எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுங்கள்
HERO_Change in Living Arrangment
6 நிமிட வாசிப்பு

பராமரிப்பாளர்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் அவர்களுக்கு மிகவும் வசதியான சூழலில் வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள், இது பொதுவாக வீடாகவே இருக்கிறது. இருப்பினும், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒருவரை, அவரது தேவைகளை வீட்டில் பூர்த்தி செய்ய முடியாவிட்டால், தாதிமை இல்லத்திற்கு அனுப்பி வைக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். உங்கள் அன்புக்குரியவரை தாதிமை இல்லத்திற்கு அனுப்பி வைப்பதை நீங்கள் எப்போது பரிசீலிக்க வேண்டும் என்பதையும், இந்தச் செயல்முறை முழுவதும் நீங்கள் அவர்களுக்கு எப்படி ஆதரவாக இருக்க முடியும் என்பதையும் பற்றி மேலும் அறிந்திடுங்கள்.

தாதிமை இல்லத்திற்கு ஏன் அனுப்பி வைக்க வேண்டும்?

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களை வீட்டிலேயே வைத்துப் பராமரிப்பது நல்லது, எனவே அவர்கள் தங்களுக்குப் பரிச்சயமான மற்றும் சௌகரியமான சூழலில் மூப்படைவர். இருப்பினும், சில சூழ்நிலைகள் உங்கள் அன்புக்குரியவரை தாதிமை இல்லத்திற்கு அனுப்பி வைப்பதை அவசியமாக்கலாம். அத்தகைய சூழ்நிலைகளில் அடங்குவன:

  • முதன்மைப் பராமரிப்பாளரால் இனி அந்த நபரை நலமுடன் வாழ வேண்டிய பராமரிப்பை வழங்க முடியாவிட்டால்
  • • முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் தனியாக வாழ்ந்துவந்து, அவருக்கு அதிகம் செலவாகும் கூடுதல் பராமரிப்பு தேவைப்பாட்டால் அல்லது அவர் சக்கர நாற்காலியில் அல்லது படுக்கையில் இருக்கக்கூடிய நிலையில் வீட்டிலிருந்து பராமரிப்பை அணுகுவது மகிவும் கடினமாக இருந்தால்
  • சமூகச் சேவைகளால் அவர்களின் தேவைகளைப் போதுமான அளவு பூர்த்திச் செய்ய முடியாவிட்டால்
  • முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் அனுபவிக்கும் முதுமைக்கால மறதி நோயின் நடத்தையியல் மற்றும் உளவியல் சார்ந்த அறிகுறிகள் (Behavioural and Psychological Symptoms of Dementia, BPSDs) அல்லது சூரிய அஸ்தமன நடத்தையால் பராமரிப்பாளரால் அவரைச் சமாளிக்க முடியாமல் போகும்போது ஏற்படக்கூடிய பாதுகாப்பு கவலைகளால்

பின்வருவனவற்றைக் கருத்தில் கொண்டு, முன்னுரிமையின் அடிப்படையில், வாழும் சூழல் ஏற்பாட்டில் மாற்றத்தைச் செய்யுமாறு தொடர்புடைய சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கலாம்:

    1. முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரின் மருத்துவ நிலை
    2. பராமரிப்பாளரின் உளவியல் உணர்ச்சித் தேவைகள் (மன அழுத்தத்தைச் சமாளிக்கும், தனிப்பட்ட உறவுகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தைப் பேணும் பராமரிப்பாளரின் இயலுமை தற்போதைய பராமரிப்பு ஏற்பாட்டால் பாதிக்கப்படுகிறதா)
    3. செயல்பாட்டு நிலை (அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன்) மற்றும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரின் பாதுகாப்பு
    4. சமூகப் பொருளாதார பரிசீலனைகள்

 

