Playback speed:
உங்கள் அன்புக்குரியவரின் நிலையின் மாற்றத்துடன் பராமரிப்பாளராக உங்கள் பொறுப்புநிலையும் மாறுகிறது. முதுமைக்கால மறதி நோயின் பல்வேறு கட்டங்களில் பராமரிப்பு வழங்கும் விதத்தை கீழே உள்ளவை சுருக்கமாகக் கூறுகின்றன:1-3
தொடக்கக் கட்டப் பராமரிப்பு வழங்தல்
ஒரு பராமரிப்பாளராக நீங்கள் எதை எதிர்நோக்கலாம்
உங்கள் அன்புக்குரியவருக்கு முதுமைக்கால மறதி நோய் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் திடீரென்று ஒரு பராமரிப்பாளராக புதிய, அறிமுகமில்லாத பொறுப்புநிலையை ஏற்கிறீர்கள் என்பதை உணரலாம். மனஉணர்வுகளால் நீங்கள் திணறடிக்கப்படலாம். இது வழக்கமானதே.:
- நோயறிதல் சோதனை பற்றிய மறுப்பு;
- முதுமைக்கால மறதி நோய் தொடர்பான தகவல் மற்றும் தொழில்முறை உதவியை எங்கு தேடுவது என்பதைப் பற்றி அறியாமல் இருப்பது;
- நோய் நிலை முற்றும்போது எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக மனச்சோர்வு மற்றும் மனக்கவலை;
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்புக்குரியவரை ஆதரிப்பதற்கான உங்கள் இயலுந்திறனைப் பற்றிய பயம் மற்றும் கவலை; மற்றும்
- எதிர்காலத்தின் மீதான கட்டுப்பாட்டை இழப்பதனால் ஏற்படும்கோபம் அல்லது விரக்தி.
ஒரு பராமரிப்பாளராக நீங்கள் என்ன செய்யலாம்
உங்கள் அன்புக்குரியவருக்கு லேசான முதுமைக்கால மறதி நோய் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் சாப்பிடுவது, குளிப்பது மற்றும் ஆடை அணிவது போன்ற பெரும்பாலான அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் அவர் சுயசார்புடன் இருக்க முடிவதற்கு வாய்ப்புள்ளது. அவரால் இன்னமும் வாகனம் ஓட்டவும் வேலை செய்யவும் முடியும்.
எனினும், அவருக்குப் பின்வருவனவற்றை மேற்கொள்வதற்கான நினைவுத்திறனுக்கு உதவ குறிப்புகளும் நினைவூட்டல்களும் தேவைப்படலாம்:
- காரியங்களை திட்டமிட்டு ஒழுங்கமைப்பது
- பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ளுதல்
- மருத்துவ நியமன சந்திப்புகளை நினைவில் வைத்துக்கொள்ளுதல்
- மருந்துகளை நிர்வகித்தல்
- நிதிகளை நிர்வகித்தல்
ஒரு பராமரிப்பாளராக, உங்களால் செய்ய முடிபவை:
- உங்கள் அன்புக்குரியவர் முடிந்தவரை தனது அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் சுயசார்பை அதிகரித்துக்கொள்ள உதவுங்கள். ஒருவரையொருவர் சார்ந்திருப்பதற்கும் சுயசார்புடன் இருப்பதற்கும் இடையே உள்ள சமநிலையை உங்கள் அன்புக்குரியவருடன் நீங்கள் கலந்துரையாடிக் கண்டறியலாம். இது அவர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கலாம்.
- உங்களின் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களின் மனவுணர்வுகளை நீங்கள் இருவரும் சேர்ந்து கலந்துரையாடிப் புரிந்துகொள்ளுங்கள். பராமரிப்பாளர்கள் மற்றும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் இருவருக்கும் மறுப்பும் பயமும் பொதுவானது.
