வாகனம் ஓட்டுவது ஒரு நபரின் சுயசார்பையும் சுதந்திரத்தையும் குறிக்கலாம். தங்கள் அன்புக்குரியவருக்கு முதுமைக்கால மறதி நோய் இருப்பது கண்டறியப்பட்டால், அவர் வாகனம் ஓட்டலாமா, வேண்டாமா என்பதுதான் பராமரிப்பாளர்களுக்கு இருக்கும் முதல் கவலையாகும்.
முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் உங்களின் அன்புக்குரியவர் தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கான திறனைக் கொண்டிருந்தாலும் கூட, அவரைப் பற்றிய கலந்துரையாடல்கள் கூடிய விரைவில் நடைபெற வேண்டும்
மறதித்தன்மை மட்டுமே முதுமைக்கால மறதி நோயின் எச்சரிக்கை அறிகுறி அல்ல. மாறாக, அது இயல்பாக முதுமை அடைவதன் விளைவாகவும் இருக்கலாம். முதுமைக்கால மறதி நோயானது, இயல்பாக முதுமை அடைவதில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.