எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுங்கள்
3 நிமிட வாசிப்பு

இளம் வயதிற்குள் ஏற்படும் முதுமைக்கால மறதி நோய் என்பது 65 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் ஏதேனும் வகை முதுமைக்கால மறதி நோயைக் குறிக்கிறது. முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகள் ஆனது வயது முதிர்ந்த பெரியவர்களிடத்து காணப்படும் முதுமைக்கால மறதி நோயுடன் ஒப்பிடும்போது, இளம் வயதினர்களிடம் வித்தியாசமாகத் தோன்றலாம்.

ஆதாரம்: CNA

முதுமைக்கால மறதி நோய் வயது முதிர்ந்த பெரியவர்களை மட்டுமே பாதிக்கிறது என்பது ஒரு மூடநம்பிக்கை. 2020 ஆம் ஆண்டில் உலகளவில் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்கின்றனர், மேலும் இந்த எண்ணிக்கை 2030 இல் 82 மில்லியனாகவும், 2050 இல் 152 மில்லியனாகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.1 இதில் சுமார் 5% முதல் 6% பேர் இளம் வயதிற்குள் ஏற்படும் முதுமைக்கால மறதி நோயுடையவர்கள், 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, இளம் வயதிற்குள் ஏற்படும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை சுமார் 3.9 மில்லியன் ஆகும்.2 

கடந்த சில ஆண்டுகளில், முதுமைக்கால மறதி நோய் இருப்பது கண்டறியப்பட்ட இளம் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய நரம்பியல் கழகத்தில் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இளம் வயதிற்குள் ஏற்படும் முதுமைக்கால மறதி நோய் இருப்பது கண்டறியப்படுகிறது.3

இளம் வயதிற்குள் ஏற்படும் முதுமைக்கால மறதி நோயின் பல்வேறு விதமான அறிகுறிகள்

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் வயது முதிர்ந்த பெரியவர்களுடன் ஒப்பிடுகையில், இளம் வயதினரிடத்து அறிகுறிகள் வித்தியாசமாக வெளிப்படுவது மட்டுமல்லாமல், இந்த நோய்நிலை இளம் வயதினரின் வாழ்க்கை, அவரைச் சுற்றியிருக்கும் குடும்பம் மற்றும் சமூகத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.2,4 

அறிகுறிகளில் பின்வருபவை அடங்கும்:2,4
• இளம் வயதிற்குள் ஏற்படும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள், அவர்களின் அசைவு மற்றும் ஒருங்கிணைப்பு உட்பட அவர்களின் தசை இயக்கத் திறன்களில் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
• மூளையின் முன்புற மற்றும் பக்கப் பகுதிகளைப் பாதிக்கும் முதுமைக்கால மறதி நோய், இளம் வயதினரிடம் வழக்கமாக காணப்படுகிறது, இது திட்டமிடல் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளைப் பாதிக்கிறது.

இளம் வயதினரிடத்தில் முதுமைக்கால மறதி நோய் ஏற்படுத்தும் தாக்கம்

வயது முதிர்ந்த பெரியவர்களுடன் ஒப்பிடும்போது, ​​இளம் நபர்கள் வெவ்வேறு வாழ்க்கை நிலைகளில் இருப்பார்கள். இதனால் முதுமைக்கால மறதி நோய் குறித்த அவர்களின் அனுபவம் பெரியவர்களிடமிருந்து தனித்துவமாக வித்தியாசப்படுகின்றது. இந்தச் சூழ்நிலைகளில் சில பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கக்கூடும்:2,4 

• முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் நேரத்தில், இளம் நபர்கள் வேலையில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், அநேகமாக அவர்கள் கூடுதல் பொறுப்புகளுடன் அவர்களின் வேலையில் உயர்ந்த பதவியில் கூட இருக்கக்கூடும். அவர்களுக்கு ஏற்படக்கூடிய முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகள் வேலையில் வெளிப்படையாகத் தெரியலாம், இதனால் அவர்கள் வேலையை இழக்க நேரிடும். இதனால் அவர்களின் குடும்பங்களுடைய நிதி ரீதியான நல்வாழ்வையும் இழக்க நேரிடும்.
• இளம் வயதினர் சிறு குழந்தைகளுடன் பெற்றோராக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால், அவர்கள் அதிக சவால்களை எதிர்கொள்வார்கள் மற்றும் பிள்ளை வளர்ப்பின் பொறுப்புகளை இழக்க நேரிடும், ஏனெனில் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் சிறு குழந்தைகளை பராமரிக்க முடியாமல் போகலாம்.

