Playback speed:
மரபணுக்கள், பாலினம், இனம் மற்றும் வயது போன்ற காரணிகள் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும், முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க சில விஷயங்கள் உள்ளன.
முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க தனிநபர்கள் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்யலாம், மேலும் சமூகத்தில் முதுமைக்கால மறதி நோய் உண்டாகுவதைக் குறைக்க முறையான சமூக மாற்றங்களைச் செய்யலாம்.
இந்தக் கட்டுரையில் பிற்பகுதியில் எழுதப்பட்டுள்ள 12 காரணிகளுக்கும், முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் அபாயத்திற்கும் இடையிலான தொடர்பை ஆதரிக்கும் ஆராய்ச்சிப் பூர்வமான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆபத்து காரணிகள் முதுமைக்கால மறதி நோய் ஏற்படுவதற்கான நேரடி காரணங்கள் இல்லை என்றாலும், இவை அனைத்தையும் நிவர்த்தி செய்வது முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் சாத்தியமான நிகழ்வுகளில் 40% வரை தடுக்கக்கூடும் அல்லது தாமதப்படுத்தக்கூடும்.
இந்த 12 ஆபத்து காரணிகளில் பெரும்பாலானவை இருதய நோய்கள், புற்றுநோய், சர்க்கரை மற்றும் நாட்பட்ட சுவாச நோய்கள் போன்ற பிற நோய்களுடன் தொடர்புடையதாக உள்ளன, இருதய நோய்கள் போன்ற சில நோய்கள் முதுமைக்கால மறதி நோயின் ஆபத்து காரணிகளாகவும் உள்ளன. இந்த நோய்களைத் தடுக்கும் தொடர்புடைய சுகாதார நடத்தைகளை மாற்றியமைப்பதன் மூலம், ஒரே நேரத்தில் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம், இது சிறந்த ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் முதுமைக்கால மறதி நோய் உண்டாகுவதைக் குறைப்பதற்கும் வழிவகுக்கும்.
முதுமைக்கால மறதி நோயின் 12 மாற்றக்கூடிய ஆபத்து காரணிகள்
உடற்பயிற்சி செய்யாதிருத்தல்
வழக்கமான உடற்பயிற்சி முதுமைக்கால மறதி நோய் உண்டாகும் ஆபத்தைக் குறைப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். இதயம், இரத்த ஓட்டம், எடை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த மனநலத்திற்கும் உடற்பயிற்சி நல்லது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான அளவில் பராமரிக்கவும் உதவுகிறது, மேலும் இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோய் உண்டாகும் ஆபத்தையும் குறைக்கிறது.
பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 60 முதல் 80 வயதுக்குட்பட்ட 120 பேரை உள்ளடக்கி நடத்திய ஒரு வருட கால ஆய்வில், வாரத்திற்கு மூன்று முறை ஒரு நாளைக்கு 30 முதல் 40 நிமிடங்கள் வரை வேகமாக நடப்பது, வாழ்க்கையின் பிற்பகுதியில் ஏற்படும் அறிவாற்றல் வீழ்ச்சியுடன் தொடர்புடைய மூளை அமைப்புகளை மீண்டும் வளரச் செய்வதற்குப் போதுமானது என்று கண்டறியப்பட்டது. வயதாகையில் சுருங்கும் மூளையின் பாகங்கள், மிதமான ஆனால் வழக்கமான உடற்பயிற்சிக்குப் பிறகு உண்மையில் அளவு அதிகரித்ததை ஸ்கேன்கள் பின்னர் காட்சிப்படுத்தின. 1
இதயத் துடிப்பை அதிகரிக்கும் செயல்பாட்டின் அளவைப் பராமரிக்க, பெரியவர்கள் ஒவ்வொரு வாரமும் 150 நிமிட மிதமான உயிர்வளிச் சார்ந்த (ஏரோபிக்) செயல்பாடு அல்லது 75 நிமிட தீவிர உயிர்வளிச் சார்ந்த (ஏரோபிக்) செயல்பாடுகளை இலக்காகக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இதன் பொருள், ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் என வாரத்திற்கு ஐந்து முறை வேகமாக நடக்கலாம் அல்லது ஒரு நாளைக்கு 25 நிமிடங்கள் என வாரத்திற்கு மூன்று முறை நடையோட்டம் செல்லலாம். இவை மக்களுக்குப் பொதுப்படையாக பரிந்துரைக்கப்படும் உடற்பயிற்சி என்றாலும், மக்கள் தங்களுக்கு நன்கு தெரிந்த சொந்த உடல் நிலையில் கவனம் செலுத்துவது சிறந்தது. கூடுதலாக, அவர்கள் முயற்சி செய்யத் தொடங்குவதே முக்கியம். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு சிறிய அடியும் முக்கியம்!