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரிடத்து காணப்படும் திடீர் மாற்றங்கள் அல்லது பராமரிப்பாளரின் ஆரோக்கியம் ஆகிய காரணங்களால் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரின் வாழ்க்கை ஏற்பாடுகளை மாற்ற வேண்டியிருக்கலாம். எனவே, இந்தச் சூழ்நிலைகளுக்கு முன்னதாகவே தயார்படுத்திக் கொண்டு, உங்கள் அன்பிற்குரியவர் மனநல ஆற்றலுடன் இருக்கும் வேளையிலேயே அவரின் நீண்டகால பராமரிப்புத் திட்டங்களை அவரிடம் விவாதித்து, அவரது தேவைகளைப் பூர்த்திச் செய்யும் சிறந்த தாதிமை இல்லத்தைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.  

தாதிமை இல்லத்திற்கு அனுப்பி வைப்பதற்கான முடிவை யார் எடுப்பது?

மனநல ஆற்றலைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கும் வரை, முடிவை எப்பொழுதும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களிடம் விட்டுவிட வேண்டும். அதாவது, அவர்கள் இன்னும் முக்கியமான முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்களால் விஷயங்களைப் புரிந்து கொள்ளவும், விருப்பங்களைச் சீர்தூக்கிப் பார்க்கவும், அத்துடன் அவர்களின் முடிவைத் தெரிவிக்கவும் முடியும். இருப்பினும், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் இந்த முடிவை எடுப்பதற்குத் தேவையான மனநல ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை என்றால், அவர் சார்பாக இந்த முடிவை நீண்டகால அதிகாரப் பத்திரமுடையவர் (LPA) எடுக்கலாம். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் யாரையும் நீண்டகால அதிகாரப் பத்திரமுடையவராக (LPA) நியமிக்கவில்லை என்றால், சுகாதாரம் மற்றும் சமூகச் சேவை வல்லுநர்கள் இந்த முடிவைப் பற்றி அவரது நெருங்கிய உறவினருக்கு ஆலோசனை வழங்கலாம். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒருவருக்கு மனநல ஆற்றல் இல்லாமலும், அவருக்கு நெருங்கிய உறவினர் எவருடனும் தொடர்பு இல்லாமலும் இருந்தால், பின்னர் ஒரு தொழில்முறை குழுவை டோனீயாக நியமிக்கலாம். இவர்கள் பொது அறங்காவலர் என்று குறிப்பிடப்படுகிறார்கள்.

மனநல ஆற்றல் சட்டம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நடைமுறைக் கோட்பாடைப் பார்க்கவும்.

COP_thumbnail

நடைமுறைக் கோட்பாடு – மனநல ஆற்றல் சட்டம் 
ஆதாரம்: பொது காப்பாளர் அலுவலகம்

நடைமுறைக் கோட்பாடு மனநல ஆற்றல் சட்டம் பற்றி விரிவாகக் கூறுகிறது, குறிப்பாக அது உண்மையான சூழ்நிலைகளில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை விவரிக்கிறது. இது தொழில் வல்லுநர்கள், கட்டணம் பெறும் பராமரிப்பாளர்கள், முறைசாரா பராமரிப்பாளர்கள், தொடர்புடைய நபரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மனநல ஆற்றல் இல்லாத அந்த நபரின் நலன்களைப் பாதுகாக்க சட்டத்தின்படி அவர்களுக்கு இருக்கும் பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

முதுமைக்கால மறதி நோயுள்ள அன்பானவருடன் வாழ்வதானது கொண்டு வரக்கூடிய மாற்றங்களைப் பற்றி பராமரிப்பாளர்கள் கவலைப்படுவது இயல்பானதே. தங்களின் அன்பிற்குரியவரை தாதிமை இல்லத்திற்கு அனுப்பும் முடிவைப் பற்றி பலர் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறார்கள், அது அவர்களது அன்பிற்குரியவர்களின் சிறந்த
நலன்களுக்காகவே இருந்தாலும் சரி.

தாதிமை இல்லத்திற்கு அனுப்புவதை எப்படி மேற்கொள்ள வேண்டும்?