அதே நேரத்தில், சிங்கப்பூரில் தற்போதுள்ள பெரும்பாலான முதுமைக்கால மறதி நோய் பராமரிப்பு சேவைகள் மற்றும் திட்டங்கள் வயது முதிர்ந்த பெரியவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, அனுபவத்தில் காணப்படும் வித்தியாசத்தைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இவை இளம் வயதினருக்கு ஏற்றதாக இருக்காது. இத்தகைய இளம் நபர்களுக்குப் பயனுள்ள மற்றும் வயதுக்கு ஏற்ற சேவைகளும் திட்டங்களும் குறைந்தளவே உள்ளன.5

ஜார்ஜின் கதை

ஜார்ஜுக்கு முதுமைக்கால மறதி நோய் இருப்பது தெரிந்தபோது, அவருக்கு வயது 46தான். வேதியியல் பாடத்தின் முன்னாள் ஆசிரியராகவும், வேதியியல் பாடப்புத்தகங்களை எழுதியவராகவும், எப்போது நல்ல முறையில் ஆரோக்கியத்தைப் பராமரித்து சுறுசுறுப்பான ஓட்டப்பந்தய வீரராகவும் இருக்கும் அவருக்கும், அவரது மனைவி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளுக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது.  

நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த யாரேனும் ஒருவரோ முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளை அனுபவித்தால், குடும்ப மருத்துவர் அல்லது பலதுறை மருந்தக மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும், அவரால் பரிசோதனைகள் மற்றும் நோய்க்கண்டறியும் செயல்முறை குறித்து வழிகாட்ட முடியும்.

Was this article helpful?

Yes No
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest
  1. Dementia statistics. (n.d.). Alzheimer’s Disease International. Retrieved 24 March, 2021, from https://www.alzint.org/about/dementia-facts-figures/dementia-statistics/
  2. Hendriks, S., Peetoom, K., Bakker, C., van der Flier, W. M., Papma, J. M., Koopmans, R., Verhey, F., de Vugt, M., Köhler, S., Young-Onset Dementia Epidemiology Study Group, Withall, A., Parlevliet, J. L., Uysal-Bozkir, Ö., Gibson, R. C., Neita, S. M., Nielsen, T. R., Salem, L. C., Nyberg, J., Lopes, M. A., Dominguez, J. C., … Ruano, L. (2021). Global prevalence of young-onset dementia: A Systematic Review and Meta-analysis. JAMA Neurology, 78(9), 1080–1090. https://doi.org/10.1001/jamaneurol.2021.2161
  3. Chiew, H. J. (2021, July 5). Young-onset dementia: Improving outcomes with early recognition at primary care.  SingHealth. https://www.singhealth.com.sg/news/defining-med/Young-Onset-Dementia
  4. Channel News Asia. (2024, September 4). Survey reveals half of Singaporeans resist young-onset dementia testing, even with symptoms. Channel News Asia. https://www.channelnewsasia.com/singapore/dementia-young-onset-below-65-survey-screening-test-4585526
  5. Alzheimer Society of Calgary. (n.d.). Young-onset dementia. Retrieved 5 March, 2020, from https://www.alzheimercalgary.ca/learn/types-of-dementia/young-onset-dementia
  6. Siew, W. J. W. (2021). Support programmes for people with young-onset dementia. Lee Kuan Yew Centre for Innovative Cities. https://lkycic.sutd.edu.sg/wp-content/uploads/2022/07/LKYCIC-LLMAU-Webpost-Oct-2021-Support-Programmes-for-PYOD-Final.pdf

Was this article helpful?

Yes No
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest

Downloadable Resources

The following material contains bite-sized information about dementia. To download or print it, simply click the image. You may also select the language of the material by clicking the “Select Language” button.

Downloadable Resources

The following material contains bite-sized information about dementia. To download or print it, simply click the image. You may also select the language of the material by clicking the “Select Language” button.

Related Articles

Sed tristique blandit facilisis eleifend elit lobortis eros, massa aenean. Suspendisse aliquam eget tortor viverra nulla duis.
Skip to content