Help Us Improve
7 நிமிட வாசிப்பு

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் பெரும்பாலான நபர்களால் தங்களது நோய்நிலையின் ஆரம்பக் கட்டங்களில் தங்கள் மருந்துகளை சொந்தமாக நிர்வகித்துக் கொள்ள முடியும், ஆனால் அவர்களின் முதுமைக்கால மறதி நோய் முற்றுகையில் மருந்துகளை நிர்வகிப்பது மிகவும் கடினமாக இருக்கலாம். மருந்துகளின் தவறான கலவை, மருந்தளவை உட்கொள்வது அல்லது சரியான நேரத்தில் மருந்தை உட்கொள்ள மறப்பது அவர்களை கடுமையான ஆபத்தில் ஆழ்த்தலாம். எனவே, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களும் அவர்களைப் பராமரிப்பவர்களும் பயனுள்ள மருந்து நிர்வாகத்துக்கான அடிப்படைத் திறன்களைக் கொண்டிருப்பது முக்கியம்.

மருந்து நிர்வாகம் குறித்த பொது உதவிக்குறிப்புகள்

தவறவிட்ட மருந்துகள்

முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருந்தை உட்கொள்ள மறந்து விட்டால், கூடிய விரைவில் மருந்தைக் கொடுத்திட வேண்டும். இருப்பினும், அடுத்த மருந்தளவிற்கான நேரம் நெருங்கிவிட்டால், தவறவிட்ட மருந்தைத் தவிர்த்திட வேண்டும். தவறவிட்ட மருந்தளவை ஈடுசெய்ய மருந்தளவை இரட்டிப்பாக்கக்கூடாது. பராமரிப்பாளர்கள் மற்றும் பராமரிப்பு நிபுணர்கள் தவறவிட்ட அல்லது ஒழுங்கற்ற மருந்தளவுகளைக் குறித்து வைத்துக் கொண்டு, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரைப் கவனித்து  வரும் மருத்துவக் குழுவுடன் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

மருந்துகள் அல்லது பிற தயாரிப்புகளை உட்கொள்வது பற்றி மருத்துவக் குழுவுடன் வெளிப்படையாக இருத்தல்

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் பின்வருவனவற்றை எடுத்துக்கொள்கிறாரா என்பது குறித்து பராமரிப்பாளர்கள், பராமரிப்பு வல்லுநர்கள் மற்றும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரைப் பார்த்துக்கொள்ளும் மருத்துவர்(கள்) மற்றும் மருந்தாளர்(கள்) அனைவருடனும் வெளிப்படையாக இருக்க வேண்டும்:

  • முன்னர் பரிந்துரைக்கப்பட்ட ஏதேனும் மருந்துகள் அல்லது துணைநிறைவு மருந்துகள்
  • பாரம்பரிய மருந்துகள் உட்பட பிற மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகள்
  • மூலிகை தயாரிப்புகள், துணைநிறைவு மருந்துகள் அல்லது ஊட்டச்சத்துத் தயாரிப்புகள்.

 

இவற்றுள் அடங்குவன:

  • நபரின் முதுமைக்கால மறதி நோய் மற்றும் பிற நோக்கங்களுக்காகப்பரிந்துரைக்கப்படும் மருந்துகள்
  • மாத்திரைகள், ஊசி மருந்துகள், உள்ளிழுக்கும் மருந்துகள் மற்றும் மேற்பூசும் மருந்துகள் மற்றும் கிரீம்கள் (தோலில் தடவப்பட்டவை) உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் பரிந்துரைக்கப்படும் மருந்துகள்.

 

மருந்துகளின் தீங்கு விளைவிக்கும் குறுக்கீடுகளைத் தவிர்க்க இந்தக் குழுக்கள் மத்தியில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். மருந்துகளைக் கண்காணிப்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு நோயாளியின் மருந்துப் பட்டியல் குறித்து கீழே உள்ள பகுதியைப் பார்க்கவும்.