புகைப்பழக்கம்
உலகச் சுகாதார நிறுவனம் (World Health Organization, WHO) மற்றும் அல்சைமர் நோய் சர்வதேசம் (ADI) ஆகியவை புகைப்பழக்கத்திற்கும் முதுமைக்கால மறதி நோய் அபாயத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளன: புகைப்பழக்கம் இல்லாதவர்களை விட புகைப்பழக்கமுடையவர்களுக்கு முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் அபாயம் 45% அதிகமாக உள்ளது.2 2019 ஆம் ஆண்டில் முதுமைக்கால மறதி நோய் அபாயக் குறைப்புக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்ட உலகச் சுகாதார நிறுவனம் (World Health Organization, WHO), உலகளவில் புகைப்பழக்கம் தடுக்கக்கூடிய மரணத்திற்கு முக்கிய காரணமாக பட்டியலிட்டுள்ளது, மேலும் புகைப்பழக்கம் பிற கோளாறுகள், பலவீனம் மற்றும் வேலை திறன் போன்ற வயது தொடர்பான நோய்களுடன் தொடர்புடையதாக இருப்பதாக கூறுகிறது. 3
இந்த ஆராய்ச்சித் தகவல் ஆதாரங்களின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட வழிகாட்டுதல்கள் முதுமைக்கால மறதி நோய் மற்றும் அறிவாற்றல் குறையும் அபாயத்தைக் குறைக்க புகைப்பிடிக்காததன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. வாழ்க்கையில் பிற்பகுதியில் புகைப்பழக்கத்தை நிறுத்துவது கூட முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கும் என்பதால், புகைப்பழக்கத்தை எப்போதும் நிறுத்தாமல் இருப்பதைக் காட்டிலும் தாமதமானாலும் நிறுத்திவிடுவதும் சிறந்ததே.
அதிகப்படியாக மது அருந்துதல்
ஒரு வாரத்திற்கு 21 யூனிட்டுகளுக்கு மேல் அதிகப்படியாக மது அருந்துவது முதுமைக்கால மறதி நோய் உண்டாகும் ஆபத்தைக் கணிசமாக அதிகரிக்கிறது, மேலும் இது 200க்கும் மேற்பட்ட நோய்கள் மற்றும் காய ங்கள், பல்வேறு விதமான மன மற்றும் நடத்தைக் கோளாறுகள் மற்றும் மற்ற தொற்றா நோய்களுக்கு இயல்பான காரணியாகவும் உள்ளது. மேலே உள்ள ஆபத்துகளைக் குறைப்பதற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பேணுவதற்கும் மிதமான அளவு மது அருந்த பரிந்துரைக்கப்படுகிறது.