உங்கள் அன்பிற்குரியவர் தாதிமை இல்லத்தில் நுழையும்போது சூழலுக்கு ஏற்ப மாறும் காலத்தை கடந்து வருவார். தாதிமை இல்ல இடை ஓய்வுப் பராமரிப்பு என்பது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு குறுகிய கால சிகிச்சையை வழங்கும் ஒரு சேவையாகும், மேலும் இங்கு முதுமைக்கால மறதி நோயுள்ளவர்கள் பல நாட்கள் முதல் அதிகபட்சம் ஒரு மாதம் வரை தங்கலாம். இது முக்கியமாக, பராமரிப்பாளர்களால் தற்காலிகமாக பராமரிக்க இயலாதபோது அவர்களுக்கு இடை ஓய்வு அளிக்கும் வகையில் இருந்தாலும், தாதிமை இல்லத்தில் இருக்கும் பராமரிப்பு சூழலுக்கு உங்கள் அன்பிற்குரியவர் எப்படி செயல்படுவார் என்பதையும் குடும்பங்கள் அந்த மாற்றத்திற்குப் பழகுவதையும் பார்ப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாக இருக்கும். இடை ஓய்வுப் பராமரிப்பு விருப்பங்களுக்குத் தகுதி பெற, உங்கள் அன்பிற்குரியவர் சில குறைந்தபட்ச நிபந்தனைகளைப் பூர்த்திச் செய்ய வேண்டும்:  

    • மிதமானது முதல் அதிகப்படியான மருத்துவப் பராமரிப்புத் தேவைகளைக் கொண்டிருக்க வேண்டும்
    • o இடை ஓய்வுப் பரமாரிப்புக் காலத்தின் முடிவிற்குப் பிறகு வெளியேறும்போது பராமரிப்புத் திட்டத்தை கொண்டிருக்க வேண்டும் (அவர்களுக்கு நிரந்தரமாக தங்கும் இடம் இருக்க வேண்டும்)
    • விண்ணப்பத்திற்கு மருத்துவப் பதிவுகள் தேவைப்படும்

 

பெரும்பாலும், தாதிமை இல்லத்திற்கான விண்ணப்பம் ஒரு சமூக சேவையாளரைத் தொடர்புகொள்வதன் மூலம் செய்யப்படுகிறது. விண்ணப்பத்தின் ஒரு பகுதியாக, இடை ஓய்வு அல்லது தாதிமை இல்லத் திட்டங்களுக்கு உங்கள் அன்பிற்குரியவரின் தகுதியை மதிப்பிடுவதற்கு ஒரு தேவை மதிப்பீடு நடத்தப்படும், அத்துடன் சம்பந்தப்பட்ட அனைவரின் கருத்தையும் கேட்க ஒரு குடும்ப கலந்துரையாடல் நடத்தப்படும். விண்ணப்ப அளவுகோல்களைப் பற்றி இங்கே நீங்கள் மேலும் அறியலாம். 

நீங்கள் அல்லது யாரேனும் அங்கீகரிக்கப்பட்ட பராமரிப்பாளர் உங்கள் அன்பிற்குரியவரின் சமீபத்திய (விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த ஆறு மாதங்களுக்கான தேதியில் இருக்க வேண்டும்) மருத்துவ அறிக்கையை வழங்க வேண்டும், அதில் பின்வருவன இடம்பெற்றிருக்க வேண்டும்:    

  • கண்டறியப்பட்ட நோய் 
  • மருத்துவ வரலாறு 
  • தற்போதைய செயல்பாட்டு நிலை 
  • தேவையான தாதிமை செயல்முறைகள் 
  • மருந்து ஒவ்வாமை வரலாறு (தற்போது மருத்துவர் பரிந்துரைத்திருக்கும் மருந்துகளின் பட்டியல் உட்பட)
  • அறிவாற்றல் மற்றும் நடத்தை ரீதியான அறிகுறிகள் (பொருந்தினால்) 
  • மார்பு ஊடுகதிர் சோதனை முடிவுகள் (தொற்று நோய்க்கு எதுவும் இல்லை என்ற முடிவைக் கொண்டிருக்க வேண்டும்) 

 

விண்ணப்பித்த கடந்த ஆறு மாதங்களுக்குள் உங்கள் அன்பிற்குரியவர் மருத்துவமனையிலிருந்நு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தால், அவரது மருத்துவமனை டிஸ்சார்ஜ் சுருக்கத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம். இந்த ஆவணங்கள் அனைத்தையும் உங்கள் அன்பிற்குரியவரின் முதன்மை மருத்துவர் வழங்கலாம்.

