Playback speed:
துமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களைப் பராமரிப்பவர்கள் தனித்துவமான சவால்களை எதிர்கொள்கின்றனர். முதுமைக்கால மறதி நோயின் வளர்ச்சி பல வருடங்கள் நிகழலாம், மேலும் பராமரிப்பாளர்களின் அன்பிற்குரியவர்கள் முதுமைக்கால மறதி நோயின் பல்வேறு கட்டங்களைக் கடந்துச் செல்கையில் அவர்களது பராமரிப்புத் தேவைகளும் மாறுபடும். இதில் நல்ல செய்தி என்னவென்றால், பராமரிப்பாளர் எவரும் தனியாக சிரமப்பட தேவையில்லை. பராமரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக சிங்கப்பூரில் பல முனைப்புத்திட்டங்கள் உள்ளன, குறிப்பாக முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் அன்பிற்குரியவர்களைப் பராமரிப்பவர்களுக்கு பல்வேறு முனைப்புத்திட்டங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்துப் படியுங்கள்!
பராமரிப்பாளர் ஆதரவுக் குழுக்கள்
ராமரிப்பாளர் ஆதரவுக் குழுக்கள் (CSGs) பராமரிப்பாளர்கள் அதே மாதிரியான அனுபவங்களைக் கடந்து வரும் மற்றவர்களிடம் தங்கள் எண்ணங்கள், சவால்கள் மற்றும் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள தனிப்பட்ட மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்குகின்றன. இத்தகைய நுண்ணறிவு பராமரிப்பாளர்கள் தங்கள் அறிவை நடைமுறை ரீதியான பராமரிப்பு மற்றும் சுய-பராமரிப்பு உதிவிக்குறிப்புகள் மூலம் பகிர்ந்து கொள்ள உதவுகிறது
பராமரிப்பாளர் ஆதரவுக் குழுக்கள் (CSGs) ஆனது பராமரிப்பாளர்கள் தங்களின் பராமரிப்புப் பயணத்தில் தனியாக இல்லை என்பதைப் புரிந்துகொள்வதற்கு உதவுகின்றன, இதன் மூலம் குழுவில் உள்ளோர் ஒருவருக்கொருவர் உணர்வுபூர்வமாக ஆதரவளிக்க இது அனுமதிக்கிறது.
பராமரிப்பாளர் ஆதரவுக் குழுக்களைக் கண்டறிதல்
பராமரிப்பாளர் ஆதரவுக் குழுக்கள் மருத்துவமனைகளில், சமூகத்தில் மற்றும் இணையத்தில் கூட உள்ளன. பராமரிப்பாளர்கள் சமூக சேவையாளரிடமோ சக பராமரிப்பாளர்களிடமோ பேசி, பராமரிப்பாளர்களுக்கும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் அன்பிற்குரியவர்களுக்குமான ஆதரவுக் குழுக்களைப் பற்றி மேலும் அறியலாம்.
ஒருவர் ஆராயக்கூடிய ஆதரவுக் குழுக்களின் விரிவான பட்டியல் பின்வருமாறு:
மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு நிலையங்களில்
Khoo Teck Puat Hospital (KTPH)
கூ டெக் புவாட் மருத்துவமனையில் (KTPH) நடைபெறும் முதுமைக்கால மறதி நோய்க்கான ஆதரவுக் குழு அமர்வுகள் இலவசமானது மற்றும் அனைவருக்குமானது. இந்தக் குழு ஒற்றைப்படை மாதங்களின் கடைசி சனிக்கிழமை மதியம் 1 மணி முதல் 3 மணி வரை கூடுகிறது.
தொலைபேசி: 6555 8000
மின்னஞ்சல்: [email protected]
National Neuroscience Institute (NNI)
தேசிய நரம்பியல் கழகத்தில் (NNI) நடைபெறும் முதுமைக்கால மறதி நோய் ஆதரவுக் குழு அமர்வுகள் CARE (அறிவாற்றல் மதிப்பீடு மற்றும் மறுவாழ்வு) குழுவால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இது இளம் வயதிலேயே ஏற்படும் அல்லது வித்தியாசமான முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் தேசிய நரம்பியல் கழகம் (NNI) நோயாளிகள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கானது. இந்த அமர்வுகள் புதன்கிழமை காலை மற்றும் வியாழன் பிற்பகல்களில் நடத்தப்படுகின்றன.