மருந்தளிப்பு அறிவுறுத்தல்களில் கவனம் செலுத்தி, அவற்றைப் பின்பற்றுதல்

மருத்துவர் அல்லது மருந்துகளை வழங்கும் மருந்தாளர் தெரிவிக்கும் சிறப்பு அறிவுறுத்தல்களைக் கவனித்து, அவற்றைப் பின்பற்றுங்கள். அறிவுறுத்தல்களின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

  • ஒரு நாளைக்கு மருந்தை எத்தனை முறை எடுத்துக் கொள்ள வேண்டும், ஒவ்வொரு உட்கொள்ளலின்போதும் எவ்வளவு மருந்து எடுக்க வேண்டும் மற்றும் மருந்துச் சீட்டில் உள்ள மருந்துகளை எவ்வளவு காலம் உட்கொள்ள வேண்டும்
  • அந்த நபர் மருந்தை சாப்பாட்டுக்கு முன்பு எடுத்துக் கொள்ள வேண்டுமா அல்லது பின்பு எடுத்துக் கொள்ள வேண்டுமா
  • மருந்தை எடுத்துக்கொள்ளும்போது என்னென்ன உணவைத் தவிர்க்க வேண்டும்
  • மருந்தை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்

பக்க விளைவுகளைக் கவனித்தல்

மருந்துகளை எடுக்கும்போது, குறிப்பாக புதிதாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது, மருந்தின் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படுகின்றனவா எனக் கவனியுங்கள். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர், அவர்கள் அனுபவிக்கும் பக்க விளைவுகளைப் பற்றி மற்றவர்களுக்கு எச்சரிக்கும் வார்த்தைகளைக் கண்டுபிடிக்க சிரமப்படலாம். பக்க விளைவுகள் குறித்து உடனடியாக மருத்துவரிடம் தெரிவிப்பதில் கவனமாக இருங்கள்.

தலைச்சுற்றல்

தலைச்சுற்றலை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் இது கீழே விழும் அபாயத்தை அதிகரிக்கலாம், குறிப்பாக வயதான பெரியவர்கள் மத்தியில் கீழே விழும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

பத்திரப்படுத்தும் வழிமுறைகளில் கவனம் செலுத்துதல்

மருந்துகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்: பத்திரப்படுத்துதல் மற்றும் காலாவதி குறித்து அறிந்துகொள்ளுங்கள்

ஆதாரம்: சுகாதார அமைச்சு

நோயாளிகளும் பராமரிப்பாளர்களும் தங்களின் மருந்தை முறையாகச் பத்திரப்படுத்தி  வைப்பதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் காலாவதியான அல்லது இனி பயன்படுத்தப்படக் கூடாத மருந்துகளை எப்படிக் கண்டறிவது என்பதை இந்தக் குட்டி வீடியோ விவரிக்கிறது.

நேரடி சூரிய வெளிச்சம் மற்றும் வெப்பம் இல்லாத, குளிர்ச்சியான மற்றும் உலர்வான இடத்தில் மருந்துகளைச் பத்திரப்படுத்தி  வைப்பது முக்கியம். சில மருந்துகளை குளிரூட்டப்பட்ட  இடங்களில் வைக்க வேண்டியிருக்கலாம். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒருவர் பகல்நேரப் பராமரிப்பு நிலையம் அல்லது பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்காக பகலில் வெவ்வேறு இடங்களுக்குச் சென்றால், மருந்துகள் பொருத்தமான நிலையில் வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

மருத்துவரின் அறிவுறுத்தலின்படி மருந்தளித்தல்

மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் முதலில் கலந்தாலோசிக்காமல் பயன்படுத்தும் எந்த மருந்தையும் நிறுத்தாதீர்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், மருத்துவர் அல்லது மருந்தாளரைத் தொடர்புகொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள். பராமரிப்பாளர்கள் மற்றும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் தங்கள் மருந்துப் பரிந்துரைகள் குறித்து தாங்களாகவே முடிவெடுக்கக் கூடாது. மருந்து செயல்படுவதற்கு நேரம் எடுக்கும், எனவே சிறிது நேரம் பலன்கள் எதுவும் தென்படாவிட்டாலும், பரிந்துரைக்கப்படும் மருந்தைப் பின்பற்றுவது முக்கியம். கூடுதலாக, மருந்தின் விளைவுகள் நபருக்கு நபர் வித்தியாசப்படும், எனவே மற்றவர்களுக்கு அம்மருந்து வித்தியாசமாக செயல்பட்டாலும், பராமரிப்பாளர்களும் அதை எடுத்துக்கொள்பவர்களும் தங்கள் மருந்தின் அளவை மாற்றுவதற்கு சுயாதீனமாக முடிவு செய்யக்கூடாது.