- உங்கள் அன்புக்குரியவர் நன்றாக வாழத் தொடர்ந்து உதவுங்கள். அவருக்கு முதுமைக்கால மறதி நோய் இருப்பது கண்டறியப்பட்டாலும், அவர் முடிந்தவரை நன்றாக வாழ விரும்புவார். உடற்பயிற்சிகள் மற்றும் சமச்சீர் உணவுகள் மற்றும் சமூக ரீதியாக சுறுசுறுப்பாகவும் இணைந்திருப்பதன் மூலமாகவும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க அவர்களை ஊக்குவிக்கவும்.
- நிதி மற்றும் சட்டம் சார்ந்த விவகாரங்கள் மற்றும் நீண்ட காலப் பராமரிப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றில் சேர்ந்து திட்டமிடுங்கள். மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவது மிகவும் உதவியாக இருக்கலாம். இதைச் செய்வதன் மூலம் இந்த விஷயங்களைப் பற்றிய உங்கள் மனக்கலக்கங்களும் கவலைகளும் குறையலாம்.
- உங்கள் மீதும் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பராமரிப்பு வழங்குவது என்பது ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஒரு நீண்ட பயணமாகும். உங்கள் அன்புக்குரியவருக்குத் தரமான பராமரிப்பை வழங்குவதற்கு முதலில் உங்கள் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பராமரிப்பது முக்கியமாகும்.
- தகவல் மற்றும் வளஆதாரங்களுடன் அதிகாரம் பெற்றவராக இருங்கள். முதுமைக்கால மறதி நோய் மற்றும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றிய உங்கள் புரிதலை அதிகரிக்க நீங்கள் நாடக்கூடிய வளஆதாரங்களையும் தகவல்களையும் DementiaHub.SG என்ற இணையதளம் வழங்குகிறது. இந்த இணையதளத்தில் ஆராய்வதற்கும், தேவை ஏற்படும் போதெல்லாம் இதைப் பார்வையிடுவதற்கும் நேரம் எடுத்துக் கொள்ளவும்.
நடுக் கட்டப் பராமரிப்பு வழங்கல்
ஒரு பராமரிப்பாளராக நீங்கள் எதை எதிர்நோக்கலாம்
இப்பொழுது நீங்கள் சில ஆண்டுகள் அனுபவத்துடன் பக்குவமடைந்துள்ள ஒரு பராமரிப்பாளராக இருக்கலாம்.
மிதமான முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்புக்குரியவருக்கு அவரது அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் அதிக ஆதரவு தேவைப்படுவதால், அவரது நடத்தைகள் மற்றும்/அல்லது மனவுணர்வுகளில் மாற்றம் வெளிப்படுவதால், மேலும் அவர் பிரருடன் உரையாடுவதிலும் சிரமங்களை அனுபவிப்பதால், நீங்கள் அவர்களின் நல்வாழ்வை ஆதரிக்க அதிக பொறுப்புகளை எடுத்துக்கொள்வீர்கள். இதில் அவர்களுக்காக முடிவுகளை எடுப்பது மற்றும் உடல் பராமரிப்பை வழங்குவது ஆகியவை அடங்குகின்றன.
இவர் நீங்கள் அறிந்த மற்றும் நீங்கள் விரும்புகின்ற அதே நபரா என்று நீங்கள் சந்தேகப்படும் அளவிற்கு முதுமைக்கால மறதி நோய் உங்கள் அன்புக்குரியவரின் ஆளுமையை படிப்படியாக மாற்றலாம். குறிப்பாக அவருடன் நீங்கள் சிறந்த பிணைப்பைக் கொண்டிருந்தீர்கள் என்றால், இதை ஏற்றுக்கொள்வது உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். இந்தக் கட்டத்தில், உங்கள் அன்புக்குரியவர் இப்போது பேசி தொடர்பு கொள்வதிலும் தன்னை வெளிப்படுத்துவதிலும் உள்ள அனைத்துச் சவால்களையும் மீறி அதே நபராகவே இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சவாலான மற்றும் சோர்வடையச் செய்யும் நாட்கள் இருந்தாலும், நல்ல நாட்களும் இருக்கும். அது நடக்கலாம் அல்லது நடக்காமல் போகலாம் என்றாலும், உங்கள் அன்புக்குரியவருடனான உங்கள் உறவு மேம்படுவதற்கான வாய்ப்பு உள்ளது, மேலும் உங்கள் பராமரிப்புப் பயணத்தின் சில பகுதிகளில் நீங்கள் மகிழ்ச்சியையும் அனுபவிக்கலாம்.
