Playback speed:
உங்கள் அன்பிற்குரியவரிடம் முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் தென்படுவதாக நீங்கள் சந்தேகித்தால், அந்த நோயை முறையாகக் கண்டறிந்து சிகிச்சை பெற அவரை ஊக்குவிக்க வேண்டும். இருப்பினும், இந்த உணர்திறன்மிக்க பிரச்சினையைப் பற்றி ஒருவருடன் பேச ஆரம்பிப்பது எளிதான காரியமல்ல.
இந்தக் கட்டுரை முதலில் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒருவருடன் எப்படி உரையாடலை ஆரம்பிப்பது என்பது பற்றி சிறு வழிகாட்டுதலை வழங்கும், பின்னர் இந்த உரையாடல்களை எவ்வாறு வழிநடத்துவது என்பது பற்றிய சில வழிகாட்டுதல்களை விளக்கிக் கூறும்.
நோயை அறிந்துக்கொள்வது பற்றிய உரையாடலைத் தொடங்குவதற்கான சிறு வழிகாட்டி
ஒருவரின் நினைவுத்திறன் இழப்பு அவர்களை எவ்வாறு பாதித்துள்ளது என்று நீங்கள் கவலைப்படும்போது அவர்களைப் பேசும்படி ஊக்குவிக்க, நீங்கள்:
- அவர்களுக்குப் பழக்கமான மற்றும் இளைப்பாறும் இடத்தில் உரையாடலாம்.
- விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்களது நடத்தைப் பற்றிய உதாரணங்களைக் குறிப்பிடலாம்.
- அவர்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க வெளிப்படையாக உரையாடலாம்.
ஒருமுறை அவர்களிடம் பேசுவதன் மூலமே, நோயைக் கண்டறிய மருத்துவரைச் சந்திக்க வருமாறு அவர்களை நீங்கள் ஒப்புக்கொள்ள வைக்க வேண்டியதில்லை. இது சற்று கடினமான காரியம், அவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ள சிறிது காலம் பிடிக்கக்கூடும்.
உரையாடலைத் தொடங்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில கேள்விகள்:
- நீங்கள் கவலையாக இருப்பதைப் போலத் தெரிகிறது, நான் எப்படி உங்களுக்கு உதவுவது?
- இன்று நீங்கள் நீங்களாகவே இல்லாதது போலத் தெரிகிறது, நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்?
- நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? நீங்கள் எதையோ பற்றி கவலைப்படுவது போலத் தெரிகிறது.
யாரேனும் ஒருவருக்கு முதுமைக்கால மறதி நோய் இருப்பது கண்டறியப்பட்டால் முதலில் அது அவருக்கு வியப்பாக இருக்கக்கூடும். இருப்பினும், தெளிவான நோய்க்கண்டறிதல் மூலம், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் அதன் அறிகுறிகளை நிர்வகிக்கத் தேவையான தகவல்கள், சிகிச்சை, மேலாண்மை மற்றும் ஆதரவைப் பெறலாம்.
ஒரு நபரின் சௌகரிய நிலையைப் பொறுத்து, உரையாடலின் ஆரம்பத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் கவலைகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம்:
- நோயைக் கண்டறியவும் ஆதரவைப் பெறவும் அந்த நபரிடம் இனிமையாகப் பேசி ஒப்புக்கொள்ள வைக்கலாம்.
- பராமரிப்பு பணிக்கு குடும்ப உறுப்பினர்களை சீக்கிரமே தயார் செய்யலாம்.
- சம்பந்தப்பட்ட நபரும் பராமரிப்பாளரும் எதிர்காலத்தைத் திட்டமிட உதவலாம்.