ஒருங்கிணைந்த மருந்து உதவி

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் வெவ்வேறு பராமரிப்பாளர்கள் மற்றும் பராமரிப்பு நிபுணர்களால் பராமரிக்கப்படலாம், எனவே இந்த வெவ்வேறு நபர்களிடமிருந்து மருந்து நினைவூட்டல்கள் அல்லது உதவித் தேவைப்படலாம். பராமரிப்பாளர்கள் மற்றும் பராமரிப்பு நிபுணர்கள் அனைவரும் அந்த நபரின் மருந்துப் பரிந்துரைகளைச் சரியாகப் பின்பற்றுவதும், தேவைப்பட்டால் உதவி வழங்கத் தயாராக இருப்பதும் முக்கியம்.

மருந்துப் பதிவுகள்: நோயாளியின் மருந்துப் பட்டியல்

எடுத்துவரும் அனைத்து மருந்துகளின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை வைத்திருப்பது முக்கியம். இந்தப் பட்டியல் நோயாளியின் மருந்துப் பட்டியல் (PML) என்று அழைக்கப்படுகிறது.

இந்தப் பட்டியல் பல்வேறு சுகாதார நிபுணர்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தை எளிதாக்குகிறது, மேலும் முதன்முறையாக முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களைப் பார்க்கும்போது சுகாதார நிபுணர்கள் பயன்படுத்தக்கூடிய முக்கியத் தகவல்களையும் இது கொண்டுள்ளது. மருந்து உடலில் தீவிரமாகச் செயல்பட்டால் அல்லது மருந்தை அதிகளவு உட்கொண்டுவிட்டால், அதைச் சமாளிக்க தயாராக இருப்பதற்கும் இது உதவுகிறது.

நோயாளியின் மருந்துப் பட்டியலில் பின்வருவன இடம்பெற்றிருக்க வேண்டும்:

  • இரண்டு அடையாளங்கள் எ.கா. பெயர் மற்றும் NRIC எண்
  • நாட்பட்ட நோய்  நிலைமைகள்
  • ஏதேனும் மருந்து அல்லது உணவு ஒவ்வாமை மற்றும் ஒவ்வாமை எதிர்வினை பற்றிய விளக்கம்
  • அனைத்து மருந்துகள்/துணைநிறைவு மருந்துகள்/ஊட்டச்சத்துக்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் (பிராண்டு பெயர் மற்றும் செயலில் உள்ள மூலப்பொருள்), சக்தி, மருந்தளவு அறிவுறுத்தல்கள் மற்றும் பயன்பாட்டிற்கான காரணம்
  • கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட தேதி

 

மருத்துவ நிலையம், மருத்துவமனை அல்லது மருந்தகத்திற்கு ஒவ்வொரு முறை வருகைப்புரியும்போதும் புதுப்பிக்கப்பட்ட பட்டியலைக் கொண்டுவந்து, அதை சுகாதார நிபுணரிடம் காட்டவும். பட்டியலில் எளிதாக அடையாளம் காண மருந்து மற்றும் அதன் பாட்டிலின் படத்தையும் சேர்ப்பது உதவியாக இருக்கும்.

சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட நோயாளிகளுக்கான மருந்துப் பட்டியலின் டெம்ப்ளேட்டை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.

மருந்துகளை எடுத்துக்கொள்வதை நினைவில் கொள்ளுதல்

சரியான நேரத்தில் மருந்தளவை தொடர்ந்து எடுத்துக் கொள்ள மறப்பது மருந்தின் செயல்திறனைக் குறைக்கும். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் சரியான நேரத்திலும் சீரான முறையிலும் தங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்வதை உறுதி செய்வதற்கான வழிகளை பராமரிப்பாளர்கள் மற்றும் பராமரிப்பு நிபுணர்கள் கண்டுபிடிப்பது முக்கியம்.

