Playback speed:
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் அன்பிற்குரியவரை அல்லது இரவில் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளுக்கு (ADLகள்) உதவித் தேவைப்படும் யாரையேனும் நீங்கள் தற்போது கவனித்து வருகிறீர்களா? நீங்கள் சோர்வாக உணர்கிறீர்களா, மேலும் உங்கள் அன்பிற்குரியவரைக் கவனித்துக்கொள்வதற்கு மாற்று வழியை எதிர்பார்த்துள்ளீர்களா?
மேலே உள்ள கேள்விகளுக்கு நீங்கள் “ஆம்” என்று பதிலளித்திருந்தால், இரவு நேரப் பராமரிப்புப் பொறுப்புகளில் இருந்து ஓய்வு எடுப்பதற்கான வாய்ப்பை இரவுநேர இடைக்கால ஓய்வுச் சேவை உங்களுக்கு வழங்குகிறது, இது நீங்கள் ஓய்வெடுக்கவும் பிற பொறுப்புகளை நிறைவேற்றவும் உங்களுக்கு உதவுகிறது.
இரவுநேர இடைக்கால ஓய்வுச் சேவையில், தனிநபர்கள் அர்த்தமுள்ள ஈடுபாட்டைப் பெறுகிறார்கள், மேலும் அவர்களின் பராமரிப்புத் தேவைகள் பூர்த்திச் செய்யப்படுகின்றன. இந்தச் சேவையானது பராமரிப்பாளர்களுக்கு அவர்களின் அன்பிற்குரியவர்களின் அந்தி நேர குழப்ப நடத்தைகளை நிர்வகிப்பதற்கான ஆதரவையும் வழங்குகிறது.
பராமரிப்பாளர் தியோ லே ஷுவாங்கின் கதை
2021 இல், லே ஷுவாங் தனது தந்தை திரு. தியோவின் ஒரே பராமரிப்பாளராக ஆனார், அவரது தந்தைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதுமைக்கால மறதி நோய் இருப்பது கண்டறியப்பட்டது. திரு. தியோ அந்தி நேர குழப்ப (sundown syndrome) அறிகுறிகளை அனுபவித்து வந்தார், மேலும் அவரால் இரவையும் பகலையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க முடியவில்லை. இரவில், அவர் அமைதியின்றி, கிளர்ச்சியடைந்து தூங்குவதற்குச் சிரமப்பட்டார். அவர் அடிக்கடி இரவில் நடப்பதற்காக வீட்டை விட்டு வெளிச்செல்ல விரும்பினார், ஆனால் அவருக்குப் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளதால், லே ஷுவாங் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த அவருடன் செல்ல வேண்டியிருந்தது. அவர் இரண்டு நாட்கள் தூங்காமல் இருந்தார், மேலும் அவருக்குத் தான் பரீட்சயமில்லாத இடத்தில் அடைக்கப்பட்டிருப்பதாக பிரமை ஏற்பட்டது.
லே ஷுவாங் பகலில் வீட்டுப் பராமரிப்புச் சேவைகளைப் பயன்படுத்தினாலும், இரவில் தன் தந்தையைப் பராமரிப்பது அவருக்குச் சோர்வளித்தது, அவர் மன உளைச்சலுக்கு ஆளாகினார்.
சில சமயங்களில், எனக்கு மனச்சோர்வு ஏற்படுகிறது… அவர் தூங்கும்போதுதான், நான் எனக்குச் சிறிது நேரம் ஒதுக்கி என் சொந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. பராமரிப்பாளராக இருப்பது சில நேரங்களில் தனிமையாகவும் பயமாகவும் இருக்கிறது.
பலதுறை மருந்தகத்தில் திரு. தியோ அவர்களுடைய சந்திப்பு ஒன்றில், சென்ஜாவில் உள்ள வான்கார்டு மூத்தோர் பராமரிப்பு நிலையம் பற்றி அவர் அறிந்தார். இரவுநேர இடை ஓய்வுச் சேவையைப் பற்றி ஊழியர் அவருக்குத் தெரிவித்தனர், அங்கு அவரது தந்தை உடல் பயிற்சிகள், அத்துடன் அறிவாற்றல், உணர்வு மற்றும் நினைவூட்டல் செயல்பாடுகளான வண்ணம் தீட்டுதல் மற்றும் புதிர்கள் போன்றவற்றில் ஈடுபடலாம் என்று கூறினர். அவர் தனது தந்தையை அந்தச் சேவையில் சேர்க்க முடிவு செய்தார், மேலும் அவர் அந்தச் சேவையைத் தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி அடைந்தார்.
இப்போது திரு. தியோ அவர்கள், புதன் கிழமைகள் தவிர்த்து வார நாட்களில் நான்கு முறை இரவுநேர இடை ஓய்வுச் சேவையில் கலந்து கொள்கிறார். அவரது தந்தையைப் பார்த்துக் கொள்ள வேறு யாருமில்லை என்ற கவலையின்றி லே ஷூவாங்கால் இரவில் மிகவும் தேவையான ஓய்வைப் பெற முடிந்தது.
