நீங்களோ அல்லது உங்கள் அன்புக்குரியவரோ சிறிது காலமாக நினைவுத்திறன் இழப்புடன் வாழ்கிறீர்களா? உங்களுக்கோ அல்லது உங்கள் அன்புக்குரியவருக்கோ முதுமைக்கால மறதி நோய் இருக்கிறதா, இல்லையா என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா? சோதனை செய்துகொள்வது இந்தக் கவலைகளைப் போக்க உதவலாம், மேலும் உங்கள் அன்புக்குரியவர் அனுபவிக்கும் இந்த அறிகுறிகளைப் பற்றி உங்களுக்கு இருக்கும் ஏதேனும் கவலையைக் குறைக்கலாம்.
முதுமைக்கால மறதி நோயை எதிர்கொள்ளுதல்: எனக்கு முதுமைக்கால மறதி நோய் உள்ளதா? (அத்தியாயம் 1)
ஆதாரம்: சேனல் நியூஸ் ஏஷியா
ஒருவர் மனதில் உள்ள வேறுபாடுகள் மற்றும் மாற்றங்களைக் கண்டறிந்து அதற்கான காரணத்தைக் கண்டறிய விரும்பும் நபர்களை ஆவணப்படம் பின்தொடர்ந்து காண்பிக்கிறது, மேலும் முதுமைக்கால மறதி நோய்க்கான பரிசோதனைகளைச் செய்துகொள்ளும் செயல்முறையை வெளிப்படுத்துகிறது.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்புக்குரியவருக்கும் உங்களுக்கும் நோயறிதல் சோதனை செய்துகொள்வது ஒரு முக்கியமான முதல் செயற்படியாகும். இதனால்உங்கள் அன்புக்குரியவர் அனுபவிக்கும் அறிகுறிகளுக்கு ஒரு விளக்கத்தை பெறுவதோடு மட்டுமல்லாமல், சிகிச்சை பெறுவது, தொழில்முறை ஆதரவையும் கவனிப்பையும் நாடுவது, எதிர்காலத்திற்காகத் திட்டமிடுவது ஆகியவற்றின் செயல்முறையை துரிதபடுத்தலாம்.
மருந்தியல் மற்றும் மருந்தியல்-அல்லாத சிகிச்சை விருப்பத்தேர்வுகளுக்கான அணுகலைப் பெறுங்கள்
முதுமைக்கால மறதி நோயாயை முற்றிலும் குணப்படுத்த சிகிச்சைகள் எதுவும் இல்லை என்றாலும், மற்ற பல்வேறு மருந்துகளும் உளவியல் சார்ந்த கிச்சைகளும் உள்ளன, அவை அறிவுத்திறன் குறைவதை தாமதபடுத்த உதவுகின்றன. மேலும் உங்கள் அன்புக்குரியவரின் வாழ்க்கைத்தரத்தை முடிந்த அளவு அதிக காலத்திற்குப் நீடிக்க உதவுகின்றன. முதுமைக்கால மறதி நோயின் ஆரம்பக் கட்டங்களில் சிகிச்சைகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவையாக இருக்கும் என்றும் ஆராய்ச்சி காண்பித்துள்ளது.1
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்புக்குரியவருக்கும் உங்களுக்கும் பொருத்தமான ஆதரவுச் சேவைகளையும் நிதியுதவித் திட்டங்கள் உள்ளன
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் வருமாறு :
- பராமரிப்பு மற்றும் ஆதரவு வலையமைப்பு
- மக்கள்தொடர்புக் குழுக்கள் (CREST) – சமூக வளஆதார ஈடுபாடு மற்றும் ஆதரவுக் குழு (Community Resource Engagement and Support Team)
- சமூகத் தலையீட்டு குழுக்கள் (Community Intervention Team, COMIT)
- பகல்நேரப் பராமரிப்புச் சேவைகள்
- தாதிமை இல்லங்கள்
- இடை ஓய்வுப் பராமரிப்பு
மேலும் விவரங்களை இங்கு கண்டறியுங்கள்.
மேலும் , முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களைப் பராமரிப்பது குறிப்பிடத்தக்க மருத்துவப் பராமரிப்புச் செலவுகளை ஏற்படுத்தலாம். நிதிச் சுமையைக் குறைக்கவும், உங்கள் நிதித் திட்டமிடலில் உங்களுக்கு உதவவும் நீங்கள் நாடக்கூடிய பல நிதியுதவித் திட்டங்கள் உள்ளன:
- மூத்தோர் நடமாட, இயங்க உதவிநிதி (Senior’s Mobility and Enabling Fund, SMF)
- நடமாடும் மூத்தோருக்கான மேம்பாட்டுத் திட்டம் (Enhancement for Active Seniors, EASE)
- எல்டர்ஷீல்டு
- கேர்ஷீல்டு லைஃப்
- Interim Disability Assistance Programme for the
- இயலாமையுள்ள மூத்தோருக்கான இடைக்கால உதவித் திட்டம் (Interim Disability Assistance Programme for the Elderly, IDAPE)
- எல்டர்ஃபண்டு
- நீண்டகால பராமரிப்பிற்கான மெடிசேவ்
- பராமரிப்பாளர் பயிற்சி மானியம் (Caregiving Training Grant, CTG)
நிதியுதவித் திட்டங்களைப் பற்றி இங்கே மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
இந்தச் சேவைகள் மற்றும் நிதி உதவிகளுக்கான தகுதி அளவுகோல்களில், மற்ற காரணிகளுடன், முறையாக நோயறிதல் சோதனை செய்யப்படுவதும் அடங்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக இது மேற்கொள்ளப்படுகிறது. உங்கள் அன்புக்குரியவர் இன்னும் தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கான திறனைக் கொண்டிருக்கும்போது அவர்களை யும் இந்த முடிவுகளை எடுப்பதில் சேர் த்துகொள்வது சிறந்தது.