முதல் தடை
மோசமான செய்திகளைப் பெறும்போது நமது முதல் எதிர்வினை, பெரும்பாலும் கவலையாகவோ, உதவியற்றவர்களாக உணர்வதாகவோ, நிராகரிப்பதாகவோ இருக்கும். முதுமைக்கால மறதி நோயின் லேசான மற்றும் அதிகரிக்கும் தன்மை, அதனை மூப்படைதலின் இயற்கையான சிரமமாக கருதி அறிகுறிகளை அலட்சியப்படுத்த மக்களுக்கு வசதியாக உள்ளது. இது ஏதோ கவனிக்க வேண்டியதன் அறிகுறி என்றோ, முதுமைக்கால மறதி நோயின் சாத்தியமான அறிகுறி என்றோ நாம் பேசினால் அது நிராகரிக்கப்படும் அல்லது நமது விளக்கம் மறுக்கப்படும். வீட்டில் அடிக்கடி பொருட்களைத் தவறாக வைப்பது “எனக்கு மிகவும் மறதி வந்துவிட்டது” என்ற பதிலைத் தூண்டலாம், மேலும் ஒரு வயதான நபரின் மனநிலை மாற்றங்கள் சிலருக்கு அவர்கள் நியாயமின்றி நடந்துக் கொள்வதைப் போல அல்லது பிறரின் கவனத்தைத் தேடுவது போல தோன்றலாம்.
முதுமைக்கால மறதி நோயைக் கண்டறிவதன் முக்கியத்துவத்தை அளிக்கும் வகையில் அதனை ‘வரையறுக்கும் ஒரு சம்பவத்திற்காக’ காத்திருப்பதற்குப் பதிலாக, அவர்களிடம் உண்மையை மெதுவாக எடுத்துக் கூறுங்கள். அவற்றிற்கு சாக்குப்போக்கு சொல்வதையும் அறிகுறிகளைக் அற்பமாகச் சொல்வதையும் நிறுத்துங்கள். நீங்கள் கவனிக்கும் அனைத்து அறிகுறிகளையும் அடையாளங்களையும் சுட்டிக்காட்டாமல், அவர்கள் விஷயங்களை இணைத்துப் பார்க்க அவர்களுக்கு உதவ முயற்சியுங்கள். முன்கூட்டியே அறிகுறிகளை அடையாளம் கண்டு, நோயறிதலை நோக்கி அவர்களை வழிநடத்தும் நோக்கத்துடன், முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளைப் பற்றிய தகவலை நுட்பமாக அவர்களிடம் சொல்லுங்கள், அது அவர்கள் மறுக்க முயற்சிப்பதை படிப்படியாக அவர்களுக்கு உணர வைக்கலாம்.
வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
பெரும்பாலும், ஒரு நபர் மருத்துவரைப் பார்ப்பதற்கு தயக்கம் காட்டுவதற்கு பயம், மறுப்பு அல்லது அவர்களால் முடிந்தவரை அவர்களின் முடிவெடுக்கும் திறன்களைத் தக்க வைத்துக்கொள்ளும் ஆசை ஆகியவையே காரணமாகும். அவர்களின் உணர்வுகள் மற்றும் பயங்களுக்கு மதிப்பளியுங்கள். அவர்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு நேரம் கொடுங்கள், ஆனால் அவர்களை மருத்துவரிடம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள். உதாரணத்திற்கு, அவர்கள் ஒப்புக்கொள்ளும் அறிவாற்றல் அறிகுறிகள் அல்லது பிற உடல்நல அறிகுறிகளைப் பற்றிய கவலைகளை வெளிப்படுத்தினால், முதுமைக்கால மறதி நோய் தொடர்பான அறிகுறிகளைத் தெரிவிக்கக்கூடிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுமாறு அவர்களை ஊக்குவிக்க இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்களது அணுகுமுறையை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்
உங்கள் அன்பிற்குரியவர் முன்கூட்டியே நோயைக் கண்டறிய விடாமல், அவரைத் தடுக்கும் தடைகளை அறிவது மட்டும் போதாது. இந்தத் தடைகளை அவர்களுடன் சேர்ந்து ஆராய்வதன் மூலம் அவர்களின் கவலைகளை லேசாக்குங்கள் மற்றும் ஆறுதல் வார்த்தைகளைக் கூறி அவர்களின் உணர்ச்சிகளுக்கு அனுதாபம் கொள்ள முயற்சியுங்கள். மருத்துவரைப் பார்ப்பதே சிறந்த வழி என்பதை அவர்களிடம் பகிருங்கள்.