ஒரு பராமரிப்பாளராக நீங்கள் என்ன செய்யலாம்
உங்கள் அன்புக்குரியவர் ஆதரவு மற்றும் உதவிக்காக உங்களை அதிகம் சார்ந்திருப்பவராக மாறுவதால், நீங்கள் ஒரு கட்டமைப்பை நிறுவி அன்றாட நடைமுறைகளை உருவாக்குவது அவசியமாகிறது. அதே நேரத்தில், அவரது முதுமைக்கால மறதி நோய் தொடர்ந்து முற்றி வருவதால், நெகிழ்வுத் தன்மையுடன் இருப்பதும், இந்த நடைமுறைகளுக்கு உங்களைச் சரிசெய்து கொள்வதும் நல்லது. உங்கள் அன்புக்குரியவரைப் பராமரிப்பதற்கான பல்வேறு உத்திகள் மற்றும் வழிகளை உருவாக்கி, மாற்றியமைக்கும்போது, உங்கள் ஆக்கத்திறனைப் பயன்படுத்துங்கள்.
பராமரிப்பு வழங்குதல், அதிக உடல் மற்றும்/அல்லது உணர்ச்சி ரீதியாக உங்களை பாதிக்கலாம் எனவே நீங்கள் உங்களை கவனித்துக்கொள்வதிலும் கவனம் செலுத்துவது முக்கியமாகும்.
பிந்தையக் கட்டப் பராமரிப்பு வழங்கல்
ஒரு பராமரிப்பாளராக நீங்கள் எதை எதிர்நோக்கலாம்
உங்கள் அன்புக்குரியவரின் முதுமைக்கால மறதி நோய் மிகவும் முற்றிய நிலைக்கு முன்னேறுவதால், அவர் தனது அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளுக்கு உங்களை முற்றிலும் சார்ந்து இருப்பார். கூடுதலாக, அவர் சக்கர நாற்காலியில் அல்லது படுக்கையில் நீண்ட நேரம் செலவழிப்பதால், குறிப்பாக தோல் புண்கள் மற்றும் நிமோனியா நோய்த்தொற்றுகளால் மிக எளிதில் பாதிக்கப்படலாம்.
உங்கள் அன்புக்குரியவருக்கு நாள் முழுவதும் அதிதீவிர உடல் பராமரிப்பு தேவைப்படும், மேலும் உங்களுக்கு வீட்டில் கூடுதல் ஆதரவும் உதவியும் தேவைப்படலாம்.
உங்கள் அன்புக்குரியவர் தனது வாழ்க்கையின் கடைசி கட்டத்தை நெருங்குகிறார். இழப்பைச் சமாளிப்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். உங்கள் அன்புக்குரியவர் இறக்கும்போது வருத்தப்படுவது சரியே. அதே நேரத்தில், துக்கம் என்பது எந்தவொரு இழப்புக்கும் உலகளாவிய எதிர்வினையாக இருக்கும் வேளையில், அதற்கான துயரமும் நபருக்கு நபர் மாறுபடும்.
ஒரு பராமரிப்பாளராக நீங்கள் என்ன செய்யலாம்
உங்கள் அன்புக்குரியவர் படுக்கையில் அல்லது சக்கர நாற்காலியில் அதிக நேரம் செலவழித்தாலும், பேசி தொடர்பு கொள்வதிலும் தன்னை வெளிப்படுத்துவதிலும் சிரமங்களைக் கொண்டிருந்தாலும், அவர் இன்னமும் தனது புலன்கள் (பார்வை, செவிப்புலன், வாசனை, சுவை மற்றும் தொடுதல்) மூலம் உலகை அனுபவிக்கும் திறனைக் கொண்டுள்ளார். உணர்வுகளைத் தூண்டும் நடவடிக்கைகளில் நீங்கள் அவரை ஈடுபடுத்தலாம். நமஸ்தே கேர் திட்டம் அத்தகைய நடவடிக்கைக்கு ஒரு உதாரணமாகும்.