தொலைபேசி: 9656 8078
மின்னஞ்சல்: [email protected]
சமூகத்தில்
டிமென்ஷியா சிங்கப்பூர் (DSG) மூலம் நடத்தப்படும் பராமரிப்பாளர் ஆதரவுக் குழுக்களின் அமர்வுகள் ஆங்கிலம், மாண்டரின் மற்றும் மலாய் மொழிகளில் நடத்தப்படுகின்றன. ஆங்கில குழுக்களின் அமர்வுகள் வார நாட்கள் மற்றும் சனிக்கிழமைகளில் பல்வேறு இடங்களில் நடத்தப்படுகின்றன, அதே நேரத்தில் மாண்டரின் குழுக்களின் அமர்வுகளும் சனிக்கிழமைகளில் நடத்தப்படுகின்றன. இந்த ஆதரவுக் குழுக்கள் கண்டிப்பாக முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களைக் கவனித்துக் கொள்ளும் குடும்பப் பராமரிப்பாளர்களுக்கு மட்டுமே.
தொலைபேசி: 6377 0700
ஏதேனும் வினவல்கள் இருந்தால், இங்கே மின்னஞ்சல் செய்யுங்கள்.
நேரடியாக இணையத்தில் பதிவு செய்யுங்கள்.
Caregivers Alliance Limited (CAL)
பராமரிப்பாளர்கள் பயிற் ச்சியை முடித்த பராமரிப்பாளர்களுக்கு இந்த ஆதரவுக் குழுக்களின் அமர்வுகள் வழங்கப்படுகின்றன.
தொலைபேசி: 6460 4400
Caregiving Welfare Association (CWA)
பராமரிப்பு வழங்கல் சமூகநலச் சங்கத்தில் (Caregiving Welfare Association, CWA) உள்ள ஆதரவுக் குழுக்கள் அனைத்துக் குடும்பப் பராமரிப்பாளர்களுக்குமானது, மேலும் இதன் அமர்வுகள் குறிப்பிட்ட கருப்பொருள்களை மையமாகக் கொண்டு மாதத்திற்கு இரண்டு முறை நடத்தப்படுகின்றன.
தொலைபேசி: 6466 7957 / 6466 7996/ 6734 2991
மின்னஞ்சல்: [email protected]
கிளப் ஹீலில் உள்ள ஆதரவுக் குழுக்களின் அமர்வுகள் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளில் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ள மூன்று மனநல நிலையங்களில் நடத்தப்படுகின்றன.
தொலைபேசி: 6899 3463
மின்னஞ்சல் செய்யுங்கள்: [email protected]
பிரசுரத்தை இங்கே காண்க
முதுமைக்கால மறதி நோய் தொடர்பான பொதுவான கவலைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் கற்றுக்கொள்வதற்கும் பராமரிப்பாளர்கள் ஒன்றுகூடும், சகப் பராமரிப்பாளர்களுக்கு மத்தியிலான உரையாடல்களை இது ஏற்பாடு செய்கிறது.
இணையவழி ஆதரவுக் குழுக்கள்
பல தனியார் சமூகக் குழுக்கள் Facebook போன்ற சமூக ஊடகத் தளங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்தக் குழுக்களில் பின்வரும் விதங்களில் இருக்கலாம்:
- பராமரிப்பாளர்கள் சக பராமரிப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளும் இணையவழி ஆதரவுக் குழுக்கள் (எ.கா., முதுமைக்கால மறதி நோய்க்கு ஏதுவான சிங்கப்பூர் Facebook, டச் பராமரிப்பாளர்கள் ஆதரவு Facebook)
- தொடர்புடைய தகவல்களைப் பெறுவதற்கு பராமரிப்பாளர்களும் ஆர்வமுள்ள பொதுமக்களும் இணைகின்ற தன்னார்வக் குழுக்கள்
- சமூகக் கட்டமைப்புத் திட்டங்கள் (எ.கா., சமூகக் கட்டமைப்பை நாம் மறந்துவிட்டோம் என்ற திட்டம்)
பராமரிப்பாளர் ஆதரவுக் கட்டமைப்பு
முதுமைக்கால மறதி நோய்க்கு ஏதுவான சிங்கப்பூர் (DFSG) முனைப்புத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக பராமரிப்பாளர் ஆதரவுக் கட்டமைப்பு (CSN) உருவாக்கப்பட்டது, இது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களைக் கவனித்துக் கொள்ளும் பராமரிப்பாளர்களுக்கு ஆதரவளித்து, அவர்களுடன் இணைப்பில் இருப்பதற்கும், மேலும் பராமரிப்பாளர்களுக்கு ஏற்படும் மனநலம் அல்லது உடல் ஆரோக்கிய பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கும் உருவாக்கப்பட்டது. பராமரிப்பாளர் ஆதரவுக் கட்டமைப்பின் (CSN) குறிக்கோள், சுய-பராமரிப்பு, மனநிலை மாற்றம் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் சக ஆதரவுக் கட்டமைப்பு மூலம் பராமரிப்பாளர்களை மேம்படுத்துவதாகும்.