காற்றுத் தூய்மைக்கேடு
ஆராய்ச்சி சான்றுகள், காற்று தூய்மைக்கேடு முதுமைக்கால மறதி நோய் உண்டாகும் ஆபத்தை அதிகரிக்கிறது என்று தகவலைப் பரிந்துரைக்கு றது. கொள்கை வகுப்பாளர்கள் காற்றின் தரத்தில், குறிப்பாக அதிக காற்றுத் தூய்மைக்கேடு உள்ள பகுதிகளில் மேம்பாடுகளை துரிதப்படுத்தமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
தலையில் ஏற்படும் காயம்
தலையில் ஏற்படும் காயங்கள் முதுமைக்கால மறதி நோய் உண்டாகும் ஆபத்தை அதிகரிக்கின்றன. அவை பொதுவாக கார், மோட்டார் சைக்கிள் மற்றும் மிதிவண்டி விபத்துகள்; இராணுவ பங்கேற்புகள்; குத்துச்சண்டை, கால்பந்து, ஹாக்கி மற்றும் பிற விளையாட்டுகள்; துப்பாக்கிகள் மற்றும் வன்முறை தாக்குதல்கள்; மற்றும் கீழே விழுதல் போன்றவற்றினால் ஏற்படுகிறது. கொள்கை வகுப்பாளர்கள் தலையில் ஏற்படும் காயங்களைக் குறைக்க பொது சுகாதார மற்றும் பிற கொள்கை நடவடிக்கைகளைப் பயன்படுத்தலாம். அது மட்டுமின்றி, தனிநபர்கள் சில விளையாட்டு செயல்பாடுகளின்போது தலைக்கவசம் அணிவது மற்றும் பணியிடப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பேணுவது போன்ற செயல்பாடுகளில் பங்கேற்கும்போது நியாயமான அளவிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
குறைவான சமூக தொடர்பு
முதுமைக்கால மறதி நோய் உண்டாகும் ஆபத்தைக் குறைக்கும் அனைத்து வழிகளிலும், அடிக்கடி சமூக செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கக்கூடும். சமூகத் தொடர்பு முதுமைக்கால மறதி நோய் ஏற்படுவதைத் தாமதப்படுத்தலாம் என்பது நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வகையான சமூகச் செயல்பாடுகள் முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கும் ஆராய்ச்சி இன்னும் உருவாகி வருகிறது என்றாலும், சமூக தொடர்பு வைத்திருப்பதின் மூலம் மூளையின் ஆரோக்கியம் மேம்படலாம், முதுமைக்கால மறதி நோய் மற்றும் அந்தச் செயல்முறையில் நிகழும் மனச்சோர்வைத் தடுக்கலாம் என்று கூறுகின்றன.
பொது சுகாதார அமெரிக்க இதழ் (American journal of public health) வெளியிட்ட ஒரு ஆய்வு, பெரிய அளவில் சமூக தொடர்பு கொண்ட பெண்களுக்கு முதுமைக்கால மறதி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள், சிறிய அளவில் சமூக தொடர்பு உள்ளவர்களைக் காட்டிலும் 26% குறைவாக இருப்பதாகக் காட்டுகிறது. அது மட்டுமின்றி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தினசரி தொடர்பு வைத்திருக்கும் பெண்கள் முதுமைக்கால மறதி நோய் உண்டாகும் ஆபத்தை கிட்டத்தட்ட பாதியாகக் குறைத்துள்ளனர். 4
முதுமைக்கால மறதி நோய் உண்டாகும் ஆபத்தைக் குறைப்பதில் சமூகத் தொடர்பின் சாத்தியமான நன்மைகள், சமூகச் செயல்பாடு எவ்வாறு வாழ்க்கையை வளப்படுத்துகிறது என்பதற்கான பொதுவான அனுபவத்திற்குக் கூடுதல் காரணத்தைச் சேர்க்கிறது. செயல்பாட்டில் ஈடுபடுவதற்கான சில வழிகள்: அக்கம்பக்கத்தில் உள்ள சமூகச் செயல்பாட்டில் சேருதல், ஒன்றாகச் சேர்ந்து உணவு உண்ண நண்பர்களைச் சந்தித்தல் அல்லது தொண்டூழியம் செய்தல்.