வான்கார்டு ஊழியர்கள் அனைவரும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழுபவர்களைப் பராமரிப்பது குறித்து பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால், இரவில் என் தந்தையின் பராமரிப்பை நிலையத்திடம் ஒப்படைப்பதில் நான் நிம்மதியாகவும் வசதியாகவும் உணர்கிறேன். அவரால் இப்போது நன்றாக தூங்க முடிகிறது.
லே ஷுவாங் மற்ற பராமரிப்பாளர்களை அவர்களின் சுமையை குறைக்கக்கூடிய சேவைகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறார், குறிப்பாக குழந்தைகளைப் பராமரிப்பது அல்லது வேலை பொறுப்புகள் போன்ற பிற பொறுப்புகள் இருந்தால், இந்தச் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கதையை வழங்கியது வான்கார்டு உட்லண்ட்ஸ்.
முழுக் கதையையும் இங்கே படியுங்கள்: சிறிய இடைக்கால ஓய்வு சிறந்த பலனைத் தரும் – பராமரிப்பாளர் தியோ லே ஷுவாங்
பராமரிப்பாளர்கள் மீதான தாக்கம்
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களிடத்தில் மாலையில் நடத்தை மாற்றங்கள் தென்படலாம், அது இரவு முழுவதும் நீடிக்கக்கூடும். இந்த நேரத்தில், உங்கள் அன்பிற்குரியவர் பின்வரும் நடத்தைகளில் சிலவற்றை, இல்லையெனில் பெரும்பாலானவற்றை அனுபவிக்கலாம்.
- அமைதியின்மை
- உச்சக்கட்ட செயல்பாட்டு நிலைகள்
- குழப்பம்
- கிளர்ச்சி
- ஆக்ரோஷம்
- காட்சி ரீதியான அல்லது செவிப்புலன் ரீதியான பிரமைகள்
இது சூரிய அஸ்தமன நடத்தை என்று அழைக்கப்படுகிறது, இது முதுமைக்கால மறதி நோயின் மிதமானது முதல் கடுமையான கட்டங்களில் அடிக்கடி நிகழ்கிறது. இது முதன்மையாக உங்கள் அன்பிற்குரியவரின் தூக்க முறைகளைப் பாதிக்கும் அதே வேளையில், அன்பிற்குரியவரின் சூரிய அஸ்தமன நடத்தைகள் உங்களையும் பாதிக்கும் விதங்களை உணர்வது அவசியம். பராமரிப்பாளர்கள், தங்கள் அன்பிற்குரியவர் நல்ல ஈடுபாட்டுடன் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக தூக்கத்தை அடிக்கடி துறக்க வேண்டியிருக்கும், மேலும் அவர்களால் பகலில் தங்களின் பராமரிப்புக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக அவர்களுக்கென்று நேரம் ஒதுக்க முடியவில்லை.
சூரிய அஸ்தமன நடத்தைக்கான காரணங்கள் மற்றும் அதை நிர்வகிப்பதற்கான வழிகள் பற்றி மேலும் அறிக.
அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் (ADLகள்) என்றால் என்ன?
அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் (ADLகள்) என்பது ஒரு நபரின் சுயப்பராமரிப்பு நடவடிக்கைகள் ஆகும். ஆறு அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளாவன (ADLகள்):
- சாப்பிடுவது
- ஆடை அணிவது
- குளிப்பது
- கழிப்பறைக்குச் சென்றுவருவது
- நடப்பது அல்லது உலாவுவது
- சக்கர நாற்காலியிரந்து படுக்கைக்கு இடமாறுவது
இரவுநேர இடைக்கால ஓய்வுச் சேவை பராமரிப்பாளர்களுக்கு எப்படி ஆதரவளிக்கின்றன?
இரவுநேர இடைக்கால ஓய்வுச் சேவை ஆனது பின்வரும் நபர்களைப் பராமரித்து வரும் பராமரிப்பாளர்களுக்கு ஆதரவளிக்கிறது:
- சூரிய அஸ்தமன நடத்தைகள் தென்படும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள்; அல்லது
- அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் (ADLகளில்) குறைவான முதல் மிதமான உதவித் தேவைப்படும் நபர்கள்.
இரவுநேர இடைக்கால ஓய்வுச் சேவை பராமரிப்பாளர்களை பராமரிப்புப் பணியில் இருந்து விடுவிக்கிறது, இதனால் அவர்கள் ஓய்வெடுக்கலாம் அல்லது அவர்களது பிற கடமைகளில் ஈடுபடலாம்.
சேவை வழங்குநர்கள், சூரிய அஸ்தமன நடத்தைகள் போன்ற கவலைக்குரிய நடத்தைகளை நிர்வகிப்பதற்கான உத்திகள் குறித்தும் பராமரிப்பாளர்களுக்கு விளக்குவார்கள். இது அவர்களின் மன அழுத்தத்தை லேசாக்கவும், பொறுப்புகளைக் குறைக்கவும், பராமரிப்பாளர்களுக்கு இடைக்கால ஓய்வு அளிக்கவும் உதவுகிறது.