உங்கள் அன்புக்குரியவருக்குத் தேவையான தகுந்த பராமரிப்பை அவர் பெறுவதை உறுதிசெய்ய, மாற்றுப் பராமரிப்பு ஏற்பாடுகளைப் பற்றி நீங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுடன் கூடி கலந்தாலோசிக்கலாம்.
உங்கள் துக்கம் பல ஆண்டுகளாக நீடித்து, உங்கள் அன்றாட வாழ்க்கையில் பாதிக்க தொடங்கினால், தயங்காமல் உங்கள் மருத்துவரை பார்க்கவும் அல்லது ஒரு ஆலோசகரைச் சந்திக்கவும்.
முதுமைக்கால மறதி நோயின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்கள் அன்புக்குரியவரை நீங்கள் ஈடுபடுத்தக்கூடிய நடவடிக்கைகளின் கண்ணோட்டத்தை கீழே உள்ளவை வழங்குகின்றன, மேலும் பராமரிப்பு வழங்கல் பொறுப்புநிலையை எளிதாக்குவதற்குக் கிடைக்கக்கூடிய வளஆதாரங்களையும் ஆதரவையும் ஒருவர் நாடலாம்:
முதுமைக்கால மறதி நோயின் லேசான கட்டம்
கேளிக்கை சார்ந்த நடவடிக்கைகளின் உதாரணங்கள்
- வாழ்க்கைக் கதை. உதாரணமாக ஒரு நினைவுக் குறிப்பை எழுதுதல், புகைப்படம் அல்லது காணொளி சேகரிப்பை உருவாக்குதல்
- புகைப்படம் மூலம் நினைவூட்டுதல்
- கலைகள் மற்றும் கைவினைகள்
- பொழுதுபோக்குகள்
- விளையாட்டுகள்
பராமரிப்பு வழங்கல் பொறுப்புநிலையை எளிதாக்குவதற்கான சேவைகள்
- அவசரகாலத் தொடர்பு எண்கள்
- உதவித் தொலைபேசி எண்
- மருத்துவமனைகள்
- பராமரிப்பாளருக்கான பயிற்சி
- கலந்தாய்வு
- இடை ஓய்வுப் பராமரிப்பு
- மூத்தோர் நடவடிக்கை நிலையங்கள்
- மூத்தோர் பராமரிப்பு நிலையங்கள்
பராமரிப்பு வழங்கும் போது நிதி சார்ந்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள்
முதுமைக்கால மறதி நோயின் மிதமான கட்டம்
கேளிக்கை சார்ந்த நடவடிக்கைகளின் உதாரணங்கள்
- புகைப்படம் மூலம் நினைவூட்டுதல்
- கலைகள் மற்றும் கைவினைகள்
- பொழுதுபோக்குகள்
- விளையாட்டுகள்
பராமரிப்பு வழங்கல் பொறுப்புநிலையை எளிதாக்குவதற்கான சேவைகள்
- அவசரகாலத் தொடர்பு எண்கள்
- உதவித் தொலைபேசி எண்
- அரசாங்க மருத்துவமனைகள்
- சமூக மருத்துவமனைகள்
- பராமரிப்பாளருக்கான பயிற்சி
- பராமரிப்பாளர் ஆதரவுக் குழு
- கலந்தாய்வு
- இடை ஓய்வுப் பராமரிப்பு
- இல்லப் பராமரிப்பு
- மூத்தோர் நடவடிக்கை நிலையங்கள்
- மூத்தோர் பராமரிப்பு நிலையங்கள்
- தாதிமை இல்லங்கள்
பராமரிப்பு வழங்கும் போது நிதி சார்ந்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள்
- கேர்ஷீல்டு லைஃப் CareShield Life
- எல்டர்ஷீல்டு ElderShield
- எல்டர்ஃபண்டு ElderFund
- சுறுசுறுப்பான மூத்தோருக்கான மேம்பாட்டுத் திட்டம் Enhancement for Active Seniors (EASE)
- வெளிநாட்டு இல்லப் பணியாளர் தீர்வை சலுகை Migrant Domestic Worker Levy Concession
- இல்லப் பராமரிப்பு மானியம் Home Caregiving Grant (HCG)
- இயலாமையுள்ள மூத்தோருக்கான இடைக்கால உதவி Interim Disability Assistance for the Elderly (IDAPE)
