உங்கள் அன்புக்குரியவருக்கான உங்கள் கடமையின் ஒரு பகுதி உங்களை நீங்களே நன்றாகக் கவனித்துக்கொள்வது தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பெரும்பாலான பராமரிப்பாளர்கள் தங்கள் நேரம், ஆற்றல் மற்றும் கவனிப்பு அனைத்தையும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு வழங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனினும், உங்களை நீங்கள் கவனித்துக் கொள்ளாவிட்டால் உங்கள் அன்புக்குரியவரும் பாதிக்கப்படலாம்.
மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம்: ஒரு விமானப் பயணிக்கு விமானம் புறப்படுவதற்கு முன் அளிக்கப்படும் பாதுகாப்பு விளக்கத்தில், பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் முகமூடிகளை அணிய உதவுவதற்கு முன், முதலில் தாங்கள் அணிய வேண்டும் என்று ஒரு விமானப் பணிப்பெண் கூறுகிறார். ஏனென்றால், பெரியவர்கள் சுயநினைவை இழந்தால், குழந்தைகளால் அவர்களைச் சார்ந்திருக்க முடியாது, மேலும் அவர்களின் உயிருக்கு அதிக ஆபத்து ஏற்படும்.
உடற்பயிற்சி
உடல் ரீதியான செயல்பாடு இல்லாத வாழ்க்கைமுறை என்பது அனைத்துப் பெரிய நோய்களுக்குமான ஆபத்துக் காரணியாகும். நடைபயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சியானது, உடற்பயிற்சி செய்ய எளிதான வழியாக உதவுகிறது. வழக்கமான உடற்பயிற்சி உங்கள் மனநிலையையும் தோற்றத்தையும் மேம்படுத்துவது மட்டுமல்லாமல், புதிய நபர்களைச் சந்திக்கும் வாய்ப்புகளையும் வழங்குகிறது. முடிந்தவரை, குறைந்தபட்சம் சில உடற்பயிற்சிகளைச் செய்வதற்கான வழியைக் கண்டறியுங்கள்.
வாரத்திற்கு 5 முறை 30 முதல் 40 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வது பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் தினமும் 5 முதல் 10 நிமிட இடைவெளியில் செய்வது நல்லது.
இளைப்பாறுவதற்கான நுட்பங்கள்
பெரும்பாலான மக்கள் இளைப்பாறுவது மட்டுமே மனதைத் தெளிவுபடுத்தும் என்று நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மையில் எதிர்மறையைக் கடப்பதற்கும் ஆக்கபூர்வமான எண்ணங்களை வளர்ப்பதற்கும் விஷயங்களை அவதானித்துப் புரிந்துகொள்வதற்காகும். ஒருவர் மசாஜ், ஃபேஷியல் அல்லது நீச்சலையும் கருத்தில் கொள்ளலாம், ஏனெனில் இந்த நடவடிக்கைகள் இளைப்பாறுவதற்கும் தியானம் செய்வதற்குமான ஒரு வழியாகும்.
ஊட்டச்சத்து
ஊட்டச்சத்து முக்கியமானது. உணவு விவரச்சீட்டுகளைப் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளவும், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும். பரிமாறல் அளவைப் அறியவும், புரிந்து கொள்ளவும், கண்காணிக்கவும், இதன் மூலம் உங்கள் உடலுக்கு ஒவ்வொரு வகையான ஊட்டச்சத்து எவ்வளவு தேவை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
உறக்கம்
பல பராமரிப்பாளர்களுக்குப் போதுமான தூக்கம் இருப்பதில்லை, ஏனெனில் அவர்களின் பராமரிப்பைப் பெறுபவருக்கு இரவில் உதவி தேவைப்படுகிறது. பெரும்பாலும், இதற்கான சிறந்த தீர்வாக, ஒரு பட்டியலை உருவாக்குவதே ஆகும், இதன் மூலம் நீங்களும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் மாற்றி மாற்றி விழித்துக் கொண்டிருக்க முடியும்.
தியானம்
மனத்தெளிவு நிலையை மையமாகக் கொண்ட தியானத்தை நீங்கள் பயிற்சி செய்தால், ஒரு பராமரிப்பாளராக உங்கள் பயணம் குறைவான மன உளைச்சலைக் கொண்டதாக இருக்கலாம். தியானம் என்பது அமைதியாக உட்கார்ந்து எதுவும் செய்யாமல் இருப்பது.
5 முதல் 10 நிமிடங்களில் தியானத்தின் மூலம் மன உளைச்சலை நிர்வகிக்க எட்டு எளிய வழிமுறைகள் இங்கே உள்ளன:
- ஒரு நாற்காலி அல்லது ஒரு பெரிய, உறுதியான தலையணையில்
- நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும்போது, உங்கள் முழு உடலையும் – கரங்கள், கால்கள், பிட்டம், கைமுட்டிகள் ஆகியவற்றை இறுக்குங்கள். உங்கள் முகத்தில் உள்ள தசைகளையும் சுருக்குங்கள்.
- இரண்டு முதல் மூன்று விநாடிகளுக்கு மூச்சைப் பிடித்திருங்கள்.
- மூச்சை வெளியேற்றி இளைப்பாறுங்கள் (இரண்டு முறை செய்யுங்கள்).
- ஆழமாக மூச்சிழுக்கவும். உங்கள் வயிறு விரிவடையட்டும்.
- மூச்சை வெளியேற்றி இளைப்பாறுங்கள் (இரண்டு முறை செய்யுங்கள்).
- இயல்பாக சுவாசியுங்கள், ஐந்து நிமிடங்களுக்கு உங்கள் எண்ணங்கள் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் எண்ணங்களுக்கு அடிபணியாதீர்கள் அல்லது அவற்றை எதிர்க்காதீர்கள்.
- ஒவ்வோர் எண்ணத்தையும், ஒன்றுமில்லாமல் போகின்ற, மிதந்து மேலெழுகின்ற குமிழிகளாக நினைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணங்களில் உங்கள் சோகமான எண்ணங்கள், மகிழ்ச்சியான எண்ணங்கள் அல்லது கோபமான எண்ணங்கள் இருக்கலாம்.
தியானத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. முதலில் ஐந்து நிமிடங்கள் தியானம் செய்வதன் மூலம் ஆரம்பிக்கலாம். அதன்பிறகு, இந்தக் கால அளவு உங்களுக்கு அதிகமாகப் பழக்கமாகும்போது, இதை அதிகரிக்க முயற்சி செய்யலாம். தியானத்தை தினமும் பயிற்சி செய்தால் அது மன உளைச்சலைக் குறைக்கலாம்.
உங்கள் பராமரிப்பைபைப் பெறுபவர் விழித்து எழும் முன், அவர் படுக்கைக்குச் சென்ற பிறகு அல்லது தூங்கும் போது தியானம் செய்யுங்கள். நீங்கள் தியானத்தில் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் மட்டுமே செலவிடலாம், ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு அதன் பலன்களை நீங்கள் பெரும்பாலும் உணர்வீர்கள்.