நாளின் வெவ்வேறு நேரங்களில் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகளைக் கண்காணிப்பது பராமரிப்பாளர்களுக்கும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழுபவர்களுக்கு போராட்டமாக இருக்கலாம், குறிப்பாக நாள் முழுவதும் உணவுக்கு முன்னும் பின்னும் பல்வேறு மருந்துகள் எடுக்க வேண்டியிருக்கும்போது. முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒருவருக்கு இது இன்னும் சவாலானதாக இருக்கலாம்.

இருப்பினும், சில எளிய நினைவூட்டல்கள் மற்றும் பிற மருந்து நிர்வாக கருவிகள் மூலம், மருந்துகளை திறம்பட அளித்திட முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆரம்பக் கட்ட முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்கள் தங்கள் மருந்துகளை தொடர்ந்து பிறர் உதவியை நாடாமல் எடுத்துக்கொள்ளலாம்.

இதைச் செய்ய பல்வேறு முறைகளைப் பயன்படுத்தலாம். இந்த முறைகளில் சில முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் முதுமைக்கால மறதி நோயின் ஆரம்பக் கட்டங்களில் பிறரின் உதவியை நாடாமல் இருக்க முடியும்.

மருந்துப் பெட்டிகளைப் பயன்படுத்துதல்

மருந்துகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்: மருந்துப் பெட்டியை எப்படிப் பேக் செய்வது

ஆதாரம்: சுகாதார அமைச்சு

இந்தச் சிறிய வீடியோ, மாத்திரை பெட்டியைப் பேக்கிங் செய்யும் போது நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் மற்றும் தவிர்க்க வேண்டிய தவறுகள் பற்றி விவரிக்கிறது.

மாத்திரை வடிவில் மருந்துகளைக் கண்காணிப்பதற்கான எளிய வழிகளில் ஒன்று மாத்திரைப் பெட்டிகளைப் பயன்படுத்துவதாகும். ஒவ்வொரு மருந்தையும் பெட்டியின் வெவ்வேறு பிரிவில் வைப்பதன் மூலம், மருந்தை உட்கொள்ளும் நபர் சரியான நேரத்தில் அதைக் கண்டறிந்து உட்கொள்வது எளிது. பெட்டியின் ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு மருந்தளவும் எடுக்கப்பட வேண்டிய நாளின் நேரத்தைக் குறிப்பிடுவது, இப்பணியை இன்னும் எளிதாகிறது. இவ்வாறு குறிப்பது மருந்து தவறவிடப்பட்டுள்ளதா என்பதை ஒரு பார்வையில் எளிதாகக் கண்டுபிடிக்கும் கூடுதல் நன்மையையும் கொண்டுள்ளது.

மற்றொரு தீர்வு தானியங்கி மாத்திரை விநியோகிப்பு சாதனங்களைப் பயன்படுத்துவது. இத்தகைய மாத்திரை விநியோகிப்பு சாதனங்களில் அலாரம் இருக்கலாம், இவை மருந்துகளை உட்கொள்ளும் நேரத்தில் பயனருக்கு அதனை நினைவூட்டுகின்றன, மேலும் அந்த நாளின் அந்தந்த நேரத்திற்கு தானாகவே மருந்தை வழங்கும். வெவ்வேறு விலைகளுக்கு சற்றே வித்தியாசமான செயல்பாடுகளை வழங்கும் பல்வேறு வகையான சாதனங்கள் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்றவாறு உள்ளன.

நினைவூட்டல்களை அமைத்தல்

சாப்பிடுவதற்கு பல வேறுபட்ட மருந்துகள் இல்லை என்றால், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபருக்கு சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக் கொள்ள ஒரு எளிய நினைவூட்டல் தேவைப்பட்டால், எளிய விளக்கங்களுடன் அலாரங்களை அமைக்க தொலைபேசியைப் பயன்படுத்துவது பொருத்தமான தீர்வாக இருக்கும். டிஜிட்டல் கடிகாரத்திற்கு அடுத்ததாக தினசரி அட்டவணையை வைப்பதன் மூலம் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் எந்த மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.