ஆரம்பத்துலேயே நோயைக் கண்டறிவதன் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதற்குப் பதிலாக, அவர்களிடம் அதை உதவியாகக் கேட்டுப் பார்க்க முயற்சியுங்கள். சில சமயங்களில், அன்பிற்குரியவர்கள் தங்களுக்காகச் செய்யாத ஒன்றை மற்றவர்களுக்காகச் செய்வார்கள். அவர்கள் உங்களுக்காக மருத்துவரைச் சந்திப்பதை உதவியாக மாற்றுவது ஒரு நல்ல உத்தியாக இருக்கலாம். வருகையின் நோக்கத்தை மாற்றியமைப்பது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்களது அன்பிற்குரியவர்களுக்குத் தெளிவை வழங்கவும், அவர்களுக்கு ஏற்படும் பயத்தைக் குறைக்கவும் உதவும்.
டெக்சாஸ் ஹெல்த் ப்ரெஸ்பைடிரியன் மருத்துவமனை டல்லாஸின் முதியோர் மருத்துவத்தின் தலைவரும், டெக்சாஸ் ஆல்சைமர் மற்றும் நினைவுத்திறன் கோளாறுகளின் இயக்குநருமான டயானா கெர்வின், எம்டி, அவர்களின் கருத்துப்படி, முதுமைக்கால மறதி நோயுள்ள நபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொலோனோஸ்கோபி அல்லது எலும்பு அடர்த்தி சோதனை போன்ற மற்றொரு மருத்து சிகிச்சையாக மருத்துவரின் சந்திப்பைப் பாவிப்பது உதவியாக இருக்கும். இந்தச் சந்திப்பை மூளைச் சோதனை என்றும் விவரித்துக்கொள்ளலாம்.2
அன்பிற்குரியவருக்கு முதுமைக்கால மறதி நோய் அல்லது ஆல்சைமர் நோய் இருப்பதைப் பார்க்க யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால் எவ்வளவு சீக்கிரம் அவர்கள் அதைச் சோதனை செய்துக் கொள்கிறார்களோ, அதற்கு ஏற்ற முன்கூட்டியே பராமரிப்பும் ஆதரவும் வழங்கப்படலாம். மறுபுறம், சோதனையில் அப்படி எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டால், அது இன்னும் ஆறுதலாக இருக்கும். நிச்சயமான விஷயம் என்னவென்றால், தன்னைப் பரிசோதித்துக்கொள்வதன் மூலம் ஒருவர் எதையும் ஒருபோதும் இழக்கமாட்டார் – மேலும் இது அனைத்தும் மருத்துவரிடம் சென்றார் மட்டுமே நடக்கும்.
முதுமைக்கால மறதி நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் உங்கள் அன்புக்குரியவருக்கு நோய்க்கண்டறிவதில் சிரமம் இருந்தால், உதவி பெற அவரை ஊக்குவிப்பது குறித்து மருத்துவர் ஜோஸுவா குவாவின் ஆலோசனையைப் பாருங்கள்:
ஆதாரம்: ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (AIC)
Tell us how we can improve?
- Agency for Integrated Care. (n.d.). Living with Dementia, A Resource Kit for Caregivers, Knowing Dementia. https://www.aic.sg/resources/Documents/Brochures/Mental%20Health/4%20Books/Book%201%20-%20KNOWING%20DEMENTIA.pdf
- Johnson, L. (April 18, 2019). Dementia Care: Navigating a Doctor’s Visit with Your Loved One. Retrieved May 4, 2021, from https://www.healthline.com/health/dementia-care-visiting-the-doctor-with-your-loved-one
- Dementia Singapore. (2017, October 24). Dealing with Dementia: The First Step. https://dementia.org.sg/2017/10/24/dealing-with-dementia-the-first-step/