நடுப் பருவ உடல் பருமன்
உடல் பருமன், குறிப்பாக வாழ்க்கையின் நடுப்பகுதியில் உடல் பருமனாக இருப்பது, முதுமைக்கால மறதி நோய் உண்டாகும் ஆபத்தை அதிகரிப்பதுடன் தொடர்புடையதாக உள்ளது. இது மற்ற தொற்றாத நோய்களுடனும் தொடர்புடையதாக உள்ளது, உடல் பருமனுக்குப் பொதுவாக உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் தீர்வு காணலாம்.
உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure)
வாழக்கையின் நடுப்பகுதியில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம், பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கு மத்தியில், ஒரு நபரின் முதுமைக்கால மறதி நோய் உண்டாகும் ஆபத்தை அதிகரிக்கிறது. இந்த ஆபத்தைக் குறைக்க, இரத்த அழுத்தத்தைக் கண்காணித்து, ஆரோக்கியமான அளவில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. உடற்பயிற்சி, சரிவிகித உணவுப் பழக்கம் மற்றும் மன அழுத்த மேலாண்மை போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமும், தேவைப்பட்டால், உயர் இரத்த அழுத்தத்திற்கு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்த மருந்துகளை உட்கொள்வதன் மூலமும் இந்த ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவைப் பராமரிக்கலாம்.
சர்க்கரை நோய்
2 ஆம் வகை சர்க்கரை நோய் எதிர்காலத்தில் முதுமைக்கால மறதி நோய் உண்டாவதற்கான ஆபத்துக் காரணியாக உள்ளது. 2 ஆம் வகை சர்க்கரை நோயைக் கொண்டிருப்பவர்கள் தங்கள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கண்காணிக்கவும், உணவு முறைகள், வழக்கமான உடற்பயிற்சி, பிற வாழ்க்கை முறை நடவடிக்கைகள் மற்றும் மருத்துவர் பரிந்துரைத்தால், அந்த மருந்துகளின் மூலம் அதை நிர்வகிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மன அழுத்தம், தனிமை மற்றும் சமூகத் தனிமைப்படுத்தல்
மனச்சோர்வு முதுமைக்கால மறதி நோய் ஏற்படுவதுடன் தொடர்புடையதாக உள்ளது. மனச்சோர்வினால் முதுமைக்கால மறதி நோய் ஏற்படுகிறதா அல்லது முதுமைக்கால மறதி நோயால் மனச்சோர்வு ஏற்படுகிறதா என்பது குறித்தோ, எந்த அளவிற்கு ஏற்படலாம் என்பது குறித்தோ தற்போது தெளிவாகத் தெரியவில்லை.
எப்படியிருப்பினும், மனச்சோர்வை கட்டுப்படுத்துவதும் சிகிச்சையளிப்பதும் முக்கியம், ஏனெனில் இது கூடுதல் இயலாமை, உடல் நோயுடன் தொடர்புடையதாக உள்ளது.
செவித்திறன் குறைபாடு
செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் ஆபத்து கணிசமாக அதிகரித்துள்ளது, இருப்பினும் செவிப்புலன் கருவிகளைப் பயன்படுத்துவது இந்த ஆபத்தைக் குறைக்கிறது. பெரும்பாலான மக்களைப் பாதிக்கும் ஆபத்துக் காரணிகளில் ஒன்று செவித்திறன் குறைபாடு என்பதால், முதுமைக்கால மறதி நோய் ஏற்படுவதைக் குறைப்பதில் இது குறிப்பாக ஒரு காரணியாக இருக்கக்கூடும்.செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் ஆபத்து கணிசமாக அதிகரித்துள்ளது, இருப்பினும் செவிப்புலன் கருவிகளைப் பயன்படுத்துவது இந்த ஆபத்தைக் குறைக்கிறது. பெரும்பாலான மக்களைப் பாதிக்கும் ஆபத்துக் காரணிகளில் ஒன்று செவித்திறன் குறைபாடு என்பதால், முதுமைக்கால மறதி நோய் ஏற்படுவதைக் குறைப்பதில் இது குறிப்பாக ஒரு காரணியாக இருக்கக்கூடும். மக்களைப் பாதிக்கும் ஆபத்துக் காரணிகளில் ஒன்று செவித்திறன் குறைபாடு என்பதால், முதுமைக்கால மறதி நோய் ஏற்படுவதைக் குறைப்பதில் இது குறிப்பாக ஒரு காரணியாக இருக்கக்கூடும்.