தாதிமை இல்லங்கள் உங்கள் அன்பிற்குரியவரின் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கும். சில தாதிமை இல்லங்கள், முதுமைக்கால மறதி நோயுடன் நடமாடக்கூடிய, ஆனால் பொது வார்டுகளில் சேர்க்க இயலாத நடத்தைகளைக் கொண்டிருக்கக் கூடியவர்களுக்கென சிறப்பு வார்டுகளைக் கொண்டுள்ளன. பொது தாதிமை இல்லங்களைப் பொறுத்தவரையில், பொதுவாக சக்கர நாற்காலி அல்லது படுக்கையில் இருக்கும் மூத்தோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தனியார் தாதிமை இல்லங்களுக்கு, யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

வாழ்க்கை ஏற்பாட்டில் மாற்றம் செய்வது பற்றிய கூடுதல் தகவல்களை அறிய, AIC இணைப்புகளில் உள்ள பராமரிப்பு ஆலோசகரிடம் நீங்கள் பேசலாம். மாற்றாக, உங்கள் அன்பிற்குரியவரின் திட்டமிடப்பட்ட மருத்துவர் வருகைகளின்போது பலதுறை மருந்தகங்களில் உள்ள மருத்துவ சமூகச் சேவையாளரிடமும் நீங்கள் பேசலாம்.

தாதிமை இல்லத்திற்கு அனுப்பும்போது உங்கள் அன்பிற்குரியவரின் தேவைகளை நிவர்த்திச் செய்தல்

உங்கள் அன்பிற்குரியவர் தாதிமை இல்லத்தில் அனுமதிக்கப்படும்போது அவரது தனிப்பட்ட உடைமைகளை அவரால் குறைந்த எண்ணிக்கையிலேயே கொண்டு வர இயலும். பெரும்பாலும், அவர்களுக்கு ஒரு அலமாரி மட்டுமே ஒதுக்கப்படுகிறது, அல்லது தனிப்பட்ட ஆடைகளுக்கான எளிமையான இழுப்பறையாக கூட அது இருக்கலாம். அவர்களால் செல்லப்பிராணிகளை அவர்களுடன் கொண்டு வர முடியாது, உங்கள் அன்பிற்குரியவர் குடும்ப செல்லப்பிராணியுடன் மிகவும் பற்றுதலாக இருந்தால் இது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயமாகும். முடிந்தவரை, உங்கள் அன்பிற்குரியவரின் நம்பிக்கை மற்றும் மொழி விருப்பங்கள் நீங்கள் விண்ணப்பிக்கும் தாதிமை இல்லத்துடன் பொருந்துமா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். நம்பிக்கை சார்ந்த அமைப்புகளுடன் இணைந்த பல தாதிமை இல்லங்கள் உள்ளன.
 

தாதிமை இல்லத்திற்கு மாறிய பிறகு, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரிடம் அவர் அங்கு மாறிய பிறகு எப்படி உணருகிறார் என்பதை இயன்றளவு சீக்கிரமாக பேசுங்கள். பல மூத்தோர்கள் தாதிமை இல்லத்திற்குச் செல்லும்போது இடமாற்ற மன அழுத்தத்தை அனுபவிக்கின்றனர், இருப்பினும் புதிய இடத்திற்கு ஏற்ப மாறும் காலம் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டிருக்கும். சில தாதிமை இல்லங்களில் குடும்பம் மற்றும் வீட்டில் வசிப்பவர்களின் நண்பர்களுக்கான ஆதரவுக் குழுக்கள் உள்ளன, நீங்கள் எடுத்த முடிவைப் பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால் இக்குழுக்கள் உங்களுக்கு உதவக்கூடும். உங்கள் அன்பிற்குரியவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஆர்வங்களைப் பற்றி பராமரிப்பு இல்ல தாதிமைகள்/ஊழியர்களிடம் பேசுங்கள். உங்கள் அன்பிற்குரியவர் தாதிமை இல்லத்திற்குச் சென்ற பிறகும் அவர் பராமரிப்பில் நீங்கள் தீவிரமாக ஈடுபடலாம்.