- இயலாமையுள்ள முன்னோடிகள் உதவித் திட்டம் Pioneer Disability Assistance Scheme (PG-DAS)
- மூத்தோர் நடமாட, இயங்க உதவிநிதி Seniors’ Mobility and Enabling Fund (SMF)
- கொம்கேர் இடைக்கால உதவி, குறுகிய முதல் நடுத்தரக் கால உதவி மற்றும் நீண்ட கால உதவித் திட்டங்கள் ComCare Interim Assistance, Short-to-Medium-Term Assistance, and Long Term Assistance schemes
முதுமைக்கால மறதி நோயின் முற்றிய கட்டம்
கேளிக்கை சார்ந்த நடவடிக்கைகளின் உதாரணங்கள்
- கலைகள் மற்றும் கைவினைகள்
- பொழுதுபோக்குகள்
- விளையாட்டுகள்
பராமரிப்பு வழங்கல் பொறுப்புநிலையை எளிதாக்குவதற்கான சேவைகள்
- அவசரகாலத் தொடர்பு எண்கள்
- உதவித் தொலைபேசி எண்
- அரசாங்க மருத்துவமனைகள்
- சமூக மருத்துவமனைகள்
- பராமரிப்பாளருக்கான பயிற்சி
- பராமரிப்பாளர் ஆதரவுக் குழு
- கலந்தாய்வு
- இடை ஓய்வுப் பராமரிப்பு
- இல்லப் பராமரிப்பு
- மூத்தோர் நடவடிக்கை நிலையங்கள்
- மூத்தோர் பராமரிப்பு நிலையங்கள்
- தாதிமை இல்லங்கள்
பராமரிப்பு வழங்கும் போது நிதி சார்ந்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள்
- கேர்ஷீல்டு லைஃப் CareShield Life
- எல்டர்ஷீல்டு ElderShield
- எல்டர்ஃபண்டு ElderFund
- சுறுசுறுப்பான மூத்தோருக்கான மேம்பாட்டுத் திட்டம் Enhancement for Active Seniors (EASE)
- வெளிநாட்டு இல்லப் பணியாளர் தீர்வை சலுகை Migrant Domestic Worker Levy Concession
- இல்லப் பராமரிப்பு மானியம் Home Caregiving Grant (HCG)
- இயலாமையுள்ள மூத்தோருக்கான இடைக்கால உதவி Interim Disability Assistance for the Elderly (IDAPE)
- இயலாமையுள்ள முன்னோடிகள் உதவித் திட்டம் Pioneer Disability Assistance Scheme (PG-DAS)
- மூத்தோர் நடமாட, இயங்க உதவிநிதி Seniors’ Mobility and Enabling Fund (SMF)
- கொம்கேர் இடைக்கால உதவி, குறுகிய முதல் நடுத்தரக் கால உதவி மற்றும் நீண்ட கால உதவித் திட்டங்கள் ComCare Interim Assistance, Short-to-Medium-Term Assistance, and Long Term Assistance schemes
உங்கள் அன்புக்குரியவருக்கான சேவைகளைப் பற்றி கண்டறியுங்கள்.
பராமரிப்பவர்களுக்கான சேவைகள் பற்றி கண்டறியுங்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள நிதித் திட்டங்கள் பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டறியுங்கள்.
Tell us how we can improve?
- Alzheimer’s Association. (n.d.). Early-stage caregiving. https://www.alz.org/help-support/caregiving/stages-behaviors/early-stage
- Alzheimer’s Association. (n.d.). Middle-stage caregiving. https://www.alz.org/help-support/caregiving/stages-behaviors/middle-stage
- Alzheimer’s Association. (n.d.). Late-stage caregiving. https://www.alz.org/help-support/caregiving/stages-behaviors/late-stage