சிங்கப்பூர் முழுவதும் உள்ள பல்வேறு சேவை வழங்குநர்களால் வழங்கப்படும் பராமரிப்பாளர் ஆதரவுக் கட்டமைப்புகளை கீழே உள்ள அட்டவணை பட்டியலிடுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள பராமரிப்பாளர் ஆதரவுக் கட்டமைப்பின் (CSN) பற்றி விசாரிக்க, அட்டவணையில் உள்ள அவர்களின் தொடர்புடைய தொடர்பு எண்களில் அவர்களை அழைத்திடுங்கள். பராமரிப்பாளர் ஆதரவுக் கட்டமைப்புகளைப் (CSN) பற்றி மேலும் அறிய, [email protected] என்ற முகவரி வாயிலாக ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பைத் தொடர்புகொள்ளலாம்.

மத்திய பகுதி
Toa Payoh East: Care Corner Senior Services Ltd (தொலைபேசி: 6258 6601)
Teck Ghee: Alkin Singapore Ltd (தொலைபேசி: 6312 8100)
Yio Chu Kang: AWWA Ltd (தொலைபேசி: 9621 7856)
கிழக்குப் பகுதி
Bedok: MontfortCare (தொலைபேசி: 6312 3988)
வடக்குப் பகுதி
Woodlands: AWWA Ltd (தொலைபேசி: 9784 9247)
தெற்குப் பகுதி
Queenstown: Fei Yue Community Services (தொலைபேசி: 6471 0012)
மேற்குப் பகுதி
Hong Kah North: REACH Community Services (தொலைபேசி: 6801 0878 / 6801 0876)
Taman Jurong: NTUC Health Co-operative Services (தொலைபேசி: 8223 1135)
தீவு முழுவதும்
Caregivers Alliance Limited (Singapore) (தொலைபேசி: 6460 4400)
Club HEAL (தொலைபேசி: 6899 3463)
Dementia Singapore Ltd (தொலைபேசி: 6377 0700)
டிமென்ஷியா சிங்கப்பூரின் பராமரிப்பாளர் ஆதரவுக் கட்டமைப்பு வழங்குவது பற்றி மேலும் அறிக: Interest-based Activities for Caregivers.
பிற விதமான பராமரிப்பாளர் ஆதரவு
முதுமைக்கால மறதி நோய் உதவித் தொலைபேசி சேவை
டிமென்ஷியா சிங்கப்பூர் ஆனது டிமுதுமைக்கால மறதி நோயுடன் வாழுபவர்களைக் கவனித்துக்கொள்ளும் பராமரிப்பாளர்களுக்கு தொலைபேசி மூலம் ஆலோசனை சேவைகளையும் வழங்குகிறது. அனைத்துத் தகவல்களும் கண்டிப்பாக தனிப்பட்டதாகவும் இரகசியமாகவும் பராமரிக்கப்படும் என்பதை நம்புங்கள்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒருவரை நீங்கள் கவனித்து வருகிறீர்கள் என்றால், உங்களுக்கு எது பொருத்தமாக இருக்கும் என்பது குறித்து உதவியோ ஆதரவோ தேவைப்பட்டால், முதுமைக்கால மறதி நோய்க்கான உதவித் தொலைபேசி சேவையை 6377 0700 என்ற எண்ணில் அழைத்திடுங்கள் அல்லது இணையம் வாயிலாக உங்களது வினவலை அனுப்பிடுங்கள்.
முதுமைக்கால மறதி நோய்க்கான உதவித் தொலைபேசி சேவை நேரம்:
திங்கள் முதல் வெள்ளி வரை: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
சனி: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை
(ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் செயல்படாது)