கால அட்டவணையைப் பயன்படுத்துதல்

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் மற்றும் அவர்களைப் பராமரித்து வருபவர்கள் மருந்துகளை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள கால அட்டவணையைப் பயன்படுத்தலாம். பல வகையான மருந்துகள் இருந்தால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பராமரிப்பாளர்கள் இல்லாதபோது மற்றவர்களிடம் பராமரிப்புக் கடமைகளை ஒப்படைக்கும்போது அல்லது முதுமைக்கால மறதி நோயுடன் நபர் இல்லம் சார்ந்த பராமரிப்புச் சேவைப் பணியாளர்கள் அல்லது நிலையம் அடிப்படையிலான பராமரிப்பு ஊழியர்களிடமிருந்து மருந்து எடுத்துக்கொள்ளும் உதவிச் சேவைகளைப் பெற்றால் இது உதவியாக இருக்கும்.

மருந்து நிர்வாகச் சேவைகள்

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு கூடுதல் மருந்து நிர்வாகச் சேவைகள் தேவைப்படலாம்.

மருந்து நிர்வாகச் சேவைகள் தேவைப்படுவதற்கான சில காரணங்கள் பின்வருமாறு:

  • முற்றும் முதுமைக்கால மறதி நோய்: நோயின் பிந்தைய கட்டங்களில், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களால் மருந்துகளை பிறர் உதவியை நாடாமல் எடுத்துக்கொள்ள முடியாது.
  • வாழ்க்கை ஏற்பாடுகள்: முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் சிலர் தனியாக வாழலாம் அல்லது மருந்து கொடுக்க வேண்டிய நாளின் சில நேரங்களில் குடும்பத்தினர் அல்லது பராமரிப்பாளர்கள் அவர்களோடு இல்லாமல் இருக்கலாம்.
  • மருந்தின் வகை: சில மருந்துகளை தானே எடுத்துக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கலாம், குறிப்பாக முதுமைக்கால மறதி நோயின் பிற்கால கட்டங்களில் ஊசி, இன்ஹேலர்கள், நெபுலைசர்கள் போன்றவற்றை தானே எடுத்துக் கொள்ள கடினமாக இருக்கலாம்.
  • பல மருந்துகள் மற்றும் உட்கொள்ளும் நேரங்கள்: நாளின் பல்வேறு நேரங்களில் பல மருந்துகளை எடுத்துக்கொள்வது ஒருங்கிணைக்க கடினமாக இருக்கலாம்.

 

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு மருந்து தொடர்பான சேவைகளை வழங்க பொது மற்றும் தனியார் சேவை வழங்குநர்கள் உள்ளன. இந்தச் சேவைகள் மருந்துகளை நிர்வகிப்பதை எளிதாக்குகின்றன. சேவைகளில் அடங்குவன:

  • மருந்துகளைப் பேக் செய்தல்
  • கிளையண்ட்டுகள் மற்றும்/அல்லது பராமரிப்பாளர்களால் மருந்துகளை எடுத்துக் கொள்ள முடியாவிட்டால் மருந்துகளை வழங்குதல்
  • மருந்துகளை மேற்பார்வை செய்தால்
  • மருந்துகளை எடுத்துக்கொள்ள நினைவூட்டுதல்
  • மருந்துகளின் இணக்கம் மற்றும் மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்வது குறித்து கண்காணித்தல்
  • மருந்தகத்தில் இருந்து மருந்துகளைச் சேகரித்தல்
  • பிற சேவைகளாவன: வேறு சில சேவைகள் கீழே உள்ள “கூடுதல் வளமைகள்” பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளன.

மருந்து நிர்வாகச் சேவைகளை எங்குப் பெறுவது

இந்தச் சேவைகளில் ஈடுபடுவதற்கான சில வழிகள் பின்வருமாறு:

  • முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரின் நோய்நிலைமைகள் மற்றும் தேவைகளை நன்கு அறிந்த மருத்துவமனை, பலதுறை மருந்தகம் அல்லது பொது மருத்துவரிடமிருந்து பரிந்துரையைப் பெறவும்.
  • பராமரிப்புச் சேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆலோசனைக்கு, உங்களுக்கு அருகிலுள்ள AIC இணைப்பு இருப்பிடத்தைப் பார்வையிடலாம்.
  • உங்களுக்கு அருகிலுள்ள சேவை வழங்குநர்களைக் கண்டறிய இணையவழி ஈ-கேர் இடமறியும் கருவியையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

 

பணவசதிச் சோதனை மானியத்திற்கு முன், சேவையின் சராசரி விலை ஒரு மணி நேரத்திற்கு $20 ஆகும். பராமரிப்பாளர்கள் மற்றும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு சேவைக்கான நிதி உதவி தேவைப்பட்டால், அவர்கள் மருத்துவமனை அல்லது பலதுறை மருந்தகத்தில் உள்ள சேவை வழங்குநர் அல்லது மருத்துவ சமூக சேவையாளரிடம் பேசலாம்.