குறை அடர்த்திக் கொழுப்புப் புரதம் அல்லது கெட்ட கொலஸ்டிரால்
இரத்தத்தில் அதிகளவு கெட்ட கொலஸ்டிரால் உள்ளவர்களுக்கு (3mmol/L க்கு மேல்) முதுமைக்கால மறதி நோய் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது, மேலும் இது 65 வயதிற்குட்பட்டவர்கள் மத்தியில் குறிப்பாக உண்மையாக இருக்கிறது. ஐக்கிய இராஜ்ஜியத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஆய்வுகள், தாமதமாகத் தொடங்கும் முதுமைக்கால மறதி நோயை விட இளம் வயதில் தொடங்கும் முதுமைக்கால மறதி நோயின் வலுவான ஆபத்து அடிநிலையில் அதிகளவு கெட்ட கொலஸ்டிரால் இருப்பதுடன் தொடர்புடையதாக இருப்பதாக பரிந்துரைத்துள்ளன. முதுமைக்கால மறதி நோய்க்கான ஒருவரின் மரபியல் தன்மையைப் பொருட்படுத்தாமல், ஆரோக்கியமான உணவு முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். இதற்கான ஓர் உதாரணம் – மீன், பழங்கள் மற்றும் காய்கறிகளை முறையே குறைந்தபட்சம் வாரந்தோறும் மூன்று பரிமாறும் அளவுகள் சாப்பிடுவது; இனிப்புப் பானங்களைத் தவிர்ப்பது மற்றும் தொத்திறைச்சி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சியைத் தவிர்ப்பது ஆகும்.
சிகிச்சை அளிக்கப்படாத பார்வை இழப்பு
உலகளவில், 50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களில் சுமார் 12.6% பேருக்கு தவிர்த்திருக்கக்கூடிய பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. பார்வை இழப்பு எதிர்கால அறிவாற்றல் குறைபாட்டுடன் மிகவும் தொடர்புடையதாக உள்ளது. இயல்பான பார்வைத்திறன் உள்ளவர்களை விட, சிகிச்சை அளிக்கப்படாமல் பார்வை இழப்பு ஏற்பட்டவர்களுக்கு முதுமைக்கால மறதி நோய் ஏற்படுவதற்கான ஆபத்து 35% அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, முதுமைக்கால மறதி நோய் ஏற்படுவதற்கான அதிகளவு ஆபத்து கண்புரை மற்றும் நீரிழிவுசார் விழித்திரைக் கோளாறுடன் தொடர்புடையதாக உள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக கண்புரை கொண்ட முதியவர்களிடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் அமெரிக்க கிடைநிலை ஆய்வில், கண்புரை பிரித்தெடுப்பு சிகிச்சை செய்யப்பட்ட சில பெரியவர்களுக்கு, பிரித்தெடுப்பு சிகிச்சையை செய்யாதவர்களைக் காட்டிலும் முதுமைக்கால மறதி நோய் ஏற்பட்டுள்ளது. கொரியாவில் சுகாதார காப்பீட்டுத் தரவைப் பயன்படுத்தும் ஆய்வுகள், ஒரு நபரின் பார்வை இழப்புத் தீவிரத்தன்மை எந்தளவுக்கு அதிகமாக உள்ளதோ, அந்தளவுக்கு அவருக்கு முதுமைக்கால மறதி நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது என்று கூறுகிறது.