உங்கள் அன்புக்குரியவருக்குத் தேவையான வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்ய உதவுங்கள், அது அவர்கள் முதுமைக்கால மறதி நோயுடன் நன்றாக வாழ உதவிடும்
உங்கள் அன்புக்குரியவர் இன்னும் வேலை செய்கிறார் என்றால், அவர் தனது வேலை நேரத்தைக் குறைப்பது, தற்போதைய பொறுப்புகளை மீளாய்வு செய்வது அல்லது பணியிடத்தில் மற்ற நியாயமான மாற்றங்களைச் செய்வது பற்றி அவரது முதலாளியுடன் பேசுவதைப் பற்றி அவர் சிந்திக்க வேண்டியிருக்கும். சில சந்தர்ப்பங்களில், வேலைகளை மாற்றுவது அல்லது வேலையில் இருந்து முற்றிலுமாக நின்றுவிடுவது போன்ற முக்கியமான வாழ்க்கைத்தொழில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும்.
நீங்கள் இருவரும், வாகனம் ஓட்டுதல் அல்லது அலைந்து திரிதல் போன்ற பாதுகாப்புச் சிக்கல்களைப் பற்றி முன்கூட்டியே கலந்தாலோசிக்கலாம்.
Plaஉங்கள் அன்புக்குரியவர் மற்றும் உங்கள் இருவரின் எதிர்காலத்திற்காகத் திட்டமிடுங்கள்
நோயறிதல் சோதனைக்குப் பிறகு, உங்கள் அன்புக்குரியவர் இன்னமும் தனக்காக முடிவெடுப்பதற்கான திறனைக் கொண்டிருக்கும்போது, பிற முக்கியமான விஷயங்களுக்கு மத்தியில், தற்போதைய சட்ட, நிதி மற்றும் பராமரிப்புத் திட்டங்களை மீளாய்வு செய்வது முக்கியமாகும். குடும்பத்தினர் மற்றும் பராமரிப்பு நிபுணர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம், உங்கள் அன்புக்குரியவரின் முதுமைக்கால மறதி நோயின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் என்ன ஏற்பாடுகளை விரும்புகிறார் என்பதைத் தீர்மானிக்க, அவருக்கு அதிகாரம் அளிப்பது முக்கியமாகும். இதைச் செய்வது உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவருக்கும் மன அமைதியை அளிக்கும் மற்றும் எதிர்காலத்தில் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதையும் தடுக்கும்.
மேம்பட்ட பராமரிப்புத் திட்டமைப்பு பற்றி இங்கே மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு அன்புக்குரியவர்களால் சிறப்பாக ஆதரவை வழங்க முடியும்
ஒரு தெளிவான நோயறிதலைச் செய்வதற்கு முன், உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவருக்கும் இதற்கு முன்னர் வழக்கமான நிகழ்வுகளாக இருந்திருக்காத நினைவுத்திறன் குறைபாடுகள், தகவல்தொடர்புப் பிரச்சினைகள் மற்றும் ஆளுமை மாற்றங்கள் போன்ற நிகழ்வுகளைப் புரிந்துகொள்வது சிரமமாக இருக்கலாம். இந்தப் புரிதல் இல்லாதது பெரும்பாலும் விரக்தியையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது, ஏனெனில் இந்த மாற்றங்களை எவ்வாறு கையாள்வது என்பது இருதரப்பினருக்கும் தெரியாமல் இருக்கலாம்.
எனினும், ஒரு தெளிவான நோயறிதல் இந்த நிகழ்வுகள் உண்மையில் முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகள் என்பதை உணர வைக்கிறது. இது உங்கள் அன்புக்குரியவரின் நிலை மற்றும் அதனுடன் இணைந்துள்ள சவால்களை உங்கள் அன்புக்குரியவர், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் நன்கு புரிந்துகொள்வதை எளிதாக்குகிறது.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களின் தேவைகளைப் பற்றி இங்கே மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
கூடுதல் வளஆதாரங்கள்
நிபுணரிடம் கேளுங்கள்: எனக்கு முதுமைக்கால மறதி நோய் உள்ளதா? எங்கு ஆதரவை நாடுவது?
ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு வழங்கும் இந்தக் காணொளியில், முதுமைக்கால மறதி நோய்க்கான ஆதரவாளரான எமிலி ஓங் அவர்களைப் பாருங்கள், நோயறிதல் சோதனையைச் செய்துகொள்வதற்கான உந்துதல்கள் குறித்த அவரது கதையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Tell us how we can improve?
- Prince, M., Bryce, R., Ferri, C., World Alzheimer report 2011: the benefits of early diagnosis and intervention. Alzheimer’s Disease International (2011). https://www.alzint.org/u/WorldAlzheimerReport2011.pdf