தாதிமை இல்லத்திலிருந்து வீடு திரும்புதல்

நீங்கள் அல்லது யாரேனும் அங்கீகரிக்கப்பட்ட பராமரிப்பாளர் உங்கள் அன்பிற்குரியவரின் சமீபத்திய (விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த ஆறு மாதங்களுக்கான தேதியில் இருக்க வேண்டும்) மருத்துவ அறிக்கையை வழங்க வேண்டும், அதில் பின்வருவன இடம்பெற்றிருக்க வேண்டும்: முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள், தாதிமை இல்லத்திலிருந்து மீண்டும் வீட்டு சூழலுக்கு மாறுவது பொதுவானது அல்ல. நிகழும் பட்சத்தில், டிஸ்சார்ஜ் கேர் திட்டமிடலின் ஒரு பகுதியாக பராமரிப்பாளர்/பாதுகாவலர் முதியோர் இல்லத்தில் உள்ள பராமரிப்புக் குழுவுடன் உரையாட வேண்டும். தொழில்சார் சிகிச்சை நிபுணரை வீட்டிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்து, உங்கள் வீட்டை அன்பிற்குரியவருக்கு பாதுகாப்பானதாக மாற்ற தேவையான மாற்றங்களைப் பரிந்துரைக்க சொல்லலாம். உங்கள் அன்பிற்குரியவரை திரும்ப வீட்டிற்கு அழைத்துவ் வருவது குறித்து நீங்கள் பரிசீலிக்கிறீர்கள் என்றால், நீங்கள் தாதிமை இல்லத்திலிருந்து வீட்டு விடுப்புக்கு விண்ணப்பிக்கலாம், எனவே அவர்கள் மாற்றத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ளலாம். வீட்டு விடுப்பின் கீழ், தாதிமை இல்லத்தில் வசிப்பவர்கள் வீட்டில் இருப்பதற்குத் தற்காலிகமாக அனுப்பி வைக்கப்படுவார்கள்.

கிடைக்கப்பெறும் ஆதரவுச் சேவைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, சமூக வளமை, ஈடுபாடு மற்றும் ஆதரவுக் குழுவைத் (CREST) தொடர்பு கொள்ளுங்கள். 

தாதிமை இல்லங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான நிதி உதவி

தாதிமை இல்லங்கள் மிகவும் செலவு அதிகமானதாக இருக்கும். மானியங்களுக்கு முன், பொது தாதிமை இல்லங்களுக்கு மாதத்திற்கு சராசரியாக $4,000 ஆகும். சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் ஒவ்வொரு நபரின் மாதாந்திர குடும்ப வருமானத்தைப் பொறுத்து தாதிமை இல்லங்களுக்கான 10-75% மானியத்தைப் பெற தகுதிப்பெறுவார்கள். சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் மானிய அளவுகளின் அட்டவணையைக் காணலாம்..

பிற நிதி ஆதரவு:

    • o மிதமான/இலேசான இயலாமை: இயலாமையுள்ள முன்னோடிகள் திட்டம்
    • o கடுமையான இயலாமை: இயலாமையுள்ள மூத்தோருக்கான இடைக்கால உதவித் திட்டம்/எல்டர்ஃபண்டு, நீண்டகால பராமரிப்பிற்கான மெடிசேவ், இயலாமையுள்ள முன்னோடிகள் திட்டம்

 

நிதித் திட்டங்களின் விரிவான பட்டியலை இங்கே காணலாம்.