இன்றே முதுமைக்கால மறதி நோயைத் தடுக்க A, B, C, Dகளைப் ஐப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்!
வளமை: ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (AIC)
முதுமைக்கால மறதி நோய் ஆபத்தைக் குறைப்பதற்கான கூடுதல் வழிகள்
கவனத்துடன் சாப்பிடுங்கள்
நீங்கள் எதை சாப்பிடுகிறீர்களோ, அதுவே நீங்கள் என்று பழமொழியில் உண்மை இருக்கிறது, குறிப்பாக முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க வேண்டும் என்று வரும்போது, இது உண்மையே. ஆரோக்கியமான மற்றும் சீரான உணவுப் பழக்கத்தைப் பேணுவது ஒருவரை நன்றாக உணர வைப்பது மட்டுமல்லாமல், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் போன்ற பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் முதுமைக்கால மறதி நோய் உண்டாகும் ஆபத்தைக் குறைக்க உதவுகிறது. பழங்கள், காய்கறிகள், சுத்திகரிக்கப்படாத தானியங்கள், தானியங்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் (பொதுவாக எண்ணெய் மீன் மற்றும் கொட்டைப்பருப்புகளில் காணப்படுகிறது) நிறைந்த உணவு, குறைவான சிவப்பு நிறமுடைய இறைச்சி ஆகியவற்றுடன் கூடிய உணவுப்பழக்கம், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, முதுமைக்கால மறதி நோய் உண்டாவதைத் தடுக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம். சந்தேகம் ஏற்பட்டால், ஆரோக்கியமான மூளைக்கு ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளை மேற்கொள்வது குறித்த கூடுதல் ஆலோசனைக்கு உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
உங்களது மனதைச் சுறுசுறுப்பாக வைத்திருங்கள் – மூளை க்கு வேலை தரும் விளையாட்டுகள்
உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதைப் போல, அறிவாற்றல் சார்ந்த செயல்பாடுகளும் மூளையின் செயல்பாட்டிற்கு நல்லது மற்றும் இது முதுமைக்கால மறதி நோய் உண்டாகும் ஆபத்தைக் குறைக்கிறது. அல்சைமர் நோய் சர்வதேசத்தின்படி (ADI), விலங்குகள் மற்றும் மனிதர்கள் இரண்டிலும் நடத்தப்பட்ட சோதனைகள், மூளையைத் தூண்டக்கூடிய செயல்பாடுகள் மூளையின் இரத்தநாள ஆரோக்கியத்திலும், மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடு இரண்டிலும் அளவிடக்கூடிய மேம்பாடுகளுடன் தொடர்புடையதாக இருப்பதைக் காட்டியுள்ளன.5 அறிவாற்றல் ரீதியாக ஆரோக்கியமாக உள்ள 300 ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவிடத்தில் மேற்கொள்ளப்பட்ட அறிவாற்றலைத் தூண்டும் செயல்பாடுகள் (படித்தல் மற்றும் எழுதுதல் உட்பட) இறப்புக்கு முந்தைய ஆறு ஆண்டுகளில் அறிவாற்றல் குறைவது மெதுவாக இருந்ததுடன் தொடர்புடையதாக இருந்ததாக விரைவு நினைவாற்றல் மற்றும் மூப்படைதல் செயல்திட்டம் (Rush Memory and Aging Project) நடத்திய இன்னொரு ஆராய்ச்சி அறிக்கைகள் தெரிவிக்கிறது.6 மேலேயுள்ள ஆதாரம், படிப்பது, பிரிட்ஜ் அல்லது செஸ் விளையாடுவது அல்லது புதிர்களுக்கு (சுடோகு, குறுக்கெழுத்துக்கள் போன்றவை) விடை தேடுவது போன்ற செயல்பாடுகள் முதுமைக்கால மறதி நோய் உண்டாகுவதைத் தடுக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம்.
