு வழங்கல் – நடைமுறை வழிகாட்டி
ஆதாரம்: பராமரிப்பு வழங்கல் சமூகநலச் சங்கம் (Caregiving Welfare Association, CWA)
இந்தக் கைப்புத்தகம் பராமரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் பற்றிய ஆழமான கண்ணோட்டத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. இதில் இடம்பெறுவன:
- பராமரிப்பாளர்கள் அவர்களின் பராமரிப்புப் பயணத்தின்போது எதிர்கொள்ளும் சவால்களுக்குப் பல்வேறு நடைமுறை ரீதியான அணுகுமுறைகள்
- பராமரிப்பாளர்கள் அவர்களது அன்பிற்குரியவர்களின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள், எதிர்காலத்திற்குத் திட்டமிடுதல் மற்றும் சுயப் பராமரிப்பில் ஈடுபடுதல் போன்றவற்றுக்கு எப்படி ஆதரிக்கலாம் என்பதற்கான படிப்படியான வழிகாட்டி.
நிபுணரிடம் கேளுங்கள்: அத்தியாயம் 3 – முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்தல் (தகவல்தொடர்பு)
ஆதாரம்: ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (AIC)
முதுமைக்கால மறதி நோயால் ஏற்படும் மாற்றங்கள் தகவல்தொடர்பை எவ்வாறு பாதிக்கின்றன? என்னென்ன வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும்? முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒருவருடன் பேசும்போது பேசும் வேகம், நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் மற்றும் உடல் பாவனை ஆகியவை முக்கியமா?
இந்த அத்தியாயத்தில், அம்மையார் மைக்கேல் ஓங் மற்றும் திரு அஞ்சாங் ரோஸ்லி முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபருடன் தொடர்புகொள்வது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர்.