கூடுதல் வளமைகள்

HealthHub சேவைகள்: மருந்துச் சீட்டுகளைச் சரிபார்த்து, இணையவழியில் மருந்துச் சீட்டுகளில் உள்ள மருந்துகளை மீண்டும் கோருதல்

HealthHub இணையதளம் மற்றும் மொபைல் செயலி நோயாளிகள் தங்கள் கடந்தகால மருந்துச் சீட்டுகளைச் சரிபார்த்து, இணையவழியில் மருந்துச் சீட்டுகளில் உள்ள மருந்துகளை மீண்டும் கோர அனுமதிக்கிறது.

HealthHub இணையதளம் அல்லது மொபைல் செயலியில் இந்தச் சேவைகளை அணுக நீங்கள் SingPass ஐப் பயன்படுத்த வேண்டும்.

ஆண்ட்ராய்டு செயலியைப் பதிவிறக்கம் செய்க
Apple செயலியைப் பதிவிறக்கம் செய்க

சிங்ஹெல்த் பலதுறை மருந்தகம் வழங்கும் PILBOX & MDS

சிங்ஹெல்த் பலதுறை(SHP) மருந்தகம் லாக்கர் பெட்டியில் மருந்துச்சீட்டு (Prescription In Locker Box, PILBOX) மற்றும் மருந்து விநியோகச் சேவை (Medication Delivery Service, MDS) இரண்டையும் வழங்குகிறது.

PILBOX நோயாளிகள் அல்லது அவர்களைப் பராமரிப்பவர்கள் வரிசையில் நிற்காமல் எந்த நேரத்திலும் திரும்பக் கோரும் மருந்துச் சீட்டில் உள்ள மருந்துகளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கிறது.

இது பின்வரும் இடங்களில் கிடைக்கிறது:

1. SHP-பிடோக்
2. SHP-மரீன் பரேட்
3. SHP-செங்காங்
4. SHP-பொங்கோல்
5. SHP-தெம்பனிஸ்

மருந்து விநியோகச் சேவை (Medication Delivery Service, MDS) நோயாளிகள் அல்லது அவர்களைப் பராமரிப்பவர்கள், பலதுறை மருந்தகத்திற்கு நேரடியாகச் செல்லாமல், அவர்களுக்கு விருப்பமான முகவரிக்கு திரும்பக் கோரும் மருந்துச் சீட்டு மருந்துகளை விநியோகிக்க அனுமதிக்கிறது.

இந்த விநியோகச் சேவை தற்போது அனைத்து SHP மருந்தகங்களிலும் கிடைக்கிறது.

தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழு (NHG) மருந்தகம் வழங்கும் ConviDose™

ConviDose™ என்பது தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழு (NHG) மருந்தகம் வழங்கும் பல மருந்தளவு பேக்கேஜிங் இணக்கச் சேவையாகும், இது நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு அவர்களின் மருந்துகளை ஏற்பாடு செய்ய உதவுகிறது.

மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நேரத்திற்கு ஏற்ப சரியான அளவு மருந்துகள் ஒவ்வொரு பாக்கெட்டிலும் பேக் செய்யப்பட்டிருக்கும்.

ConviDose™ என்பது எளிதாகப் பின்பற்றுவதற்கான அமைப்பாகும், இது நோயாளிகள் அல்லது பராமரிப்பாளர்கள் மருந்துகளை எளிதாக நிர்வகிக்கவும், தவறவிட்ட அளவைக் கண்டறியவும் அனுமதிக்கிறது.