இதயம் குறித்த உண்மைகள்
ஆரோக்கியமான இதயம் ஆரோக்கியமான மூளைக்கு நன்மைப் பயக்கும் என்பதற்கான சான்றுகள் உள்ளன.
மருந்தியல் மற்றும் நரம்பியல் துறையின் இணைப் பேராசிரியரான மெஹர்வன் சிங், Ph.D. கருத்துப்படி, மூளை சுமார் 15% இதய வெளியீட்டைப் பெறுகிறது, அதாவது இருதய செயல்பாட்டில் சீர்க்குலைவு ஏற்பட்டால், அது மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை (மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தை) குறைகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான அதிக ஆபத்தைக் கொண்டிருப்பது முதுமைக்கால மறதி நோய் உண்டாகும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று மற்ற ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
2016 ஆம் ஆண்டு தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இதய நோய் உள்ளவர்களுக்கு உதவ தயார் செய்யப்பட்ட ஒரு வகை மருந்தான ஸ்டேடின்ஸ், முதுமைக்கால மறதி நோயிலிருந்து மூளையைப் பாதுகாப்பதில் கூடுதல் பங்கு வகிக்கக்கூடும் என்று கண்டறிந்தது.
சுறுசுறுப்பாக இருப்பது மற்றும் ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை உண்ணுவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பேணுவது, புகைப்பழக்கம் மற்றும் அதிகப்படியான மது அருந்துவதைத் தவிர்ப்பது, சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மேலும் முதுமைக்கால மறதி நோய், அத்துடன் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற பிற நோய்கள் வராமலும் தடுக்கலாம்.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, அறிவாற்றல் சார்ந்த சோதனைகளை உள்ளடக்கிய வருடாந்திர முழு உடல் பரிசோதனைகள் போன்ற வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. எதையும் விரைவாகப் பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.
ஆபத்துக் காரணிகள் மற்றும் ஆபத்து குறைப்பு குறித்த ஆல்சைமர்ஸ் நோய் சர்வதேசத்தின் கட்டுரையின் சில உள்ளடக்கங்கள் அனுமதியுடன் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.
Tell us how we can improve?
- Ahlskog, J. E., Geda, Y. E., Graff-Radford, N. R., & Petersen, R. C. (2011). Physical exercise as a preventive or disease-modifying treatment of dementia and brain aging. Mayo Clinic proceedings, 86(9), 876–884. https://doi.org/10.4065/mcp.2011.0252
- Alzheimer’s Disease International. (2014, July 9). Smoking increases risk of dementia. https://www.alzint.org/news/smoking-increases-risk-of-dementia/
- Geneva: World Health Organization. (2019). Risk reduction of cognitive decline and dementia: WHO guidelines. https://apps.who.int/iris/bitstream/handle/10665/312180/9789241550543-eng.pdf?ua=1
- Crooks, V. C., Lubben, J., Petitti, D. B., Little, D., & Chiu, V. (2008). Social network, cognitive function, and dementia incidence among elderly women. American journal of public health, 98(7), 1221–1227. https://doi.org/10.2105/AJPH.2007.115923
- Albanese, E., Guerchet, M., Prince, M., & Prina, M. (2014). World Alzheimer report 2014: Dementia and risk reduction: An analysis of protective and modifiable factors. Alzheimer’s Disease International. https://www.alzint.org/u/WorldAlzheimerReport2014.pdf
- Bennett, D. A., Schneider, J. A., Buchman, A. S., Barnes, L. L., Boyle, P. A., & Wilson, R. S. (2012). Overview and findings from the rush Memory and Aging Project. Current Alzheimer research, 9(6), 646–663. https://doi.org/10.2174/156720512801322663