இரவுநேர இடைக்கால ஓய்வின்போது, சேவை வழங்குநர்கள் தேவையுடைய நபர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதோடு, இரவில் தூங்குவதற்குச் சிரமப்படுபவர்களை புதிர்கள், விளையாட்டுகள், இசைக் கேட்டல் மற்றும் நினைவூட்டும் செயல்பாடுகள் போன்ற அர்த்தமுள்ள செயல்பாடுகளில் ஈடுபடுத்துவார்கள்.
இரவுநேர இடைக்கால ஓய்வுச் சேவைக்கு எப்படி விண்ணப்பிப்பது
இரவுநேர இடைக்கால ஓய்வுச் சேவை பற்றி மேலும் அறிய மற்றும்/அல்லது விண்ணப்பிக்க, நீங்கள்:
- www.aic.sg/care-services/night-respite/ தளத்தைப் பார்வையிடலாம்
- ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பை (AIC) 1800-650-6060 என்ற நேரடித் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் ஏதேனும்
- ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் (AIC) இணைப்பு அலுவலகத்திற்கு வருகைத் தரலாம்
- உங்களது மருத்துவச் சமூகப் பணியாளர்(கள்) அல்லது பராமரிப்பு வழங்குநரி(களி)டம் பேசுங்கள்
பராமரிப்பாளர்களுக்கான இரவுநேர இடை ஓய்வுச் சேவைப் பராமரிப்பு வழங்குநர்கள்
பீஸ்ஹவென் தாதிமை இல்லம் (Peacehaven Nursing Home)
9 மேல் சாங்கி சாலை நார்த்
சிங்கப்பூர் 507706
தொலைபேசி: 6546 5678
செயல்படும் நாட்கள்/நேரங்கள் (பொது விடுமுறைகளைத் தவிர்த்து)
திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை
ஸ்ரீ நாராயண மிஷன் (சிங்கப்பூர்)
12 யீஷூன் அவென்யூ 5
சிங்கப்பூர் 768992
தொலைபேசி: 6955 9540
செயல்படும் நாட்கள்/நேரங்கள் (பொது விடுமுறைகளைத் தவிர்த்து)
திங்கள் – வெள்ளி, இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை
செயின்ட். ஜோசப் இல்லம் (St. Joseph’s Home)
36 ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 24
சிங்கப்பூர் 648141
தொலைபேசி: 6268 0482
செயல்படும் நாட்கள்/நேரங்கள் (பொது விடுமுறைகளைத் தவிர்த்து)
திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை
வான்கார்டு உட்லேண்ட்ஸ் (Vanguard Woodlands)
2 உட்லண்ட்ஸ் ரைஸ்
சிங்கப்பூர் 737749
தொலைபேசி: 6540 9200
செயல்படும் நாட்கள்/நேரங்கள் (பொது விடுமுறைகளைத் தவிர்த்து)
திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை
Tell us how we can improve?
கூடுதல் வளமைகள்
திருவிழா 2022 ஐச் செயல்படுத்தல் – இரவுநேர இடைக்கால ஓய்வு பற்றி வான்கார்டு உட்லண்ட்ஸில் உள்ள ஏஞ்சலின் கேன் உடன் நேர்காணல்
வளமை: Enable Asia
பிப்ரவரி 18, 2019 • தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்
பதிவிறக்கம் செய்யக்கூடிய வளமைகள்
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்தல்: பராமரிப்பவர்களுக்கான வளமைத் தொகுப்பு – பராமரித்தல்
வளமை: ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (AIC)
இந்தச் சிறு புத்தகம் பயனுள்ள தகவல் தொடர்பு, தினசரி வழக்கத்தை வடிவமைப்பது, நடத்தை ரீதியான மாற்றங்களை நிர்வகிப்பது (சூரிய அஸ்தமனம் மற்றும் சுற்றித் திரியும் நடத்தைகள் உட்பட) போன்றவற்றுக்கான உதவிக்குறிப்புகளை வழங்குகிறது. இது பராமாரிப்பாளர்களை, அவர்களின் அன்பிற்குரியவருக்கு முதுமைக்கால மறதி நோய் அதிகரிக்கையில் உதவியாக இருக்கக்கூடிய வளமையுடன் இணைக்கிறது.
உங்கள் அன்பிற்குரியவருக்கு சூரிய அஸ்தமன நடத்தை உள்ளதா?
வளமை: ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (AIC)
இந்த ஆதாரம் சூரிய அஸ்தமனத்தை ஏற்படுவதற்கான சாத்தியமான காரணங்கள் பற்றியும் அதைச் சமாளிப்பதற்கான உதவிக்குறிப்புகள் பற்றியுமான தகவல்களைக் கொண்டுள்ளது.
- Agency for Integrated Care. A little Respite Goes a Long Way [Brochure].
- Agency for Integrated Care. (2021). Night Respite Brochure [Brochure]. Agency for Integrated Care.
- Agency for Integrated Care. (2020, February 01). Respite Care in Singapore: What you need to know. https://iepa.org.au/network-news/it-doesnt-need-to-be-this-way-the-promise-of-specialised-early-intervention-in-psychosis-services/
- St. Joseph’s Home. (2020). Dusk-to-Dawn Official Brochure [Brochure].