பிற சேவைகள்

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் முடிந்தவரை அவர்கள் எப்போதும் இருக்கும் இடத்தில் மூப்படைவதே சிறந்தது. உங்கள் அன்பிற்குரியவருக்கு தாதிமைப் பராமரிப்பு தேவையில்லாமல் இருந்து, ஆனால் அவருக்கு அதிகப் பராமரிப்பு தேவைகள் இருந்தால், அவர்களின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளுக்கு தேவையான ஆதரவை வழங்கக்கூடிய பல சேவைகள் உள்ளன, அவற்றுள் பின்வருவன அடங்கும்:  

 

ஒரு சில அன்றாட நடவடிக்கைகளில் அவர்களுக்கு சிரமம் இருந்தால், நீங்கள் ஒருங்கிணைந்த இல்ல மற்றும் பகல்நேரப் பராமரிப்பு (Integrated Home and Day Care, IHDC) தொகுப்பிற்கு விண்ணப்பிக்கலாம், இது உங்கள் அன்பிற்குரியவரின் தேவைகளுக்கு ஏற்ற பல்வேறு இல்லம் சார்ந்த மற்றும் நிலையம் சார்ந்த பராமரிப்புச் சேவைகளை இணைக்கிறது. இல்லப் பணியாளரின் உதவியோடு உங்கள் அன்பிற்குரியவரை வீட்டிலேயே நீங்கள் பராமரித்து வந்தால், மேலே உள்ள பிற நிதி ஆதரவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களுக்கு மேலதிகமாக இல்லப் பராமரிப்பு மானியம் மற்றும் புலம்பெயர்ந்த இல்லப்பணியாளர் (MDW) தீர்வைச் சலுகைக்கும் நீங்கள் தகுதிப் பெறலாம்.  

St. Bernadette’s Lifestyle Village அல்லது ரெட் Red Crowns Assisted Living போன்ற உதவி அளிக்கப்படும் வாழும் இடவசதிகளையும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம். இந்த இடவசதிகள் இல்லப் பராமரிப்பு உட்பட மேலே குறிப்பிடப்பட்ட சேவைகளை வழங்கும் சமூகம் சார்ந்த வாழும் இடவசதிகள் ஆகும். இது அன்றாட நடவடிக்கைகளுக்கு உதவி தேவைப்படுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் தாதிமை அல்லது மருத்துவ பராமரிப்பு தேவைப்படுவர்களுக்கானது அல்ல, மேலும் தாதிமை இல்லத்துடன் ஒப்பிடும்போது இது குடியிருப்பாளர்களுக்கு அதிக சுயாதீனத்தையும் தனியுரிமையையும் வழங்குகிறது.

உங்கள் அன்பிற்குரியவர் தனியாக வாழ்ந்து, அதைத் தொடர விரும்பினால், நீங்கள் நட்பு ரீதியான சேவைகளை ஏற்பாடு செய்யலாம் அல்லது ஒரு சமூக தாதியர் வழக்கமான வருகைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யலாம். பராமரிப்பு ஒருங்கிணைப்பிற்காக உங்கள் அன்பிற்குரியவரை சமூக நிகழ்வு மேலாண்மைச் சேவை (Community Case Management Service, CCMS) குழுவுடன் இணைக்கலாம். சமூக நிகழ்வு மேலாண்மைச் சேவை (Community Case Management Service, CCMS) வழங்குநர் உங்கள் அன்பிற்குரியவரின் வசிப்பிடத்தின் பகுதியைச் சார்ந்துள்ளது, எனவே நீங்கள் இது குறித்து மேலும் அறிய AIC பராமரிப்பு ஆலோசகரிடம் பேசலாம் அல்லது உங்கள் அன்பிற்குரியவரின் பொது மருத்துவருடைய பரிந்துரையைப் பெறலாம். 