தற்போது, ​​ConviDose™ சேவை பின்வரும் பலதுறை மருந்தகங்களில் கிடைக்கிறது:

1. அங் மோ கியோ பலதுறை மருந்தகம் 
2. கேலாங் பலதுறை மருந்தகம்
3. ஹவ்காங் பலதுறை மருந்தகம்
4. காலாங் பலதுறை மருந்தகம்
5. தோ பாயோ பலதுறை மருந்தகம்
6. உட்லண்ட்ஸ் பலதுறை மருந்தகம்
7. யீஷூன் பலதுறை மருந்தகம்    

தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழு (NHG) மருந்தகத்தின் ConviDose™ சேவை

ஆதாரம்: தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழு (NHG) மருந்தகம்

ConviDose™ என்பது உங்கள் மருந்துகளை ஏற்பாடு செய்ய உதவும் ஒரு சேவையாகும். இது நீங்கள் அல்லது உங்கள் பராமரிப்பாளர் மருந்துகளை எளிதாக நிர்வகிக்க அனுமதிக்கும் எளிதாகப் பின்பற்றக்கூடிய அமைப்பாகும். 

‘Ask-a-Pharmacist’ by NHG Pharmacy

தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழு (NHG) மருந்தகம் வழங்கும் ‘மருந்தாளரிடம் கேளுங்கள் (Ask-a-Pharmacist)’ .

நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்கள் கேள்விகளை அவர்களின் இணையதளத்தில் இடுகையிடலாம் ..

உங்களுக்கு உடனடி ஆலோசனை தேவைப்பட்டால், மருத்துவரை அணுகவும் அல்லது 6355 3000 என்ற எண்ணில் தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழு (NHG) பலதுறை மருந்தகங்களை தொடர்பு நிலையம் வழியாக தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழு (NHG) மருந்தாளரை அழைக்கவும். 

சுகாதார அமைச்சின் ‘உங்கள் மருந்துகளை அறிந்து கொள்ளுங்கள்’

சுகாதார அமைச்சு வழங்கும் உங்கள் மருந்துகளை அறிந்து கொள்ளுங்கள் என்பது நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு அவர்களின் மருந்துகளை திறம்பட நிர்வகிப்பதற்கான அடிப்படை திறன்களை கற்பிப்பதை நோக்கமாகக் கொண்ட வீடியோக்கள் மற்றும் விளக்கப்படங்களின் தொடர் ஆகும்.

இந்தத் தொடரில் உள்ளடக்கப்படும் திறன்கள்:

1. மருந்தின் லேபிள் குறித்து அறிந்துகொள்ளுதல்
2. உங்கள் மருந்துகளை எப்படி எடுத்துக்கொள்வது என்பதை எப்படி நினைவில் கொள்வது என்று தெரிந்து கொள்ளுதல்
3. உங்களிடம் போதுமான மருந்து இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளுதல்
4. சேமிப்பகம் மற்றும் காலாவதி குறித்து அறிந்துகொள்ளுதல்
5. மருந்தகப் பட்டியலை எப்படி உருவாக்குவது என்று அறிந்துகொள்ளுதல்
6. மருந்துப் பெட்டியை எப்படிப் பேக் செய்வது

Was this article helpful?

Yes No
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest

1. Teo, J., & Tan, C. (2021, March 5). Budget debate: Central national pharmacy being set up to deliver medications to patients’ homes. The Straits Times. https://www.straitstimes.com/singapore/politics/budget-debate-central-national-pharmacy-being-set-up-to-deliver-medications-to. 2. Speech By Dr Koh Poh Koon, Senior Minister Of State For Health, At The Ministry Of Health Committee Of Supply Debate 2021, On Friday 5 March 2021. Ministry of Health. (2021, March 5). https://www.moh.gov.sg/news-highlights/details/speech-by-dr-koh-poh-koon-senior-minister-of-state-for-health-at-the-ministry-of-health-committee-of-supply-debate-2021-on-friday-5-march-2021.

Was this article helpful?

Yes No
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest

Downloadable Resources

The following material contains bite-sized information about dementia. To download or print it, simply click the image. You may also select the language of the material by clicking the “Select Language” button.

Downloadable Resources

The following material contains bite-sized information about dementia. To download or print it, simply click the image. You may also select the language of the material by clicking the “Select Language” button.

Related Articles

Sed tristique blandit facilisis eleifend elit lobortis eros, massa aenean. Suspendisse aliquam eget tortor viverra nulla duis.
Skip to content