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் இல்லக் கண்காணிப்பு அமைப்புக்கும் (Home Monitoring System, HoME+) நீங்கள் விண்ணப்பிக்கலாம், இது உங்கள் அன்பிற்குரியவரின் பாதுகாப்பைக் கண்காணிக்கவும், அவசர நிலைகளில் அவர்களுக்கு உதவவும் இயக்க உணரிகள் மற்றும் பீதி பட்டனைப் பயன்படுத்தும் துளை ஏதும் இடப்படாத அமைப்பாகும். இருப்பினும், இந்தச் சேவைக்கு உங்கள் வீட்டில் வைஃபை நெட்வொர்க்கை அமைக்க வேண்டும். Home+க்கு விண்ணப்பத்த காலத்தில் இருந்து காத்திருக்கும் நேரம் ஆறு மாதங்கள் வரை ஆகலாம். 

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் இல்லக் கண்காணிப்பு அமைப்பு (HoME+)

வீட்டுப் பாதுகாப்பிற்கான உதவித் தொலைபேசிச் சேவை மற்றும் கண்காணிப்பு, விழிப்பூட்டல் மற்றும் பதிலளிக்கும் அமைப்பு மூலம், மூத்தோர்கள் தாங்களாகவே வாழ்ந்துக் கொள்வதற்கு இல்லக் கண்காணிப்பு அமைப்பு (HoME+) உதவுகிறது. இது 100% தனியுரிமையை வழங்குகிறது (CCTV இல்லை), மேலும் பெரியவர்களுக்கு அவர்களின் சொந்த வீடுகளில் அதிக சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறது. இந்த அமைப்பானது 2 இயக்க உணரிகள், 1 கதவு உணரி, 1 கேட்வே மற்றும் 1 ட்யூரெஸ் பட்டன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது ஒரு கால் அழைப்பு நிலையம், சமூக பதிலளிப்பாளர்கள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ் சேவை மூலம் முழுமையாக ஆதரிக்கப்படுகிறது.

கூடுதல் வளமைகள்

தாதிமை இல்லத்தைக் கண்டறிதல் | இணைக்கும் பராமரிப்பாளர் உதவிக்குறிப்புகள்

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களைப் பராமரிப்பவர்களுக்கு, தாதிமை இல்லத்தைத் தேர்ந்தெடுப்பது இறுதியில் அவசியமானதாக இருக்கலாம்.

பாட்ஸி சியா 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது தாயின் பராமரிப்பாளராக இருந்து வந்தார். உங்கள் அன்பிற்குரியவருக்கு தாதிமை இல்லத்தைக் கண்டுபிடிப்பதற்கான காரணிகளையும், அவர்களது அன்பிற்குரியவர் வீட்டில் வசிக்காவிட்டாலும் குடும்பங்கள் எவ்வாறு பராமரிப்பையும் அக்கறையையும் வழங்க முடியும் என்பதையும் அவர் சுருக்கிக் கூறுகிறார்.

Was this article helpful?

Yes No
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest

  1. Ministry of Health. Subsidies for Residential Long-Term care services. (n.d.). https://www.moh.gov.sg/healthcare-schemes-subsidies/subsidies-for-residential-long-term-care-services 

  2. Bursack, C. B. (2020, May 21). Coping with the Decision to Put Your Parent in a Nursing Home.  
    AgingCare. https://www.agingcare.com/articles/coping-with-nursing-home-decision-149754.htm 

  3. Yeo, J. (2023, January 12). Everything You Need to Know About Nursing Homes in Singapore. NTUC Income. https://www.income.com.sg/blog/nursing-homes-in-singapore 

Downloadable Resources

The following resources contain bite-sized information that you may download and/ or print: 
Click on the images below to download in English or select another language.

Was this article helpful?

Yes No
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest

Downloadable Resources

The following material contains bite-sized information about dementia. To download or print it, simply click the image. You may also select the language of the material by clicking the “Select Language” button.

Downloadable Resources

The following material contains bite-sized information about dementia. To download or print it, simply click the image. You may also select the language of the material by clicking the “Select Language” button.

Related Articles

Skip to content